ஜப்பானில் நம் நாயகன் 5

இரவு அனைவரும் கூடினார்கள். ரன்வீர் தன் வாதத்தை ஆரம்பித்தான்.

தன்வீர்-- "விக்டிம இணைக்கு காலைல டிஜிடாக்ஸின் மருந்தை ஊசில ஏத்தி, அந்த ஊசியை போட்டு தான் கொன்னுருக்காங்க. சிக்கல் என்னனா அவங்க 11 மணிக்கே இறந்துட்டதா டாக்டர் ராதா சொல்ராங்க ஆனா 11.20க்கு நான் உயிரோட பாத்தேன்னு மிஸ்டர்.ரவி சொல்லிருக்கார். இப்போ இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் பொய் சொல்லிருக்கணும். 

முதல்ல ரவி பொய் சொல்றதா வச்சுப்போம் இவர்  என்ன யோசிச்சுருப்பார்னா 'ஏற்கனவே நாம கொல்லணும்னு தங்கச்சிட்ட சொன்னோமே ஒரு வேல அவ தான் கொன்னுட்டாலோனு' சந்தேகம் வந்து சங்கீதாவை காப்பாத்த விக்டிம  பொணமா பாத்தும், நான் உயிரோட பாத்தேன்னு ரவி சொல்லிருக்கணும். அப்புறம் அவங்க ஊசியை பொதைக்கும் பொது போலீஸ் பாத்து அத கண்டும் புடிச்சுட்டாங்க அதனால மிஸ் சங்கீதா தான் கொலை பன்னிருக்கணும்  " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே 

சங்கீதா --"ஆமாம் நான் தான் கொலைய பண்ணேன். என்ன என்ன வேணாலும் பண்ணிக்கோங்க" என்று உடனே சரண்டர் ஆக,

ஷாலு -- "அடி பாதகத்தி நீயாடி அவங்கள கொன்னை?" என்று வடிவேலு பண்ணியில் பேசினாள்.

தன்வீர் --"இருமா, நான் வெறும் கருத்து கணிப்பை தான் சொல்றேன்.நீ தான் கொலை பண்ணன்னு நான் உறுதியா சொல்லல. இது எல்லாம் நடக்காம வேற ஒன்னு கூட நடந்திருக்கலாம் .

நீ 10.50க்கு விக்டிம பத்ததா சொன்னல்ல, ஒருவேளை நீ பாக்கும் போதே அவங்க இறந்து போயிருக்கணும். அத பாத்த நீ 'சொன்ன மாதிரியே அண்ணன் கொன்னுட்டானோன்'னு நினைச்சு அவனை காப்பாத்ததான் அவங்கள பொணமா பத்தத யார்கிட்டயும்  சொல்லல. அதுக்கப்புறம், நீ பஸ்ல போய் உட்காந்து ரவியோட கோட் ஆஹ் பாத்தப்போ அதுல ஒரு ஊசி இருந்து அத நீ எடுத்த, அதனால அவன் தான் பண்ணன்னு நினச்ச நீ அந்த ஊசியை மறைக்க தான் போராடிருக்க.  

இத எப்படி நான் சொல்றேன்னா உன்ன கூப்டு விசாரிச்சப்போ தெய்வீக மலை மேல சத்யம் பண்ண நீ, நான் அம்மாவை கொலை பண்ணலைன்னு சொன்ன, ஒரு வேல உனக்கு உன் அண்ணன் மேல நம்பிக்கை இருந்திருந்தா நாங்க இத பண்ணலைன்னு சொல்லிருப்ப, நீ அந்த சத்யம் பண்ணப்ப தான் உனக்கு உன் அண்ணன் மேல சந்தேகம் இருந்ததை நான் கண்டுபுடிச்சேன்" என்றிட அவள் அமைதியாக தலை குனிந்தாள்.

ஷாலு --"பய ஆரம்பிச்சுட்டான், போலீஸ் சார் கொஞ்சம் பாப்கார்ன் இருந்தா கொடுங்க, இனி ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் ஆஹ் இருக்கும்"

போலீஸ் --"அவர் அவங்க ஊசி எடுத்த அப்போவே பாத்துட்டாரா ?"

ஷாலு --"அவன யாருனு நினைசீங்க!!! அவன் கண்ணுல எதுவுமே தப்பாது, நீங்க வேணா பாருங்க இப்போ ஆளாளுக்கு உண்மைய சொல்லுவாங்க" என்றாள்.

தன்வீர் -"இப்போ மிஸ்டர். ரவி கொலை பண்ணதா வச்சாலும் அவர் 11.20க்கு விக்டிம பாத்தப்ப தான் கொண்ணுருக்க முடியும் ஆனா டாக்டர் ராதா 11 மணிக்கு கொலை நடந்திருக்கலாம்னு சொல்றாங்க. அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்னு யோசிச்சு பாத்தா," என்று ராதாவிடம் திரும்பியவன், "நீங்க ரவி அவர் அம்மா கிட்ட இருக்குரத தூரத்தில வரும்போது பாத்திருக்கீங்க, ஆனா என்ன நடந்ததுனு உங்களுக்கு தெரியுல என்னாச்சுன்னு பக்கத்தில போய் பாத்தா விக்டிம் செத்து போய்ட்டாங்கன்னு தெரியுது, உங்களுக்கு வேற ரவி மேல ஒரு காதல். அதனால அவர காப்பாத்த நீங்க செத்துபோன நேரத்தை மாத்தி சொன்னீங்க சரிதானே.." என்று ராதாவை கார்னர் பண்ண

ஷாலு--"என்னா காதல்யா??" என்றாள் மெல்லிய குரலில் போலிஸிடம்

ராதா-- "அது... அது... அப்படி எல்லாம் இல்லை " என்று மெல்லிய கண்ணீரோடு திக்கித் திக்கி சொல்ல,

தன்வீர் --"அப்போ நீங்க தான் கொன்றுக்கனும்" என்று ஒரேபோடாக போட

ரவி சடாரண எழுந்து,"இங்க பாருங்க, நான் கொல்லணும்ணு நினைச்சது உண்மை தான். எம்டி (empty) ஊசி போட்டு அந்த தாக்கத்தால ஏற்படுற வலில கொல்லலாம்னு எங்க அண்ணி மெடிக்கல் கிட்ல இருந்து நான் ஒரு ஊசிய திருடினேன். ஆனா நான் பாக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க,
நீங்க சொன்ன மாதிரி என் தங்கச்சி தான் கொலையை பன்னிருக்கணும்னு நினச்சு தான் பஸ்ஸுக்கு வந்து பிறகு யார்கிட்டேயும் சொல்லல" என்றான்.

தீபா -- "ஆமாங்க என் மெடிக்கல் கிட்ல ஒரு ஊசியை காணும்" என்றிட

தன்வீர் -"சரி தான்.மிஸ்டர்.ரவி  திருடினது எம்டி ஊசி ஆனா விக்டிம்க்கு டிஜிடாக்ஸின் மருந்து ஏத்திருக்காங்க, அதனால தான்  அவங்க இறந்தும் போயிருக்காங்க, ஆதனால இது மர்டர் வேப்பன் இல்ல. இதுக்கான பதில டாக்டர் தான் சொல்லனும்" என்று பார்க்க,

ஷாலு --"மாட்டிக்கிட்டியே பங்கு" என்றாள்.

ராதா -- " ஆமாங்க. என் ரும்ல இருந்த மெடிக்கல் கிட்ல டிஜிடாக்ஸின் மருந்தும் ஒரு ஊசியும் காணும். ரவி தான் எடுத்திருப்பாரோன்னு நினைச்சு அவர காப்பாத்த தான் நான் இத வெளில சொல்லல" என்று தயங்கி தயங்கி சொல்ல

தன்வீர் --"அவ்வளவு தானா?" என்று ராதாவை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து கேட்க,

ராதா -- " அவர காப்பாத்த தான் நான் அவங்க செத்த நேரத்த மாத்தி சொன்னேன்" என்றாள் பெருமூச்சு விட்டு.

ஷாலு -- "ரைட்டு, இனி உண்மைய வரவைக்க இவன் பல ட்விஸ்ட் வைப்பான். குசும்பு புடிச்சவன்." என்றல் மெல்லிய குரலில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே,

தன்வீர் -- "10.50 க்கு விக்டிம பொனமா மிஸ். சங்கீதா பார்த்திருக்காங்க, 10.40 க்கு உயிரோட இருக்குரத மிஸஸ் தீபா பார்திருக்காங்க. அப்போ 10.40 இருந்து 10.50 குள்ள தான் கொலை நடந்திருக்கணும். அந்த நேரத்தில கொலை நடந்திருக்குன்னா கொலையாளி இவங்களா தான் இருக்கனும்" என்று கீதாவை காட்ட அதை கேட்டதும் மொத்த குடும்பமும் அதிர்ந்தது.

தன்வீர் -- " ஷாலு மா, பாப்கார்ன் போதும்" என்றான் அவர்கள் அதிர்த்த நேரத்தில்.

கீதா கண்களில் கண்ணீருடன் திரு திரு வென அதிர்ச்சியில் விழிக்க, குடும்பமே கோவமாக அவனை முறைக்க, அவனோ ஷாலுவிடம் பாப்கார்னை புடிங்கினான். 

தீபா --"ஏன்யா அந்த சின்ன பொண்ணு எப்படியா கொலை பண்ணிருக்க முடியும்?, முதல்ல அவளுக்கு அது எல்லாம் தெரியுமா?" என்று கோவமாக கேட்க 

தன்வீர் -- " அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும் 10.40க்கு விக்டிம் உயிரோட இருக்குறத பாத்துட்டு நீங்க பஸ்க்குள்ள வந்துடீங்க, அதே நேரத்துல பஸ்ஸுக்குள்ள இருந்த மிஸ்.கீதா காட்டுக்குள்ள எதையோ பாத்து வெளில ஓடுனாங்க, அப்போ இவங்க தானே கொலையாளியா இருக்கனும்?" என்றான் அசராமல்.

தீபா -- " யோவ், 10.40க்கு நான் போகும் போதே அவங்க செத்து தான் போயிருந்தாங்க. " என்று உண்மையை உளறினாள். 

ஷாலு --"அப்படி வா வழிக்கு. அவன்கிட்ட உண்மைய மறைக்க முடியுமா? வைச்சான் பாரு ட்விஸ்ட் சும்மா அதிருர அளவுக்கு" என்று ஒரு ஜூஸ்ஸை கையில் எடுத்தாள்.

தன்வீர் -- "அப்போ 10.40க்கே விக்டிம் செத்துட்டாங்க, எனக்கு அப்போவே ஒரு சந்தேகம், நன் பஸ்ஸுல இருக்கும் பொது விக்டிம் இல்லாம எல்லாரும் வந்து உட்காந்திருந்தீங்களே!!! விக்டிம் யாரு, உங்கள எப்படி மிரட்டுவாங்கனு எல்லாம் நாங்க பாத்திருக்கோம், அப்படி இருந்தும் விக்டிம கூப்டாம நீங்க மட்டும் தனியா பஸ்ஸுக்குள்ள உட்காந்திருந்தீங்க அதுவும் எப்படி எழவு வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்க போற மாதிரி இருந்தீங்க.

ஆக விக்டிம் இறந்தது உங்க எல்லாருக்கும் தெரியும், தெரிஞ்சும் எல்லாரும் அமுக்குணியா இருந்திருக்கீங்க. மிஸ்டர். ராஜா கூட அப்படி தான் இருந்தார். அப்படினா அவர் பார்க்கும் போதே இறந்துதான் போயிருக்கணும். உங்க குடும்பத்துக்குள்ளயே ஒருத்தர ஒருத்தர் காப்பாத்திக்க உண்மைய மறைச்சுடீங்க. சரிதானா மிஸ்டர்.ராஜா, இந்த லாஜிக் படி பாத்தா நீங்க தான் இந்த கொலைய பண்ணிருக்கணும்" என்றான்.

ஷாலு --"அட அட அட.. இது ஒரு வானத்தை போல குடும்பம் போல" என்று அடுத்த பீசா(pizza) வை கையில் எடுத்தாள். 

ராஜா --"சாத்தியமா நான் பண்ணல. 10.30 மணிக்குநான் பாக்கும் பொது அம்மா செத்து போயிருந்தாங்க. ஆனா நான் எதுவும் பண்ணல" என்றான்.

தன்வீர் --" தெரியும் உங்க எல்லாருக்கும் கோவம் இருந்தாலும் கொலை பண்ற அளவுக்கு தைரியம் இல்ல. அதனால உங்க குடும்பத்துல இருக்குற யாருமே கொலை பண்ணல, அப்படினா வெளிய இருக்குற யாரோ தான் பன்னிருக்கணும், அப்படி பாத்தா டாக்டர்றும் மேனேஜர்ரும் தான் பண்ண வாய்ப்பிருக்கு. ஆனா 10.30 மணிக்கு கொலை நடக்கும் போது டாக்டர் ராதா மிஸ்டர்.ரவி கூட பேசிட்டு இருந்தாங்க அவங்க கொலை பன்னிருக்க முடியாது. மேனேஜர் கொலை பண்ணிருக்க வாய்ப்பு இல்லை, அதனால அவர்க்கு ஒரு பிரயோஜனமும் இல்ல."

ஷாலு --"அப்போ யாரு தான் கொலை பண்ணது?" என்றாள்

தன்வீர் --"யாரு பண்ணாணு யோசிக்குறதுக்கு முன்னாடி, இன்னும் ஒரு கேள்வி இருக்கு , எப்பவுமே தன் குடும்பத்தை கூடவே வச்சிருந்த விக்டிம் இன்னைக்கு எதுக்காக உங்ககிட்ட தனியா உட்க்காருறேன்னு சொல்லணும். அப்போ விக்டிம் யாரையோ சந்திக்கணும்னு நினைச்சுருக்காங்க அது யாருன்னு நமக்கு தெரியணும்" என்றான், பிறகு ஷாலுவிடம் "பசிக்குதா ஷாலு மா?" என்றான்.

அந்த குடும்பம் மட்டும் இல்லாமல் அனைவருமே அவனை அதிசயமாக பார்த்தார்கள். இவனின் பொறுமை, புத்தி கூர்மை அனைத்தும் ஈர்த்தது, அதிலும் இவன் காதல் இவனை போல்  வாழும் ஆசையை தந்தது. தன் குடும்பத்தில் கொலையாளி இல்லை என்பதால் அனைவரும் சற்று ஆசுவாசமாக அதே நேரம் உன்னிப்பாக கவனித்தார்கள். 

----------------------------------------------------------------------------------------------------------

இன்னைக்கு உங்களுக்கு யாரெல்லாம் கொலை பண்ணலைன்னு புரிஞ்சுருக்கும். நாளைக்கு யாரு கொலை பண்ணதுன்னு பாக்கலாம். 

உங்களுக்கு யாரு எதுக்காக கொண்டிருப்பாங்கனு ஐடியா இருந்தா சொல்லுங்க. 

How is it?

Please do vote and comment.

Parvathi Suresh Sharma.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top