paguthi 27

அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறவும் இங்கே சம்யுக்தாவின் ஷக்தி பூஜை நிறைவடையவும் சரியாக இருந்தது .அங்கே அது வரை உறைந்து போய் இருந்த கார்த்திக் மித்ரா கையில் வாளை எடுத்து அந்த பெண்ணை பலியிட அதில் தெறித்த ரத்தம் அவள் முகத்தில் தெறித்த கோரக் காட்சியை பார்த்து தன் கண்களை மூடிக் கொண்டான் அப்பொழுது அவனுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது ..

அன்றொரு நாள் ஊர்த் திருவிழாவின் கடைசி நாள் அன்று 10 ஆடுகளை பலியிடுவதற்காக வைத்திருந்தனர்.அதை கண்ட

மித்ரா "கார்த்திக் ஏன் இந்த ஆடுங்க எல்லாம் இங்க கூட்டமா இருக்கு ?"என்று வினவ

கார்த்திக் "ஆங் எல்லாரும் கட்சி அமைக்குறாங்கல்ல அதான் ஆடுகளாம் சேந்து கட்சி அமைக்க போகுதாம் அதான் எல்லாம் கூட்டமா இருக்கு " என்று கூற

மித்ராவோ "உண்ட போயி கேட்டேன் பாரு என் புத்திய" என்று கூற

கார்திக்கோ "அய்யோயோ மித்து குட்டி நா இன்னைக்குன்னு பாத்து ஸ்லிப்பர்ஸ் போடலையேடா பூட்ஸ்ல போட்ருக்கேன் "என்று கூறியவனை கொட்ட போக அப்பொழுது அம்ம்ம்ம்மாஆ என்ற ஆட்டின் சத்தம் கேட்டு அங்கே திரும்பி பார்க்கவோ அந்த ஆடை வெட்டியதில் அதன் கழுத்தில் இருந்து வந்த ரத்தம் அந்த இடத்தையே சிகப்பாய் மாற்றி இருந்தது அதை கண்ட மித்ரா அங்கேயே தனது தலையை பிடித்து கொண்டு மயக்கமடைந்தால் .

.அது வரை சிரித்துக் கொண்டிருந்த கார்த்திக் மித்ரா மயங்கவும் பதறி "மித்து மித்து என்னாச்சுடி "என்று அவளது முகத்தில் தண்ணீர் தெளிக்க அதில் விழித்தவளிடம்

கார்த்திக் "என்னாச்சு மித்து ஏன் திடீர்னு மயங்கிட்ட ஒழுங்கா சாப்பிடுன்னு சொன்னா கேக்குறியா "என்று கூற

மித்ராவோ "டேய்ய் தடியா நா எல்லாம் ஒழுங்கா தான் சாப்பிடுறேன் எனக்கு bloodah பாத்தாலே அல்ர்ஜி மறந்துட்டியா ".என்று கூற

அவன் "அட ஆமால்ல நீ இங்க இருக்க வேணாம் வா போலாம் "என்று கூற

அவளோ "கார்த்திக் அந்த ஆடுலாம் பாவம் கார்த்திக் ஒரு உயிரை பலி குடுத்து நாம கண்டிப்பா நல்லா இருக்க முடியாது கார்த்திக் கொஞ்சம் போய் பேசலாம் வாயேன் " என்று கூற

கார்திக்க்கோ "மித்து இது காலம் காலமா அவுங்க follow பண்ணிட்டு இருக்குற ட்ரடிஷன் நாம சொன்னதுக்கல்லாம் மதிக்க மாட்டாங்க "என்று கூற

மித்ராவோ "அதெப்புடி ட்ரை பண்ணுறதுக்கு முன்னாடியே மாட்டாங்கன்னு சொல்ற நீ வா இல்ல வராம போ நா போய் பேச போறேன்" என்று கூறி செல்ல அங்கோ பிரியா அவளுக்கு முன்னாலேயே அந்த ஊர் பூசாரியிடம் பேசி கொண்டிருந்தாள்.

அங்கு அவர்களது வாக்குவாதத்தில் மித்ராவும் தன்னை இணைத்துக்கொண்டாள் அர்ஜுன் ஒன்றும் செய்ய இயலாது நின்று கொண்டிருந்தான் .

அவனின் அருகில் சென்ற கார்த்திக் "என்னடா மச்சான் ப்ரியாவும் களத்துல இறங்கிட்டாளா ?"என்று வினவ அவனோ அவனை பார்த்து முறைத்தான் அவனது முறைப்பிற்கு காரணம் அறியாதவன் இவன் ஏன் நம்மள இப்டி பாக்குறான் என்று நினைத்து கொண்டு

"என்ன மச்சான் அவ்ளோ அழகாவா இருக்கேன் இப்டி பாக்குற?" என்று வினவ அவனோ "ஏன்டா எல்லாத்தையும் சொன்னியே பிரியா vegetariannu சொன்னியா?"என்று கேட்க

அவனோ "ஏன் மச்சான் என்னாச்சு ?"என்று வினவ

அவனோ "இன்னும் என்னடா ஆகணும் இன்னைக்கு கெடா வெட்டுறாங்க நல்லா இன்னைக்கு சாப்பிட போறேன்னு சொன்னதுக்கு அதெப்புடி ஒரு உயிரை கொன்னு அத சாப்பிடுற அது இதுன்னு என்ன கத்த ஆரம்பிச்சுட்டாடா இதுல இந்த பலி குடுக்குறதையும் நிறுத்துறேன்னு போய் இப்போ சண்டை போட்டுட்டு இருக்கா.ஏன் மச்சான் nonveg சாப்பிடுறது ஒரு குத்தமா?"என்று கேட்க

கார்திக்கோ "ஹாஹாஹா என்ன மச்சான் பண்றது பிரியா பொறந்தது vegetarian குடும்பத்துல அவளுக்கு 10 வயசு இருக்கேல அவுங்க அப்பா அம்மா அச்சிடேன்ட்ல இறந்ததால் தான் அவ அப்போ இருந்து ஆஸ்ரமத்துல வளருறா அவளோட சேந்து இந்த மித்ராவும் சாப்பிட மாட்டா சாப்பிடுறவனுங்களையும் ரெண்டும் பேசி பேசியே vegetarian ஆக்கிரும் இதுக கிட்ட nonveg பத்தி பேசாத வரைக்கும் நம்ம தப்பிச்சோம்"என்று கூற

அங்கோ பூசாரி கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டு "மன்னிச்சுருங்கம்மா இனிமே இந்த கிராமத்துல பலியே குடுக்க மாட்டோம் அதுக்கு பதிலா நீங்க சொன்னா மாறியே ஆளாளுக்கு ஒரு மரம் நட்டு ஆத வளக்குறோம்" என்றார்.

அதை கேட்ட அர்ஜுன் அட பாவிகளா இப்டி அஞ்சே நிமிஷத்துல ஆளையே மாதீடீன்களேடி என்று எண்ணி வாயை பிளக்க கார்திக்க்கோ சொன்னோம்ல என்றவாறு பார்த்தான்.

இந்த சம்பவத்தை நினைத்தவன் "ஏன் மித்து ஒரு ஆட கொன்னதுக்கே அந்த துடி துடிச்சியே இப்போ உன் கையாலேயே எப்படிடி ஒரு பொண்ண கொல்லுற?"என்று நினைத்தவன் என்ன ஆனாலும் தன் மனைவியை காக்க வேண்டும் என்றெண்ணியவன் அந்த பூஜை நிறைவடைய அனைத்து வீரர்களும் களைந்து செல்ல அவனும் மித்ராவை பார்த்து கொண்டே அங்கிருந்து சென்றான் .

இங்கே அதே மரத்தின் அடியில் பிரியா அர்ஜுன் கார்த்திக் மூவரும் என்ன பேசுவது என்றே தெரியாமல் அடுத்தடுத்து கண்ட அதிர்ச்சிகளால் உறைந்து போய் இருந்தனர் .

அந்த மௌனத்தை கார்திக்க்கே களைத்தான் "பிரியா என்னென்னமோ நடக்குது என்னென்னமோ நடந்துருக்கு இதை எல்லாம் நம்பவும் முடியல அதே சமயம் நம்பாம இருக்கபிவும் முடியல மறுஜென்மம் ,பரம்பரை பதக்கம் இதெல்லாம் என்னவோ கற்பனைகளுக்கு அப்பால இருக்கு ?what 's going on here .its literally making me go nuts ."என்றான்

அதற்கு அர்ஜுன்"நம்மள சுத்தி நடக்குறது எல்லாமே நிஜம் கார்த்திக் பெர்முடா triangle மாறி ஒரு பிரெச்சனைல நாம மாட்டிருக்கோம் அதுல இருந்து நாம வெளிய வந்தே ஆகணும் அதுக்கு ஒரு வழி இருக்கு "என்க

பிரியா"என்ன வழி அர்ஜுன் ?"என்று வினவ

அவனோ "உன் கைல இருக்கு பாரு ஓலை அதுல இருக்குற இடத்துக்கு நாம போய் அங்க இருக்குற அந்த பதக்கத்தோட மறு பாதியை எடுக்கணும் அந்த timela கார்த்திக் இங்க இருக்குற நெலமைய கண்காணிச்சுட்டே இரு எனக்கு தெரிஞ்சு மித்ரா is made அவுட் of her சென்சஸ் .கண்டிப்பா அந்த சம்யுக்தா தான் அவளை ஏதாவது மந்திர காட்டுக்குள்ள வச்சிருக்கணும் .நீ அந்த சம்யுக்தாவை வாட்ச் பண்ணிட்டே இரு மித்ராவை எப்படி வெளிய கொண்டு வராதுன்னு தெரிஞ்சுடும் .அந்த சம்யுக்தா வோட அராஜகம் இன்னும் 3 நாள்ல முடிய போகுது என்ன உங்க ரெண்டு பெருகும் இந்த பிளான் சம்மதமா" என்று கேட்க அவர்கள் இருவரும் சம்மதம் என்றனர் பின் மூவரும் தங்கள் கைகளை சேர்த்து எடுத்த பணியை முடிப்போம் என்ற சங்கல்பத்தை எடுத்த பின் அந்த ஓலையை பிரித்தனர் அதில்

"கோள் கொண்ட கோமகனின்

நாமம் கொண்ட நாயகனின்

நகளதிலே தான் ஒளிந்து

பெட்டகமும் பொருள் தரிக்க

பொன் கொண்ட பொருளதுவே

காப்பவனின் வாகனத்தின்

வாயிலதாய் திறக்காதோ "

என்று இருந்தது அதை கண்ட மூவரும் புருவங்கள் முடிச்சிட அதன் பொருள் விளங்காது பல வாரும் யோசித்து கொண்டிருந்தனர் .எப்படி யோசித்தும் பலனில்லாது போகவே மூவரும் பணியாளர் தாங்கும் இடத்திற்கு சென்றனர் .

அங்கே இதையே யோசித்து கொண்டிருந்த ப்ரியாவின் சிந்தையை பெண்கள் இருவரின் விவாதம் கவர்ந்தது .

பெண் 1 : இப்புவியில் ஷக்தி வாய்ந்த கடவுள் எமது மாதாதுர்கா தேவியே ஆவார் என்க

பெண் 2 :இல்லை இவ்வுலகில் மிகவும் ஷக்தி வாய்ந்த கடவுள் எமது ஷிவா பெருமானே ஆவார் என்க

பெண் 1 :யாராலும் வீழ்த்த முடியாத பண்டாசுரனை வீழ்த்தியவர் என் தாய்

என்க

பெண் 2 :இந்த உலகத்தையே தமது ஆளுகையின் கீழ் வைத்திருப்பவர் எமது சிவா பெருமான் ஆதியும் அவரே அந்தமும் அவரே ஆக்குவதும் அவரே அழிப்பதும் அவரே இந்த அண்டத்தை ஆள்பவரும் அவரே என்க

பிரியாவிற்கு அந்த ஓலையில் இருந்த எழுத்துக்கள் கண்முன் தோன்றியது

"கோள் கொண்ட கோமகனின் நாமம் கொண்ட நாயகனின் "

அதாவது சிவபெருமானின் பெயர் கொண்ட ஒருவர் ஆம் ராஜா ஷிவதேவ் வர்மர்.

"நகளதிலே தான் ஒளிந்து பெட்டகமும் பொருள் தரிக்க "

நகல் ஷிவதேவரின் நகல் .என்று யோசிக்க அவளது சிந்தையில் அவள் அந்த மண்டபத்திலிருந்து கண்டெடுத்த சித்திரம் நினைவிற்கு வந்தது .

அப்பொழுது அந்த பொருள் அவரது சித்திரத்தில் இருக்கும் பெட்டகத்தின் உள்ளே இருக்கும் அந்த லட்சினை தான்

"காப்பவனின் வாகனத்தின் வாயிலதாய் திறக்காதோ "

காப்பவனின் வாகனம்

காக்கும் கடவுள் விஷ்ணு விஷ்ணுவின் வாகனம் கருடன் குண கருட வடிவில் இருக்கும் ஏதோ ஒரு இடம்  

"ஆக சிம்ம வம்சத்தின் அடையாளமான அந்த பதக்கத்தை மறு பாதி இருக்குமிடம் கருடர் வடிவில் இருக்கும் ஏதோ ஒரு இடம் அதை திறக்கும் உபாயம் இந்த லட்சினை என்று நினைத்தவள் தன் உடமைகளிலிருந்த அந்த பெட்டகத்தை எடுத்தவள்

அதிலிருக்கும் லட்சினையை பார்த்து சிரித்து விட்டு "உன்ன சேர்க்க வேண்டிய எடத்துல சேர்த்துருறேன்னு சொன்னேன்ல நாளைக்கு அதா செஞ்சுருவேன் "என்று நினைத்தவள் தனது கைபேசியில் அந்த சித்திரத்தை எடுத்து வாய்த்த புகை படத்தை பார்த்து "உங்க முகத்தை பாகேளெலாம் எனக்கு எனோ ஒரு உணர்வு வரும் உங்க சித்திரத்தை பாகேளெலாம் எனக்கு நீங்க ரொம்ப நெருக்கமானவர்னு தோணும் ஆனா ஏன்னு எனக்கு தெரியாமயே இருந்துச்சு ஆனா இப்போ தெரிஞ்சுகிட்டேன் நீங்க என்னோட முன் ஜென்மத்துல எனக்கு அப்பாவா இருந்தீங்களாம் .உங்கள அந்த சம்யுக்தா சிலையை மாத்தி வச்சுருக்கானு கேள்வி பட்டேன்பா .கவலை படாதீங்க உங்க மக பிரியா அதாவது உங்க ருத்திரா உங்க மருமகன் இந்த்ரஜித்தோட சேர்ந்து நம்ம குல பொக்கிஷத்தையும் உங்களையும் இந்த சாபக்கேடுல இருந்து காப்பாத்தியே தீருவோம் "என்று நினைத்தவள் பின் அதை அனைத்துவிட்டு அவளது பையில் போட்டவள் என்றும் மறைத்து வைக்கும் அந்த மர பொந்தில் போட்டுவிட்டு

சென்று உறங்கினால் .

நாளை என்ன நடக்கும்??

குல பொக்கிஷம் கண்டெடுக்க படுமா??

மித்ரா விடுவிக்க படுவாளா?

stay tuned to know 

enba makkale idha ingaye kekuren ungaluku indha kadhaila endha edathula yaavadhu sandhegam irukka illa kadhaila vara charatersa edhuvum kekkanuma ??thittunuma apdi edaavadhu irundhuchunaa commentla kelungappa .votes ovvoru episodekum koranjutte pogudhu.ipdiye pochunaa aprom 3 episodeoda mudikkanunu nenaikkuren adhayum eludha mood varaama poidum.edhaavadhu regret irundhuchunaalo pudikkalenaalum sollunga sonna dhaan enakkum enga thappu panrennu puriyum.i am new to writing.so edhunaalum indha episodela comment pannunga


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top