paguthi15
அங்கு மித்ராவை உறங்க அனுப்பிய பிரியா அவளது அறைக்கு வர அவிநாஷோ அழுது கொண்டு இருந்தான்.அவன் அருகில் வந்து அமர்ந்த பிரியா அவன் தோள் தொட்டு திருப்ப இதுவரை விசும்பல்களாக இருந்த அவனது அழுகை அதிகமானது.
பின் அவளை அணைத்துக் கொண்டவன் மேலும் குலுங்கி குலுங்கி அழுதான்.அவனது அழுகையை கண்டு பதட்டமான பிரியா "அவி அவிமா ஏன்டா அழுகுற ?"என்று கேட்க
அவனோ "நாளைக்கு என் அக்காவோட பொறந்தநாள்.அவளும் நானும் ஒவ்வொரு வருஷமும் அவளோட பொறந்தநாளுக்கு 12 மணிக்கு எந்திருச்சு கேக் வெட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டு,பாட்டு போட்டு ஆடி ஜாலியாஹ் கொண்டாடுவோம்.அவ காணாம போய் இன்னையோட 10 நாள் ஆகுது .நான் அவளை ரொம்ப மிஸ் பண்ணுறேன்"என்று மீண்டும் அவள் நெஞ்சில் சாய்ந்து அழ அவளோ அவனை ஆசுவாசப்படுத்த வேண்டி அவனை அணைத்து அவனது முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தால்.
அவன் கேவல் அடங்கும் வரை பின் அவனை விலக்கியவள் அவனது முகத்தை கையில் ஏந்தி அவனது கண்ணீரை துடைத்து விட்டவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு "உன் அக்கா சீக்கரம் கெடச்சுடுவா.நாளைக்கு அவளோட பொறந்தநாள் நீ அவளோட தான் கொண்டாடுவ."என்று கூறி அவனை படுக்க வைத்து தட்டிக் கொடுத்தால் அவன் உறங்கும் வரை.
பின் "ஏன் பிரியா அவன்கிட்ட அப்டி சொன்ன ?"என்று குரல் கேட்க அவள் திரும்பி பார்த்தால் அங்கு அறை வாசலில் அர்ஜுன் நின்று கொண்டிருந்தான்.
அவனிடம் பேச வேண்டாம் என்று சைகை காட்டியவள் அவினாஷிற்கு போர்வையை போர்த்தி விட்டு அவனை அழைத்துக் கொண்டு அவ்வீட்டின் தோட்டத்திற்கு வந்தால்.
பின் மீண்டும் அர்ஜுன்"ஏன் பிரியா அவன்கிட்ட அப்டி சொன்ன??அது நிவேதா இல்லைனா என்ன செய்வ??"என்று கேட்க
ப்ரியாவோ புன்னகையோடு "அது கண்டிப்பா நிவேதாவா தான் இருக்கும் .என் உள்மனசு சொல்லுது."என்க
அவனோ "என்ன பிரியா இது உள்மனசு அது இதுன்னு practicallah யோசிச்சு பாத்தியா .if சப்போஸ் அது நிவேதாவா இல்லனா அவன் எவ்ளோ கஷ்டப் படுவான் ??கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா?"என்று கூறி அவள் புறம் திரும்ப
அவளோ சிரிப்புடன் அவனை அப்படியா?என்பது போல் பார்த்து கொண்டிருந்தாள்.
பின் அவளை சற்று நெருங்கியவன் அவளது முகத்தில் விழும் ஒரு கற்றை முடியை காதருகில் ஒதுக்கி "என்ன சிரிப்பு?" என்று வினவ
அவளோ"இல்ல இங்க ஒருத்தர் உள்மனசு சொல்றத நம்பமாட்டேன்னு சொல்றாரு ஆனா அதே ஆளு ஒரு 1 மாசம் முன்னாடி யாரோ ஒரு பொண்ணோட கண்ணு அவர் கனவுல வந்ததுக்கு அவ தான் என் பொண்டாட்டின்னு நெனச்சுட்டு சுத்திட்டு இருந்தாரு அதான் அவர் எங்க போனாருன்னு நெனச்சு சிரிக்கிறேன்."என்று கூற
அவனோ "உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்பது போல் பார்த்தான்
பின் அவளே தொடர்ந்தால் "என்ன இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு பாக்குறீங்களா
அன்னைக்கு ஒரு நாள் ஒரு file எடுக்குறதுக்காக உங்க ரூம்க்கு வந்தேன் நீங்க அப்போ இல்ல.அப்போ ரொம்ப அவசரமா அந்த file தேவைப்பட்டதால உங்க permissione இல்லாம உங்க shelfla இருந்து எடுத்தேன் அப்போ அந்த filesoda சேர்த்து நீங்க வரைஞ்சு வச்சுருந்த கண்ணும் அதுக்கு பின்னாடி நீங்க எழுதி இருந்த கவிதையையும் பார்த்தேன்.அந்த கண்ண எங்கயோ பார்த்த மாதிரி எனக்கு இருந்துச்சு எங்கன்னு திரும்பி பாக்கேல கண்ணாடியில் என்னோட கண்ண பார்த்தேன் அப்போ தான் எனக்கு புரிஞ்சுது நீங்க என்ன பாக்குற பார்வையோடு அர்த்தம்"என்று கூறி அவனை ஏறிட்டு பார்க்க அவனோ அவளை முழுங்குவதைப் போன்று பார்த்துக் கொண்டிருந்தான் உதட்டில் தன் வசீகர புன்னகையுடன்.
அவனைக் கண்டவளோ " இப்டி சிரிச்சே என்ன கவுத்திடு "என்று முனங்கிவிட்டு அக்கிருந்து நகர முற்பட அவனோ அவளது கை பிடித்து இழுத்தான் அவன் இழுத்த வேகத்தில் அவள் நிலை தடுமாறி அவன் மீதே விழுந்தாள் .
பின் அவளை அவன் தன்னோடு இறுக்கிக் கொள்ள அவளோ"அர்ஜுன் அர்ஜுன் ப்ளீஸ் விடுங்க "என்று அவன் முகத்தை நோக்கி கூற அவனோ அவளை நோக்கி புன்னகைத்து விட்டு அவளை விடுவித்தான் பின் அவள் முன் முட்டியிட்டவன் அவளது கையைப் பற்றி
"பிரியா எனக்கு ப்ரொபோஸ்லாம் பண்ண தெரியாதுடா .என் lifela எனக்குன்னு எந்த சொந்தமும் இருந்ததில்லை கார்த்திக்க தவிர்த்து ,அம்மா பாசம்னா என்னங்குறத நான் உணருறதுக்கு முன்னாடியே என் அம்மா இறந்துட்டாங்க என் வாழ்க்கைல தாய்ப் பாசத்தையும் தாய்மையையும் உணர்ந்ததில்லை,ஆனா எப்போ உன்ன என் கனவுல பார்த்தேனோ அப்பவே என்ன கொஞ்சம் கொஞ்சமா உன்கிட்ட தொலைச்சேன்.உன்னோட கண்ணுல விழுந்த நான் உன்னோட குணத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் விழுந்தேன்.என்னோட உயிர் நீனு சொல்ல மாட்டேன் பிரியா என் உயிர் எப்போ வேணா பிரியலாம் "என்று கூற அவளோ அவனது வாயை தன் கையால் மூடினாள் பின் அவளது கையை விளங்கியவன் தொடர்ந்தான்"ஆனா என்னோட மரணத்துக்கப்புறமும் அழியாம இருக்குற என் ஆன்மாடி நீ.எப்போவும் என் கூட இருப்பியா பிரியா பாசம் காட்ட ஒரு தாயா உறுதுணையா இருக்க ஒரு தாரமா நல்வழிப் படுத்தவும் சண்டை போடவும் ஒரு தோழியா எப்போவும் என்னோட இருப்பியா "என்று கூற அவளோ பேச்சற்று இருந்தால் கண்ணில் ஆனந்த கண்ணீர் பொங்க.
பின் அவனை எழுப்பியவள் அவனை தாவிக் கட்டிக் கொண்டால் தன்னிடம் அவன் மேல் உள்ள காதலை வார்த்தையால் வடிக்க இயலாமல்.இவர்களது இக்காதலை ஆசிர்வதிப்பதைப் போல் மழையும் பெய்தது தன் நல்லாசியை பொழிந்திட.
பின் அவள் காதருகில் சென்றவன் "பிரியா இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா?"என்று வினவ
அவளோ அவனிடம் இருந்து விலகி ஓடியவள்"வெவெவேவே அதுக்கு இன்னும் காலம் இருக்கு தம்பி "என்க
அவனோ "என்னது தம்பியா??ரோஸ்மில்க் எப்போடி வாங்கித் தருவ?"என்றான் பின் அவனைப் பார்த்து சிரித்தவள் உள்ளே சென்று தூங்கினால்.அவனும் தன் காதலை வெளிப் படுத்திய மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்கினான்.
காலை அழகாக விடிய மித்ரா கதிரவனின் செங்கதிர்களின் அழைப்பில் தன் இமைகளை திறந்து பார்த்தால் எதிரில் கார்த்திக் படுத்திருப்பதைக் கண்டவளுக்கோ திக்கென்று இருந்தது "இந்த எரும ஏன் என் ரூம்ல இருக்கு?இவன என்று எழுந்தவள் தண்ணீர் கூஜாயில் இருந்த தண்ணீர் அனைத்தையும் அவன் மீது ஊற்றினால்.
அதில் பதறி அடித்து எழுந்த கார்த்திக்"ஹே மோஹினி பிசாசு இப்டி தான் தூங்குறவுங்கள எழுப்புவாங்களா?manners இருக்கா"என்று வினவ
அவளோ "எது எனக்கு manners இல்லையா உனக்கு ரொம்ப இருக்கோ ?"என்று வினவ
அவனோ"என்னடி காலைலயே சரக்கடிச்சுட்டியா நா என்னடி manners இல்லாம பண்ணேன்"
மித்ரா"என்ன டி போட்டு கூப்பிடாத ஏன்டா என் ரூம்ல வந்து படுத்திருக்க ?"என்று வினவ
அவனோ" நா எங்க உன் ரூம்ல இருக்கேன் ??நீ தான் என் ரூம்ல இருக்க ஒரு பையன் அழகா இருந்தா இப்படியா அவன் ரூம்ல வந்து தங்குறது ?"என்று வினவ
அவளோ "ஆமா அப்டியே அழகு வடியுது உன் மூஞ்சிய கொஞ்சம் கண்ணாடில பாரு என்று விட்டு கண்ணாடியை பார்க்க அப்பொழுதே அவளது கண்ணில் பட்டது அவளது கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் மாங்கல்யம்.
இவன் அவளது அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து "என்ன மோஹினி அது முகத்தை பாத்து அதுவே பயந்துருச்சா" என்று கண்ணாடியில் பார்க்க அப்பொழுதே அவனுக்கு நேற்றைய நினைவுகள் உரைக்க அவளை பார்க்க தைரியம் இல்லாதவன் தனது துணியை எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டான்.
பின் ப்ரியாவிடம் சென்று தன் உடமைகளை அவளது அறையில் இருந்து வாங்கியவள் அங்கேயே குளித்து விட்டு தயாராயினால்.பின் குளித்து விட்டு வெளி வந்த கார்த்திக் அர்ஜுனை சந்திக்க செல்ல பிரியா மித்ராவையும் அவினாக்ஷயும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றால் .
இங்கு அர்ஜுனிடம் வந்த கார்த்திக் "குட் மார்னிங்டா மச்சான் .என்க அவனும் "குட் மோர்னிங்டா"என்றான் பின் சிறிது நேரம் அமைதி நிலவ
அர்ஜுன் ஆரம்பித்தான் "அப்பறோம் மச்சான் அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?"
என்க கார்த்திக் "இல்ல மச்சான் மித்ராக்கு இதுல விருப்பம் இருக்காது இது கட்டாயத்துல தற்காப்புக்காக நடந்தது.இது ஒரு விபத்து மாறி அதுனால ஒரு 6 மந்த்ஸ்ல நான் அவளுக்கு டிவோர்ஸ் தந்துருவேண்டா .அவ லைப் ஸ்பாயில் ஆகக் கூடாது"என்று கூற
அர்ஜுன்"சரி இப்போ டிவோர்ஸ் குடுக்குறன்னு வை அடுத்து மித்ரா வேற ஒருத்தன கல்யாணம் பண்ணா உன்னால தாங்க முடியுமா??"என்று கேட்க கார்திக்கோ மௌனமானான்
பின் அர்ஜுன் "சொல்லுடா முடியுமா??முடியாதுள்ள சரி இதே நிலமைல வேற பொண்ணு இருந்திருந்தா கல்யாணம் பண்ணீருப்பியா ??"என்று வினவ
கார்திக்கோ வேகமாக "ஏய் என்னடா பேசுற"என்று கூறினான்
அர்ஜுன்"ஹ்ம்ம் கோவம் வருதுல்ல அவளோட நீ எவ்ளோ சண்டை போட்டாலும் அவ ஹர்ட் ஆனா எவ்ளோ பதறுற ??அன்னைக்கு அவ காணாம போனப்போ உன் முகத்தை தான் நா பார்த்தேனே ஏதோ உன் உயிரே போற மாறி துடிச்ச.ஷி மீன்ஸ் அ லாட் டு யு டா .அத நீயே உணரல .மித்ரா இஸ் precious டா அவளை எக்காரணம் கொண்டும் மிஸ் பண்ணீராத. "என்றுவிட்டு நகர்ந்தான்.
கார்த்திக் பின் யோசிக்க துவங்கினான் "அவளை மத்தவுங்க hurt பண்ணாலோ,இல்ல அவளுக்கு ஒரு சின்ன kettadhu நடந்தாலோ அத என்னால தாங்க முடியாது ஆனா இது loveaah ??am ஐ இன் லவ் வித் her ??பாப்போம் அதான் 6 மந்த்ஸ் இருக்கே கண்டு புடிச்சுருவோம் "(கடவுளே ஆறாம் கிளாஸ் பையன் கூட இப்போவே கண்டு பிடுச்சுருப்பாண்டா இதுக்கு உனக்கு 6 மாசம் வேணுமா??ரொம்ப கஷ்டம்)
பின் இருவரும் கிளம்பி காவல் நிலையத்திற்கு சென்றனர்.அங்கே இருந்த ஊர்த் தலைவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவரது குற்றத்தை நிரூபித்து அவருக்கு 14 வருட சிறை தண்டனை வாங்கித் தந்தனர்.பின் அவரால் கடத்தப் பட்ட பெண்களை அவர்களை விற்ற இடங்களிலிருந்து மீட்க முயற்சி எடுத்தனர்.அவர் விற்ற இடங்களின் காவல் துறையினரிடம் தகவல் அனுப்பப் பட்டது.
பின் அங்கே மும்பை காவலர்கள் அதிரடியாக தொடுத்த தாக்குதலால் அந்த 30 பெண்களில் 20 பெண்களையும் மேலும் பல பெண்களையும் காப்பாற்றினார் அடுத்த 5 மணி நேரத்தில் இவை அனைத்தும் நடந்தேறியது.மீட்கப் பட்ட பெண்கள் விமானம் மூலமாக மாயாபுரிக்கு அருகில் உள்ள நகரத்திற்கு அழைத்து வர பட்டு அங்கிருந்து பேருந்து மூலமாக மாயாபுரிக்கு அழைத்து வர பட்டனர்.
அவர்களது வரவை எதிர் நோக்கி காத்திருந்த பெற்றோரும் குடும்பத்தாரும் தத்தம் பெண்களை வாரி அணைத்து கண்ணீரால் தங்கள் சோகம் அனைத்தையும் கரைத்தனர்.பின் காவல் நிலையம் வந்தவர்கள் அர்ஜுனையும் கார்த்திக்கயும் சந்தித்து தங்கள் குல விளக்குகளை காப்பாற்றியதாக கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.அதை மறுத்த கார்த்திக்கும் அர்ஜுனும் தங்கள் தங்கையரை காப்பது தங்கள் கடமையாகும் அதற்கு நன்றி தேவை இல்லை என்று கூறி அப்பெண்களை மருத்துவமனை அழைத்து செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இவை அனைத்தையும் வாசலில் இருந்து பார்த்து கொண்டிருந்த ப்ரியாவிற்கும் மித்ராவிற்கும் நெகிழ்ச்சியாயிருந்தது.
பிரியா "எங்கடா இருந்த நீ இவ்ளோ நாளா??ஒவ்வொரு secondum நா மீண்டும் மீண்டும் உன்மேல காதலில் விழுகிறேன்"என்று எண்ணமிட
மித்ராவோ "கார்த்திக் நீ கூட இவ்ளோ நல்ல காரியமல்லாம் பண்ணுவியா??என் புருஷனாச்சே.வெயிட் வெயிட் நா இப்போ என் புருஷன்னா இவனை சொன்னேன்"என்று எண்ணமிட்டால்.
பின் அவர்களை நோக்கி வந்தவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க கார்த்திக்"ஹே அவினாஷ் எங்க??"என்று வினவ
அவர்களோ பின்னால் சைகை காண்பித்து பார்க்க கூறினர்.அவர்கள் பின்னால் பார்த்த பொழுதோ அவினாஷ் ஒரு பெண்ணின் கரத்தைப் பிடித்துக் கொண்டு எல்லையில்லா மகிழ்ச்சி முகத்தில் தெரிய அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அவனது முகத்தில் இருக்கும் பிரகாசத்தை வைத்தே அவள் நிவேதாவாக தான் இருப்பாள் என்று யூகித்து விட்டனர் அர்ஜுனும் கார்திக்கும் .
பின் அவர்கள் முன் வந்த நிவேதா" ரொம்ப நன்றி அண்ணா,அக்கா நீங்க என் வாழ்க்கை மட்டுமில்ல என் தம்பியோட வாழ்க்கையும் காப்பாத்திருக்கீங்க .ரொம்ப நன்றி."என்று கூறினால் பின் ப்ரியாவும் மித்ராவும் வற்புறுத்தியதால் அவளது கல்லூரி தொடங்கும் வரை அவர்களோடு இருக்க சம்மதித்தாள்.
அன்று மாலை பெண்களும் ஆண்களும் சுமங்களிப் பூஜைக்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது அவினாஷ் பந்து வைத்து விளையாடிக் கொண்டிருக்க அப்பந்து அங்கு வைக்கப் பட்டிருந்த ஆள் உயர சித்திரத்தில்(பிரியா மற்றும் அர்ஜூனால் மண்டபத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்ட சித்திரம்)பட்டு அச்சித்திரம் கீழே விழுந்ததில் அச்சித்திரம் வைக்கப் பட்டிருந்த பலகையை விட்டு வெளி வந்தது.
சத்தம் கேட்டு உள்ளே வந்த பிரியா அச்சித்திரத்தையும் ,பலகையையும் தவிர்த்து வேறொரு பொருள் இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்
.
அது என்னவாயிருக்கும்??
அப்பொருள் பிரெச்சனையை தீர்க்குமா இல்லை பிரெச்சனையே அதனால் தான் விளையுமா??
stay tuned to know.
readers ungalukku ippo 2 questions answer pannunga pls
ungalukku close to heartaah irukkura pair edhu??
priya-arjun
mithra-karthick
romance romba overaah irukka illa okvaa dhaan pogudha??
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top