Author's note
'மெய்மறந்து நின்றேனே' வாசகர்களுக்கு நன்றி.
--------------
Character analysis:
இது என்னுடைய வருங்காலக் கதைகளுக்கு உதவும். கதையைப் படிக்காதவர்கள் இதைப் படிக்கவேண்டாம். கதையைப் படித்தவர்களும், feel free to skip it. இது எனக்காக நான் எழுதுவது.
விஷ்வா (எ) விஷ்வேஸ்வரன் : கதையின் தொடக்கத்தில் பொறுப்பில்லாத இளம் நாயகன். கதை முடியும்போது பொறுப்பான காதலன்,கணவன். ஒரு நல்ல character arc development. சூழ்நிலைகளாலும் வாழ்வின் சோதனைகளாலும் முதிர்ச்சியடையும் ஒரு பாத்திரம்.
கொஞ்சம் முன்கோபம், நிறைய காதல். கவிதைகள், கதைகள், ஓவியம் எனக் கலைகளில் நாட்டம் அதிகம். காதலி மஹிமாவுக்காக கண்டம்விட்டு கண்டம் தாண்டுமளவு நேசம்.
மஹிமா: எப்போதும் நாவல்களில் வரும் cute, innocent (nearly stupid) பெண் இவள் கிடையாது. அவளது தோற்றம் பற்றியும் உடல்வாகு பற்றியும் கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. கதைக்கு மட்டுமல்ல, காதலுக்கும் அவை தேவையில்லை.
நன்றாகப் படிக்கும் புத்திசாலி மங்கை. எதையும் ஒருதடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்கும் அறிவு, தெளிவு. எல்லா பிரச்சினைகளையும் நாயகன் தலையில் ஏற்றும் சவலை அல்ல அவள். தன் உரிமையைப் பாதுகாக்க எவரிடமும் சண்டையிடத் தயாராக இருப்பவள்.
ஜோஷி: கதைகளுக்கு அவசியம் தேவைப்படும் ஒரு jester. விஷ்வாவுக்கு நல்ல தோழன். அவனது அண்ணன் அளவுக்கு உதவுபவன். இருதரப்புத் தோழன் என்பதால் காதலுக்குப் பாலமாய் இருப்பவன். தன் பெற்றோரின் காதலை உணர்ந்து வளர்ந்தவனுக்கு நண்பனின் காதலும் தப்பாகத் தெரியவில்லை.
வேணி: மஹிமாவின் தோழி. கொஞ்சம் இரட்டைவேடம். தோழியின் வெற்றிகளில் முழுமனதாகப் பங்கெடுக்க முடியாது அவளால். விஷ்வாவை வெறுப்பவள். ஆனால் அவர்கள் விளக்கம் தந்தபிறகு இயல்பாக மாறிவிடுவாள்.
சர்வேஸ்வரன்: விஷ்வாவின் அண்ணன். இன்னொரு தந்தை. ஆங்கிலத்தில் gray character எனக் கூறலாம். தன் குடும்பத்திற்கு நாயகனாகவும் வெளியே வில்லனாகவும் வாழ்பவர். வசுந்தராவின் வருகையால் வாழ்க்கையின் அர்த்தம் காண்பார்.
வசுந்தரா: அவரைப் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. எனினும் மகள்,மனைவி, மருமகள், அண்ணி,அம்மா என அனைத்துப் பாத்திரங்களையும் ஒற்றை ஆளாகச் செய்பவர். தன் கொழுந்தனாரின் காதல் வாழ்வைக் கூட முகம்சுழிக்காமல் விவாதிக்கும் மனப்பக்குவம் உண்டு.
ராஜகோபாலன்: மஹிமாவின் தந்தை. Extremely Supportive nature. தாயில்லாத பெண் என்பதால் பாசத்தைக் கொட்டி வளர்த்தாலும், அவளைச் செல்லம் கொடுத்துக் கெடுக்கவில்லை. மகளைப் பிரிந்திருப்பது துயரம் என்றாலும் அவளது ஆசைக்காக அனைத்தையும் தாங்குபவர். நல்ல முதலாளி, நல்ல தந்தை.
----------
எனக்குப் புரிந்தவரை இவ்வளவு. உங்களுக்கு வேறு எதுவும் அவர்களைப் பற்றித் தோன்றியிருந்தால் இங்கே சொல்லலாம். Let's have a discussion on them here.
கதையை வாசித்ததற்கு மீண்டும் நன்றி. என்னுடைய மற்ற கதைகளை வாட்பேடில் வாசிக்கலாம், அமேசானிலும் தேடலாம்.
வாட்பேட்:
●நீயன்றி வேறில்லை
●முன்பனியா முதல் மழையா
●ஏதோ செய்கிறாய்
●காதல்கொள்ள வாராயோ
அமேசான்:
●யாதுமாகி
●வண்ணங்கள் உன்னாலே
●தாரமே தாரமே
●நெஞ்சில் மாமழை
டாக்டருக்கு தற்போது எழுத நேரம் வாய்ப்பதில்லை, எப்போதாவதுதான் புதுக் கதைகளுக்கு அத்தியாயம் எழுதுகிறேன். எனவே நத்தை வேகத்தில்தான் நகர்கின்றன கதைகள். பொறுமையுடன் படிக்கவும்.
அன்புடன்,
மது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top