போட்டி 6 # 11 - போட்டி
அம்மு குட்டி படும் சுட்டி. அவளுடைய சுட்டி தனத்தால் அனைவரையும் ஈர்த்தது மட்டும் அல்லாமல் அவர்களின் கவலைகளையும் மறக்க வைத்ததால், அந்த கூட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் செல்ல பிள்ளையானாள்.
அந்த ஊரில் இருந்த பப்லிமாஸ்க்கும் அம்முக்கும் மட்டும் என்றும் சண்டை வந்து கொன்டே இருக்கும். அப்படி சண்டை வந்தால் அதனை யாராலும் நிறுத்த முடியாது.
ஒரு அழகிய மாலைப் பொழுதில் அனைவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது திடிரென்று ஒரு சத்தம் ஆ. ஆ. ஆ. ஆ. ஆ ஆ….. என்று ஒரு பாப்பாவின் சத்தமும் ஓ. ஓ.ஓ.ஓ.ஓ. என்று ஒரு பையனின் சத்தமும் கேட்டு விளையாடி கொண்டிருந்த அனைவரும் தங்கள் விளையாட்டை விட்டு விட்டு சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்றனர்.
அங்கு சென்றப் பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது அந்த சத்தம் அம்முவும், பப்லிமாஸும் சண்டையில் இருந்து வந்தது என்று. பிறகு அவர்கள் சண்டை எதனால் வந்தது என்று கேட்டனர்.
அப்பொழுது அம்மு “ இவன் நம் பெண் பிள்ளைகள் அனைவரும் சொப்பு சாமா விளையாடுவதற்கு மட்டும் தான் லாயிக்கி என்று அவன் கூறுகிறான்” என்று அவள் தன் மூக்கில் இருந்து கோபத்தினால் டிராகன் போல் நெருப்பை கக்குவது போல் பெரு மூச்சு விட்டாள்.
அதனை கேட்ட பப்லிமாஸும் சிங்கம் போல் கோபம் கொண்டவனாய், “ அவள் நம் ஆண் பிள்ளைகள் அனைவரும் வெறும் வாய் பேச்சு தான், வீரத்தில் நாம் ஒன்றும் இல்லை என்று அவள் கேலியாக கூறினாள்” என்று கூறி அவன் கண்களாலே எரிக்க முயன்றான்.
இவர்கள் இருவரின் சண்டை இவ்வாறாக, அது ஆண்கள் உயர்ந்தவர்களா? அல்லது பெண்கள் உயர்ந்தவர்களா? என்றவாறு மாறியது. பின்பு நீண்ட நேர சண்டையின் பிறகு, இரு குழுவும் ஒரு முடிவுக்கு வந்தது. அது என்ன வென்றால் அவர்கள் அனைவருக்கும் பிடித்தமான உணவான சீஸ் - யை யார் ஒருவர் இங்கு எடுத்து வரார்களோ அவர்களே சக்தி வாய்ந்தவர்கள் என்று முடிவு எடுத்தனர். போட்டியை மேலும் சுவாரசியம் ஏற்ற சீஸ் - யை, அவர்கள் எதிரிகள் இருக்கும் இடத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.
இடத்தை முடிவு செய்த பிறகு இரு குழுவாக பிரிந்து திட்டத்தை தீட்டிணர். திட்டத்தை தீட்டியப் பிறகு பெண்கள் குழு சார்பாக அம்முவும், ஆண்கள் சார்பாக பப்லிமாஸும் தயார் ஆனார்கள். பிறகு இருவரும் அந்த வீட்டை நோக்கி சென்றனர்.
அம்மு தன் அறிவு கூர்மையால் பப்லிமாஸுக்கு முன்னால் அந்த சீஸை எடுத்து விட்டு வீட்டின் கதவை நோக்கி ஓடினாள். இதனை கண்ட பப்லிமாஸும் அவளை பின் தொடர்ந்து ஓடினான், அந்த சீஸ்யைப் பரிப்பதற்காக.
அவனிடம் மாட்டிக்க கூடாது என்பதற்காக அம்முவும் வேகமாக ஓடினாள். ஆனால் அவள், வீட்டின் கதவை நெருங்குவதற்கு முன்னாலே அவர்கள் கூட்டத்தின் பரம எதிரி வந்து அவள் பாதையை மரித்தான். அவள் தன் பயத்தை வெளிப்படுத்தாமல் வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தாள். பின் சென்றால் பப்லிமாஸ், முன்னால் எதிரி என்ன செய்வது என்று தெரியாமல் முளித்தாள். பின்பு அவளுக்கு மின்னல் வேகத்தில் ஒரு யோசனை தோன்றியது, தன் வலது பக்கத்தில் இருக்கும் ஜன்னல் வழியாக தப்பிக்கலாம் என்று முடிவு எடுத்து அந்த திசையை நோக்கி ஓட தயார் ஆனால்.
அவளை விட வேகமாக அந்த திசையிலும் மற்றொரு எதிரி வந்து நின்றான். தப்பிக்க வேறு வழி இல்லாமல் பயத்தினால் அம்மு தன் கையில் வைத்து இருந்த சீஸ்யை கீழேப் போட்டு விட்டு பின்னால் பப்லிமாஸ் இருக்கும் இடத்தை வந்து அடைந்தாள்.
இருவரும் எதிரிகளைப் பார்த்தவுடன் தங்கள் பகைமையை மறந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடிவு எடுத்தனர்.
இவ்வாறாக இறுதியில் எதிரியான அந்த இரண்டு பூனைகளின் கண்ணில் மண்ணை துவி விட்டு, அம்மு, பப்லிமாஸ், என்று இரு எலிகளும் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு அந்த வீட்டில் இருந்து தப்பித்து ஓடினர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top