ஜப்பானில் நம் நாயகன் 2
ஒரு மாலை நேரத்தில் ஜப்பானின் அந்த கிராமத்திற்க்கு வந்து சேர்ந்தார்கள் விருஷாலியும் தன்வீரும். மலைகளுக்கு நடுவே மிக அழகாக தென்றல் உயிர் வரை தீண்ட சந்தோசமாக அந்த ஹோட்டலில் நுழைந்தார்கள்.
மாலை நேரம் என்றாலும் இருட்டாக இருந்தது அந்த கிராமம். தன்வீர் அங்கே வரவேற்பறையில் உள்ளவரிடம் விவரம் கூறி தனக்காக ஒதுக்கப்பட்ட அறை சாவியை வாங்கிக்கொண்டு திரும்ப அதற்குள் விருஷாலி தன் வேலையை தொடங்கியிருந்தாள் அங்கிருந்த யாரோ ஒருவரிடம்,
ஒருவர் -- "ஆமாம் மா, அங்க நீங்க பாக்குறது நாங்க கடவுளா நினைக்குறது. அந்த காக்கைக்கு மூணு கால் இருக்கும். அது எங்க கடவுள்... எனக்கு தெரியும் உங்களுக்கு சிரிப்பா இருக்கும் நம்பமாடீங்கனு " என்று அவர் அடுத்து கூற வரும் முன்பே,
விருஷாலி -- "இருங்க இருங்க, நான் சொன்னேனா நம்பலைன்னு?, நீங்க பாட்டுக்கு சொல்லிட்டே போறீங்க. "
அவர் திரு திரு வென விழிக்க,
விருஷாலி -- " என்ன புரியலையா? எங்க ஊர்ல கடவுள் பல விதத்துல இருக்கார். சிங்க தலைல மனுஷன் உடம்பு னு இருக்கார். மனிஷ உடம்பு பாம்பு கால்னு கூட இருக்கார். முழு மனுஷனா இருந்தா கூட 12 கை, 6 முகம் னு கூட இருக்கார். இத எல்லாம் கேலி பண்ண கூடாது. அவசரமா ஆசீர்வதிக்க, காப்பாத்த வரும் போது உருவம் எல்லாம் பாத்துட்டு இருக்க முடியுமா அவரால ? கடவுள் அருள் கொடுக்குறாரான்னு தான் பாக்கணும், மத்தபடி அவர் உடம்பு அவர் இஷ்டம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தா இங்க பாருங்க" என்று மொபைலில் பல புகைப்படங்கள் காட்ட, "இது எங்க நம்பிக்கை என்ன போய் நீங்க சந்தேகப்பட்டு ... " என்று வருத்தப்படுவது போல் நடிக்க,
அவரோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் அவருக்கு பாதி தான் புரிந்தது மீதி புரியவில்லை, அனால் இந்த பெண் தன்னை கேலி செய்யவில்லை என்று நம்பினார்.
தன்வீர்- "ஷாலு மா " என்று மென்மையாக அழைத்தான் உதட்டோரம் சிரிப்போடு, அவனுக்கு தெரியும் கொஞ்சம் விட்டால் இவளுக்கு பக்தனாக அந்த மனிதரை இவள் மாற்றிவிடுவாள்.
ஷாலு -- "வாங்கிட்டியா தாணு? போலாமா?"
தன்வீர் -- "ம்ம்.. வா, இனி குளிர ஆரம்பிச்சுடும்"
ஷாலு --"நான் வரேங்க, இனிமே யாரையும் இப்படி தப்பா நினைக்காதீங்க" என்று சொல்ல அவர் வெறும் தலையை மட்டும் ஆட்டினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ரூமின் உள்ளே,
தன்வீர் -- " உள்ள ஹீட்டர் போட்டுட்டேன், குளிச்சுட்டு வா அப்போ தான் அலுப்பு குறையும், நான் அதுக்குள்ள சாப்பாடு சொல்லிடறேன். டிரஸ் எல்லாம் அப்புறம் எடுத்து வச்சுக்கலாம், சரியா?" என்று
ஷாலு -- "கும்முன்னு இருட்டா இருக்குற இடத்துல கம்முன்னு இருக்குற உன்ன நம்பியா நான் இவ்ளோ தூரம் ஹனிமூன் வந்திருக்கேன். யோவ், டிரஸ் அடுக்கி வைக்கவா வந்தோம், அது ரொம்ப முக்கியம் போல சொல்ற." என்று இடுப்பில் கை வைத்து கேட்க,
தன்வீர் -- " கண்டிப்பா குளிச்சே ஆகணும். நீ என்ன டயலாக் அடிச்சாலும் நான் டைவர்ட் ஆகமாட்டேன். " என்று கண்டிப்புடன் சொல்ல,
ஷாலு --" எப்படியும் கசமுசா பண்ணிட்டு குளிக்கணும்ல, எனக்கு அடிக்கடி குளிச்சா ஒத்துக்காது தாணு " என்று கெஞ்சலாக கேட்க , தன்வீர் முறைத்த முறைப்பில், " இன்னும் பயிற்சி வேண்டுமோ.. " என்று உளறி கொண்டே சென்றாள்.
தன்வீர் சின்ன சிரிப்போடு பால்கனியில் வந்து நின்றான். அவளை நினைக்க நினைக்க இனிக்கும் அவனுக்கு, ஏதோ சத்தம் கேட்க கீழே எட்டி பார்த்தான்.
அங்கே ஒரு ஆணும் பெண்ணும் நிற்கும் நிழல் தெரிந்தது,
ஆண் -- "அவ உயிரோட இருக்குற வரைக்கும் நாம நிம்மதியா இருக்க முடியாது. அவளை கொன்னா தான் நமக்கு நிம்மதி" என்று கோவமாக பேசி விட்டு வெளியே சென்றான். அந்த பெண்ணும் உள்ளே சென்று விட்டாள்.
வெளியே சென்ற அவனின் முகத்தை தன்வீர் பார்த்துவிட்டான். பெண்ணை பார்க்க வில்லை.
மீண்டும் அவன் பால்கனியில் நிற்க,
ஷாலு -- " அழகான இரவு நேரம், உன் மூஞ்சில ஏன் மிளகா காரம்?" என்றிட,
தாணு --"நீ எப்படிடி இப்படி இருக்க? இப்படி பேசுற?" என்று சற்று முன் நடந்ததை மறந்து கேட்டான்.
ஷாலு -- "அதெல்லாம் சொல்லறத்துக்கு இல்ல பாஸ், ஆமா என்ன தெரிகிறது" என்று அவளும் பார்க்க,
தாணு -- " உனக்கு என்ன தெரியுதுனு எனக்கு தெரியல, ஆனா எனக்கு என்னென்னமோ தெரியுது" என்று ஆழ்ந்த குரலில் காதுக்கு அருகில் அவன் சொல்ல, அவன் கண்கள் சென்ற திசையும் அவள் குரல் செய்த மாயமும் அவள் மேனிக்கு நடுக்கத்தை தந்தது.
ஷாலு -- " நாம வெளில இருக்கோம் " என்று மெல்லிய குரலில் சொல்ல,
தாணு --" வா போலாம்" என்று இரு கைகளிலும் அவளை ஏந்தி காலால் பால்கனி கதவை சாத்திவிட்டான்.
அதனால நாம் அடுத்தநாள் வந்து பாப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுநாள்,
உணவுக்காக கீழே வர, ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்டில் தனியாக ஒரு பெண் அமர்ந்திருக்க ஸ்நேகமாக ஷாலு சிரிக்க, தன்வீர் உணவை ஆர்டர் செய்து முடித்து திரும்பி பார்த்தால் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஷாலு --"இது என் கணவர். டிடெக்ட்டிவ்."என்றவள் "தாணு, இவங்க ராதா, டாக்டர். லீவுக்கு வந்திருக்காங்க"
தன்வீர் மரியாதைக்காக சிரித்தான். பெண்கள் இருவரும் பேச தொடங்கினார்கள், உணவை உண்டு கொண்டே.
அப்போது அங்கே ஒரு பெரிய பணக்கார குடும்பம் வந்தது.
ஒரு பாட்டி நடுவில் அமர்ந்திருக்க 2 ஆண்கள் 3 பெண்கள் என அவருக்கு ஒவ்வொரு பக்கமுமம் அமர்ந்திருந்தார்கள்.
அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்று அதிகார தோரணையுடன் சொல்ல, அங்கே இருந்த அனைவரும் தலை குனிந்து கேட்டு, அவர் சொல்வதற்கு சம்மதமாக தலையை ஆடினார்கள்.
சற்று நேரத்தில் அதிலிருந்து ஒரு பையன் இவர்களுக்கு பக்கத்தில் வந்து டாக்டரை பார்த்து,
ரவி -- " மன்னிச்சுருங்க நேத்து உங்களுக்கு பதில் சொல்லாம போய்ட்டேன், அவசரமா அம்மா கூப்பிட்டாங்க, அதான்", என்று தன்மையாக பேசி பழக முயற்சிக்க,
ராதா--"அதெல்லாம் பரவல்லங்க, நான் அத அப்போவே மறந்துட்டேன்", என்று உடனடியாக பச்சை கோடி காட்டினாள்.
பாட்டி --"என்ன அங்க நின்னுகிட்டு இருக்க, வா போலாம்.. கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.. ம்ம்ம்.. சீக்ரம்" என்றவர் "எப்படித்தான் இப்படி சொரணை இல்லாம இருக்காங்களோ, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்றவர், "நீ மட்டும் இங்கயே இரு, உனக்கு உடம்பு முடியல" என்றார் கடைசி பெண்ணை பார்த்து.
அப்போது அங்கே வந்த மேனேஜர், "எல்லாம் ரெடி மேடம், நீங்க கோவிலுக்கு கிளம்பலாம்" என்றார்.
பாட்டி --"நீ ஏன் நிக்குற, உள்ள போ"
கீதா --"எனக்கு ஒன்னும் இல்ல மா, நானும் வரேன்" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
பாட்டி -- " உனக்கு முடியல தான், போ உள்ள" என்றதும், சோகமாக உள்ளே சென்றால் அந்த சின்ன பெண். அவள் மட்டும் வந்ததிலிருந்து குடும்பத்துடன் கூட யாருடனும் பேசவே இல்லை. அவள் பேசியதே 2 வரி தான். அதற்கும் அவள் திட்டு தான் வாங்கினாள். இவை அனைத்தையும் தன்வீர் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து எதுவும் தப்பவில்லை.
அதற்குள் இங்கே,
ஷாலு --"ஆமா எதுக்கு அவரு மன்னிப்பு கேட்டாரு?"
ராதா -- " நேத்து என் ரூம்க்கு வழி இவர்கிட்ட தான் கேட்டேன். ஒண்ணுமே சொல்லாம போய்ட்டார். அதுக்கு தான் இப்போ பேசினார்" என்றாள்.
ஷாலு -- "ஓஓஓஓ... அவ்ளோ நல்லவரா?" என்றாள், ராதா மற்றும் ரவியின் பார்வை பரிமாற்றம் அவளுக்கு புரிந்தது. பாம்பின் கால் பாம்பறியும்.
குடும்பமே கோவிலுக்கு கிளம்பியது. அப்போது திருப்பிய மேனேஜரின் கண்களில் தன்வீர் பட்டான்.
மேனேஜர் -- "சார் நீங்களா? நிஜமாவே நான் உங்கள பாத்துட்டேனா!! என்னால நம்பவே முடியல" என்று சந்தோசமாக பேச, அழகாக இதழ் ஓரம் சிரித்தவன், கைகுலுக்கினான்.
தன்வீர் -- "என் மனைவி விருஷாலி " என்று அறிமுகப்படுத்தினான், அவளுக்கும் வணக்கம் வைத்தான் மேனேஜர்.
ஷாலு -- "இவங்க கிட்ட எப்படி வேலை பாக்குறீங்க, ரொம்ப கஷ்டமா இருக்கோ?"
தன்வீர் --"ஷாலி" என்று மெல்ல கண்டித்தான். மெல்ல தான். அழுத்தமாக கண்டிக்க அவனே நினைத்தாலும் முடியாது, அவளிடம் அவனுக்கு மென்மை தான் வரும்.
மேனேஜர் -- "பரவால்ல சார். ஆமாம் மேடம் கஷ்டம் தான், இப்போ பழகிடுச்சு"
ஷாலு -- "எல்லார்கிட்டயும் இப்படி தானா?, தன பிள்ளைகள்ட கூட இவ்ளோ கோவம்?"
மேனேஜர் --" இல்ல மேடம், எங்க பிரதீப் சார்க்கு இவங்க இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு மூணு குழந்தைங்க ராஜா, ரவி, சங்கீதா. இவங்களுக்கு பிறந்தது ஒரு பொண்ணு, இப்போ மேல போனாங்களே அவங்க தான், கீதா"
ஷாலு -- "ஓ, இவங்க எல்லார்கிட்டயும் இப்படி தானா, பாவம் அந்த சின்ன பொண்ணு அசையா கேட்டுச்சு, 2 அண்ணனுங்க இருந்தும் என்னத்துக்கு அம்மாட்ட பேசி கூட்டிட்டு போக முடியலையே"
மேனேஜர் -- " அட போங்க மேடம், அவர் கலயாணத்துலயே அவரால ஒன்னும் பண்ண முடியல"
விருஷாலி --"கல்யாணம் ஆகிடுச்சா?"
மேனேஜர் --" இவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல, அப்போ பாத்துக்குறதுக்காக வந்த நர்ஸ் பொண்ணு தான் தீபா, ரொம்ப பயந்த சுபாவம், வெகுளி, நல்ல பொண்ணு, என்ன சொன்னாலும் சரினு தலையை ஆட்டும், அதனால அந்த பொண்ண ராஜாக்கு கல்யாணம் பண்ணி வச்சுக்கிட்டாங்க. இப்போ சம்பளம் இல்லாம அவங்கள பாத்துக்குது"
ஷாலு -- "அட பாவமே, வைத்தியம் பாக்க போனவ, இப்படி அநியாயமா வாக்கபட்டு போய்ட்டாளே" என்று வருத்தப்பட
தன்வீர் -- "ஷாலு மா, போதும்" என்றிட இருவருமே நிறுத்தினார்கள்.
மேனேஜர் -- "நான் வரேன் சார், மேடம் தேடுவாங்க"
தன்வீர் தலையை அசைத்து விடைகொடுத்தான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் கழித்து கோவிலுக்கு சென்றார்கள். அதே நேரம் அங்கே ஒரு பெண் அரசியல்வாதியும் அவரின் உதவியாளரும் கோவிலுக்கு வந்திருந்தார்கள். அப்போது விருஷாலியை நிற்க சொல்லிவிட்டு தண்ணீர் வாங்க சென்றான், தன்வீர்.
அந்த பெண்ணிற்கு தன்வீரை பார்த்ததும் பிடித்துவிட்டது, பக்கத்தில் விருஷாலி நிற்பது தெரியாமல் ,"வாட் எ மேன் (what a Man)" என்று ரகமாக உளரிட, விருஷாலியோ,"ஹான், விளக்கமாரு" என்றாள் கடுப்பாக. சட்டென தெளிந்தவள்,
பிரபாவதி --"ஹலோ, யார்கிட்ட என்ன பேசுறீங்க, நான் பிரபல அரசியல்வாதி பிரபாவதி. அடுத்த MP, என்ன பாத்து .. " என்று அவள் காத்திட தன்வீர் வந்தான்.
தன்வீர் -- "என்னாச்சு மா?"
ஷாலு --" ஏதோ வாத்து வெர்னு சொன்னாங்க, விளக்கமா சொல்லு னு சொன்னேன், உடனே திட்டுறாங்க" என்று நிலம் நோக்கி அழுகுரலில் கூறிட,
பிரபாவதி -- "ஏய், சீட்" என்று அரைவதற்கு கை ஓங்க, அவள் கன்னங்களில் ஐந்து விரல்களின் தடம் பதிந்தது.
பிறகு தான் அவளுக்கு புரிந்தது தன்னை தடுத்து தன்வீர் அறைந்துவிட்டான் என்று. இருக்காதா பின்ன மூளையே பின்னே போயிட்டு முன்னே வந்தது போல் அறைந்தால் அப்படி தானே இருக்கும். என்னவென்று கேட்ட அவள் அசிஸ்டன்ட்க்கும் ஒரு அறை.
விருஷாலியை கூட்டிக்கொண்டு நடந்து வந்தான்.
தன்வீர் -- "மா, ஏன் அமைதியா இருக்க? என்னாச்சு? நீ அவளை பத்தி நினைக்காதமா" என்றான் தன்மையாக.
ஷாலு -- "இல்ல தாணு, அவ உன்ன ரசிச்சா, ஒரு மாதிரி ... எனக்கு அது பிடிக்கல. அதனால நான்"
தன்வீர் --"தெரியும்" என்றதும், கண்களை அகல விரித்து ஆச்சர்யத்தை காட்டி எப்படி என்ன கேட்க, " என் கண்கள் உன்ன தான் சுத்தும். இது உனக்கே தெரியும். அப்புறம் என்ன?" என்று அருகில் இழுக்க,
ஷாலு --"இல்ல அது "
தன்வீர் -- "அவ அதிகாரத்தையும் பணத்தையும் தான் உங்கிட்ட காட்டி திட்ட வந்தா, என் ஷாலு அதிகாரத்துக்கும் பணத்துக்கும் முன்னாடி தலை குனிய கூடாது. நீயும் நானும் தப்பு பண்ணல, கவலைப்படாத" என்று நெற்றியில் முத்தமிட .
அவன் முத்தமிட்ட காட்சியை வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பிரபாவதி.
-------------------------------------------------------------------------------------------------------------------------
How is it?
Kindly tell me if there is any mistakes or anything you want me to change.
Please do vote and comment
Parvathi Suresh Sharma.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top