Part 24

பாதம் 24

மறுநாள் காலை

கண் விழித்த இனியா,  தான் பாரியின் அனைப்பில்  இருப்பதை உணர்ந்தாள். வெட்கம் தாங்காமல் கட்டிலின் மறுபக்கம் புரண்டு சென்றாள். திடீரென்று இழந்துவிட்ட கதகதப்பின்  காரணமாக, தூக்கம் கலைந்தான் பாரி. கண்விழித்து பார்த்தவன்,  இனியா  தன்னிடமிருந்து தூரமாக சென்று விட்டதை உணர்ந்து,  தன் கையை நீட்டி,  அவளை அருகில் வருமாறு தலையசைதான். அவனுக்கு எதிர்ப்புறமாக முகத்தை திருப்பி,  தலையணையில் முகம் புதைத்து,  தன் வெட்கத்தை மறைத்தாள் இனியா. அவள் இடையை சுற்றி வளைத்து,  தன் பக்கம் இழுத்துக் கொண்டான் பாரி. அவள் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்துக்கொண்டு,  பின்புறமாக இருந்து அவளை அணைத்துக்கொண்டான்.

" என்ன இது? " என்ற இனியாவிற்கு,

" புருஷ லட்சணம்" என்று பதிலளித்தான் பாரி.

" ஏற்கனவே நாம ரொம்ப நேரம் தூங்கிட்டோம்"

"ம்ம்ம்ம் "

" என்னை விடுங்க."

"உஹும்"

" உங்களுக்கு பசிக்கலையா?"

" கல்யாணம் ஆனதில் இருந்து பசியோட தான் இருக்கேன்."

உதடு கடித்து தன் வெக்கத்தை அவள் மறைக்க முயன்றாலும்,  சிவப்பேறி போன அவள் கண்ணங்கள் அவளைக் காட்டிக் கொடுக்கத் தவறவில்லை. அவன் வார்த்தையின் அர்த்தம் புரியாதவள் போல,

" என்னை நீங்க விட்டால் தானே நான் போய் சமைச்சு, உங்க பசியை போக்க முடியும்?"

" நீ என் கூட இருந்தால் தான் என் பசி தீரும். "

தன் முகத்தை திருப்பி,  அவள் பாரியை பார்க்க,  அவள் அவள் நெற்றியில் புரண்ட முடிகளை சரி செய்தான்.

" இதையெல்லாம் நீங்க தான் பேசுறீங்கன்னு என்னால நம்பவே முடியல"

" என் இனியா,  இவ்வளவு இனிமையா இருந்தா, நான் இப்படி  பேசாமல் எப்படி இருக்க முடியும்?"

" பாத்துங்க உங்களுக்கு சுகர் வந்திட போகுது"

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான்  பாரி.

"என்னைப் போக விடுங்க"

" நீ எதையும் சமைக்க வேண்டாம். ஏதாவது ஃபுருட்ஸ் சாப்பிட்டுகலாம்."

" போதுமா?"

" போதும்."

கூறிவிட்டு,  போர்வையால் தங்களை போர்த்திக் கொண்டான்.

" இனி... "

"ம்ம்ம்? "

" ஐ அம் சாரி... நான் நேத்து உன்னை ஹர்ட்  பண்ணிட்டேன்"

" நீங்க என்ன ஹர்ட்  பண்ணல. உண்மைய சொல்லப் போனா,  உங்கள நெனச்சு நான் ஆச்சரியப்படுறேன். *அந்த நேரத்தில* கூட,  எப்படி உங்களால அவ்வளவு  நீதானமா இருக்க முடியாது?"

" இருந்தாலும், உன் முகத்துல ஒரு வேதனையை நான்  பார்த்தேன்."

" எனக்கு ஒன்னும் இல்ல... எல்லாத்துக்கும் மேல,  நான் ஒன்னும் அலங்காரப் பொருள் இல்ல... தூரத்திலிருந்து ரசிக்க."

" அப்படியா?" என்றான் குறும்பு புன்னகையுடன்.

உதட்டை மடித்து வேறு பக்கம் முகத்தைத் திருப்பியவளின் முகத்தை  தன் பக்கம் திருப்பினான் பாரி.

" நீ  தூரத்தில் இருந்து ரசிக்கும் அலங்காரப் பொருள் இல்ல... அதனால?"

பாரியின் சட்டையை இறுகப்பற்றி,  அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்,  அவனுடைய இந்த பக்கத்தை தாங்க முடியாமல்.

" உண்மைய சொல்லப் போனா, இவ்வளவு அழகான மனைவியை  தூரத்திலிருந்தே  ரசிக்கிறது, எனக்கும் கூட முடியாத விஷயம் தான். ஆனாலும்,  கொஞ்ச நாளைக்கு நம்ம நட்பை  தொடரலாம்ன்னு  நான் நினைச்சிருந்தேன்."

" உங்களுடைய நட்பை தான் நான் நேத்து ராத்திரி பார்த்தேனே" என்றாள் கிண்டலாக.

அதைக் கேட்டு சிரித்தபடியே அவள் நெற்றியில் இதழ் பதித்து,

" ஐ லவ் யூ" என்றான் பாரி.

" ஐ டூ லவ் யூ" என்றாள்  இனியா.

அவர்களின் தாம்பத்திய பயணம் இனிதே துவங்கியது.பாரியின் அன்பில் முழுமையாய் தொலைந்து போனாள்  இனியா. ஒரு வித்தியாசமான உலகத்தில் அவர்கள் சஞ்சரித்தார்கள்.

திருமணம் முடிந்து வேலைக்கு வரும் அவளுடைய தோழிகள், சிறு தழும்புகளை பெற்றிருப்பதையும்,  மற்றவர்கள் கேலி செய்வதையும்  அவள் கேட்டிருக்கிறாள். ஆனால் அவளுக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்படவே இல்லை. தாம்பத்தியம் என்பது,  வெறும் உடல்களின் சங்கமம் மட்டும் அல்ல என்பதை அவள் உணர்ந்தாள்... இல்லை, இல்லை,  பாரி அவளுக்கு உணர்த்தினான். பாரியின்  தொடுதல்களில்,  அவள் அரவணைப்பை  உணர்ந்தாள். கலவியை கூட,  வழிபாடு போல் நடத்திக் காட்டினான் அவள் கணவன். முரட்டுத்தனம் என்பதே பாரியிடம் காணப்படவில்லை. தவறிக்கூட இனியாவை வேதனை படுத்திவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு,  அவனுடைய ஒவ்வொரு தொடுதலிலும் விளங்கியது. இனியா ஒரு ராணி போலவும்,  அவளுக்கு சேவை செய்யவே பிறந்தவன் போல தன்னையும்,  அவன் காட்டிக் கொண்டான். அவனுடைய அந்த ஒப்பற்ற பண்பு, அவனை அணுவணுவாய் ரசிக்க வைத்தது இனியவை. பிடிக்கவில்லை என்று கூறும் அளவிற்கு அவனிடம் எதுவுமே இருக்கவில்லை. நாளுக்கு நாள்,  இனியா அவன் மீது பைத்தியமாகி கொண்டிருந்தாள். எப்பொழுதும் அவனுடனேயே... அவன் அனைப்பிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.

அதை செய்ய,  அவளுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. தனக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவள் தெளிவாய் இருந்தாள். பாரி அவளுடைய கணவன்...

கணவன் மனைவி உறவு என்பது என்ன என்பதை அவள் தெள்ளத் தெளிவாய் புரிந்து வைத்திருந்தாள். தனக்கு வாய்த்திருக்கும் கணவன் எப்படிப்பட்டவன் என்பதை அவள் புரிந்து வைத்திருந்தாள். தனது  சேட்டைகளைப் பொறுத்துக் கொண்டு,  தன் மீது அன்பைப் பொழியும் கணவனை அவள் புரிந்து கொள்ளாமல் போய் விடுவாளா அல்லது அவன் அவளை பொத்திப் பொத்தி பாதுகாப்பதை புரிந்து கொள்ளாமல் தான் விட்டு விடுவாளா?

பாரியின் மடியில் அமர்ந்து கொண்டு,  அவன் தோளில் சாய்ந்து கொள்வது,  ஒரு அலாதியான இன்பத்தை இனியாவிற்கு தந்தது. அவள் அப்படி அவன் மடியில் அமர்ந்து கொள்ளும் நேரத்திலெல்லாம்,  அவளின் தலையை கோதிவிடுவது, பாரியின் வழக்கமாகி போனது. சில சமயங்களில்,  அவள் அப்படியே அவன் மீது சாய்ந்து கொண்டு, தூங்கி விடுவதும் உண்டு. தூங்கியவளை, படுக்கையில் கிடத்த மனமின்றி, தானும் அப்படியே உறங்கி விடுவதும் உண்டு பாரி.

அவர்களுக்கு இடையில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. அவர்களுக்கிடையில் இடைவெளியை ஏற்படுத்தும் முரண்பாடுகளும் இல்லை. இனியா  தன்னிடம் காட்டிய ஈடுபாட்டை பார்த்து,  பாரியே அசந்து தான் போனான். தன் மீது இனியா கொண்ட காதல்,  ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே செல்வதை உணர்ந்தான் பாரி. பாரியுடன் இருக்க கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் இனியா தவற விட்டதே இல்லை.

*சில நாட்களுக்கு பிறகு*

இனியா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள். பின்புறமாக வந்த பாரி,  தன் முகவாய்க்கட்டையை அவள் தோளில் வைத்துக்கொண்டு,

" நான் ஹெல்ப் பண்ணட்டுமா?"

" நிச்சயமா... நீங்க போய் ஏதாவது ஒரு புக்கை எடுத்து படிச்சிகிட்டு இருங்க. அதுதான் நீங்க எனக்கு பண்ற ஹெல்ப்."

" அப்படிப் பார்க்கப் போனா,  இப்ப நான் அதைத்தான் செஞ்சிக்கிட்டு இருக்கேன்"

" நான் சொன்னது புக்கை" என்றாள் வெட்கப் புன்னகையுடன்.

" நானும் முடிவில்லாத புத்தகத்தை பத்தி  தான் பேசிகிட்டு இருக்கேன்"

" நான் ஒரு புக்கா?"

அவளை தன்னை நோக்கித் திருப்பினான்.

" இல்ல... நான் தப்பா சொல்லிட்டேன். நீ ஒரு லைப்ரரி. உன்கிட்ட இருக்குற  எல்லாமே புத்தகம் தான். உன்னோட கண்.. ( அவள் கண்ணில்  முத்தமிட்டான்) உன்னுடைய மூக்கு( மூக்கிலும் முத்தமிட்டான்) உன்னுடைய உதடு"

என்று கூறிவிட்டு முத்தமிட முயன்றவனின் வாயை பொத்தினாள் இனியா. அவள் கையை எடுத்து விட்டு,  பட்டென்று முத்தமிட்டு சிரித்தான்.

" என்னை வேலை செய்ய விட மாட்டீங்களா?"

" அப்படியே,  மனைவிக்கான வேலையும் செய்யலாமே"

" அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கேன்"

" நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்"

" வேண்டாம். நான் பார்த்துக்கறேன். "

" நான் ஹெல்ப்  பண்ணா என்ன தப்பு?"

" நீங்க எப்படி ஹெல்ப் பண்ணுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். முதல்ல இங்க இருந்து போங்க. என்னை வேலை செய்ய விடுங்க."

" அதுக்கப்பறம்?" என்றான் குழைவாக.

"என்ன? " என்றாள் கைகளை கட்டிக்கொண்டு.

" அப்புறம் என்ன? சாப்பிட வேண்டியது தான்." என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு பாரி.

அவனைப் பிடித்து,  சமையலறையிலிருந்து வெளியே தள்ளி விட்டு,  வாய்விட்டு சிரித்தாள் இனியா.

*உணவு மேஜை*

இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள். இனியா மாறாத புன்னகையுடன்,  பாரியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய வாழ்க்கை,  இவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவளுக்கு கிடைத்த கணவன் பூஜிக்கப்பட வேண்டியவன். சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,  அன்பு ததும்பும் கண்களுடன் அவனை பார்த்தாள்.

தனது தட்டை பார்த்துக்கொண்டு, கூறினான் பாரி,

" இந்த மாதிரி என்னை பார்த்துட்டு, அப்புறம் நான் ஏதாவது செஞ்சா,  என்னை குறை சொல்லாதே."

தன் தலையை மெல்ல உயர்த்தி,

" அப்பாவி பிள்ளையை கெடுக்காதே" என்றான்.

" நீங்க ஒன்னும் தெரியாத அப்பாவியா?"

" இல்லையா?" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பாரி.

இதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் இனியா.

" அப்படி எல்லாம் வேற ஒரு எண்ணம் இருக்கா உங்களுக்கு? இந்த அப்பாவி முகம் எல்லாம் உங்களுக்கு பொருந்தாது"

" அப்போ வேற என்ன எனக்கு பொருந்தும்?"

" நீங்க.... நீங்க எப்படிப்பட்டவர்ன்னு  சொல்ல, ஏற்ற இடம் இது இல்லை."

" வேற எந்த இடத்தில சொல்லுவ?  நம்ம ரெண்டு பேரும் ஊஞ்சலில் ஆடும் போதா.... இல்ல... நம்ம ரெண்டு பேரும்...."

" நம்ம ரெண்டு பேரும்...?" வெட்கத்தை மறைக்க முடியாமல் கேட்டாள் இனியா.

" நம்ம ரெண்டு பேரும்... ( ஒரு நொடி நிறுத்தி) உன்னை பற்றி நான் ஒரு விஷயம் புரிஞ்சிகிட்டேன்" என்றான்.

"என்ன?" என்றாள் விழியை அகலமாக்கி கொண்டு.

" நீயும் கூட ஒன்னும் அப்பாவி இல்லை." என்றான் சிரித்தபடி.

" ஒ...அப்படியா? அப்படின்னா நான் எவ்வளவு அப்பாவின்னு உங்களுக்கு காட்டிட வேண்டியதுதான்."

என்று கூறிவிட்டு கை அலம்ப எழுந்து சென்றாள் இனியா. பாரி அவளை பின் தொடர்ந்தான். பின்னாலிருந்து,  அவளை அணைத்தபடி,  அவள் கையை கழுவி விட்டான். இனியாவின் முகத்தில் புன்னகை பூத்தது என்று கூறத் தேவையில்லை.

" உன்னுடைய அப்பாவித்தனத்தை எனக்கு காட்டு. அதிலிருந்து எனக்குத் தேவையானதை  என்னால எடுத்துக்க முடியும்." என்றான், மெல்லிய குரலில் தன் கன்னத்தை அவள் கண்ணத்தில் உரசியபடி.

அவனுடைய அந்த ஒரு ஸ்பரிசமே போதும்,  இனியவை தன்னிலை இழக்க செய்ய. அவன் தோளில் அவள் சாய,  அடுத்த நொடி,  அவள் பாரியின் கைகளில் இருந்தாள். அவளுடைய அப்பாவித்தனத்தை பார்க்கும் ஆவல் மேலோங்கியது பாரிக்கு. ஆனால்,  அவனுடைய கவர்ச்சிக்கு முன்னால் இனியாவால் வெகுநேரம் அப்பாவியாக நீடிக்க முடியாது என்பது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top