ஜப்பானில் நம் நாயகன் 4
இன்வெஸ்டிகஷன் அப்போதே தொடங்கியது, அதன் முதல் கட்டமாக ராதாவை அழைத்தார்கள் . ராதா 11.30 மணிக்கு பாக்கியம் செத்து போய் கிடந்ததை பாத்திருக்காங்க, அதனால அவளின் கணிப்புபடி, 'பாக்கியம் 11 மணிக்கு இறந்திருக்கலாம், இதயநோய் காரணமாக ஹார்ட் அட்டாக்ல தான் இறந்துபோய் இருகாங்க' என்று கூற. அப்போது
தன்வீர் -- "இல்ல ராதா, இது இயற்கை மரணம் இல்ல. நான் அவங்க உடம்ப ஆராயும்போது, அவங்க கைல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஊசி போட்ட மாதிரி தடம் இருந்தது, அவங்க ஏற்கனவே எடுத்துக்குற டிஜிடாக்ஸின் மருந்தை ஓவெர்டோஸ் ஆஹ் ஏத்திருக்காங்க . அதனால தான் இறந்து போயிருக்காங்க, நடந்திருக்குறது உறுதியா கொலை தான். மேபி (may be) இத ரவி பண்ணிருக்கலாம் ஏன்னா, நான் இங்க வந்த அன்னைக்கே பால்கனில நிக்கும்போது கீழ 'அவ உயிரோட இருக்குற வரைக்கும் நிம்மதி இல்ல செத்தா தான் நமக்கு நிம்மதினு' திட்டிட்டு இருந்தான்." என்று சொல்லிவிட்டு ராதாவை அனுப்பினான்.
ஷாலு --"அப்போ நீ என்ன நினைச்சுகிட்டு விட்டத்த பாக்கல, அவங்க பேசினத ஒட்டு கேட்டுட்டு அத பத்தி யோசிச்சுட்டு தான் பாத்துட்டு இருந்திருக்க, அப்படி தானே?" என்று கோவமாக கேட்க.
தன்வீர் -- "இல்லடி சும்மா எல்லார் பேசுரதையும் யோசிக்க முடியுமா?" என்று மழுப்பினான்.
போலீஸ், 'இந்த ரணகலத்துலையும் எப்படி இப்படி யோசிக்குறாங்க, அடேங்கப்பா' என்று நினைத்தார்.
ஷாலு --"நீ இத முடி, அப்புறம் நான் உன்ன கவனிச்சுக்கறேன்" என்றால்.
அடுத்ததா பிரபாவதியையும் அவங்க அஸிஸிடண்ட்டையும் வர சொன்னார் போலீஸ்.
தன்வீர் --"இரண்டாவது முறை பஸ்ல இருந்து போகும் போது எங்க போனீங்க?"
பிரபாவதி -- "நாங்க சுத்தி பாக்க தான் போனோம், ஆனா அப்படி போகும் போது சரியா 10.20 மணிக்கு பெஞ்சுல உக்காந்திருந்த அவங்ககிட்ட ஒரு சாமியார் சண்டை போட்டாங்க" என்று அஸ்சிஸ்டன்டை பார்க்க,
அசிஸ்டன்ட் --"அமாம் போட்டுட்டு இருந்தாங்க "
தன்வீர் --"இங்க உள்ள எல்லா சாமியாரும் வெள்ளைல டிரஸ் போட்டாலும் அவங்க அவங்க ரேங்க்குக்கு தகுந்த மாதிரி ரிப்பன் கட்டிருப்பங்களாமே, நீங்க பாத்த சாமியார் என்ன கலர்ல கட்டிருந்தாங்க?"
பிரபாவதி --" சிகப்பு கலர் ரிப்பன்"
அசிஸ்டன்ட் --"ஆமாம் சிகப்பு"
தன்வீர் --"அப்போ இவங்க பாக்குற வரைக்கும் விக்டிம் உயிரோட தான் இருந்திருக்காங்க."
ஷாலுக்கு எதிரில் அசிஸ்டன்ட் போலீஸ்க்கு எதிரில் பிரபாவதி, தன்வீர் நின்றுகொண்டே கேட்டுக்கொண்டு இருந்தான். திடீரென்று தன்வீர்,
தன்வீர் -- "ஷாலுமா, அசையாத அசையாதனா கேக்குறியா?, இப்போ பாரு மறுபடியும் ரத்தம் கசியுது. ரத்தம் வருதுனாச்சும் சொன்னா என்னமா?" என்று போட்டிருந்த கட்டை சற்று தளர்த்தி மீண்டும் சரியாக கட்ட,
அசிஸ்டன்ட் -- "அதானே ஏங்க இப்படி?, உடம்பு மேல நம்ம ரொம்ப கவனமா இருக்கனும். ரத்தம் வந்ததும் சொல்லிருந்தா இப்போ இவ்ளோ ரத்தம் கசிந்திருக்காதுல்ல?" என்றான். ஷாலு அதிர்ந்து பாக்க தன்வீர் மெல்ல சிரித்து கண்ணாடிதான்.
அடுத்து இவர்களை அனுப்பிவிட்டு ராஜாவை வரவழைத்தான்,
போலீஸ் --"ஹ்ம்ம்.. முன்னாடி இதே பொண்ண நானே திருட்டு கேஸ்ல அர்ரெஸ்ட் பண்ணிருக்கேன், இப்போ இவங்க அரசியல்வாதி இவங்களுக்கு நான் பாதுகாப்பு கொடுக்கணுமாம், வாழ்கை எப்படி எல்லாம் மாறுது பாருங்க" என்று புலம்ப,
ஷாலு -- ஓ, அப்போ அவங்க சிறையில எல்லாம் இருந்திருக்காங்களா?"
போலீஸ் --"ஆமா" என்று சொல்லும் போதே ராஜா வந்தான். அவன் வந்தும் விசாரிக்க ஆரம்பித்தான்.
தன்வீர் --"பஸ்ஸ விட்டு இறங்கினதும் நீங்க எங்க போனீங்க? என்னாச்சு?"
ராஜா --"பஸ்ஸ விட்டு இறங்கினதும் அம்மா கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்னு சொன்னாங்க, அதனால நாங்க எல்லாரும் அவங்கள விட்டுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டோம்.அப்போ மேனேஜரும் வந்தான், கொஞ்ச நேரம் சுத்திட்டு திரும்ப வர வழில அம்மாவை பாத்தேன் அப்போ மணி 10.30, நான் அவங்கள பஸ்ஸுக்கு கூப்பிட்டேன், அவங்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன்னு சொன்னாங்க அதனால நான் மட்டும் பஸ்ஸுக்கு வந்துட்டேன்."
அடுத்து அவனை அனுப்பிவிட்டு, தீபாவை வர சொன்னார்கள்.
தன்வீர் --"பஸ்ஸ விட்டு இறங்கினதும் நீங்க எங்க போனீங்க? என்னாச்சு?"
தீபா -- " எனக்கு பாட்டிக்கு கீழ அடிமையா இருக்குறது புடிக்கல, அத பத்தி என் புருஷன்கிட்ட சொன்ன அத அவன் காதுல வாங்கல, எனக்கு மேனேஜரை புடிச்சுருந்தது. அதனால முதல்ல அவரை தனியா கூப்டு அவர்கிட்ட இத சொல்லி 'உன் கூடவே வந்தரென்'னு கேட்டேன்."
ஷாலு --"ஓஹோ, அப்புறம் " என்று அவள் கதை கேட்க,
தீபா --"அத நான் ராஜா கிட்டையும் சொல்லிட்டேன், அப்புறம் 10.40 மணிக்கு பெஞ்சுல உக்காந்திருந்த மாமியார்கிட்டையும் சொல்லிட்டேன் "
ஷாலு --"அச்சச்சோ அப்புறம்?"
தீபா --"அவங்க அவங்க கைல இருந்த தடியால என்ன அடிச்சாங்க, அப்புறம் நான் பஸ்ஸுக்கு வந்துட்டேன்" என்றாள்
ஷாலு --"அடக்கடவுளே!!! ஏன்மா நீ ஓடிப்போறத எல்லார்கிட்டயும் சொல்லிட்டா போவ, அதுலயும் வில்லிகிட்டையே வேற சொல்லிருக்க, உனக்கு தில்லு ஜாஸ்தி தான்" என்றிட அவளை அனுப்பிவைத்தார்கள்.
ஷாலு --"இத கேட்டதும் அது பொட்டுனு போயிருக்கணும், கொஞ்சம் விட்ருந்தா இந்த டென்ஷன்லேயே போயிருக்கும் அத விட்டுட்டு ஏதோ ஒரு வேஸ்ட் லேண்ட் ஊசி போட்ருச்சு, சாகடிக்குறவன் ஒரு ரெண்டு நாள் கழிச்சு சாகடிச்சுருக்க கூடாது"
போலீஸ் --"அது என்ன மேடம் ரெண்டு நாள்?"
ஷாலு --"ரெண்டு நாள்ல நாங்க கிளம்பிடுவோம், அதான் சொன்னேன்"
அடுத்ததாக சங்கீதாவை வர சொன்னார்கள்.
போலீஸ் --"நீங்க எப்போ உங்க அம்மாவை பாத்தீங்க?"
சங்கீதா --"நான் 10.50 க்கு கடைசியா பாத்தேன், அப்போ அம்மா நல்லா தான் இருந்தாங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
தன்வீர்- "அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு என்னமோ ரவி தான் கொலை பன்னிருப்பாரோன்னு தோணுது, ஏன்னா அன்னைக்கு நைட் நீங்க ரெண்டு பெரும் கீழ நின்னு பேசிட்டு இருந்தத நான் கேட்டேன்" என்றான்.
விக்டிம் தன் குடும்பத்தை யாருடனும் பழக விடாததால், அவன் அப்போது பார்த்த பெண் நிழல் இவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற யூகத்தில் கேட்டான் தன்வீர்.
சங்கீதா --"இல்லங்க, அன்னைக்கு அவன் ஏதோ கோவத்துல பேசிட்டான், அதுக்காக அவன் கொலை பன்னிருப்பான்னு அர்த்தமா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. " என்று மறுத்தாள்.
தன்வீர்-- "அப்போ உன் கண்ணனுக்கு முன்னாடி தான் தெய்வீக மலை இருக்கு " என்று ஜன்னல் வழியாக காட்டியவன்,"அது மேல சத்தியம் பண்ணி சொல்லு நீ அவங்கள கொலை பண்ணலன்னு" என்று தன்வீர் கேட்க,
சங்கீத --"சத்தியமா சொல்றேங்க, நான் எங்க அம்மாவ கொலை பண்ணல" என்று சொன்னாள்.
ஷாலு --" தாணு, நீ அம்மா சாத்தியமானு கேட்க மறந்துட்ட" என்று சொல்ல தன்வீர் அவளை முறைத்தான்.
போலீஸ் அவளை அனுப்பி வைத்து விட்டு, அடுத்ததாக ரவியை அழைத்தார்.
தன்வீர் --" நேத்து காலைல விக்டிம் உங்கள எதுக்காக 'மானம் போச்சு மரியாதை போச்சு உன்னால' னு திட்டினாங்க?"
ரவி --"அம்மா தங்கியிருந்த ரூம யாரோ ஒரு அரசியல்வாதிக்கு கொடுக்குறதுக்காக ரூம் காலி பண்ண சொல்லிருக்காங்க, அதுல அம்மாக்கு ரொம்ப கோவம் அவமானம், அதுக்கு தான் அப்படி திட்டினாங்க"
தன்வீர் --"அம்மாவை கொலை பண்ண போறேன்னு நைட் எதுக்காக சங்கீதாட சொன்னீங்க, நீங்க பேசினத நான் கேட்டுட்டேன்."
சங்கீதா --" அதெல்லாம் கோவத்துல சொன்னது, ஒரு மனுஷனுக்கு கோவம் வந்த இதெல்லாம் சொல்றது தானே?"
ஷாலு --"அதானே, செய்ய முடியலைனாலும் சொல்லிக்ககூடவா கூடாது?" என்றவள் தன்வீர் பார்வையில் அடங்கினாள்.
தன்வீர் --"நீங்க எப்போ பஸ்ஸுக்கு திரும்பி வந்தீங்க?"
ரவி --"நான் திரும்பி வரும் போது மணி 11.20, அப்போ அம்மாவை கூப்பிட்டேன் வரல, அவங்க அப்போ நல்லா தான் இருந்தாங்க" என்று அடுத்த ஒரு ட்விஸ்ட்டை கொடுத்தான்.
ஷாலு --"டேய் எப்புட்றா ?" என்று அதிர்ந்தாள். ஏனென்றால் போலீஸ் அவர் 11 மணிக்கு இறந்திருக்கலாம் என்று கணித்திருந்தார்கள் ராதாவோடு பேசும்போது. ஆனால் தன்வீர் ஷாலுவுக்கு ஜூஸ் கலந்து கொடுத்தான். அவனிடம் அதிர்ச்சியோ பதட்டமோ இல்லை.
போலீஸ்க்கு மயக்கமே வரும் போல் இருந்தது. ஒருமுறை அனைத்தையும் கோர்வையாக சொனார் போலீஸ்,
"10 மணிக்கு பஸ் வந்து நின்னுருக்கு, 10.10 க்கு, எல்லாரும் போங்க நான் தனியா இருக்கணும்னு அனுப்பிட்டு விக்டிம் ஒரு பெஞ்சுல உட்காந்திருக்காங்க. அடுத்து 10.20க்கு அவங்க ஒரு சாமியார் கூட சண்டைபோட்டுட்டு இருந்ததை தூரத்தில் இருந்து பிரபாவதியும் அசிஸ்டண்டும் பார்த்திருக்காங்க. 10.30 மணிக்கு ராஜா பேசிட்டு தான் பஸ்க்கு போயிருக்கார். அதுக்கு அப்புறம் 10.40க்கு தீபா 'நன் உங்க பையன விட்டு பிரிய போறேன்'னு விக்டிம்ட பேசிட்டு போயிருக்கா. அடுத்து 10.50க்கு சங்கீதா பேசிட்டு பாஸ்க்கு வந்திருக்க,அதுக்கப்புறம் ரவி 11.20 க்கு விக்டிம்கிட்ட பேசிட்டு தான் போயிருக்கான், கடைசியா 11.30 மணிக்கு வந்த ராதா விக்டிம் செத்து போனத பாத்திருக்காங்க, ஒரு 11 மணிக்கு இறந்திருக்கலாம்னு கணிச்சு சொல்லிருக்காங்க. இதுல எது உண்மை எது பொய்னு தெரில, யாரை சந்தேகப்படுறதுன்னு தெரியல" என்றார் அதை தன்வீரும் ஆமோதித்தான்.
போலீஸ்க்கு சில வேலை கொடுத்து அனுப்பிய தன்வீர்,
தன்வீர் --" உனக்கு யார் பொய் சொல்றான்னு தெரியுதா?" என்று ஷாலுவிடம் கேட்க,
ஷாலு --"ஓ தெரியுமே " என்றாள்.
தன்வீர் --"யாரு?" என்று ஆச்சர்யம் நிறைந்த விழிகளோடு கேட்க,
ஷாலு --"நீ தான், இன்னும் கொலையாளி யாருன்னு தெரியாத மாறி போலிஸ்ட்ட சொன்னியே அது பொய்தானே" என்றாள். தன்வீர் கண்களால் சிரிக்க, "எனக்கு வேற யாரையும் தெரியாது ஆனா உன்ன தெரியும், உன்ன மட்டும் தான் தெரியும் " என்றாள் காதலுடன்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்த கீதா,
கீதா --" சார் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். என்ன பஸ்ஸுல உட்கார சொன்னாங்கள்ல அப்போ கொஞ்ச நேரத்துல காட்டுக்குள்ள ஒரு சாத்தான் சாமியார் டிரஸ்ல ஓடுறத பாத்தேன். ரொம்ப வேகமா புயல் வேகத்துல ஓடுச்சு. அப்புறம் நீங்க எல்லாரும் வந்த பிறகு திரும்பவும் ஒரு சாமியாரை பாத்தேன் ரொம்ப பொறுமையா போய்ட்டு இருந்தாரு, அவர்கிட்ட போய் இத சொல்ல ஓடினேன் ஆனா முடியல, நாளைக்கு எனக்கு எதுவும் வந்திடாம காப்பாத்திடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சி கேட்டுவிட்டு சென்றால், ஷாலு சமாதான படுத்திய பிறகு, அவளுக்கு சாத்தான் மீது பயம் சின்ன பெண் தானே.
அடுத்து மேனேஜரை அழைத்தான் தன்வீர்,
தன்வீர் -- "நீங்க அங்க வந்த பிறகு பாதத்தை சொல்லுங்க"
மேனேஜர் --" முதல்ல என்கிட்ட தீபா வந்து பேசினாங்க. ராஜாவை விட்டுட்டு என்கூட வரதா சொன்னாங்க, எனக்கும் அது சம்மதம் தான். அதனால 'வா ராஜா கிட்ட பேசலாம்' னு கூப்பிட்டேன், ஆனா அவதான் 'அத எல்லாம் நான் பாத்துக்கறேன்'னு போய்ட்டா. அடுத்து ஒரு 10.20க்கு கடைல நின்னு நான் பொருள் வாங்கிட்டு இருக்கும் போது தூரத்துல பெஞ்சுல இருந்த மேடம் ஒரு சாமியார் கூட சண்டை போட்டாங்க" என்றார்.
தன்வீர் --"சரி அதெல்லாம் இருக்கட்டும், நீங்க பிரதீப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க "
மேனேஜர் --" பிரதீப் எப்படி பணக்காரர் ஆனாருனு தெரியல ஆனா பணக்காரர் ஆகுறதுக்கு முன்னாடி அவர் ஒரு சிறையில் வாடன்(warden) ஆஹ் இருந்தாரு. அங்க தான் அவர் மேடம சந்திச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டார்." என்றார்.
பிறகு அவனை அனுப்பிவிட்டான்.
சில நிமிடத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு மரத்தடி பக்கம் போய் சங்கீதா மண்ணுக்குள் எதையோ புதைத்துவிட்டு போக, அதை போலீஸ் பாத்துவிட்டார். அவள் மறைக்க முயன்றது எது என்று தோண்டி பார்த்தால் அது ஒரு ஊசி. அவள் மீது சந்தேகம் வர,அதை எடுத்துக்கொண்டு போலீஸ் தன்வீரிடம் சென்று கூறினார்.
ஆனால் தன்வீர் அனைவரையும் இணைக்கு நைட் இதே இடத்துக்கு கூட்டிட்டு வர சொன்னான், கொலையாளி யார் என்பதை சொல்வற்காகவும் ஒவ்வொருவரையும் அனைவர் முன்பும் விசாரிப்பதற்காகவும்.
போலீஸ் -- "அப்போ சங்கீதா தானா ?"
தன்வீர் --"இல்ல, அவ பொதைச்ச ஊசி வெறும் ஊசி, மருந்தே இல்ல. ஆனா விக்டிம்க்கு டிஜிடாக்ஸின் கொடுத்து தான் கொண்ருக்காங்க, அதனால அவ பொதச்சத்து யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று கூறினான்.
போலீசுக்கும் அவன் சொலவ்து சரி என பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------
how is it?
any guess about the killer?
Please do vote and comment.
Parvathi Suresh Sharma.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top