4.செங்கிஸ் கான்
4. Sengish khan
அந்த கடற்கரைச் சாலையின் அந்தி மாலையில் மஞ்சள் வெயிலோடு போட்டியிட்டு, அதன் தங்க நிறத்தை தோற்கடித்து வென்றுதான் போனாள் மிருணாலினி. மாற்றுப்பாதையில் வந்ததால் வழக்கத்தை விட கொஞ்சம் தாமதம் ஆனதாலோ என்னவோ ஆதவன் முகத்தைத் திருப்பி கொண்டு விரயலானான். தன் ஸ்கூட்டியை எப்போதும் போல தள்ளியே நிறுத்தி விட்டு, அங்கேயே காலணிகளையும் விடுத்து, தன் மேகலை பாதங்களை கடல் மணலில் தடம் பதித்தாள் மிருணாலினி. அந்த இளம் சூடான மண்ணில் நடந்து, ஆதவனை ரசிப்பதில் அவளுக்கு என்ன அலாதியோ. இன்று பாதம் பட்டதும் என்ன அதிசயமோ சந்திரன் முன்னரே வர தொடங்கி விட்டான். இன்னும் இருட்ட நேரம் இருக்கும் போது, இப்படி அவசரமாய் உதிக்க யார் அனுப்பிய தூதாக இருக்குமோ கதிரவனும் கோவித்து தான் கொண்டான்.
எப்போதும் ஆதவனை மட்டுமே ரசிப்பவளுக்கு இன்றோ நிலவின் மீது தன் பார்வை ஈர்த்ததும் வினோதித்தாள். ஈர்க்கத்தானே செய்யும் நிலவில் தெரிவது தன் மகி வர்மனின் முகமாகியதே.
IPS முடித்திருந்த மகிக்கு பணி அமர்ந்த ஆறாம் மாதம் என்பதால், தன்னுடைய காவல் எழுத்தர் பயிற்சியை செவ்வனே தாண்டியவன், இப்போது தற்காலிக சப் இன்ஸ்பெக்டர் ஆக பயிற்சியில் இருந்தான். பயிற்சி காலத்தை வீணடிப்பவர் மத்தியில், சில நாட்களிலேயே மகி மட்டும் மொத்த ஸ்டேஷன் நிர்வாகத்தையும் தன் கண்ட்ரோலில் கொண்டு வந்து இருந்தான். தான் IAS தேர்ச்சி பெற்று, விருப்பத்தின் பேரில் IPS எடுத்து வந்த அவனுக்கு சப் இன்ஸ்பெக்டர் வேலைகளை பார்க்கும் அவசியம் அவ்வளவாக இல்லையெனினும், ரோட் ட்ராஃபிக்கில் இருந்து மாலை கடற்கரை ரோந்து வரை அவனே முன்னின்று செய்தான்.
அதனால தான் மொத்த நகருக்கும் சேர வேண்டிய போதை பொருள்கள் கூட இன்னும் கடத்தப் படாலும், சிறு குழந்தைகளின் கடத்தல்களும் என அனைத்து கருப்பு பரிமாற்றங்களை நடக்க வழியில்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன. அவன் வந்த நாளிலிருந்து. அந்த கடற்கரை சாலையை தாண்டினால் மட்டும் தான் நகரின் எல்லா மூலைக்கும் பொருள்களையும் கொண்டு சேர்க்க முடியும். மகேந்திர வர்மனை நேருக்கு நேராய் சந்தித்து தான்டி செல்லும் தைரியம் யாருக்கும் வரவில்லை.
மும்முரமாக சோதனையில் இருந்த மகி கொஞ்சம் டென்ஷன் ஆகவே தான் இருந்தான். திடீரென்று வந்த அந்த கடல் காற்று அவனை வருடி சென்றது. அதில் ஈர்க்கப்பட்டவன் இந்த பொழுதில், இத்தனை தூரத்தில் தான் உணர்ந்த அந்த குளுமையில் குழம்பியவன் கடற்கரை நோக்கியே சென்று கொண்டிருந்தான். கடற்கரையை அடைந்தவனின் கண்கள் தன் மஞ்சள் தேவதையை தேடி நிலை நிறுத்தியது.
"நிலாச்சோறு உண்டு களிக்கும் பிள்ளையின் ஆனந்தம்.,
அறியாமலே வளர்ந்து தேயும் பௌர்ணமி நீ ! . . . " மிருணாலினி!
அவள் கடந்து செல்லும் போதே கவனித்திருந்த மகி, இத்தனை நேரம் போராடியும் தவிர்க்க முடியாதவனாய் அவளின் முடிக் கற்றைகள் முகத்தில் படும் நெருக்கத்தில் வந்து நின்றான்.
இதற்காகவே காத்திருந்த அந்த தலைமை காவலன், ஏதோ செய்தியை யாருக்கோ தன் போனில் இருந்து அனுப்பினான். மிருணாளினியின் தோளை தொட மகி கை நீட்டிய நேரம் மீண்டும் அதே குளிர்ந்த காற்று இம்முறை பின்னாலிருந்து அவனை வருடிச் சென்றது.
Pratilipi id: Sengish Khan S
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top