2. சரவணனின் அறிமுகம்!

இனிய தோழி தோழர்களுக்கு இந்த புதிய வரவிற்கு உங்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்று தெரிந்தாலும் ஒரு சில வாசகர்கள் கதை பிடித்திருந்தாலும் அமைதியாக படித்துவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனது மூளையை உங்களுக்காக சலவை செய்து ஒரு வடிவில் கதை முயற்ச்சிக்கும் பொழு து உங்களின் ஆதரவும் கண்டிப்பாக வேண்டும் அப்பொழுது தான் எனக்கு எழுத ஆர்வம் இருக்கும் அதனால படிச்சிட்டு கண்டிப்பா உங்க வோட் அண்ட் கமெண்ட் போடுங்கள் இல்ல கண்டிப்பா அடுத்த எபிசொட் வர லேட் ஆகும் சொல்லிட்டேன்... இப்போ கதைக்கு போகலாம்...

--------------------------------------------------------------------------------------

இந்த பகுதியில் நம் நாயகனை பற்றி பார்ப்போம்...

திருமணம் என்னும் பந்தத்தில் ஆசையாய் அன்போடு இணையாமல் கடமைக்காக கல்யாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுக்கு மட்டும் இல்லை அவர்களால் உருவாகும் பிள்ளைகளுக்கும் என்பதை நாம் இங்கு நம் நாயகனின் மூலம் கண்கூடாக காணபோகிறோம்...

ஆம்! நம் நாயகனின் பெற்றோர் இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாது சண்டையிட்டு பிரிந்ததால் சரவணத்தமிழன் எனும் நம் நாயகனை சிறு வயதிலேயே காப்பகத்தில் விட்டுவிட்டு இருவரும் பிரிந்து அவரவர் வாழ்கையை வேறு ஒரு துணையோடு சென்று வாழ ஆரம்பித்து, பாதிப்பை நம் நாயகனுக்கு மட்டும் உண்டாக்கிவிட்டார்கள்..

சிறுகுழந்தை என்றும் பாராமல் அவர்கள் செய்த செயலால் முழுவதும் பாதிக்கப்பட்டது சரவணத்தமிழன்.

மற்றவரின் ஏளன பார்வையோ, பரிதாப பார்வையோ, அவன் மேல் விழுவதை விரும்பாமல் எல்லோரும் அவனை பாராட்டி மட்டுமே பேசவேண்டும் என்று முடிவெடுத்து, படிப்பு, விளையாட்டு என அவன் கால் பதியும் எல்லா இடத்திலும் அவனுக்கே முதலிடம் கிடைத்தது அவனின் கடின உழைப்பால்....

அதோடு மட்டும் நில்லாமல் தன் ஒய்வு நேரத்தில் அந்த காப்பகத்தில் இருந்த அனைத்து பிள்ளைகளுக்கும் அவனே படிப்பும் சொல்லிக்கொடுத்தான்.

படிப்பின் உச்சத்தில் இருந்தாலும் அவனுக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று ஆசை அதனால் அக்கௌண்ட்ஸ் குரூப் எடுத்து படித்தான்.

தன் நண்பன் பிரபுவின் உதவியால் சென்னையிலேயே பெரிய ஆடிட்டரான அவனது பெரியப்பாவிடம் பேசி வேலைக்கு சேர்ந்து விட்டான்.

முதல் நாள் படபடக்கும் இதயத்தோடு அவர் வீட்டின் உள்ளே அடி எடுத்து வைத்து அவரை அணுக "குட் மோர்னிங் சரவணா! பிரபு உங்களை பற்றி சொன்னான் இன்னைக்கே வேலைல ஜாயின் பண்ணிக்கோங்க. எனக்கு வேலைல கரெக்டா இருக்கனும் "

"சரி சார்!" என்றான் சரவணத்தமிழன்.

"சரி இந்த ரூம் தான் என்னோட ஆபீஸ் இங்கயே வெயிட் பண்ணு நான் போய் ரெடி ஆகிட்டு வந்துடறேன். ஒரு பெரிய கம்பனிக்கு இன்னைக்கு ஆடிட்டிங் இருக்கு நாம போகணும்" என்று அவனை பார்க்க

"சரி சார்"

"இந்தா இது தான் அந்த பைல் பார்த்துட்டு இரு" ஒரு பைலை அவனிடம் குடுத்துவிட்டு வெளியே சென்றார்.

அந்த பைலை பார்த்துக்கொண்டிருந்த சரவணத்தமிழன் திடிரென்று சத்தம் வரவே தலை நிமிர்த்தி பார்த்தால் வேகமாக ஒரு பெண் ஓடி வந்து

"எங்க அம்மா வந்து கேட்டா நான் இருக்கறதை சொல்லகூடாது" என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அவன் அமர்ந்திருந்த சோபாவின் பின்னால் ஒளிவதை பார்த்து ஒன்றும் புரியாமல் முழிக்க பின்னாடியே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கத்தி கொண்டே, கையில் மாத்திரையோடு வந்தார்.

"செல்வி! செல்வி! நீ எங்க தான் ஒளிஞ்சிட்டு இருக்க ஒழுங்கு மரியாதையா வந்து இந்த மாத்திரைய போட்டுக்க இல்ல நான் உன்ன கண்டுபிடிச்சா ஒரு ஊசி போடறதுக்கு பதில் ரெண்டு ஊசி போற்றுவேன் சொல்லிட்டேன்." என்று கத்த அசையாமல் அந்த பெண் சிலை போல் அமர்ந்திருப்பதை பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு "அடிப்பாவி ஊசி போட்டுகரதுக்கா இவ்வளவு ஆர்பாட்டம் பண்றா?" என்று தனக்கு தானே மனதில் கேட்டு கொண்டான்.

"தம்பி இங்க என் பொண்ணு வந்தாளா? நேத்து சொல்ல சொல்ல கேக்காம அவங்க பிரெண்ட் கூட போயிட்டு மழைல நனைஞ்சுட்டு வந்து இன்னைக்கு ஜுரம் அதிகமா இருக்கு. ஊசி போட்டு மாத்திரை சாபிட்ரதுக்கு என்னை போட்டு பாடா படுத்துறா. நான் ஒரு டாக்டர் எனக்கு இவ உடம்பு சரி இல்லனா எப்டி இருக்கும் ?" என்று கூற தமிழ் அந்த பெண்ணை பார்க்க

"சொல்லவேண்டாம்" என்று அவள் தலை ஆட்ட

நம்ம ஆள் சும்மா இல்லாம "இங்க ஒரு பொண்ணு உக்கார்ந்துருக்கு இந்த பொண்ணா பாருங்க?" என்று கரெக்டாக மாட்டிவிட்டான்.

அவள் எழுந்து ஓடும் முன் அவளை பிடித்துகொண்ட செல்வியின் அம்மா "ஒழுங்கா மாத்திரை சாப்பிடுடி" என்று மிரட்டி ஒரு வழியாக மாத்திரையை விழுங்க வைத்தார்கள்.

"இப்போ போய் கொஞ்ச நேரம் அங்கயும் இங்கயும் ஓடாம போய் ரெஸ்ட் எடு" என்று கூறிவிட்டு செல்ல அவருக்கு பழிப்பு காட்டி விட்டு சரவனத்தமிழனிடம் திரும்பி நின்று இரண்டு கைகளை இடுப்பில் வைத்து முறைக்க..

"ஹலோ என்ன எதுக்கு முறைக்கிரிங்க? உங்க அம்மா உங்கள கேட்டாங்க அதான் பெரியவங்க கேக்கும் பொது பொய் சொல்ல முடியாம உண்மைய சொல்லிட்டேன்" என்றுன் பாவமாய் வேண்டுமென்று அவளை வெறுபேற்றும்படி சொல்ல...

"யோவ்! யாருயா நீ எங்க வீட்ல வந்து உட்கார்ந்துகிட்டு எங்க அம்மாகிட்ட வேற என்னை மாட்டிவிட்டு தேவையில்லாம மாத்திரை சாப்பிட வச்சிட்ட" என்று எண்ணெயில் விழுந்த கடுகாய் பொரிந்து தள்ள...

"இங்க பாரு மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்க எப்படி பேசணும்னு தெரில?" என்று அவளை சீண்ட

"இவர் பெரிய கலெக்டர் உனக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு என் வாழ்நாள்ல இதுவரைக்கும் மாத்திரை போடாம எங்க அம்மாகிட்ட தப்பிட்சிட்டு வந்தேன் உன்னால இன்னைக்கு மாட்டிகிட்டேன்" என்று புலம்ப

"செல்வி வாட் இஸ் திஸ்? வாட் ஆர் யூ டூயிங் ஹியர்? முன்ன பின்ன தெரியாத ஒருத்தர்கிட்ட இப்படி தான் பீகேவ் பண்றதா? சே சாரி டு ஹிம்" என்று கடுமையான அதட்டல் வாசலில் இருந்து வரவே திரும்பி பார்த்தாள் செல்வி

அங்கு அவளின் அப்பா கோவமாய் நின்று கொண்டிருந்தார்.

"சாரி!" என்று வேண்டா வெறுப்பாய் சொல்லிவிட்டு வெளியே செல்ல

அப்பாவின் குரல்தடுத்தது செல்வியை "ஒரு நிமிஷம் டா! இவர் மிஸ்டர்.சரவணத்தமிழன் நம்ம பிரபு தான் இங்க எனக்கு அச்சிஸ்டென்ட்டா அனுப்பி இருக்கார். சோ இன்னைலர்ந்து இவர் இங்க என் கூட தான் வொர்க் பண்ண போறார். அம்மாகிட்ட சொல்லி டீ குடுத்தனுப்ப சொல்லு" என்று கூறினார்.

"சரிப்பா " என்று அங்கிருந்து வேகமாக சமையல் அறைக்கு சென்றவள் தாட் பூட் தஞ்சாவூர் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தாள்.

"மாம்! எனக்கு அப்பாகிட்ட வேல செய்ய வந்திருக்கவர சுத்தமா புடிக்கல அப்பாகிட்ட சொல்லி இங்க வேலைக்கு வெக்க கூடாதுன்னு சொல்லுங்க" என்று கத்தினாள்.

"என்னடி? அப்பாவோட வொர்க் விஷயத்தில எல்லாம் நான் தலையிட மாட்டேன். உனக்கு வேணும்னா நீயே சொல்லிக்கோ" என்று அவள் அம்மா வேலையை கவனிக்க

செய்வதறியாது செல்வி கோவத்தில் காலை தரையில் ஓங்கி மிதித்து "அப்பா அவருக்கு டீ கேட்டார் கொடுத்தனுப்புங்க " என்று போக திரும்பியவளை "இந்தா டீ போட்டாச்சு இதை கொண்டு போய் குடு " என்று டீ கப்பை குடுக்க

"என்னால முடியாது, வள்ளி இருந்தா குடுக்க சொல்லுங்க " என்று முறைத்தாள்.

"செல்வி! எனக்கு ஹாஸ்பிட்டல்க்கு டைம் ஆகுது. இன்னைக்கு வள்ளி வரல வம்பு பண்ணாம பொய் கொடு" என்று கத்த

"சரி போய் தொலைக்கிறேன் கத்தாதிங்க " என்று டீ கப்பை வாங்கிகொண்டு வேகமாக கோவத்தில் முனகி கொண்டு சென்றாள்.

செல்வியின் அப்பா போன் பேசிக்கொண்டே வெளியே சென்ற நேரத்தில் உள்ளே வந்து டீ கப்பை அவன் முன் நீட்டினாள் நம் நாயகி தாமரைச்செல்வி .

அவள் குழந்தை போன்ற முகத்தை கண்டு சிறு புன்முறுவல் பூத்து "தேங்க்ஸ்" என்று வாங்கி கொண்டான்.

"ஹம் .." என்று ஒரு சின்ன முனகலுடன் வெளியே போக திரும்ப

"ஒரு நிமிஷம்!" என்றான் தமிழ்

"என்ன?" என்பது போல் அவள் திரும்பி அவனை பார்க்க

"சாரி நான் உங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு.... உங்களுக்கு அக்கறை காட்ட உங்க அம்மா இருக்கறதுனால அவங்களோட அருமைய பத்தி தெரியல எங்களுக்கு எல்லாம் அக்கறை காட்ட யாருமே இல்லன்னு ஏங்கறோம் உங்களுக்கு எங்க வலி சொன்னா புரியாது விடுங்க, சாரி! இனி உங்க விஷயத்துல தலையிடமாட்டேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட அவனின் வார்த்தைகள் அவள் செவிகளில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது.....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top