2. ஆஷ்மி
2. Aashmi
அழகான செந்நிற பந்து போல மெல்ல மெல்ல தன்னை நீருக்கடியில் மறைத்துக் கொண்டிருந்த அந்த செந்நிற சூரியனை ரசித்துக்கொண்டிருந்த மிருணாளினி தன்னருகில் கேட்டே கோபமான குரலில் திரும்பி பார்த்தாள்.
அங்கே நண்பகல் சூரியன் எப்படி அனைவரையும் சுட்டெரிப்பானோ அதுபோலவே விளையாடிக்கொண்டிருந்த தன்னுடைய குழந்தையை கவனிக்காமல் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த பெற்றோரை சுட்டெரித்து கொண்டிருந்தானவன். அவளுடைய குரல் பெரிதாக ஒலிக்கவில்லை என்றாலும் அதில் இருத்த அழுத்தம், அவனுடைய தோரணை அனைத்துமே அவன் ஒரு போலிஸ் அதிகாரி என்று அனைவருக்கும் காட்டியது. அதனால் அங்கே என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் மிருணாளினி. காரணமே இல்லாமல் அவன் முகம் அவள் மனதில் பதிந்து போனதையும் அவள் அப்போது அறியவில்லை.
"உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? இப்படி தான் கூட இருந்த குழந்தையைக் கூட மறந்து பேசிகிட்டே இருப்பீங்களா? கொஞ்சம் தாமதமாகி இருந்தாக்கூட குழந்தை கடலில் விழுந்து இருக்கும். எப்பவுமே சுற்றுபுறத்தை கவனித்துக்கொண்டே பேசுங்க, எல்லாம் நடந்து முடிந்த பிறகு உட்கார்ந்து அழுது எந்தவித பிரயோஜனமும் கிடையாது" என்று கூறி அவன் அவன் கைகளுக்குள் இன்னும் பயந்து நடுங்கிக் கொண்டு இருந்த அந்த அழகான பெண் குழந்தையை அவர்களிடம் கொடுத்தான், ஐபிஎஸ் அதிகாரியான மகேந்திரவர்மன்.
அவனுடைய அழுத்தமான பேச்சினால் அந்த குழந்தையின் பெற்றோர் பயந்து சம்மதமாக தலையசைத்தனர். சுற்றி நின்று கொண்டிருந்த ஒரு சிலர் இங்கு நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இளம் வயது பெண்கள் அவனை ரசித்துக் கொண்டு நின்றிருந்தனர். அதை பார்த்து இன்னும் எரிச்சல் அடைந்தவன் அவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து நகர முயன்றான். ஆனால் ஒரு இனிமையான குரல் அவனை நகரவிடாமல் கட்டிப்போட்டது.
இதுவரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டு இருந்த மிருணாளினி பெற்றோர் முகத்திலிருந்த பயத்தையும் மகேந்திரன் முகத்திலிருந்த கோபத்தையும் பார்த்து பெரிதாக பயப்படவும் இல்லை, பதட்டமும் இல்லை .ஆனால் அந்த சின்னஞ்சிறு பிஞ்சு பயந்து இருப்பதை பார்க்க முடியாதவள், எழுந்து அந்த பெண் குழந்தை அருகில் அதன் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்தாள்.
"பாப்பா எப்பவும் பிரேவ் கேள் தானே! இப்ப எதுக்கு பயந்து போய் இருக்கீங்க? பாருங்க உங்களை பார்த்து அந்த அலையே பயந்து போச்சு. அதனால தான் உங்களை தொட கூட வரல. ஆனா எப்பவுமே அது இதே பயத்தோட இருக்கும்ன்னு சொல்ல முடியாது. அதனால இனி கொஞ்சம் கவனமா விளையாடனும் சரியா?" என்று கூறி தன் கைப்பையில் இருந்த தேன்மிட்டாயை அந்த குழந்தையின் வாயில் வைத்தாள். அதுவும் பயம் மறந்து தேன்மிட்டாயை சுவைத்துக்கொண்டே மெலிதாக புன்னகை செய்தது.
அதன்பிறகு அனைவரும் அவரவர் இருப்பிடம் கிளம்பினார்கள். ஆனால் பெண்கள் என்றாலே ஒருவித வெறுப்பு தோன்றி இருந்த மகேந்திரனுக்கு சாதாரண உடையில் குழந்தையை சமாதானம் செய்த மிருணாளினி தேவதையாகவே மனதில் பதிந்து போனாள்.
இதோ இங்கதான் அவர்கள் அறியாமலேயே அவர்கள் இருவருக்கும் ஏற்படப்போகும் பந்த்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது.
Wattpad id : Aashmi S
Pratilipi id : Aashmi S
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top