20 ஒருவேளை இல்லாவிட்டால்?
20 ஒருவேளை இல்லாவிட்டால்...?
தனது அறைக்கு வந்த யாழினியன், தனது மடிக்கணினியை ஆன் செய்து, ஐ ஏ எஸ் அதிகாரியான வெங்கட்ரகவனை பற்றிய விவரங்களை தேடினான். அவர் பணியாற்றிக் கொண்டிருந்தவரை, அவரைப் பற்றிய அனைத்து விவரங்களும் இருந்தது. ஆனால், அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் என்ன ஆனார் என்ற எந்த விவரமும் இல்லை. அவருடைய பழைய எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
*எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்ற ஆரத்தி? நீ தான் ஆரத்தின்னு ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்குற? நான் ஒத்துக்குறேன், நான் செஞ்சது தப்பு தான். நான் உன்னை கிண்டல் பண்ணி இருக்கக் கூடாது. ஆனா உனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கணும்னு தான் நான் அப்படி செஞ்சேன். உன்னைத் தவிர வேற யாரால என்னை புரிஞ்சுக்க முடியும்? ஆனா, நீயே இவ்வளவு பிடிவாதமா என்னை சித்திரவதை செஞ்சுகிட்டு இருந்தா, உன்னோட காதலுக்கு என்ன வேல்யூ இருக்கு? இத்தனை வருஷம் கழிச்சும் நான் ஒண்டிக்கட்டையா வாழறதை பார்த்து கூடவா, நான் இன்னும் உன்னையே நினைச்சுக்கிட்டு, உனக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன்னு உனக்கு புரியல? நான் ஒரு ஏமாத்துக்காரனா இருந்திருந்தா, இந்நேரம் நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேனா? என்கிட்ட திரும்பி வந்துடு ஆர்த்தி. நீ வணங்குற கடவுள் உண்மையா இருந்தா, உன்னை உண்மையை ஒத்துக்க வைக்கட்டும்* எனது என்று மனதிற்குள் வேதனை பட்டான் யாழினியன்.
யாழ் மருத்துவமனை
யாழ் மருத்துவமனையில் இருந்த உபகரணங்கள் சினேகாவுக்கு திருப்தி அளித்தது. அவள் மமதியை முழுமையாய் சோதனையிட்டு முடித்தாள்.
"உனக்கு ஒண்ணுமில்ல. நீ நல்லா இருக்க" என்றாள் சினேகா.
"அப்படின்னா, எனக்கு ஆபரேஷன் வேண்டாமா?" என்றாள் மமதி ஆர்வமாய் .
"வேணுமே..." என்றாள் சோகமாய்.
மமதியின் முகம் வாடிப் போனது.
"நான் இருக்கும் போது நீ ஏன் பயப்படுற?"
"வலிக்குமே..."
"ரொம்ப வலிக்காது"
"நிஜமாவா?"
"ஆமாம்"
அப்பொழுது மைதிலி அந்த அறையின் கதவை தட்டினாள். அவளைப் பார்த்து புன்னகைத்தாள் சினேகா.
"ஹாய், மமதி..."
"ஹாய், மாமி..."
"நீங்க மமதிக்கு மாமியா?" என்றாள் சினேகா.
அவளது நடிப்பு திறமையை பார்த்து வியந்து போனாள் மைதிலி. தனக்கு ஒன்றுமே தெரியாததை போல் எவ்வளவு கச்சிதமாய் நடிக்கிறாள் இவள்... உண்மையிலேயே, ஆர்த்தி ரொம்பவே மாறிவிட்டாள் என்று நினைத்த மைதிலி, தனது ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல் பதிலளித்தாள்.
"ஆமாம்... மமதியோட மாமா, டாக்டர் நிலவனை தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன்."
"ஓஹோ"
"இதெல்லாம் ரொம்ப ஓவர்" என்று முணுமுணுத்தாள் மைதிலி.
சினேகாவின் வாயிலிருந்து ஏதாவது பிடுங்க முடிகிறதா என்று முயற்சி செய்ய நினைத்தாள் அவள்.
"உங்களுக்கு இந்தியா பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்..."
"இந்தியா லண்டன் மாதிரி இல்ல. எனக்கு இங்க செட் ஆகல..."
நிச்சயம் அந்த பதிலை மைதிலி எதிர்பார்க்கவில்லை.
"நீங்க மெடிசன் எங்க முடிச்சீங்க?"
"லண்டன்ல"
"ஓ..."
மேற்கொண்டு மைதிலி எதுவும் கேட்கும் முன்,
"நான் உங்களை ஒன்னு கேட்கலாமா?" என்றாள் சினேகா.
"கேளுங்க"
"டாக்டர் யாழினியனுக்கு ஏதாவது மெண்டல் பிராப்ளம் இருக்கா?"
தனது பொறுமையை முழுதாய் இழந்து விட்டிருந்தாலும், மைதிலி அமைதியை கடைப்பிடித்தாள். சினேகாவின் உலக மகா நடிப்பை பார்த்து அவளுக்கு எரிச்சலாய் வந்தது.
"அவனை விடுங்க. அவனைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டியதில்ல"
"ஆனா, அவர் என்னை விட மாட்டார் போலருக்கே"
"நீங்க தான் ஆரத்தி இல்லன்னு சொல்லிட்டீங்களே... அப்புறம் ஏன் நீங்க அவனைப் பத்தி கவலை படுறீங்க?"
"நான் ஆர்த்தி இல்ல..."
"அப்புறம் என்ன...? அவனை விட்டு தள்ளுங்க. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க இந்தியாவை விட்டு போக போறீங்க"
"ஆமாம். என்னால இங்கவே இருக்க முடியாது..."
அப்பொழுது அந்த அறைக்குள் அவசரமாய் நுழைந்தான் நிலவன்.
"மைதிலி, சீக்கிரம் வா. ரொம்ப அவசரம்"
"என்னாச்சு, ஏதாவது பிரச்சனையா?"
"ஒரு குழந்தைக்கு அவசரமா ஏபி பாசிட்டிவ் குருப் பிளட் தேவைப்படுது. இன்னும் கூட நிறைய பிளட் தேவை. யாழ் டிரை பண்ணிக்கிட்டு இருக்கான்"
நிலவன் கூறிக் கொண்டிருந்த பொழுது, மைதிலியின் பார்வை சினேகாவின் முகத்தில் இருந்தது. அவள் வெகு சாதாரணமாய் மமதியின் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதைப் பற்றியும் யோசிக்காமல், நிலவனுடன் ஓடினாள் மைதிலி. கதவருகே சென்ற போது, ஒரு நொடி நின்று, சினேகாவை திரும்பிப் பார்த்தாள் அவள். ஆனால் சினேகாவோ, மமதியின் ரிப்போர்ட்டை படிப்பதிலேயே கண்ணாக இருந்தாள். குழப்பத்துடன் கண்களை சுருக்கிய மைதிலி, நிலவனுடன் சென்றாள்.
அவளுக்காக அறுவை சிகிச்சை அறையில் காத்திருந்தான் மகேந்திரன். அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய குழந்தையின் பக்கத்தில் இருந்த மற்றொரு படுக்கையில், ரத்தம் கொடுப்பதற்காக படுத்துக்கொண்டாள் மைதிலி. அவளது கை நரம்பை தட்டி ஊசியை செலுத்தினான் நிலவன். ரத்தம் எடுக்கும் அந்த தடித்த ஊசியை அவள் கையில் செலுத்திய போது கூட, மைதிலி எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை கவனித்தான். அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது அவனுக்கு புரிந்தது.
"மைதிலி" என்று அவன் அழைத்த போதும், அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே, அவள் கன்னத்தை தட்டினான் நிலவன்.
"ஹாங்...?"
"என்ன யோசிச்சிகிட்டு இருக்க?"
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள் மைதிலி.
"ஆனா உன் முகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையே"
"ஆர்த்தி ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறா" என்று அவள் கூறியது மகேந்திரனின் கவனத்தை ஈர்த்தது. அவள் அப்படி பேசியது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆர்த்தியை உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்று அவள் சபாதமேற்றாளே. அப்படி இருக்கும் பொழுது, ஏன் அவள் திடீரென்று ஏமாற்றதுடன் பேசுகிறாள்?
"அவ என்ன செஞ்சா?"
"ஒருத்தி இவ்வளவு தூரம் மாறி இருக்க முடியும்னு எனக்கு தோணல. அவ உண்மையிலேயே நம்ம ஆரத்தி தான்னு எனக்கு சந்தேகமா இருக்கு."
"ஏன் உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்தது?"என்றான் மகேந்திரன்.
"எனக்கும் ஆரத்திக்கும் ஒரே பிளட் குரூப்... ரொம்ப ரேரான குரூப்... ஏபி பாசிட்டிவ்..."
"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு" என்றான் நிலவன்.
மகேந்திரனும் ஆமாம் என்று தலையசைத்தான்.
"ஏதாவது ரொம்ப அர்ஜெண்டான கேஸ்னா, முதல்ல பிளட் கொடுக்க ஓடுறவ நம்ம ஆரத்தியா தான் இருப்பா. ஒரு உயிரை காப்பாத்துற விஷயம்னு வரும் போது, அவளால சும்மா இருக்கவே முடியாது. எங்க பிளட் ரொம்ப ரேர் குரூப் அப்படிங்கறதால, என்னை கூட பல தடவை பிளட் டொனேட் பண்ண வச்சிருக்கா. அவளால எனக்கு ஏற்பட்டது தான் இந்த பழக்கம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய தடவை பிளட் கொடுத்திருக்கோம்"
"ஆமாம். எங்களுக்கும் தெரியும்"
"ஆனா இன்னைக்கு, நீ என்னை ரத்தம் கொடுக்க கூப்பிட்ட போது, அவ முகத்துல எந்த மாற்றமும் தெரியல. ஆர்த்தி, யாழ் மேல கோவமா இருக்காங்குறதை நான் ஒத்துக்குறேன்... ரத்தம் கொடுத்தா, நம்மகிட்ட மாட்டிக்குவோம்னு கூட அவ கொடுக்காம இருந்திருக்கலாம்... ஆனா, அவ முகத்துல எந்த ஒரு தவிப்பையும் நான் பாக்கல. அவளுக்கு யாழ் மேல இருக்கிற கோபம், ஒரு குழந்தையோட உயிரை பத்தி கவலைப்படாத அளவுக்கு இருக்கும்னு என்னால நம்ப முடியல. அவ அவ்வளவு மனிதாபிமானம் இல்லாதவ இல்ல"
யோசனையுடன் தலையசைத்தான் நிலவன். மகேந்திரனும் அவள் கூறிய விஷயத்தில் மூழ்கிப் போனான்.
..........
கதவை திறக்கும் சத்தம் கேட்டு தலையை உயர்த்திய சினேகா, யாழினியன் உள்ளே நுழைவதை பார்த்து எரிச்சல் அடைந்தாள்.
"எல்லாத்தையும் செக் பண்ணியாச்சா? உனக்கு திருப்தியா இருந்ததா?" என்றான்.
அவன் மருத்துவம் சார்ந்த விஷயத்தைப் பற்றி பேசியதால், அவளும் ஆம் என்று சாதாரணமாய் தலையசைத்தாள்.
"மமதி எப்படி இருக்கா?"
"நம்ம ரொம்ப நாள் காத்திருக்க முடியாது. சீக்கிரமே அவளுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்டேஷன் செஞ்சாகணும். அவளுக்கு தேவையான இதயத்தை நீங்க எப்படி ஏற்பாடு செய்யப் போறீங்கன்னு எனக்கு தெரியல"
"இந்தியா ரொம்ப பெரிய கண்ட்ரி. இங்க, *பர்த் ரேட்* எப்படி அதிகமோ, அதே மாதிரி, *டெத் ரேட்டும்* ரொம்ப அதிகம். அதனால மமதிக்கு தேவையான இதயம் சீக்கிரமாவே கிடைச்சிடும். அவ பிளட் குரூப் ஒன்னும் ரேர் குரூப் கிடையாது. அதனால, அதை பத்தி கவலைப்பட வேண்டியதில்ல"
இது தான் முதல் முறை, யாழினியன் அவளிடம் ஆர்த்தியின் பெயரை எடுக்காமல் பேசுவது. அவன் அவளை சினேகா என்று அழைக்கவில்லை என்றாலும், ஆர்த்தி என்றும் அழைக்கவில்லை. ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அவன் அங்கிருந்து கிளம்பிய போது, இந்த முறை சினேகா ஆர்த்தியை பற்றி பேசினாள்.
"நீங்க ஆர்த்தியை மறந்துட்டீங்க போலருக்கு..."
புன்னகையுடன் நின்ற யாழினியன், அவளை நோக்கி திரும்பினான்.
"நீ வேலை செய்யும் போது, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினச்சேன், ஆர்த்தி. பாரு, நான் உன்னை பத்தி பேசலனா உன்னால தாங்க முடியல..."
"நான் ஆர்த்தி இல்ல" என்றாள் அமைதியாக.
"சரி அப்படியே வச்சுக்கோ..."
"நான் ஆரத்தியா இல்லாம, சினேகாவா இருந்தா, உங்களுக்கு பரவாயில்லயா?" என்றாள் ஆச்சரியமாக.
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை. ஏனென்றால், அவள் அதை ஏன் கேட்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை.
"நான் பார்க்க ஆரத்தி மாதிரி இருக்கேன்... என் குரலும் ஆர்த்தி மாதிரி இருக்கு... நான் ஆர்த்தியா இல்லாம இருந்தா தான் என்ன பிரச்சனை உங்களுக்கு?"
அவள் கேள்வியால் திகைத்து நின்றான் யாழினியன்.
"நான் சினேகாவா இருக்கிறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னா, நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க, நான் ஆரத்தி இல்ல. உங்க ஆர்த்தியை விட நான் எந்த விதத்திலயும் குறைஞ்சவ இல்ல என்ன சொல்றீங்க?"
மென்று முழுங்கினான் யாழினியன். என்ன இக்கட்டான சூழ்நிலை இது? அவனை மணந்து கொள்ள சினேகா தயாராக இருக்கிறேன் என்கிறாள். (அவனுடைய மனம், அவனை அறியாமல், முதல் முறையாய் அவள் பெயரை சினேகா என்று உச்சரித்தது) அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று கூறினால் என்னவாகும்? ஒருவேளை அவள் ஆர்த்தியாக இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது, ஒருவேளை ஆர்த்தியே அவன் வேறு யாரையேனும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறானா என்று அவனை சோதித்து பார்க்கிறாளா? என்ன குழப்பம் இது?
முதல் முறையாக அவனது மனதை பயம் சூழ்ந்தது... ஒருவேளை இவள் ஆர்த்தியாக இல்லாவிட்டால்...?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top