போட்டி 6 # 1-ஊசி

முன்னொரு காலத்தில் முனுசாமி என்பவன் இருந்தான்...அவன்தான் அந்த ஊரிலேயே
மிகப் பெரிய முட்டாள் அவனுக்கு ஐந்து ஆண் குழந்தைகள் இருந்தனர்.அந்த
ஐவருமே மூனுசாமியை போலவே முட்டாள்களாக பிறந்தனர்.
அவர்கள் ஐவரும் எதனை செய்தாலும் முட்டாள் தனமாகவே செய்தனர் அதனை அறிந்த
முனுசாமியும் முட்டாள் தனமாகவே சிந்திப்பான்.அப்படித்தான் ஒரு நாள்
முனுசாமி தனது கிழிந்த துணியை தைத்துக் கொண்டிருந்தான்.
"என்ன இது சரியா தைக்க மாட்டேன் என்கிறது,பசங்களா இங்க
வாங்க"என்றான்.ஐந்துபெரும் ஒன்றாக வந்து நின்றனர்."போய் நல்ல ஊசி வாங்கி
கொண்டு வாருங்கள் "என்றார்...நால்வரும் உடனே கிளம்பி பக்கத்தில்
இருக்கும்
முருகன் அங்காடிக்குச் சென்றனர்."கடைகாரரே ஒரு ஊசி குடுங்க"என்று
கேட்டான் முதல் மகன்...அதற்க்கு அந்த கடைக்காரர் "எதற்கு வேணும்"என்று
கேட்டார்."எங்க அப்பாவோட துணி கிழிஞ்சு போச்சு அத தைக்கணும்"என்றான்
அடுத்தவன்."இந்தாங்க நீங்க தைக்க ஊசி.காலணா குடுத்துட்டு போங்க"என்றார்
கடைக்காரர்."என்ன ஊசி இவ்வளவு சின்னதா இருக்கு,எங்களுக்கு வேண்டாம்
"என்றான் மற்றொருவன்."ஊசி ஒன்னு நல்லதா குடுங்க"என்றான் மற்றொருவன்.
"எங்க அப்பா எங்க அஞ்சு பேரையும் அனுப்பி இருக்கர்னா, அப்போ அந்த ஊசி
எத்தன பெருசா இருக்கணும்,பெருசா குடுங்க"என்றான் கடைசியானவன்."அட
என்னப்பா இது,இதுதான்பா தைக்குற ஊசி"என்று அலுத்துக் கொண்டார் அந்த
கடைகாரர்.
"எங்க அப்பா ஒன்னும் அறிவு கேட்டவர் இல்ல ,அவர் என்ன சொன்னாலும் அதுல ஒரு
காரணம் இருக்கும்,நாங்க அஞ்சு பேரும் தூக்கிட்டு போற மாறி பெரிய ஊசியா
குடுங்க"என்று எரிந்து விழுந்தான் ஒருவன்.

"அட இவனுக மண்டைக்குள்ள ஒண்ணுமே இல்லாத பசங்களா இருப்பானுக போல
இருக்கே,அந்த உதவாத வெட்டி போட்ட பண மரத்த வித்துட வேண்டியதுதான்"என
எமனதுள் எண்ணிக் கொண்டார் அந்த கடைகாரர்.
"ஓ...பெரிய ஊசிய கேக்றீங்கள...இத மொதல்லையே சொல்ல கூடாது...அதோ அங்க
வெளிய கடக்குற அந்த பெரிய ஊசிய எடுத்துட்டு ...இருபது பணம் குடுத்துட்டு
போங்க "என்றார் கடைகாரர்.அந்த ஐந்து பேரும் சிறிதும்
 யோசிக்காமல் அந்த பனமரத்தை நோக்கி
போயினர்"பாத்திங்களாடா?...பார்த்தீங்களா ?...சாமர்த்தியம் இல்லாம போனா
ஒரு நல்ல பொருள் வாங்க முடியாது,தூக்குங்கடா ஊசிய"என திட்டினான்
முதலானவன்.அந்த ஐந்து
 பேரும் பனைமரத்தை தோலின் மேல் தூக்கிக்கொண்டு நடந்தனர்....போகும்
வழியில் ஒரு வீட்டின் முன் ஒரு பெரியவர் உட்கார்ந்து
கொண்டிருந்தார்"நிலுங்கடா...இதய எங்க தூக்கிட்டு போறீங்க"என்று வழியை
மரித்தார்.
"எங்க அப்பாவுக்கு ஊசிய வாங்கிட்டு போறோம்"என்றான் ஒருவன்...அதற்க்கு
அந்த பெரியவர் வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினார்

"ஊசியா?இந்த மாதிரி ஊசிய நான் பார்த்ததே இல்லையப்பா?"என்று அவர்களை
கிண்டல் செய்தார்."ம்ம்ம்.எங்க அப்பாவுக்கு எல்லாமே தெரியும்...அவர்கிட்ட
வந்து கேட்டு இந்த மாறி பொருள்களை எல்லாம் தெரிஞ்சுகோங்க"என்று
 சொல்லியவாறே நடக்கத் தொடங்கினர்.அவர்கள் தூரத்தில் வருவதை பார்த்த
முனுசமிக்கோ ஆச்சர்யமாய் இருந்தது "என்னது இவனுக பண மரத்த தூக்கிட்டு
வரனுக"என்று மனதினுள் கேட்டுக் கொண்டார்.அந்த ஐந்து பேரும்
 மரத்தினை கொண்டு வந்து அவரின் முன் போட்டனர்.."என்னடா இது"என்று
பதட்டமாய் கேட்டார் முனுசாமி."உங்க துணிய தேக்க ஊசி கொண்டு வந்துருக்கோம்
அப்பா"என்றனர்."ஒரு வேலை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ
நமக்கு தெரியாது என்பதை எப்பொழுதும் காட்டிக் கொள்ளகூடாது,இல்லை என்றால்
நம்மை ஒன்றும் தெரியாதவன் என்று நினைத்து விடுவார்கள்...தெரிந்தது போலவே
காட்டிக் கொள்வோம்"என மனதுள் நினைத்துக் கொண்டார்."என்ன அப்பா
யோசிகுறீங்க ...அந்த எடத்துல வருசக் கணக்கா கடை வேச்சுருகவனே இத ஊசின்னு
குடுத்துட்டான்..நாங்களா ஏமாறுவோம்"என எகிறினான்
ஒருவன்."ஆமாம்..ஆமாம்..இது மிக பெரிய ஊசிதான்"என்று தலையை ஆடினார்
முனுசாமி...
"அப்பா...ஆமாம் ஊசி என்றால் என்ன ?"என்று கேட்டான் ஒருவன்...வர வர நமது
பசங்களுக்கு அறிவு தெளிந்து கொண்டு வருகிறது என்று
நினைக்குறேன்...சந்தேகம் எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார்களே"என்று
நினைத்தார் முனுசாமி...
"சொல்லுங்க அப்பா..ஊசினா என்ன?"என அடம் பிடித்தவாறு கேட்டான்
இன்னொருவன்."ஆ...ஆ...அது வந்து ஊசி என்றால் ஊசிதான்"என மழுப்பினார்
முனுசாமி..."ம்ம்ம்...புரியலையே ..தெளிவாக சொல்லுங்க அப்பா"என  மண்டையை
 சொரிந்து கொண்டு கேட்டான் இன்னொருவன்."இவர்களுக்கு புரிய வைக்க எனக்குத்
தெரிய வில்லை என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்"என மனதினுள்
அலுத்துக்கொண்டவர்.
"அதாவது ஊ என்றால் ஊர்....சி என்றால் சிறப்பு...இந்த ஊரின் சிறப்பே என்னை
போன்ற அறிவாளியான தந்தை இருப்பதுவே"என முடித்தார் முனுசாமி...அதனை கெட
ஐந்து பெரும் வாய் விட்டு சிரித்தனர்."மக்களே ...இப்படித்தான்
எப்பொழுதும் நீங்கள் சிரித்த படி இருக்க வேண்டும் நம்மை பார்ப்பவர்களும்
நம்மை பார்த்து சிரிக்க வேண்டும்  அதுதான் நமக்கும் பெருமை"என்று பெருமை
பாடி முடித்தார் முனுசாமி..."அடடா என்ன விளக்கம் ?என்ன விளக்கம்?"என வசை
பாடிக்கொண்டே அந்த ஐவரும் களைந்து சென்றனர்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top