காதல் உலகம்

BOOK REVIEW

தலைப்பு : காதல் உலகம்

ஆசிரியர் : தினேஷ்குமார்

பதிப்பகம் : Blue Rose Publishers

பக்கங்கள் : 1௦5

விலை : Rs. 149

மதிப்புரையாளர் : Dr.நிவேதிதா BDS.,


மதிப்பீடுகள்:

மொத்தம் : 4/5

தலைப்பு : 3.5/5

உறை : 4/5

கதைக்கரு : 4/5

விலை : 4/5

எடுத்துரைத்தல்: 3.5/5


மதிப்புரை (4/5):

"காதல் உலகம்" – இப்புத்தகத்தை எழுதியவர் தினேஷ்குமார். இப்புத்தகம் ஓர் கவிதை தொகுப்பு. முழுக்க முழுக்க காதல் கவிதைகளை கொண்ட ஓர் புத்தகம். ஓர் ஆண் தன் காதலிக்கு சொல்ல நினைக்கும் யாவும் இதில் கவிஞர் படைத்துள்ளார்.

சிறுக்கவிதைகள் ஹைக்கூ வடிவில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் நம்மை காதல் வயப்படும் அளவிற்கு மிக அருமையாக அமைந்துள்ளன. அதில் "என்னவோ ஆகிறேன்" மற்றும் "காதலின் அழகு" எனக்கு மிகவும் பிடித்தவை. பிழைகள் ஏதும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது.

"புருவங்கள்", "வானவில்" – இவ்விரு கவிதையும் ஒப்பானது போல் இருக்கிறது. கவிஞர் கவிதைகளை இன்னும் வசீகரமாக படைத்து இருக்கலாம். ஒரு சில இடங்களில் கவிதைகள், கதை வரிகள் போல் இருந்தன. அடுத்த புத்தகத்தை எழுதும்போது இவ்விரண்டை நினைவில் கொண்டு எழுதினால் மேலும் அழகாக அமையும் என்று கூற ஆசைப்படுகிறேன்.

அனைவரும் இப்புத்தகத்தை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். காதலன் தன் காதலி (அ) மனைவிக்கு பரிசளிக்க பொருத்தமான புத்தகம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top