21.கலைவாணி
21. கலைவாணி
பல மின் கம்பங்கள் வரிசைகட்டி நின்றாலும், சில மின் விளக்குகள் ஏனோ ஒளிர முயற்சித்துத் தோற்றுக் கொண்டு தான் இருந்தது. அந்த ஆள் அரவமில்லா நீண்ட சாலையில், காற்றின் இடைவெளியை காரிருள் அடைத்து மிருவை மிரட்டிக் கொண்டிருந்தது.
சிறிதாய் திசை மாறி விட்டாலும் பல வருடங்களாக பழகிய தெருக்கள் கூட இந்த அடர் இருளில் அபாயம் சூழ்ந்த
வேற்றுக்கிரகங்கள் போலாகி விடுகிறது.
இந்த கயவர்கள் துரத்தாமலிருந்தால் இந்நேரம், மகியோடு அலைபேசியில்
இனிதாகப் பேசி கனவுகளில் இரவுகளை கடந்திருப்பாள்.
என்ன செய்ய
விடியல்கள் மட்டுமல்ல,
நாட்களின் முடிவுகளும்
கூட அனைவருக்கும்
இயல்பாய் இருப்பதில்லை.
இரவின் படுக்கையில்
இலகுவாய் புரண்டு
அலைபேசியில்
தொலை பேசுகையில்..
இழையோடும் இசையோடு
அசைந்தாடும் மனதோடும்
நிலைகொள்கையில்..
மின் விசிறியின் சூழல்காற்று
தலைவருட இமைதொடரும்
துயில் படர கனவுகளின்
இடர் இல்லா இருவிழியின்
இரவுகள் இன்பம் தான்...
ஆனால்
இரவுகள் என்றும்
ஏற்றத்தாழ்வுடனே
இயங்குகிறது ..
இங்கே நாம்
இரவு உணவு
பிடிக்காதபோதும்
படிசோற்றை
உண்டுவிட்டு
செரிக்காமல்
நடைகொள்கையில்
எங்கோ , பலருக்கு
பிடிசோறேனும்
கிடைக்காமல்
வயிறு குடைந்து
மனம் உடைந்து
மயக்கத்தில் கிடந்தே
கழியும் இரவுகள்...
இங்கே நாம்
இசை கேட்டு அமைதியாய்
துயில் கொள்ளும்நொடியில்
எங்கோ, ஒருவனின்
இச்சைக்காய்
கொன்று புதைபடும்
இளம் தளர்களின் இரவுகள்...
காக்கி உடை கொண்ட
காவலனின் வாகனத்தின்
ஓசை கூட மன்றாடினால்
என்றாவது உதவிக்கு
வந்துவிடும் என்றாலும்...
ஊர் எல்லை ஐய்யனாரும்
மலை உச்சி ஐப்பனும்
வீதி கொண்ட வினாயகரும்
பாவம் , இரவில் நன்றாக அயர்ந்து
உறங்கி விடுகிறார்கள் போல..
ஏனோ இரவின் கதறல்கள்
இவர்களுக்கு கேட்பதே இல்லை,
இரவுகள் மட்டுமல்ல..
பகல்களும் இங்கே
பயங்கரங்களின் பிடியில்தான்
இயங்குகின்றது.
மரம் தந்த மறைவில் நின்று மகிக்கு அழைக்க யோசித்த நேரம், மிருவின் இதய அதிர்வுகளும், நாடி நரம்புகளில் இடையே ஓடும் குருதியின் சலசலப்பும் எந்தவித ஸ்டெதஸ்கோப்பின் உதவியுமின்றி மிகத்துல்லியமாய் அவளுக்கே கேட்டது.
பதறித்துடித்த இதயத்தை கட்டுப்படுத்திய மூளை சிந்தனையை சிதிறவிடமால் செயல்படத் தொடங்கிய நேரம் மகியின் அழைப்பில் அழைபேசி ஒலிக்க.. ஒலித்த நொடிலேயே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாலும், அழைப்பின் ஒலி குரு ஆட்களின் காதில் விழாமல் இருந்திருக்காது என நினைத்தாள். என்றாலும் மகியிடம் கூறிவிட்டதே அவளுக்கு பாதி அமைதியை தந்ததாய் உணர்ந்தாள்.
ஒரு கோழை போல் இந்தக் கயவர்களுக்கு பயந்து ஒடி ஒளிவதா.. தீமைகள் துரத்த நன்மை ஓடுவதா.. என அவள் மனம் தவிக்கவே செய்தது.
என்னதான் தற்காப்பு கலை தெரிந்து வைத்திருந்தாலும், ஒரே ஆளாய் நால்வரிடம் மன்றாடுவது முட்டாள் தனம் என நினைத்தாள்.
எதிர்பாரா நேரத்தில் தன்னை மடக்க நினைத்தவர்களிடம் ஒடித் தப்பிப்தே புத்திசாலித்தனமாகப்பட்டது.
அவளுக்கு கையில் ஒன்றுமில்லாமல் நிராயுதபாணியான இருக்கும் போது ஆயுதங்களையும் மயக்கவஸ்துவையும் தன்னோடே வைத்திருக்கும் அந்த நால்வரிடமும் ஒரு நொடி சிக்கி இருந்தாலும் ஆபத்து தான் என எண்ணினாள்.
துரத்தி வந்த குருவின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் ஓடிவந்த போதிலும் அலைபேசியின் ஒலியை கேட்கத் தவறவில்லை. ஒலி வந்த திசையில் விழியைச் சுழலவிட அவன் கண்களுக்கு எந்த அரவமும் தெரியவில்லை என்றாலும், ஒடிவந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது தெளிவாக கேட்டது.
மகியோ அலைபேசியின் லொக்கேசன் காட்டிய வழியில் விரைந்தாலும், அவனின் ஒவ்வொரு நொடியிலும் மிருவை அவர்கள் எதுவும் செய்து விடக்கூடாதே என்ற பதற்றம் பற்றிக் கொள்ளவே செய்தது.
அவனது காதலே அவனைக் கலவரப்படுத்தி அவன் துணிச்சலை அசைத்துப் பார்த்தது.
மிருவிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே விரைந்து கொண்டிருந்தான்.
செழியன் மகியைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். இருவரின் வண்டிகளின் மின்னொளிகளே சாலையின் இருட்டை இரு கூறுகளாகப்பிரித்துக் கொண்டிருந்தது.
******
பிரதிலிபி ஐடி: vanika
******
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top