போட்டி #1 - 02 இரவில் சில நிமிடம்

இடியின் சத்தம் காதைப்பிளந்தது ஏதோ ஒரு துர்நாற்றம் என் தூக்கத்தை கலைக்க என் தோழி யாழினியோ நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தால் அவளின் ஷாருக் கனவை கலைக்க முயன்று தோற்றுப்போனேன். இருளில் மின்விளக்கை தேடியடுத்து அறையின் கதவை நோக்கி நடந்தேன் கதவை திறந்தததும் மின்விளக்கு அணைத்தது அசையாமல் அப்படியே நின்றேன் காலில் ஏதோ ஊர்வது போன்று உணர்தேன் ஒளி வந்ததும் சுற்றிமுற்றி பார்த்தேன் எதுவும் இல்லை. பின் நாற்றம் வரும் திசையில் நடக்க ஆரம்பித்தேன். சற்றேன்று மின்விளக்கு திரும்பவுமனைய யாரோ என்னை உரசிச்செல்வது போலிருந்தது பயத்தில் மின்விளக்கை இரண்டு அடிஅடிக்க கீழவிழுந்து உடைந்தது. ஏதோ காட்டின் நடுவில் விட்டது போல் திணறி நின்றேன். குளிரிந்தக்காற்று என்னைத்தாக்க திடுக்கிட்டு பார்த்தேன். வீட்டின் கதவு திறந்து இருந்தது. காற்றில் திறந்துருக்கும் என்று மனதை சமாதானம் செய்துக்கொண்டு கதவை நோக்கி நடக்க "மது நீ இன்னும் தூங்கலையா ஆபீஸ்ல செம்ம வேலைடி"

யாழினி அப்போ உள்ள யார்டி?????

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top