போட்டி #10 - 1. தனிமனித சகாப்தம்

எழுத்தானியே  எனக்கான திறவுகோல் என் தமிழும் அமுதும் என் தேடலுக்கான ஊடல் கருவி அங்கம் பற்றும் அடக்கமுடியாத சில ஏக்கங்களும் தாக்கங்களும் என்னுள் உறங்கிய கிளர்ச்சியை விழிக்க செய்துவிட்டது 
இனி நானும் உறங்க போவதில்லை என் வரிகளும் யாரையும் உரங்கவிட போவதில்லை 
என்று தனிமனித உணர்வுக்கும் எண்ணங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கிறதோ அதுவரை அவன் வாழும் வாழ்க்கை முகிளன்றி விடியும் கருப்பு இரவை போலத்தான் நானும் அவ்வழியே 
என் சகாப்தத்தை தேடி செல்லும் ஓர் பயணவேலையில் நாடி சென்ற கோடி இன்பம் சாலை ஓர சிறுவர் விளையாட்டு அக்கரையோ அசுத்தம் ஒருபுரமோ என் பெருமான் சிவபெருமான் 
மனிதனை மனிதனாக பார்க்காத தேசத்தில் ஒருபுரம் தெய்வ வழிபாடு மறுபுறம் பிட்சை பாத்திரம் கடவுளும் இங்கே கற்சிலையே காமம் கேட்கும் காதலும் காசுக்காக சில தேடலும் நகரும் பேருந்தின் சன்னல் கம்பிகளோடு ஓடிக்கொண்டே இருந்தது
நான் மட்டும் நகராமல் நிற்க நகர வாசமும் என் மண் வாசமும் மாறுபடும் விந்தை உணர்ந்தேன் 
ஏனோ என்னும் பெயர் சொல் என்னுள் அடிக்கடி மணி அடிக்க உறங்கா விழிகள் உண்மை உணர்த்திய நேரம்
மாலைப் பொழுதின் ஒரு புன்னகை இரவு நேரம் கண்ணை கவர வீதியெங்கும் (திருவிளக்கு) என் வாக்கியத்தில்  
நட்சத்திரத்திற்கு சவால் விட துடிக்கும் ஊர் உறங்க வைக்கும் சிறு அறிகுறி இரவு நேர பயணம் நான் உலகை உணரும் தருணம் உறக்கம் மட்டும் எனக்கு இல்லை உணர்வுக்கும் எனக்கும் இடையில் எதுவும் சம்மந்தம் இல்லை திறவுகோல் தேடும் சிறு கவிதை கலைஞன் எண்ணங்களுக்கும் வண்ணம் தீட்ட சிறு பயணம் வன்மம் தீர்க்க வாசல் தேடி அலையும் ஓரு இளங்குருவி அதுவே இந்த இளயருவி 
உறக்கம் கதவை திறக்க சன்னல் கம்பிகள் எனக்கான தலையணை மறுநாள் விடியலோடு விலக்காத பற்களோடு காலை தேனீர் சுவையோ தனிரகம் புகையிலையோ போதை தரும் இரண்டும் இணைந்த காலை உணவு உடன் அலுவலக அலைபேசி உரையாடல் 
வாங்கிய போதை பொருள் பின்னல் ஓர் குறிப்பு (ITC) மதிய வேலை உணவு இடைவேளை பேருந்துலிருந்து இறங்கி வாங்கிய சிறு நொறுக்கு தீனி அதிலும் அதே (ITC) சற்று கடையை உற்றுப் பார்த்தேன் அத்தனை பொருளிலும் (ITC)  நலிவுறும் என் நாட்டு நிறுவனம் அயராது உபயோகிக்கும் அத்தனை பொருளிலும் அதே பெயர் 
எங்கே துவங்கி எங்கே நகர்கிறது இந்த தேசத்தின் சுழற்சி அத்தனையும் ரசித்து நானும் சுவைகத்தான் முடிகிறது நானும் இந்த தேசத்து இனம்தானே  
நானோ அயல்நாட்டுக்கு அடிமை செய்யும் நம் நாட்டு வேலையாள் எதற்காக நான் என் நேரத்தை சுமத்தி எதற்க்கோ அலைகிறேன் சாலை சந்திப்பில் சுவரொட்டி கூறும் என் நாட்டு  செய்தி கூகுள் அதிபதி சொல்கிறார் நாசா ஆய்வுக்கூடத்தில் 27 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனராம் அனைவரும் தேசம் திரும்பி நாட்டுக்காக உழைத்தால் என் தேசத்தை யாராலும் தொடவும் முடியாதென அறிவுரை ஆற்றுகிறார்
ஏன் எவனோ ஒருவன் என் நாட்டு மக்களை அடிமையாக்கி அவனே அதை அக்கறையோடு எடுத்துரைக்கிறான் 
அங்கே ஓர் சூட்சமம் 
தமிழனாக நானும் தகுதியற்ற என் தேச தலைவரும் இருக்கும் வரை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகும் 
கடவுள் தரிசனம் தேடி சென்ற வேளையில் 5 அதிசய மண்டபம் அக்கறையோடு கட்டிய தமிழன் ஆபத்தை ஆழ்ந்துணர்ந்து அதற்கும் ஒரு முடிவுரை வியப்பின் உச்சத்தில் நான் 
இன்றைய அறிவியலுக்கு சவால் விடும் என் தமிழ் பஞ்சாங்கம் தமிழன் மீசை மட்டும் முருக்கல்ல செயலும் தான் 
எனினும் என்னுள் சில இச்சை நானும் மனிதன் தானே மல்லிகை வாசம் மயக்கும் மங்கையர் நேசம் யாரை விட்டது இந்த சாபம்
நான் மட்டும் விதிவிலக்கா சாலை ஓர மங்கை சில கல்விகட்கும் கவிதை குயில்கள் கண்களும் களவுபோகும் குட்டி அழகு நாய்கள் 
பாலுட்டும் தாய்மை அதனினும் அழகு இவைகளையும் கொண்ட என் தேசம் ஏன் ஆகிறது நாசம் 
கேள்வி மட்டுமே என்னிடம் பதில்களை சொல்ல யாரும்மில்லை தேட எனக்கும் நேரம் இல்லை நகரும் இயந்திர வாழ்கையில் நானும் ஓர் உயிரின வகை அப்படியே என்னை அறிமுகம் செய்கிறது என் வாழ்க்கை 
முகத்திரை தேடும் நித்திரை இழந்த தனிமையின் தத்துப்பிள்ளை பயணங்களே பாடம் புகட்டும் 
புது புது பயணங்கள் புத்தகத்தில் இல்லாத எட்டாத ஓர் அறிவு என்னுள் தருகிறது 
அனுபவமே என் ஆசான் அதில் பயணமே என் பாடபுத்தகம் என்னை சுற்றி நடக்கும் கேலிக்கூத்து எள்ளி நகையாடும் உலகம் ஒருபுறம் 
தேனை மிஞ்சும் காதல் குருவியின் கொஞ்சல்கள் மறுபுறம் ஏறும் இறங்கும் தங்க கவலை காரணமே இல்லாதது போல் சில அரசியல் பேச்சுகள் அட என்னதான் நடக்கிறது என்னை சுற்றி 
நடப்பதை பகிர்ந்தால் கிடைக்கும் பட்டம் வேலையில்லா பயத்தியகாரன் ஒரு பயணத்தின் போது இத்தனை குமரல்கள் என்றால் என் வாழ்கை பயணத்தில் நான் சந்திக்கவிருக்கும் எத்தனை பயணங்கள் இன்னும் என்னை எனக்கு அழைத்து செல்ல போகிறதோ 
என்னுள் நானாக எனக்கே என்னை அடையாளம் காட்ட தொடரும் என் பயணம் இனி தொடர்கதை புனித பயணம் 
நாளை எதிர்நோக்கி நான் வெகுதொலைவில் அல்ல விரைவில் புது பயணம் தொடரும் நட்போடு  நான்...நன்மை பெருகட்டும்.......

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top