41 மருந்தின் தாக்கம்

41 மருந்தின் தாக்கம்

இதற்கிடையில்...

*அஸ்வின் பில்டர்ஸ் அலுவலகம்*

கான்ஃபரன்ஸுக்காக தயாராகிக் கொண்டிருந்தான் அஸ்வின். அப்பொழுது அவனுக்கு சுபத்ராவிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுங்க, பாட்டி"

"நான் சத்சங்கத்திற்கு போறேன்"

"என்ன திடீர்னு...? நீங்க காலைல கூட எங்கிட்ட எதுவுமே சொல்லலயே?"

"தருண் தான் எனக்கு ஃபோன் பண்ணி சொன்னான். ஏர்போர்ட் பக்கத்துல பேனர் வச்சிருந்தாங்களாம்"

"ஓ..."

"நான் வர லேட்டாகும். நீ சீக்கிரம் வீட்டுக்கு போக முயற்சி பண்ணு"

"ட்ரை பண்றேன்"

"சரி, நான் ஃபோனை வைக்கிறேன்"

அழைப்பைத் துண்டித்துவிட்டு, அபிநயாவுக்கு ஃபோன் செய்தான் அஸ்வின். அவளுடைய ஃபோன், ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவே, முகத்தை சுளித்தான் அவன். அஸ்வின் இல்லத்தின் லேண்ட் லைன் நம்பருக்கு அவன் ஃபோன் செய்ய, அது அவுட் ஆஃப் ஆர்டராக இருந்தது. இனம் புரியாத பதட்டம் அவனைத் தொற்றிக் கொண்டது. காலம் தாழ்த்தாமல் ராமுவின் ஃபோனுக்கு அழைப்பு விடுத்தான். இரண்டாவது மணியிலேயே ராமு ஃபோனை எடுக்க, நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் அஸ்வின்.

"சொல்லுங்கண்ணா" என்றான் ராமு.

ஏதும் பேச ஆரம்பிக்கும் முன், வாகன இரைச்சலை கேட்டான் அஸ்வின்.

"எங்க இருக்க?"

"நான் அம்பத்தூர்க்கு போய்கிட்டு இருக்கேன்"

"அம்பத்தூர்கா...? எதுக்காக போற?"

"தருண் தம்பி, அவருடைய டேபை அவர் ஃபிரண்டுகிட்ட குடுக்க சொல்லி சொன்னாரு"

"அறிவிருக்கா உனக்கு? அபியை தனியா விட்டுட்டு எப்படி நீ வீட்டைவிட்டு கிளம்பின?"

"நீங்க ஆஃபீஸ்லயிருந்து கிளம்பிட்டீங்க, சீக்கிரம் வந்துடுவீங்கன்னு தருண் தம்பி தான் சொன்னாரு,"

அஸ்வினுக்கு தலையில் அலாரம் அடித்தது. அவனுக்கு எதுவும் சரியாக படவில்லை. தன் காரின் சாவியை எடுத்துக் கொண்டு, தன் அறையை விட்டு அவசரமாய் வெளியேறினான். அவன் தன் அறையின் கதவை திறந்த பொழுது, அங்கு மனோஜும் அருணும் கான்ஃபரன்சுக்கு தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.

"நாங்க ரெடி" என்றான் மனோஜ்.

"கான்பரன்ஸை போஸ்ட்போன் பண்ணு... இல்லன்னா கேன்சல் பண்ணு..." என்றான் அங்கிருந்து பார்க்கிங் லாட்டை நோக்கி ஓடியபடி.

"ஏதாவது பிரச்சனையா, ஆவின்?" என்றான் அவனை தொடர்ந்தபடி அருண்.

"எனக்கு இப்ப விளக்கமா சொல்ல நேரமில்ல. நான் அவசரமாக வீட்டுக்கு போயாகணும். அபி தனியா இருக்கா"

"அதனால என்ன?" என்றான் மனோஜ் குழப்பமாக.

"தருண் பாட்டியை சத்சங்கத்துக்கும், ராமுவை அம்பத்தூருக்கும் அனுப்பிருக்கான். அவன் ஏதோ பிளான் பண்றான்." கூறிய படி, தன் காரை நோக்கி ஓடினான் அஸ்வின். அருணும், மனோஜும் ஒருவரை ஒருவர் பொருள் நிறைந்த பார்வை பார்த்துவிட்டு, அஸ்வினின் பின்னால் ஓடினார்கள்.

அஸ்வின் இல்லம்

அபிநயாவை நெருங்கிய தருண்,

"அபிபிபி....." என்ற அஸ்வினின் குரலை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவன், வெறுப்புடன் தன் காலால் தரையை உதைத்தான்.

"இவன் எப்படி இங்க வந்து தொலைச்சான்...?"

அஸ்வினை தாக்க ஏதாவது கிடைக்குமா என்று இங்குமங்கும் தேடினான் தருண். மேலும் சில காலடி ஓசை கேட்க, தன் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு கேட்ட அவன், அருணின் குரலைக் கேட்டு, ஆத்திரமடைந்தான்.

"மனோஜ், நீ போய் கிச்சன்ல பாரு" என்றான் அருண்.

"என் உயிரை வாங்காவே இந்த மூணு பேரும் வரானுங்க" என்று சலித்துக் கொண்டான் தருண்.

வேறு எந்த வழியும் இல்லாததால், நீச்சல் குள பக்க கதவை திறந்து கொண்டு, அங்கிருந்து ஓடிச் சென்றான்.

அஸ்வினும், அருணும் பதட்டத்துடன் அறைக்குள் நுழைந்தார்கள். அபிநயா தன் தலையை அழுத்திப் பிடித்தபடி, கட்டிலின் மேல் அமர்ந்திருப்பதை கண்டு, நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் அபிநயா சொல்ல முடியாத அவஸ்தையில் இருப்பதை உணர்ந்தார்கள்.

"அவளுக்கு அந்த மருந்தை கொடுத்திருக்கான்னு நினைக்கிறேன்" என்று பல்லைக் கடித்தபடி கூறினான் அஸ்வின்.

ஆமாம் என்று கோபமாய் தலையசைத்தான் அருண்.

"ஆவின், இந்த மருந்தோட விளைவு என்னனு உனக்கு நல்லாவே தெரியும்"

அவனுக்கு பதிலளிக்காமல், அபிநயாவை பார்த்துக்கொண்டு கோபமாய் நின்றான் அஸ்வின்.

"அண்ணியை தனியா விடாம நீ அவங்க கூடவே இரு. நானும் மனோஜும் அவனைத் தேடிப் போறோம்" என்றான் அருண்.

சரி என்று தலையசைத்தான் அஸ்வின். கதவை சாத்தி விட்டு, அங்கிருந்து அருண் வெளியே ஓடிச் சென்றான். அறை முழுக்க தன் கண்களால் சலித்தான் அஸ்வின். அபிநயா அணிந்திருந்த துப்பட்டா தரையில் கிடப்பதைக் கண்டான். திரைச்சீலைகளுக்கு பின்னாலும், அலமாரியிலும், குளியலறையிலும் தேடிப் பார்த்து, தருண் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான்.

இதற்கிடையில்...

பின்பக்க கதவின் வழியாக வெளியேறி சென்று, தருண் காரில் ஏறி அமர்வதை, பலகணியில் நின்றபடி கண்டான் மனோஜ். அவனுக்கு ஆத்திரம் கொப்பளித்தது. அதே நேரம், அங்கு வந்த அருணும் அவனை பார்த்துவிட்டான்.

"அவனை என் கூட பிறந்தவன்னு சொல்லிக்கவே எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு. அவன் இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவான்னு நான் கனவிலும் நினைக்கல்ல. அவங்க எங்க அண்ணிங்குறதை அவன் எப்படி மறந்தான்?" என்றான் வேதனை ததும்ப அருண்.

"என்ன செஞ்சான்?"

"அண்ணிக்கு அந்த மருந்தை கொடுத்திருக்கான்"

"அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?" என்றான் மனோஜ் பலகனி சுவரின் கைப்பிடியை ஓங்கி குத்திய படி.

"அவன் என் கையில கிடைச்சா நான் அவனை கொன்னுடுவேன்" சீறினான் அருண்.

காலம் தாழ்த்தாமல் பரபரவென சிலருக்கு ஃபோன் செய்தான் மனோஜ். போலீஸ் கமிஷனர்... அவனுடைய ஆள் சக்தி... மேலும் அவர்களுடைய டிடெக்டிவ் ஏஜென்ட் ரோஷன்... மூன்று பேருக்கும், மூன்று விதத்தில் விஷயத்தைக் கூறி, எப்படியும் தருண் தப்பி விடக்கூடாது என்று, எல்லா பக்கத்திலிருந்தும் அவனை இறுக்கினான் மனோஜ்.

"வா, நாம போய் அடுத்து என்ன செய்யணும்னு அஸ்வினை கேட்கலாம்" என்றான் மனோஜ்.

"நீ தான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் ஏற்கனவே செஞ்சி முடிச்சிட்டியே" என்றான் அருண்.

"இது வழக்கமா செய்ய வேண்டியது... இதை பத்தி அஸ்வின்கிட்ட சொல்லியாகணும்"

அவனை தடுத்து நிறுத்தினான் அருண்.

"சொல்லலாம். ஆனா, இப்போ இல்ல..."

"ஆனா, ஏன்?"

"அண்ணி அந்த மருந்தை சாப்பிட்டுடாங்க"

"ஆமாம்... அதனால?"

"அந்த மருந்தைப் பத்தி கண்ணன் என்ன சொன்னான்னு நீ மறந்துட்டியா?"

புருவத்தை சுருக்கினான் மனோஜ்.

"அதுக்கு எந்த மாற்று மருந்தும் கிடையாது... அண்ணியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதால எந்த பிரயோஜனமும் இல்ல. ஏன்னா, அவங்க ஏற்கனவே அவங்க நினைவை இழந்துட்டாங்க. அந்த ட்ரக் எஃபெக்ட்ல, அண்ணி என்ன செய்வாங்கன்னு நமக்கு தெரியாது. ஜனங்களுக்கு முன்னாடி அவங்க மோசமா நடந்துகிட்டா என்ன செய்யறது?" என்ற கேள்வியை முன் வைத்தான் அருண்.

"நீ சொல்றதும் சரி தான். இப்ப நம்ம என்ன செய்யறது?"

"அண்ணியை ஆவின் பாத்துக்கட்டும். அவனால மட்டும் தான் அவங்களை ஹாண்டில் பண்ண முடியும்." பொருள் பொதிந்த பார்வை விசினான் அருண்.

அதை கேட்டவுடன் மனோஜின் முகம் மலர்ந்தது.

"அப்படின்னா....?" என்றான் ஆர்வமாக...

"அப்படியே தான்..." என்றான் அருண்.

"நம்ம எங்க போனோம்னு அஸ்வின் கேட்டா என்ன சொல்றது?"

"நம்ம தருணை தேடிப் போயிருக்கோம்னு அவன் நினைச்சிக்கட்டும்"

"அவன் வெளிய வந்தா, நாம மாட்டிக்குவோமே....?"

"இந்த நிலையில அண்ணிய தனியா விட்டுட்டு அவன் வர மாட்டான்..."

"செம்ம..." என்று பூரித்தான் மனோஜ்.

காரில் அமர்ந்து கொண்டு, மனோஜையும் அமருமாறு சைகை செய்தான் அருண். சிரித்தபடி, காரில் ஏறி அமர்ந்துகொண்டான் மனோஜ். அவனுக்கு பிடித்த இம்போர்ட்டட் சிப்ஸை, டேஷ் போர்டிலிருந்து எடுத்து, அருணுக்கும் ஒன்று கொடுத்தான் மனோஜ்.

இதற்கிடையில்...

தருணை அரை முழுவதும் தேடிக்கொண்டிருந்த அஸ்வின், அபிநயாவின் பக்கம் முகத்தை திருப்பினான். அவள் தன் பற்களைக் கடித்தபடி, முகத்தை கைகளால் அழுந்த தேய்த்து, முனகிக் கொண்டிருந்தாள். அஸ்வின் அவள் தோளை பற்றி எழுப்பி நிற்க வைத்தான்.

"அபி, உனக்கு என்ன செய்யுது?"

தன் கண்களை, அழுத்தமாய் சிமிட்டி அவனை பார்த்தாள்.

"நான் அஸ்வின்..."

"எனக்கு என்னமோ செய்யுது... என்னால தாங்க முடியல... என் உடம்பெல்லாம் சுடுது... என்னோட நரம்பெல்லாம் வெடிச்சிடும் போலிருக்கு..."

அவள் மிகப்பெரிய சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனக்கு புரியாமல் இல்லை. அடுத்த நொடி, அவன் எதிர்பாராத வண்ணம், அவனை இறுக்கமாய் கட்டியணைத்தாள் அபிநயா. அவளுடைய சக்தியை அந்த அனைப்பின் மூலம் உணர்ந்தான் அஸ்வின். அந்த இறுக்கமான அணைப்பிலிருந்து வெளிவர மிக பெரிய பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது அவனுக்கு. அவள் பிடியிலிருந்து வெளிவர முயற்சித்த போது, அவள் பிடி மேலும் இறுகியது. தன் முகத்தால் அவன் நெஞ்சை வருடி, அவனை திணற செய்தாள் அபிநயா.

"அ... அபி..." என்று பேசவே தடுமாறினான் அஸ்வின்.

"அஸ்வின்... ப்ளீஸ் என்னை கட்டிபிடிங்க..."

"அபி, சொல்றதை கேளு"

சொல்வதைக் கேட்பதாவது....? எதையும் கேட்கும் நிலைமையில் அவள் இல்லை. தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, அவள் பிடியிலிருந்து வெளியே வந்தான் அஸ்வின். அவள் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டான் தான், ஆனால், அபிநயா அவனை விடாமல், அவன் சட்டையை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். மறுபடியும் அவள் அவனை அணைத்துக் கொள்ளாமல், அவள் கரங்களை, தன் பிடிக்குள் கொண்டு வந்தான் அஸ்வின்.

"அபி, நம்ம ஹாஸ்பிடல் போகலாம். எல்லாம் சரியாயிடும்." என்று கூறிவிட்டு, தன் ஃபோனை தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தான். அவன் கையிலிருந்து ஃபோனை பிடுங்கி கட்டிலின் மீது விட்டெறிந்துவிட்டு, ஆத்திரமாய் அவனை பர்த்தாள் அபிநயா.

"என்னால இதை தாங்க முடியலன்னு சொன்னா புரியாதா...? நீங்க எனக்கு உதவ போறீங்களா இல்லயா? பாருங்க என் உடம்பு எப்படி எரியுதுன்னு..."

அவன் கைகளை எடுத்து தன் கண்ணத்தில் வைத்து கொண்டாள். ஆம்... அவள் உடல் தகிதித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கவே பாவமாக இருந்தது அஸ்வினுக்கு. என்ன கொடுமையை இந்தப் பெண் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று வருந்தினான்.

அவள் அழகு முகத்தை தன் கையில் ஏந்தியபடி,

"நான் இருக்கேன்ல... நீ பயப்படாதே" அவளை சமாதானப்படுத்த முயன்ற,
அவன் பேச்சுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல், தன் கண்ணத்தை பற்றியிருந்த அவனது கரங்களை கீழ் நோக்கி இழுத்து, அவள் உடலை தொட வைக்க முயன்றாள். தொடுவதற்கு முன்பே, நெருப்பை தொட்டது போல், தன் கரங்களை பின்னால் இழுத்தான் அஸ்வின். அது அவள் ஆத்திரத்தை பன்மடங்காக்கியது.

"நான் படுற அவஸ்தை உங்களுக்கு புரியலயா...? என்னால இத தாங்க முடியல..." என்று காட்டு கத்து கத்தியபடி, அவன் சட்டையை பிடித்து இழுக்க, அவன் சட்டையில் இருந்த அத்தனை பொத்தான்களும் அறை முழுக்க சிதறித் தெறித்தது... அவன் சட்டையும் கிழிந்து போனது...

"என்னை கொன்னுடுங்க..." என்று அவன் கையை பற்றி தன் கழுத்தில் வைத்து நெறிக்க சொல்லி அழுதாள்.

அஸ்வின் அதை செய்யாமல் போகவே, அவள் கண்கள் இங்கும் அங்கும் அலை பாய்ந்தன. தருண் வீசி எறிந்த கத்தி, அவள் கண்களில் பட்டது. அவள் அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க முயல, அவள் நோக்கத்தை புரிந்து கொண்டவனாய் அந்த கத்தியை கட்டிலின் அடியில் எட்டி உதைத்தான் அஸ்வின்.

தொடரும்...



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top