39 சினேகாவின் அம்மா
39 சினேகாவின் அம்மா
மறுநாள் காலை
தூக்கத்தில் இருந்து முதலில் கண் விழித்தது யாழினியன் தான். இரவு முழுவதும், அவனுடன் பேசிப்பேசி தீர்த்த பின், தாமதமாகத் தான் உறங்கினாள் ஆர்த்தி. அதனால் இன்னமும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அறையில் இருந்து மெல்ல வெளியே வந்த யாழினியன், தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, தன் அறையை நோக்கி நடந்தான். ஆனால், அவன் ஆர்த்தியின் அறையில் இருந்து வெளியே வந்ததை பார்த்து விட்ட நிலவன், ஓடி வந்து, அவன் முன்னால் நின்று அவன் வழியை மறைத்தான்.
"நீ எங்க இருந்து பா வர?" என்றான்.
ஆர்த்தியின் அறையை திரும்பிப் பார்த்து,
"ஆர்த்தி ரூம்ல இருந்து வரேன்" என்றான் யாழினியன்.
"ராத்திரி நீ ஆர்த்தி கூட தான் தூங்குனியா?"
"ஆமாம்... அதுக்கு?"
"ஒண்ணுமில்லையே... நீங்க ரெண்டு பேரும் நல்லா தூங்கி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..."
தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை பார்த்து முறைத்தான் யாழினியன்.
"இல்லப்பா... இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம். நீங்க ரெண்டு பேரும் டயர்ட் ஆகிட கூடாது இல்ல... அதுக்காக கேட்டேன்"
"வாயை மூடு டா"
"ஓகே..."
தன் வாயை கையால் மூடிக் கொண்டு, அவனிடம் ஏதோ கூறினான் நிலவன். அதை யாழினியனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"என்னடா சொல்ற?" என்றான்.
தன் வாயிலிருந்து கையை எடுத்து விட்டு தான் கூற வந்ததை கூறினான்,
"நீ ஆரத்தி ரூம்ல தூங்குன விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்"
தன் புருவத்தை உயர்த்தி முறைதான் யாழினியன். அங்கிருந்து சிரித்தபடி சென்றான் நிலவன்.
தன் அறையை நோக்கி நடந்த யாழினியன், பாட்டியின் அறையில் இருந்து, கண்களை கசக்கியபடி தியா வெளியே வருவதைக் கண்டான். யாழினியனை பார்த்த தியா, பளிச்சென்று சிரித்தாள். லேசாய் குனிந்தபடி, தன் கைகளை அவளை நோக்கி நீட்டினான் யாழினியன். ஓடி வந்து அவனிடம் புகுந்து கொண்ட தியாவை, தன் தோளில் தூக்கிக் கொண்டான் யாழினியன். அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் தியா.
"தூக்கம் வருதா டா?"
ஆமாம் என்று தியா தலையசைக்க, அவளை தூக்கிக்கொண்டு, மீண்டும் ஆரத்தியின் அறைக்கு வந்து, ஆர்த்தியின் அருகில் அவளை படுக்க வைத்தான் யாழினியன்.
"தூங்கு" என்றான்.
அவன் அங்கிருந்து செல்ல முனைந்த போது, அவனது சட்டையை பற்றினாள் தியா. அவளைப் பார்த்து தன் புருவத்தை உயர்த்தினான் யாழினியன்.
"நீங்களும் எங்க கூட தூங்குங்க பா"
"இன்னைக்கு ராத்திரி நம்ம மூணு பேரும் ஒண்ணா தூங்கலாம் சரியா?"
சரி என்று தலையசைத்தாள் தியா.
ஆர்த்தியின் கையை மெல்ல எடுத்து, தியாவின் மீது வைத்தான் யாழினியன். தன் அம்மாவை அணைத்தபடி உறங்கிப் போனாள் தியா.
தன் அறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு மீண்டும் ஆர்த்தியின் அறைக்கு திரும்பினான் யாழினியன். அம்மாவும், மகளும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவே, அவர்களை தொந்தரவு செய்யாமல் சோபாவில் அமர்ந்தான். ஆர்த்தி கண்விழிக்கும் போது, தன் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தியாவை பார்த்து, அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டும் அவனுக்கு.
முதலில் கண்விழித்த தியா, தன் கை கால்களை நெட்டி முறித்தாள். அது ஆர்த்தியின் தூக்கத்தை கலைத்தது. மெல்ல கண் திறந்த ஆரத்தி, தியா தன் பக்கத்தில் படுத்துக் கொண்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.
"தியா செல்லம் நீ இங்க எப்படி டா வந்த?" என்றாள் வியப்புடன்.
"என்னை அப்பா தாம்மா இங்க கூட்டிக்கிட்டு வந்தாரு"
"அப்படியா? எப்போ வந்தீங்க? நீங்க வந்ததை நான் பாக்கல டா..."
"அம்மா நீங்க ரொம்ப நல்லவங்களா ஆயிட்டீங்க... நீங்க முதல்ல மாதிரி என்னை திட்டவே மாட்டேங்கிறீங்க"
அவளது கையை பிடித்து முத்தமிட்ட ஆரத்தி,
"உன் மேல எனக்கு கோவமே வராது" என்றாள்.
"ப்ராமிஸ்?"
"பிங்கி ப்ராமிஸ்..."
"தேங்க்யூ" என்று அணைத்துக் கொண்டாள் தியா.
கை தட்டும் சத்தம் கேட்டு, இருவரும் அந்த திசை நோக்கி திரும்பினார்கள்.
"ப்ராமிஸ் பண்ணதெல்லாம் போதும். ரெண்டு பேரும் போய் குளிச்சு ரெடியாகுங்க" என்றான் புத்துணர்ச்சியுடன் இருந்த யாழினியன்.
"மாட்டோம்" என்று கூறிவிட்டு தியாவை அணைத்துக் கொண்டு, தங்கள் இருவரையும் போர்வையால் போர்த்திக் கொண்டாள் ஆர்த்தி.
"என்ன்னனது...???" என்று எழுந்து நின்ற யாழினியன், போர்வைக்குள் இருந்து வந்த சிரிப்பு சத்தத்தை கேட்டான்.
போர்வையை பிடிங்கி எறிந்த யாழினியன், தியாவை கிச்சுகிச்சு மூட்ட தொங்கினான். அந்த அறை முழுதும் சிரிப்பொலியால் நிரம்பியது.
"அப்பா... ஸ்டாப் இட்... " என்று மெத்தையின் மீது உருண்டு பிரண்டு சிரித்தாள் தியா.
யாழினியனை கட்டிலின் மீது பிடித்து தள்ளிய ஆரத்தி, அவனை கிச்சுகிச்சு மூட்ட தொடங்கியவுடன், அவன் சிரித்ததை பார்த்து, சந்தோஷமாய் கைகொட்டி சிரித்தாள் தியா. தியாவை யாழினியனின் வயிற்றின் மீது அமர வைத்த ஆர்த்தி, அவள் கையில் ஒரு தலையணையை கொடுத்தாள். அந்த தலையணை எதற்கு என்று புரியாத தியா, திருதிருவென விழித்தாள். மற்றும் ஒரு தலையணையை எடுத்து ஆர்த்தி அவனை அடிக்க துவங்கியவுடன், அந்த தலையணையின் தேவையை புரிந்து கொண்ட தியா, அவளும் யாழினியனை தலையணையால் அடித்து விளையாட துவங்கினாள். யாழினியனுக்கு பக்கத்தில், கட்டிலின் மீது சிரித்தபடி விழுந்தாள் ஆரத்தி. தன் அப்பாவின் வயிற்றின் மீது அமர்ந்து கொண்டு, தான் இதுவரை அறிந்திராத, வாழ்க்கையின் மற்ற பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் தியா. ஒரு குடும்பம் என்பது இவ்வளவு மகிழ்ச்சியாக கூட இருக்கும் என்பது இதுவரை அவள் அறியாதது.
அவர்களுடைய சிரிப்பொலியை கேட்டு, அந்த வீட்டில் இருந்த அனைவரும், அவர்களின் அறையின் முன் கூடி விட்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தபடி நின்றார்கள் அனைவரும். தங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தை தொலைத்து விட்டிருந்த அந்த மூவரும், மீண்டும் அந்த சந்தோஷத்தை அடைந்ததை பார்த்த வெங்கட்ராகவனின் கண்கள் கலங்கிவிட்டன. தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் பட்ட கஷ்டம் அனைத்திற்கும் அவர் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவரை கொன்றது.
"இங்க என்ன நடக்குது?" என்று சிரித்தபடி உள்ளே நுழைந்தாள் மதிவதனி.
"பாருங்க அக்கா, குளிக்க சொன்னா, இந்த பொண்ணுங்க ரெண்டும் சேர்ந்து என்னை அடிக்குதுங்க..." என்றான் யாழினியன்.
"என்ன்ன்னனனது....? என் தம்பியை இரண்டு பேரும் சேர்ந்து அடிக்கிறீங்களா?" என்றாள் மதிவதனி.
"அத்தை, அவர் பொய் சொல்றாரு... அவர் தான் எங்களை முதல்ல டிக்கிலிங் பண்ணாரு..." என்றாள் தியா.
"ஆமாம் கா. தியா சொல்றது உண்மை தான். நான் கூட பார்த்தேன், அவன் தான் இவங்க கிட்ட வம்பு பண்ணான்" என்றான் நிலவன்.
"நீ எப்ப பார்த்த?" என்றான் யாழினியன்.
"ஆர்த்தி ரூமுக்குள்ள நீ போறதை பார்த்து நான் மெதுவா உன்னை ஃபாலோ பண்ணி வந்தேன்"
"எதுக்கு?" என்றான் யாழினியன்.
"நான் ரொமான்டிக் சீனை எதிர்பார்த்து வந்தேன். ஆனா, இங்க ஆக்ஷன் ப்ளாக் தான் கிடைச்சுது..." என்றான் கிண்டலாக.
அவனைப் பார்த்து முறைத்தான் யாழினியன். அதை பொருட்படுத்தாத நிலவன், தியாவின் அருகில் சென்று, கட்டிலில் அமர்ந்தான்.
"இன்னைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு உனக்கு தெரியுமா?" என்றான் தியாவிடம்.
தெரியாது என்று தலையசைத்தாள் தியா.
"இன்னைக்கு உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்"
"நிஜமாவா?" என்றாள் ஆர்வத்துடன்.
"ஆமாம்... நீ ரொம்ப அதிர்ஷ்டக்கார குழந்தை... உங்க அம்மா அப்பாவோட கல்யாணத்தை பார்க்க போற... இப்படிப்பட்ட சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது" என்ற நிலவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் தியா. ஆனால் யாழினியனோ, சூடான பார்வையை அவன் மீது கொட்டினான்.
"அப்படின்னா, அம்மா இன்னைக்கு கவுன் போட்டுக்க போறாங்களா?"
"கவுனா?" என்றான் நிலவன்.
யாழினியனும் அவர்களின் அருகில் அமர்ந்தான்.
"இன்னைக்கு நடக்க போறது நீ லண்டன்ல பார்த்த மாதிரியான வெட்டிங் கிடையாது" என்றான்.
அப்பொழுது தான் அங்கிருந்த மற்றவர்களுக்கு புரிந்தது, அவள் எதற்காக கவுனை பற்றி பேசினாள் என்று.
"வேற எப்படி இருக்கும்?"
"வேற மாதிரி இருக்கும்"
"ஏன் அப்படி?"
"ஏன்னா, நம்ம எல்லாரும் இண்டியன்ஸ்"
"அப்படின்னா அம்மா இன்னைக்கு கவுன் போட மாட்டாங்களா?"
"மாட்டாங்க. ஸாரி தான் கட்டிக்குவாங்க"
"ஒ..."
"நீயும் இன்னைக்கு ட்ரெடிஷனல் அவுட்ஃபிட் தான் போட்டுக்க போற" என்றாள் மதிவதனி.
"நான் கூடவா?"
"ஆமாம்"
தான் அணியப் போகும் உடையை எண்ணி ஆர்வமானாள் தியா.
"அப்படின்னா நான் போய் சீக்கிரமா குளிச்சிட்டு வரேன்" என்று தன் அறையை நோக்கி ஓடினாள்.
"இன்னைக்கு, நான் அவளை ரெடி பண்ணலாமுன்னு நினைச்சேன்" என்றாள் ஆர்த்தி சோகமாய்.
"அவளை ரெடி பண்ண, உனக்கு நிறைய சான்ஸ் கிடைக்கும். கவலைப்படாதே" என்றான் நிலவன்.
"உன் பொண்ணு ரெடி ஆகி வர்றதுக்கு முன்னாடி, நீயும் போய் குளிச்சிட்டு ரெடி ஆகு என்றான் யாழினியன்"
சரி என்று தலையசைத்து விட்டு குளியலறையை நோக்கி சென்றாள் ஆர்த்தி. மற்றவர்களும் அவரவர் அறைக்களுக்கு சென்றார்கள்.
அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான் யாழினியன்.
"அவ என்ன செஞ்சுகிட்டு இருக்கா, சிந்து மேடம்?"
"நேத்து ராத்திரி ஒரு கோவில்ல தூங்கினா. இப்போ, அவ எங்கயோ போய்கிட்டு இருக்கா. நான் அவளை பின்தொடர்ந்து போய்கிட்டு இருக்கேன்"
"எங்கேயோ போறாளா?"
"ஆமாம் சார்"
"சரி. அவ எங்க போறான்னு பாத்துட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க"
"சரிங்க சார்" என்று அழைப்பை துண்டித்தார் அந்த பெண் காவலர்.
அரசு பொது மருத்துவமனைக்குள் சினேகா நுழைவதை கண்ட சிந்து, துணுக்குற்றார். இங்கும், அங்கும் பார்த்தபடி ஒரு குறிப்பிட்ட பிரிவினுள் நுழைந்தாள் சினேகா. அவளை பின்தொடர்ந்து சென்றார் சிந்து. அவளுடைய அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அறையின் முன் வந்து நின்றாள் சினேகா. அதே நேரம் அந்த அறையின் உள்ளிருந்து வெளியே வந்தார் மருத்துவர்.
"எங்க அம்மா எப்படி இருக்காங்க டாக்டர்?" என்றாள் சினேகா.
அவளைப் பார்த்த மருத்துவரின் முகம் பிரகாசம் அடைந்தது.
"ஏய் ஆர்த்தி, வாட் எ சர்ப்ரைஸ்... எப்படி இருக்க?" என்றார் அவர்.
அவள் கையை பற்றிக் கொண்ட அவர்,
"உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு... உன்னை யாழ் எப்படி எல்லாம் தேடினான் தெரியுமா? நீ அவனை அப்படி விட்டுட்டு போயிருக்கக் கூடாது"
அதைக் கேட்ட சினேகா திகைத்து நின்றாள். இந்த மருத்துவர், ஆர்த்தி, மற்றும் யாழினியனினுடன் கல்லூரியில் படித்தவராய் இருக்க வேண்டும். அவரது அடையாள அட்டையை பார்த்து, அவரது பெயர் சஞ்சய் என்பதை தெரிந்து கொண்டாள் அவள்.
"இவங்க உங்க அம்மாவா? அவங்க கிட்ட எந்த சேஞ்சும் இல்ல... நீ கவலைப்படாத. அவங்களை நான் பார்த்துக்கிறேன். நானும், யாழும் அடிக்கடி சந்திச்சிக்கிறோம் தெரியுமா?"
அதைக் கேட்ட சினேகா மென்று விழுங்கினாள்.
"சஞ்சய், நான் எங்க அம்மாவை இங்கிருந்து கூட்டிகிட்டு போக முடியுமா?"
"அவங்களை இங்கிருந்து கூட்டிகிட்டு போய் நீ என்ன செய்யப் போற?"
"நானே அவங்களை பாத்துக்கலாம்னு நினைக்கிறேன்"
"சரி. அப்படின்னா, போலீஸ் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிடு"
"போலீஸ் ஃபார்மாலிட்டீஸா?"
"ஆமாம்... அவங்க போலீஸ் கன்ட்ரோல்ல தான் இருக்காங்க"
"போலீஸ் கிட்ட எல்லாம் போகாம, அவங்களை இங்கிருந்து கூட்டிகிட்டு போக, உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதா?"
"அது ரொம்ப பெரிய ரிஸ்க் ஆர்த்தி..."
அப்பொழுது, யாரோ,
"யாழ்..." என்று கூப்பிடும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.
சஞ்சய் அந்தப் பக்கம் நோக்கி சந்தோஷமாய் திரும்பிய அதே நேரம், சினேகாவுக்கு வயிறு கலங்கியது.
"யாழ் வந்திருக்கான் போல இருக்கு... வா போய் பாக்கலாம்" என்றான் சஞ்சய்.
"நீ போ. நான் இப்ப வரேன்..." என்றாள் தன் பதற்றத்தை காட்டிக் கொள்ளாமல்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நானே அவனை இங்க கூட்டிகிட்டு வரேன்" என்று யாழினியனை தேடிச் சென்றான் சஞ்சய்.
அவன் சென்ற திசைக்கு எதிர் திசையில் விரைந்து சென்றாள் சினேகா. அவளை பின்தொடர்ந்து சென்றாள் சிந்து. *யாழ்* என்று குரல் கொடுத்தது சந்தேகம் இல்லாமல் அவள் தான். சஞ்சய் இடமிருந்து எந்த உதவியும் அவள் பெறக் கூடாது என்று தான் அவள் அப்படி செய்தாள். யாழினியன் அவளுக்கிட்ட உத்தரவும் அது தானே?
யாழினியனுக்கு ஃபோன் செய்து, அங்கு நடந்தவற்றை ஒன்று விடாமல் அவனிடம் கூறினாள் சிந்து. அதை கேட்ட யாழினியன் ஆச்சரியமடைந்தான். அவளை செல்ல விட்டது ஒரு விதத்தில் நல்லதாய் போயிற்று.
"அவளை விடாம ஃபாலோ பண்ணுங்க. அவ யாரை மீட் பண்றான்னு எனக்கு சொல்லுங்க"
"சரிங்க சார்" என்று அழைப்பை துண்டித்தாள் சிந்து.
அந்த அழைப்பை துண்டித்த யாழினியன், உடனடியாய் சஞ்சய்க்கு ஃபோன் செய்தான்..
"ஹாய் யாழ், எங்க இருக்க நீ?"
"இப்ப தான் ஆரத்தி கூட ஹாஸ்பிடல் வந்திருந்தேன்" என்று சமாளிதான் யாழினியன்.
"ஆமாம். இப்ப தான் நான் ஆர்த்தியை பார்த்தேன்"
"அவ என்கிட்ட சொன்னா"
"நீங்க ரெண்டு பேரும் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க?"
"இன்னைக்கு"
"நெஜமாவா? ஆனா ஆர்த்தி எதுவுமே சொல்லலையே?"
"நாங்க அவசரத்துல இருக்கோம் பா..."
"அதனால தான் கல்யாணத்துக்கு முன்னாடி, அவங்க அம்மாவை பார்க்கணும்னு இங்க வந்திருந்தாளா?"
"அதே தான்... அவங்க அம்மாவை நான் என்னோட ஹாஸ்பிடலுக்கு மாத்தலாம்னு நினைக்கிறேன்"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. எல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சிட்டா, நீ தாராளமா அவங்களை கூட்டிட்டு போகலாம்"
"நானும், ஆர்த்தியும் நாளைக்கு அங்க வரோம். நீ நாளைக்கு அங்க இருப்ப தானே?"
"நிச்சயமா இருக்கேன். உனக்கு வேண்டிய எல்லா ஹெல்ப்பையும் நானே செஞ்சு தரேன்"
"ஓகே டூட்... இன்னைக்கு எங்க கல்யாணத்துக்கு நீ நிச்சயம் வரணும். நான் உனக்கு லொகேஷனை ஷேர் பண்றேன்."
"நிச்சயம் மிஸ் பண்ணாம வருவேன் "
"தேங்க்யூ" என்று கள்ளப் புன்னகையுடன் அவனது அழைப்பை துண்டித்தான் யாழினியன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top