paguthi 10

ஹாய் friends என் கதைக்கு பல reads இருந்தும் ஓட்ஸ் இல்லையே ஒருவேளை மொக்கையா போகுதோன்னு நெனச்சு discontinue பண்ணலாம்னு தான் இருந்தேன் .ஆனா நீங்க போன updatela குடுத்த மோட்டிவேஷன்ல தான் நா எழுதுறேன்.என்ன எழுத தூண்டுன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.அப்பறோம் என் செல்லக்குட்டி நிவேதிதா அக்காக்கு இந்த chapterah டெடிகேட் பண்ணுறேன்.

recap:-

பிரியா மேல் கட்டிடத்தின் ஒரு பகுதி விழ இருந்தது அதிலிருந்து அர்ஜுன் ப்ரியாவை காப்பாற்றினான்.பின் அந்த மண்டபத்தின் சுவற்றில் ஒரு துவாரம் உருவானது.அதனுள் இருவரும் torchodu நுழைகின்றனர்.

அந்த துவாரம் முதலில் மிகவும் குறுகலாக இருந்தது பின் அது விசாலமாக இருந்தது .

அங்குள்ள சுவர்களை பார்க்கையில் இன்றும் புதிது போல் வர்ணங்கள் மங்காமல் இருந்தது பின் அங்குள்ள ஒரு பலகையில் tochai அடிக்க எத்தனிக்க இருவர் கையிலுமிருந்த டார்ச் செயலிழந்து அந்த பகுதியை மிகவும் இருள் அடைந்ததாக மாற்றியது.

அதில் பயந்த பிரியா அர்ஜுனின் கையை கெட்டியாக பிடிக்க தன்னவளின் ஸ்பரிசத்தில் அர்ஜுன் சற்று தன்னிலை மறந்தான் (இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு)பின் தன்னை சமன்படுத்திக்கொண்டவன் .ப்ரியாவின் கையை நான் இருக்கும் வரை நீ பயம் கொள்ள வேண்டாம் என்ற வகையில் அழுத்தினான் .

பின் சற்று யோசித்தவன் தனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்தான் பின் அங்கு சுவர்களிகள் இருந்த பழமையான ஓர் தீப்பந்தத்தை பற்ற வைத்தான் .தனது அறிவுக்கூர்மையால் பிரியா சந்தோஷ படுவாள் என்று எண்ணியவனுக்கு அவளது முறைப்பே பரிசாக கிடைத்தது.

அர்ஜுன் "ஏன் பிரியா இப்டி மொறைக்குற "என்று கேட்க 

அவளோ "உனக்கு cigarette புடிக்குற பழக்கம் இருக்கா?"என்றால்(மாட்டிக்கிண்டாண்டா.செத்தான் சேகர்.சாரி அர்ஜுன்)

பிறகு அர்ஜுன்"இல்லை பிரியா அது எப்போவும் பிடிக்க மாட்டேன் எப்போவாவது டென்ஷனாக இருந்தா பிடிப்பேன் "என்றான் 

அதற்க்கு அவள்"உன்னையும் கொன்னுட்டு என்னையும் கொன்னுறாத "என்று கூறினால்.பாவம் அர்ஜுனிற்கு தான் அதன் அர்த்தம் விளங்கவில்லை.

பின் இருவரும் தங்கள் பார்வையை எதிரிருந்த பக்கம் திருப்ப அதைக் கண்டவர்கள் அங்கேயே உறைந்து சிலை ஆயினர்.(அப்புடி என்னத்த பாத்துருப்பானுங்க ?சரி நீங்க யோசிச்சுக்கிட்டே இருங்க நா அதுக்குள்ள என் செல்லக்குட்டி மித்ராவை பாத்துட்டு வந்துருறேன் )

கார்த்திக் கூறிய வார்த்தைகளே காதிற்குள் ரீங்காரமிட மித்ரா "நா என்ன செஞ்சாலும் அது உன்ன எப்போவும் கெட்ட விதத்துல பாதிக்காது கார்த்திக்."என்று நினைத்துக்கொண்டே கோவிலின் உள்ளே செல்கிறாள் .

 அங்கு உள்ள கிருஷ்ணரின் விகிரஹத்தை பார்த்தவள் அவர் முன் நின்று தனது கண்களை மூடி பிரார்த்தனை செய்கிறாள் .அவள் வேண்டுதலை அந்த கிருஷ்ணரையும் அவளையும் அன்றி ஒருவரும் அறியார்(கத சொல்ற எனக்கே தெரியலைங்க ).பின் அங்கு உள்ளே சென்று தன் ஆராய்ச்சியை துவங்க நினைக்க அந்த இடத்தின் ஓரத்திலிருந்து அவளுக்கு ஓர் விசித்திரமான சத்தம் கேட்டது சத்தம் வந்த இடத்தை நோக்கி அவள் செல்கிறாள் .

(ஓகே இப்போ நாம கார்திக்க்க கவனிப்போம்)

அவளை இறக்கிவிட்டு கார்திக்கிற்கோ மனது நிலை கொள்ளாமல் தவித்தது .சே தேவையில்லாம அவளை hurt பண்ணிட்டோமோ?அது ஏன் நான் அவ கிட்ட மட்டும் இவ்ளோ உரிமை எடுத்துக்குறேன் பாவம் அவ ரொம்ப hurt ஆயிருப்பா.இப்போ என்ன பண்றது.உள்ள போனா செருப்பால அடிப்பா.சரி வந்து பாத்துக்குவோம் அந்த மோஹினிப்பிசாச. என்று தனக்கு தானே நினைத்துக்கொண்டு அவ்வூரில் விசாரணை நடத்த சென்றான்.

அதில் அவனுக்கு கிடைத்ததோ தெரியாது என்கின்ற பதில் தான் .பின் அந்த ஊரை சுற்றியதில் அவனுக்கு கிடைத்த ஒரே விபரம் செல்லிகிராமத்தையும் இந்த ஊரையும் அந்த காட்டு வழி இணைக்கின்றது என்பதும் .அங்கு ஓடும் ஆற்றின் வழி நகரத்திற்கு செல்ல முடியும் என்பதும் தான் .ஆனால் அந்த ஆற்றின் வழி ஓடங்களோ படகுகளோ சென்றதை இதுவரை யாரும் கவனித்ததில்லை.

இதை அறிந்துகொண்ட கார்திக்கோ.நா பாட்டுக்கு சென்னைல நிம்மதியா இருந்தேன் என்ன இந்த கிராமத்துக்கு கூட்டிட்டு வந்து ,அந்த பிசாச(அழகான பிசாச )பாக்க வச்சு,இப்போ என்ன அரக்கிறுக்கனா மொட்டை வெயில்ல அலையை விட்டுட்டானுங்களே கடவுளே என்று நொந்து கொண்டான் பின் மித்ராவின் நினைவு வர ஜீப்பை கோவிலை நோக்கி செலுத்தினான்.

(சரி இப்போ அர்ஜுனையும் ப்ரியாவையும் பாப்போம் )

அங்கு இருந்ததை பார்த்து சிலையாகி இருந்த ப்ரியாவும் அர்ஜுனும் அந்த இடத்தை நோக்கி விரைந்தனர் .

அங்கு ஓர் ஆளுயர சித்திரம் மாட்டப்பட்டிருந்தது அதில் சூரியனின் தேஜஸுடன் கூடிய முகமும்,வீரம் பொருந்திய பார்வையும்,கம்பீரமான உடலமைப்புடன் கூடிய ஒரு அரசரின் சித்திரத்தைக் கண்டனர் .

அவரது முகம் ஏனோ அர்ஜுனிற்கும் ப்ரியாவிற்கும் மிகவும் பழக்க பட்டது போல் தோன்றியது.பின் அந்த சித்திரத்தை எடுத்த பிரியா அதை தன் கைகளால் வருட அவளது கண்கள் ஏனோ கண்ணீரை அருவி போல் கொட்டியது.பின் அந்த சித்திரத்தை அருகில் வைத்தவள் அந்த அறையின் மற்ற இடங்களை சோதனையிட அவளது கால் ஒரு பொருளில் தடுக்கி அவள் அர்ஜுனின் கையில் இருந்த தீப்பந்தத்தை தட்டி விட அது அந்த அறையின் அனைத்து இடத்திலும் தீயை பரவ விட்டது .

பின் அர்ஜுன் சிறிதும் தாமதிக்காமல் ப்ரியாவையும் சித்திரத்தையும் வெளிய இழுத்து வந்து விட்டான்.பிரியா இன்னும் அங்கு நடந்த எதையும் உணராமல் சிலையாக நின்றாள் .அர்ஜுனின் குலுக்களில் தான் அவள் சுய நினைவை பெற்றால் பின் இருவரும் அந்த மண்டபத்தை விட்டு வேகமாக வெளியேறி மாயாபுரியை நோக்கி பயணித்தனர்.

இங்கு மித்ரா அந்த சத்தம் வந்த இடத்தில் சென்று பார்க்க.அங்கோ ஒரு 10 வயது மதிக்க தக்க சிறுவன் பயத்தில் முனங்கிக்கொண்டிருந்தான்.

அவனிடம் சென்ற மித்ரா அவன் தோல் தொட அவனோ பயந்து"என்ன ஒன்னும் பன்னீராதீங்க "என்று பிதற்ற தொடங்கினான்.

பின் மித்ரா அவனை வெளியில் அழைத்து வந்து.அவனை சமாதனப் படுத்தி அவனுக்கு உணவளித்து பின் அவனிடம் "தம்பி உன் பேர் என்ன ??என் இங்க உக்காந்துருக்க??"என்று கேட்டால்.

 அதற்க்கு அவனோ தேம்பி தேம்பி அழ அவனை அணைத்துக்கொண்டவள்."என்னாச்சுப்பா ஏன் அழுகை அக்கா இருக்கேன்ல சொல்லு.என்று வினவ 

அவனோ "என் பேரு அவினாஷ் அக்கா .நா இங்க தான் என் அக்கா நிவேதா கூட வாழ்ந்துட்டு இருந்தேன்.எனக்கு அப்பா அம்மா கெடையாது எல்லாமே என் அக்கா தான்.ஒரு நாள் நாங்க தூங்கிட்டு இருந்தப்போ யாரோ வீட்டுக்குள்ள குதிக்குற மாதிரி இருந்துச்சு .ஒடனே அக்கா வெளிய போய் பாத்தா அப்பறோம் உள்ள வந்து என் கைய புடிச்சு இழுத்துட்டு வந்து இங்க விட்டுட்டு."அவி அக்கா உன்ன வந்து கூப்புடுற வரையும் நீ இந்த இடத்தை விட்டு வெளிய வந்துராதான்னு சொல்லிட்டு போய்ட்டா.3 நாளாச்சு இன்னும் அவளை காணோம் .அவ தான் எனக்கு எல்லாமே அவ எங்கன்னு தெரியல .

என்று அவன் மீண்டும் அழ .அவள் அவனை சமாதானப்படுத்த அப்பொழுது கார்திக்க்கின் குரல் கேட்டது "அவினாஷ் உங்க அக்காவை கண்டு பிடுச்சு தரது என்னோட பொறுப்பு" .என்று கூறினான்.

அவனின் குரலில் நிமிர்ந்த மித்ரா பின் சட்டென்று அவினாஷிடம் திரும்பி "அது வர நீ என்கூட இரு தம்பி"என்க அவனோ சற்று தயங்கினான் பின் மித்ரா"எனக்கும் யாரும் இல்லடா என் பிரியா மட்டும் தான் நீயும் என்கூட இருக்கியா??"என்க அவளது இக்கூற்றில் அவினாஷ் ஆவலுடன் வர சம்மதிக்க ஏனோ அவள் உதிர்த்த வார்த்தைகள் மனதில் கோபத்தையும் அதே சமயம் துக்கத்தையும் எழ வைத்தது. பின் மூவரும் மாயாபுரியை நோக்கி பயணமாயினர்.

அடுத்து என்ன நடக்கும்??அந்த சித்திரம் யாருடையது??

stay tuned to know.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top