ஜப்பானில் நம் நாயகன் 1
இந்த கதைக்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
நம் நாயகன் ஒரு டிடெக்ட்டிவ் ஆக நாயகியை ரசிப்பவராக கொஞ்சம் அமைதியானவராக வருவார். நாயகி நகைச்சுவையின் இருப்பிடமாக நாயகனின் ராணியாக மனைவியாக உலா வருவாள்.
இந்தக்கதை 2021ல் ரிலீஸ் ஆன ஒரு ஜாப்பனீஸ் படம் "Appointment with death" (பெயரை கண்டு அஞ்ச வேண்டாம் ஒரே ஒரு கொலை தான் நடக்கும் அதுவும் கொள்ளப்பட்டது ஒரு பாட்டி தான்) , என்பதே ஆகும், இது "அகதா கிறிஸ்டின்" அவர்கள் எழுதிய நாவலின் புனைவு ஆகும்.
ஒரு படத்தை மற்றொரு மொழியில் சில புனைவுகளோடு எடுப்பது போல, இந்த படத்தின் கதையை தமிழில் ஒரு சிறுகதையாக நகைச்சுவை கலந்து நமது நாயகன் கண்டுபிடிப்பது போல எழுத விழைகிறேன்.
காட்சிகளில் மாற்றங்கள் இருக்கும், நம் நாயகன் நாயகியின் பாணியில் இருக்கும். வசனங்களில் மாற்றங்கள் இருக்கும்.
இந்தக்கதையில் உங்கள் அனைவரையும் நான் ஜப்பான்னுக்கு அழைத்து செல்ல இருப்பதால் அனைவரும் அதற்கு தயாராக இருக்கும்படியும் என்னோடு பயணிக்க சம்மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கும் உங்கள் நல்லாதரவு தருமாறு வேண்டுகிறேன்.
கதை மாந்தர்கள்:
தன்வீர் -- அமைதியானவன், மற்றவர்களுக்கு மட்டும். ஒரு முறை பார்த்தாலே அனைத்தையும் ஸ்கேன் செய்யும் கண்களுக்கு சொந்தக்காரன். உலகத்தின் மிக சிறந்த துப்பறிவாளன் என்ற பட்டத்திற்கு உரியவன். பார்ப்போரை ஈர்ப்பவன் என்றாலும் விலகியே நிற்பவன். ஆனால் மனைவியிடம் மாறுபட்டவன், அவன் வார்த்தைகளை அவள் மட்டுமே அறிவாள், அவன் குறும்பினை அவள் மட்டுமே உணர்வாள், அவனின் உள்ளதை அவள் மட்டுமே ஆள்கிறாள்.
விருஷாலி -- மகா புத்திசாலியின் வாலு மனைவி. யோசிக்கும் வேலையை கணவன் எடுத்து கொண்டதால், நினைப்பதை எல்லாம் செய்து அமைதியே உருவான கணவனை எப்போதும் கதறவிட்டு கத்தவிடும் திறமைசாளி. யாரிடமும் பேசாத அவனுக்கு உலகத்தையே தன் வாயாடித்தனத்தால் சொந்தமாக்கி தருபவள். திறமையால் வலம் வருபவனை அன்பால் காதலால் ஆள்பவள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
பாக்கியம் (பாட்டி) -- தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவள், பணக்காரி. அனைவரிடமும் ஆதிக்கம் செலுத்துபவள். யாரின் விருப்பு வெறுப்புகளையும் மதிக்காதவள், அவள் குடும்பத்துக்கே அவள் வில்லி.
பிரதீப் -- பாக்கியத்தின் கணவன்.
ராஜா -- பிரதீப்பின் முதல் பையன். சொத்துக்களின் அடுத்த வாரிசு. திருமணமானவன், பாக்கியத்தின் கட்டாயத்தினால்.
தீபா -- ராஜாவின் மனைவி. செவிலியராக (Nurse ) வேலை பார்த்தவள், இப்போது பாக்கியத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறாள். பயந்த சுபாவம் கொண்டவள்.
ரவி -- பிரதீப்பின் இரண்டாவது பையன். சொத்துக்களை ராஜாவோடு சேர்ந்து பாத்துக்கொள்பவன்.
சங்கீதா -- பிரதீப்பின் மகள், ராஜா மற்றும் ரவியின் தங்கை.
கீதா -- பிரதீப்பின் இரண்டாவது மகள். அனைவருக்கும் இளையவள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
ராதா -- ஒரு மருத்துவர் (டாக்டர்) .
---------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாவதி -- ஒரு பிரபலமான அரசியல்வாதி.
சந்திரன் -- பிரபாவதியின் எடுபுடி.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஜப்பானில் ஒரு அழகிய கிராமம். அந்த கிராமம் இயற்கை வளங்களுக்கு மட்டுமில்லாது கடவுள் மற்றும் சாத்தானின் வழிபாட்டிற்கும் பெயர்பெற்றது.
இங்குள்ள மக்கள் அனைவரும் அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எப்போதும் பல சாமியார்கள் உலாவருவர்கள்.
இந்த கிராமத்தின் எல்லையில் ஒரு பெரிய ஹோட்டலில் அணைத்து சுற்றுலா பயணிகளும் வந்து தங்குவார்கள்.
அதே ஹோட்டலில் தேன்நிலவுக்கு வந்த தன்வீர் & விருஷாலி தங்குகிறார்கள். அதே போல் பாக்கியத்தின் குடும்பம் , மருத்துவர், அரசியல்வாதி என இவர்கள் அனைவரும் விடுமுறையை கழிக்க வருகிறார்கள்.
இங்கு நடக்கும் கொலையின் பின் உள்ள காரணமும் அதை செய்தவர் யார் என்பதையும் ஒரே நாளில் கண்டுபுடிக்கிறார் நம் நாயகன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
வாருங்கள் நம் நாயகனோடு பயணிப்போம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
கதையிலிருந்து சில வரிகள் --
தன்வீர் -- ஆயிரம் வாட்டி சொன்னேன், ஆயிரம் வாட்டி............. ஒரு தடவை கூட கேக்கமாட்டிக்குற ஷாலுமா, இப்போ யார் கஷ்டப்படுறா பாரு?, ரொம்ப வலிக்குதா? நாம வேணும்னா ஹாஸ்பிடல் போலாமா?
விருஷாலி -- "தணா, கொஞ்சம் இரு கொஞ்சம் இரு நான் போன் எடுத்துக்கறேன், நீ இப்படி படபடன்னு பேசுறதெல்லாம் அதிசயம் உடனே ரெகார்ட் பண்ணனும்" என்று ஆரம்பித்தவள் அவன் பார்வையில் அடங்கி, "அவ்ளோ வலி இல்ல ஆனாலும் நீ தூக்குனா நல்ல இருக்கும்." என்று கண்ணடித்தாள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
விருஷாலி -- "டேய், யார்ரா நீங்கல்லாம் எங்க இருந்து டா வரீங்க? விட்டா அதுவே செத்து போயிருக்கும் அதை போய் வான்டெட்டா (wanted ) கொன்னு ஏன்டா என் ஹனிமூன்ன கெடுக்குறீங்க" என்று புலம்பியவள், "எவென் வீட்டு எளவுக்கோ என்ன பாயப்போட்டு அழுக விட்டுட்டானே படுபாவி" என்று தொண்டர்துகொண்டே போனாள்.
தன்வீர் ஒரு பார்வை பாக்க அமைதியானாள்.
---------------------------------------------------------------------------------------------------------------------
தன்வீர் -- "ஷாலுமா, ஏய் சொன்னா கேளு. நான் கண்டிப்பா இந்த கேஸ்ஸ எடுக்கமாட்டேன், ப்ரோமிஸ் மா. ஏய் நில்லுடி ராட்சசி, நான் கேஸ் எல்லாம் எடுக்கலடி.. "
விருஷாலி --"போடா போக்கத்தவனே, இனியும் உன்ன நம்பமாட்டேன், உன்ன கட்டிக்குத்துக்கு நான் தினமும் ஒரு பொணத்தை பாக்குறேன், ஒரு செஞ்சுக்கு உயிரோட இருக்குற பொணத்தை, சாரி சாரி மனிஷன்களை பாப்போம்னு வந்தா இங்கயும் .... " என்ற அவளின் வார்த்தைகளை தன் செய்கையால் நிறுத்தினான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
விருஷாலி -- "ஏதோ உன் பெர்பார்மன்ஸ் கொஞ்சம் பரவாயில்ல எல்லாத்துலயுங்கிறதால நான் உன்ன மன்னிச்சு விடறேன். ஆனா இதையே வேலையா வசிக்காத"
தன்வீர் -- "எது பரவாயில்லயா !!!! எனக்கு பெஸ்ட்னு பேர் வாங்கி தான்டி பழக்கம், இன்ணைக்கு உன் வாயால நீ என்ன பெஸ்ட்னு சொல்லற வரைக்கும் எனக்கும் உனக்கும் ரெஸ்ட் கிடையாது" என்று மீண்டும் தொடங்க,
விருஷாலி --"டேய் விட்றா, ஐயோ சும்மா சொன்னேன், நான் மாட்டேன்" என்று ஓட, நொடியில் அவளை பிடித்து அடக்கி மீண்டும் அவளிடம் தோற்றான்.
---------------------------------------------------------------------------------------------------------------
How is it?
kindly support for this story too, will try to give my best in this story.
Please do vote and comment your suggestions.
Parvathi Suresh Sharma
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top