paguthi 31
அங்கே அந்த ராஜ்யத்தில் உள்ள அனைவருக்கும் நவநாகரீக சாதனங்களை எவ்வாறு உபயோகிப்பது இந்த 100 வருடங்களாக வெளி உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்று அனைத்தையும் படிப்பிக்க பல பேர் கொண்ட ஒரு செயல் குழுவை அரசாங்கம் நியமித்தது.
அங்கே பள்ளிகள்,கல்லூரிகள் கொண்டு வர பட்டது .அனைத்து ஊருக்கும் இருப்பது போல் ஊராட்சி,காவல் நிலையம் என சகல விதமான வசதிகளும் கொண்டு அரா பட்டது.அங்குள்ள மக்கள் ஷிவதேவரின் ஆட்சியின் போது பாட சாலைகளுக்கு சென்றதாலும் சம்யுக்தாவின் கொடுங்கோல் ஆட்சியின் போதும் வீட்டில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு எழுத ,படிக்க மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை,மேலும் தமிழ் இலக்கியங்களையும் போதித்ததாலும் அவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதும் அதற்கு ஏற்றவாறு மாற்றி கொள்வதற்கும் பல காலம் தேவை படவில்லை .
பிரியா,அர்ஜுன்,கார்த்திக், மற்றும் மித்ரா ஷிவதேவ் வர்மரையும்,மணிமேகலையாரையும் ,சித்தாரா தேவியாரையும் சென்னை அழைத்து வந்தனர் .அங்கே அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றவர்கள்
அங்குள்ள லிஃப்டை அர்ஜுன் திறந்து உள்ளே செல்ல சொல்ல சீதாராதேவியார்"என்ன அர்ஜுன் இது ஏதோ கூண்டு போல் உள்ளதே வீடு இத்தனை சிறிதாகவா இருக்கும்?"என்று வினவ
பிரியா"ஹைய்யோ அம்மா இது வீடில்ல இது லிப்ட் "என்று கூற
ஷிவதேவரோ"லிஃப்டாஹ் அப்படி என்றால் என்ன?"என்று கேட்க
கார்த்திக்"அது வந்து அப்பா இது ஒரு machine ஹைய்யோ machineக்கு தமிழ்ல என்ன ahn சாதனம் .இதுல ஏறுனா அதுவே நம்மள மாடிக்கு கூட்டிட்டு போகும் .மின்சாரத்துல இயங்குது "என்று கூற
மணிமேகலையார் "எது மின்சாரமா மின்சாரத்தில் இயங்குவதா??புதிதாக உள்ளதே இங்கு உள்ள அனைத்தும் விசித்திரமாக உள்ளது "என்று கூற
மித்ரா"விடுங்க அம்மா இன்னும் கொஞ்ச நாள்ல பழகிடும் "என்று கூறி அழைத்து சென்றனர்.
பின் அந்த 5 bedroom அபார்ட்மென்டுக்கு வந்தவர்களிடம் அவர்களது அறையை காட்டினார் .பின் அனைவரும் குளித்து முடித்து உணவருந்த வர
அங்கே அர்ஜுன்"ஹே பிரியா வீட்ல இப்போதைக்கு ஒன்னும் இல்லடி என்ன பண்ண ?"என்று கேட்க
அவளோ"சரி இன்னைக்கு வெளிய ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம் வர்ற வழில ஏதாவது கிரோசிரிஸ் வாங்கிட்டு வருவோம் ."என்றால் பின் அனைவரும் கிளம்பி வர ப்ரியாவும் மித்ராவும் அணிந்திருந்த jeansayum topayum பார்த்த
ஷிவதேவர் "என்ன உடை அம்மா இது?"என்று வினவ
மித்ரா "இது ஜீன்ஸ் மாமா இது ஷர்ட் ஏன்"என்று வினவ
மணிமேகலையார்"இந்த உடை நன்றாக தான் உள்ளாதம்மா ஆனால் நான் கூறுவதை சற்று யோசித்து பாருங்கள் .இத்தனை இறுக்கமாக உடை அணிவது உடலுக்கு நல்லதல்ல .தங்களை அணியவேண்டாம் என்று கூற விழைய வில்லை எனினும் சற்று காற்று நுழையுமாறு உடை அணிந்தால் நல்லது "என்று கூற
சித்தாரா தேவியார் "அது மட்டுமல்லாது இத்தனை இறுக்கமாக உடை அணிவது உன் கர்பப்பையை பாதிக்கும் இது மருத்துவத்தில் கூற பட்டுள்ளது இப்பொழுது தான் உனக்கு திருமணம் ஆகி உள்ளது"என்று கூற
ப்ரியாவும் மித்ராவும் "ஒரு நிமிஷம்ப்பா "என்றவர்கள் உள்ளே சென்று புடவை மாற்றி வந்தனர் .பின் அனைவரும் உணவகத்திற்கு சென்றனர் .
அங்கே அர்ஜுன்"நூடுல்ஸ் எனக்கு உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்?"என்று வினவ அனைவரும் அவரவர்க்கு ஏற்றார் போல் உணவை உண்டனர்
அர்ஜுன் உண்ணும் நூடுல்ஸும் பார்த்தவர்கள் "ஐய இது என்ன புழுவை போல் உள்ளது இதையெல்லாம் உண்பார்கள் "என்று கேட்க அர்ஜுனிற்கோ புரை ஏறி விட்டது.
பின் அவனுக்கு தண்ணீர் குடுத்த பிரியா "இது நூடுல்ஸுமா chinese டிஷ்"என்று கூற "ஓஹ் அப்படியா"என்றனர்.
பின் மித்ராவும் ப்ரியாவும் தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டனர்.அர்ஜுனிற்கும் ப்ரியாவிற்கும் மித்ராவிற்கும் கார்த்திக்கிற்கு திருமணத்திற்கான நாள் குறிக்க பட்டு அதற்கு அனைத்து வேலைகளும் சிறப்பாக நடந்து முடிந்தது.அனைத்து சடங்குகளையும் ஷிவதேவரும் சித்தாரா தேவியாரும் மணிமேகலையாருமே முன் நின்று நடத்தினர்.
ப்ரியாவும் மித்ராவும் அவர்களை வெளியே அழைத்து சென்று ஒவ்வொன்றாக சொல்லி தந்தனர்.அனைவரும் வாரம் ஒருமுறை ஞாயிற்று கிழமைகளில் வெளியில் சென்று ஊர் சுற்றுவதை வழக்க மாக்கி கொண்டனர்.
சித்தாரா தேவியாரும் மணிமேகலையாருமோ மித்ராவிற்கும் ப்ரியாவிற்கும் மேலும் பல உணவு வகைகளை சமைக்க கத்து கொடுத்தார்கள் பின் தினம் இருவருக்கும் தலையை பின்னி விடுவதும் அவர்களே .மாலை ஆனால் அர்ஜுன் கார்த்திக் வேலை விட்டு வந்ததும் அனைவரும் இரவு உணவை என்றும் மாடியில் சென்று உண்டுவிட்டு அங்கே அரட்டை அடித்து விட்டு வந்தே உறங்குவர்.
இதில் என்றாவது ஷிவதேவர் ப்ரியாவிற்கும் மித்ராவிற்கும் ஊட்டினாள் அர்ஜுனும் கார்திக்க்கும் சிறு குழந்தைகள் போல் தனக்கும் ஊட்டி விடுமாறு அடம்பிடிப்பர் பின் அவர்களுக்கு மணிமேகலையாரும் சித்தாரா தேவியாரும் ஊட்டி விடுவர்(.தந்தை தாய் பாசம் அறியாதவர்கள் இன்று தந்தை தாய் அத்தை என உறவுகளின் பாசத்தில் நனைந்தனர்.இதுங்க பண்ற அலும்பல நீங்களே வந்து பாருங்க)
அர்ஜுனும் கார்திக்க்கும் வேலை விட்டு வர அன்று மழை பெய்ததால் நனைந்துகொண்டே இருவரும் தலையை சிலுப்பி கொண்டே உள்ளே வர அங்கே நடப்பதை கண்டவர்கள் "என்னடா நடக்குதுங்க" என்பதை போல் பார்த்தனர்
அங்கு மித்ராவும் ப்ரியாவும் செஸ் விளையாட மித்ராவிற்கு மணிமேகலையார் juiceai புகட்ட ப்ரியாவிற்கோ சித்தாரா தேவியார் சிப்ஸை ஊட்டி கொண்டிருந்தார் .
ஷிவதேவரோ அப்பொழுது தான் வீட்டிற்குள் வந்தார்.வந்தவர் கையில் இரு பைகள் இருந்தது வந்தவர்"அடடே என்னப்பா நீங்க ரெண்டு பெரும் இப்படி நனைந்து வந்துள்ளீர்கள்" என்றவர் இரு துண்டை கொண்டு வந்தவர் இருவருக்கும் தலையை துவட்டி விட்டார்.
கார்த்திக்கிற்கு அர்ஜுனிற்கும் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது அவரது அன்பில்..பின் உள்ளே வந்த இருவரும் அவரவர் இணையின் அருகில் சென்று அமர இருவரும் கண்டு கொள்ளவில்லை.
பின் கார்த்திக் மித்ராவின் தோளை தொட அவளோ தட்டி விட்டு"இந்த கொசு தொல்லை தாங்கல" என்று கூற கார்திக்க்கோ "எது கொசுவா என்றவன் செஸ் காய்கள் அனைத்தையும் களைத்து விட்டான்.இதில் அரண்ட ப்ரியாவும் மித்ராவும் என்ன என்று நோக்க அர்ஜுனும் கார்திக்க்கும் ஷிவதேவருடன் சிரித்து கொண்டிருந்தனர்.இதில் மூவரும் hifi வேறு போட்டுக்கொள்ள கார்த்திக்கயும் அர்ஜுனையும் ப்ரியாவும் மித்ராவும் துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்.இவை அனைத்தையும் கண்டு சிரித்து விழுந்து கொண்டிருந்தனர் பெரியவர்கள் மூவரும்.
தினம் இவ்வாறே சீண்டல்களும் சேட்டைகளும் என்று மிகவும் ஆனந்தமாகவும் அதே சமயம் தவறு செய்தால் திருத்தவும் அறிவுரை சொல்லவும் என நால்வருக்கும் சிறந்த தந்தை தாயாகவும் தாயாகவும் இருந்தனர் ஷிவதேவரும்,சித்தாராதேவியாரும்,மணிமேகலையாரும்.
அவர்கள் கூறிய அறிவுரையை அனைவரும் ஏற்று நடந்து கொண்டனர்.ப்ரியாவிற்கும் மித்ராவிற்கும் கர்ப காலத்தில் அனைத்து வேலைகளும் செய்து கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டனர் மூவரும்.
மித்ராவும் ப்ரியாவும் அடிக்கடி கூறும் வார்த்தைகள் இது தான்"நாங்களும் அத்தை கூட சண்டை போடுவோம் கொஞ்சம் interestingaanu பாத்தா ரெண்டு பேரும் சண்டையே போட மாட்டிங்குறீங்க .தப்பு பண்ணாலும் அன்பா எடுத்து சொல்லறீங்க இப்டிலாம் இருந்தா அப்பறோம் மாமியார் மருமக இமேஜ் டேமேஜ் ஆயிராது சண்டை போடுங்க "என்று கூறுவர்.
ப்ரியா திருமணம் ஆகியும் 2 வருடங்களாக கரு தரிக்காமல் இருக்க ஷிவதேவர் அவளுக்காக 48 நாட்கள் பாலும் பழமும் மட்டும் அருந்தி விரதம் இருந்தார்.அந்த விரதத்தின் பலனாகவே ப்ரியா அந்த விரதம் முடிந்த அடுத்த 1 மாதத்தில் கர்ப்பம் தரித்தால்.
குழந்தைகள் பிறந்ததும் அவற்றுக்கு தமிழ் சொல்லி கொடுப்பது ,தலை சீவுவது ,அவர்களுடன் விளையாடுவது,கதை கூறுவது என்று மிகவும் சிறந்த தாத்தா பாட்டிமார்களாகவும் இருந்தனர்.
இவ்வாறே தாய் தந்தை பாசம் அறியாது வளர்ந்த நால்வரும் தாய் தந்தை பாசத்தில் தினம் தினம் திளைத்தனர்.இவ்வாறே அவர்கள் வாழ்வு என்றும் தந்தை தாயுடனும்,குழந்தைகளுடனும் சிறக்கட்டும்.
author updatela ellaarum avungaloda family life pathi ketrundheengannu indha update potruken .idhoda ellam clear aayiruchunu nenaikuren [adichu paathutu unga commentsa podunga.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top