83 நித்திலாவுக்கு சிகிச்சை

83 நித்திலாவுக்கு சிகிச்சை

சித்திரவேலின் மீது இனியவன் கடும் கோபத்தில் இருந்தபோதிலும், அவனைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது அவனுக்கு. தன் மனைவியுடன் எந்நேரமும் இருக்க வேண்டும் என்று விரும்பிய அந்த மனிதன், இன்று கொலைகாரன் என்ற பெயருடன் தனிமரமாய் நிற்கிறான். தன் மனைவியின் முழு நேரமும் தனக்கு வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தான் அவன் இனியவனை பைத்தியம் ஆக்கி வைத்திருந்தான். ஆனால் காலம் மிக புத்திசாலித்தனமான விளையாட்டை விளையாடி, அவன் பக்கமே அதை திருப்பி விட்டு விட்டது. தன் சக்தியை அது காட்டிவிட்டது. அவன் இனியவனுக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தானோ, அது அனைத்தும் இப்பொழுது அவனுக்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நித்திலாவிடமிருந்து விலகி இருப்பதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. தனக்கென்று யாருமே இல்லாத அனாதையான அவன், தனக்கென்று ஒரு குழந்தை பிறந்து தன் குடும்பம் முழுமை அடைய வேண்டும் என்று ஆவலாய் காத்திருந்தான். அவனைப் பொறுத்தவரை அது தான் அவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம். ஆனால் அவன் மீது உண்மையான அன்பை வைத்திருந்த அவனது மனைவி, அவன் செய்த தவறுகளின் காரணமாய் அப்படிப்பட்ட ஒரு கௌரவத்தை வழங்க தயாராக இல்லை. அவன் முகத்தை பார்க்க கூட அவள் விரும்பவில்லை. மேலும் அவள் அவனை வெறுக்க துவங்கினாள்.

தன்னை நிலைப்படுத்திக் கொண்ட சித்திரவேல், அந்த அறைக்கு மீண்டும் வந்து, நித்திலாவை ஆழ்வி சமாதானப்படுத்திக் கொண்டிருப்பதை கண்டான். ஆழ்வியின் அணைப்பில் இருந்த அவள், அமைதியாய் காணப்பட்டாள். அதை கண்ட சித்திரவேலின் மனம் வேதனை அடைந்தது. தன் மனைவி எப்பொழுதும் தன் அணைப்பில் இருக்க வேண்டும் என்பது தான் அவன் விரும்பியது. ஆனால் இன்று, அவளது மன நிம்மதிக்காக வேறு யாரோ ஒருவரின் அணைப்பில்
அவள் இருக்கிறாள்.

தன் கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான் சித்திரவேல்.

"நான் சித்திரவேல் பேசுறேன். இனியவனுக்கு அந்த மோசமான மருந்தை கொடுத்தது நான் தான். நான் போலீஸ்ல சரணடைய விரும்புகிறேன். நான் இப்போ ஹெல்ப் ஹாஸ்பிடல் இருக்கேன். நீங்க இங்க வந்தா என்னை அரெஸ்ட் பண்ணலாம்" என்று அழைப்பை துண்டித்தான் சித்திரவேல்.

இனியவனிடம் வந்த அவன்,

"என்னை மன்னிச்சிடுங்க. நான் செஞ்ச தப்பையெல்லாம், சாரின்னு சொல்லி அழிச்சிட முடியாது. தயவு செஞ்சு நித்திலாவை
பார்த்துக்கோங்க"

ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன்.

"நான் சொல்லலனாலும் நீங்க அவளை பார்த்துக்குவீங்கன்னு எனக்கு தெரியும். ஏன்னா, நீங்க என்னை விட அவ மேல அதிகமா அன்பு வச்சிருக்கீங்க."

ஆழ்வியின் தோளில் சாய்ந்த படி அமர்ந்திருந்த நித்திலாவை பார்த்த அவன்,

"நித்திலாவுக்கு குணமாயிட்டா தயவுசெஞ்சு எனக்கு சொல்லுங்க. நான் கொஞ்சமாவது நிம்மதியா இருப்பேன். எனக்கு வேண்டியதெல்லாம் அது தான்." என்று அவன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, இனியவன் கேட்ட கேள்வி அவனை நிறுத்தியது

"உங்க குழந்தையை பத்தி தெரிஞ்சுக்க விருப்பம் இல்லயா?"

பின்னால் திரும்பாமல் அப்படியே நின்ற சித்திரவேல்,

"நீங்க என் குழந்தையை பாத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியும்." என்று கூறிவிட்டு ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தான்.

பிறகு அங்கிருந்து வெளியே நடந்தான். அதே நேரம் அங்கு வந்த காவலர்கள், அவனை கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

அவனைப் பார்த்தபடி நின்றான் இனியவன். இந்த ஒரே ஒரு மனிதனால் அவர்கள் குடும்பத்தில் தான் எவ்வளவு பிரச்சனைகள்! ஒருவேளை, சித்திரவேல் அவனது கூரிய அறிவை, தன் மனைவியை கவர்வதற்கு நல்ல விதத்தில் உபயோகப்படுத்தி இருந்தால் அவர்களது வாழ்க்கை எவ்வளவு இனிமையாய் இருந்திருக்கும்!

இனியவன் இல்லம்

நித்திலாவை வீட்டிற்கு அழைத்து வந்தான் இனியவன். அவளை தனியே விட்டுவிட அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த யாரும் தயாராக இல்லை. அவள் உடனேயே அமர்ந்திருந்தார்கள், நித்திலா அமைதியாக இருந்த போதிலும்! ஆனால் ஆழ்வி பதற்றம் இல்லாமல் நிம்மதியாய் இருந்தது இனியவனுக்கு ஆச்சரியத்தை தந்தது.

அவன் தன் அறைக்குச் சென்றபோது, ஆழ்வி அவனை பெண் தொடர்ந்தாள். 

"என்னங்க, நம்ம அக்காவை ரமநாதபுரத்திற்கு கூட்டிக்கிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணணும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"நானும் அதைப்பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன். ஆனா, அக்கா பிரக்னண்டா இருக்காங்க. இந்த கண்டிஷன்ல அவங்க ட்ராவல் பண்ணலாமான்னு தெரியல." என்றான் கவலையாக.

"நான் இதைப் பத்தி சுவாமிஜி கிட்ட கேட்கட்டுமா?" என்று தன் கைபேசியை எடுத்தாள்.

"கேட்டு பாரு." என்றான்.

அவள் ஃபோன் செய்தவுடன், வழக்கம் போலவே காலதாமதம் செய்யாமல் அந்த அழைப்பை ஏற்ற சுவாமிஜி.

"எப்படிம்மா இருக்க?" என்றார்.

"நான் நல்லா இருக்கேன், சுவாமிஜி."

"கேட்கவே சந்தோஷமா இருக்கு. உன் வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?"

"நல்லா இருக்காரு. நான் வேற ஒரு விஷயமா உங்களுக்கு ஃபோன் பண்ணேன்"

"சொல்லுமா."

"என்னோட நாத்தனாருக்கு ஆக்சிடென்ட் ஆனதுல, அவங்க மெண்டலி அஃபெக்ட் ஆகி இருக்காங்க"

"அடக்கடவுளே!"

"நீங்க அவங்களுக்கு ட்ரீட்மென்ட்  கொடுக்கணும்னு நாங்க விரும்புறோம்."

"நிச்சயமா செய்யலாம். நீங்க அவங்களை இங்க அழச்சுகிட்டு வாங்க."

"அவங்களை அங்க கூட்டிக்கிட்டு வர்றதுல ஒரு பிரச்சனை இருக்கு."

"என்ன பிரச்சனை?"

"அவங்க பிரக்னண்டா இருக்காங்க. ஆக்சிடென்ட் ஆனபோது, காரோட முன் கண்ணாடியை உடைச்சுக்கிட்டு காரை விட்டு வெளியே வந்து விழுந்துட்டாங்க. நல்ல காலமா குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படல. இப்போதைக்கு அவங்க சேஃபா தான் இருக்காங்க. ஆனா டிராவல் பண்ற அளவுக்கு அவங்க ஃபிட்டான்னு எனக்கு தெரியல"

"இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்."

"நீங்க சென்னைக்கு ஒரு தடவை வந்துட்டு போக முடியுமா?" என்று அவள் கேட்க, சிந்தனையில் ஆழ்ந்தார் சுவாமிஜி.

"தயவு செஞ்சு எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க சுவாமி. அவங்க பிரக்னண்டா இருக்காங்க. இந்த நேரத்துல அவங்க மனநிலை இப்படி இருக்கிறது நல்லதில்லை இல்லையா?" என்றாள் கவலையாக.

"சரிமா. நான் சென்னைக்கு வரேன்."

"ரொம்ப தேங்க்ஸ் சுவாமி" என்று புன்னகையுடன் இனியவனை பார்த்தாள்.

"எவ்வளவு சீக்கிரம் சென்னைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன். இங்க செஞ்சு முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. அதுக்காகத்தான் கொஞ்சம் டைம் ஆகும்."

"பரவாயில்லை சுவாமிஜி, நீங்க இங்க வரிங்களே, எங்களுக்கு அதுவே போதும்!"

"நான் உன் ஹஸ்பண்டுக்காக அனுப்புன தூக்க மருந்து மீதம் இருக்கா?"

"இருக்கு சுவாமி."

"அதை உங்க நாத்தனாருக்கு குடுங்க. ஆனா உங்க வீட்டுக்காரருக்கு எவ்வளவு கொடுத்தீங்களோ அதுல மூணுல ஒரு பங்கு தான் கொடுக்கணும்."

"சரிங்க சுவாமி."

"அது அவங்களை நிம்மதியா தூங்க வைக்கும்."

"சரிங்க சுவாமி."

"நான் உங்களை சென்னையில் வந்து பார்க்கிறேன்."

"உங்களுக்காக நாங்க காத்துக்கிட்டு இருப்போம்" என்று அழைப்பை துண்டித்த ஆழ்வி, இனியவனை பார்த்து,

"சீக்கிரமா சென்னைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு"

"அப்படின்னா, அக்காவை பத்தி நம்ம கவலைப்பட வேண்டியதில்ல" என்று நம்பிக்கையோடு கூறினான் இனியவன்.

"உங்களுக்கு கொடுத்த தூக்க மருந்தை அக்காவுக்கு குடுக்க சொல்லி இருக்காரு."

"ஆனா அக்கா பிரக்னண்டா இருக்காங்களே...!"

"உங்களுக்கு கொடுத்ததுல மூணுல ஒரு பங்கு தான் கொடுக்க சொல்லி இருக்கார்."

"ஓஹோ!"

அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் கரத்தை பற்றி நிறுத்திய இனியவன்,

"தேங்க்யூ சோ மச்" என்றான்.

அவன் சிறிதும் எதிர்பாராத விதத்தில், அவன் கன்னத்தை பற்றி, அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு,

"யூ ஆர் வெல்கம்." என்றாள்.

"உன்னோட புத்துணர்ச்சி திரும்ப கிடைச்சிடுச்சு போல இருக்கே!" என்றான்.

"சந்தேகமே இல்லை. சுவாமிஜி வந்து அக்காவை பாத்துக்குவார். அவங்க சீக்கிரமே குணமாயிடுவாங்க."

"சீக்கிரமே வா?"

"ஆமாம். உங்களை விட சீக்கிரமா!"

"ஆனா அக்காவுக்கு ரொம்ப குறைச்சலான மருந்து தானே கொடுக்கனும்னு சொல்லி இருக்காரு. அப்படி இருக்கும்போது என்னைவிட அவங்க எப்படி வேகமாக குணமாவங்க?"

அதற்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை.

"ஆயிவாங்கன்னு நினைக்கிறேன்." என்றாள்.

"நான் அவ்வளவு முரட்டுத்தனமாக இருந்தேன்?"

தன் மூக்கை சுருக்கி, ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"படு முரட்டுத்தனமாக இருந்தீங்க. "

"ஆனா தென்றல் மாதிரி ஒரு பொண்ணு, காட்டு தனமான என்னை கண்ட்ரோல் பண்ணிட்டா. இல்லையா?"

"யாரோ ரொம்ப ரிலாக்ஸா இருக்கிற மாதிரி தெரியுது?"

"ஆமாம் அக்காவை பத்தி என் மனசுல இருந்த கவலை இப்போ இல்ல."

"நான் கீழ போறேன். உங்களுக்கு ஏதாவது வேணுமா?"

"நீ எனக்கு கிடைச்சா நான் ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பேன்."

அதைக் கேட்டு ஆச்சரியமடைந்தாள் ஆழ்வி. சுவாமிஜியின் வருகை பற்றி அறிந்த பிறகு அவன் இவ்வளவு நிம்மதி அடைந்து விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் சுவாமிஜியின் சிகிச்சையின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை அவளை வியப்படைய செய்தது.

"நீங்க ரிலாக்ஸ் ஆயிட்டீங்கன்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு ஆயிடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல." என்று அவள் கூற, அவன் சிரித்தான்.

"அக்காவை தூங்க வச்சதுக்கு பிறகு தான் நான் உங்களுக்கு கிடைப்பேன்." என்று அவள் கூற, இந்த முறை இனியவன் வியப்படைந்தான்.

"என்னை விட நீ ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்க போல இருக்கே!"

"ஏன் மாட்டேன்? நான் தான் அந்த மருந்தோட எஃபெக்ட் என்னன்னு கண்கூடா பார்த்திருக்கேனே!" என்று கூறிய அவள்,

"நான் அக்காவுக்கு மருந்து கொடுத்துட்டு வரேன்"

என்று அலமாரியில் இருந்த மருந்தை எடுத்துக்கொண்டு நடந்தாள். அவள் அவனை கடந்த போது, அவள் கையைப் பிடித்து நிறுத்தி,

"சீக்கிரமா வான்." என்றான்.

சரி என்று புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் ஆழ்வி. சமையல் அறைக்கு வந்து, மருந்தை பாலில் கலந்து நித்திலாவின் அறைக்கு எடுத்துச் சென்றாள்.

சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி, சுவரில் வெறும் கையால் வரைந்து கொண்டு இருந்தாள் நித்திலா. பாட்டியும் பார்கவியும் ஒன்றும் செய்ய இயலாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நித்திலாவிடம் சென்ற ஆழ்வி,

"அக்கா." என்றாள்.

ஆழ்வியை அமைதியாய் ஏறிட்டாள் நித்திலா. தன் கையில் இருந்த பால் தம்ளரை அவளை நோக்கி நீட்டி, பெற்றுக் கொள்ளுங்கள் என்பது போல் அவள் சைகை செய்ய, அதை வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் சுவரை நோக்கி திரும்பிக் கொண்டாள் நித்திலா.

அவள் தோலை தொட்டு,

"அக்கா, இதை குடிங்க." என்று வலுக்கட்டாயமாய் அந்த பாலை அவளை குடிக்க செய்தாள்.

பார்கவியை பார்த்த ஆழ்வி,

"அக்காவை தூக்கம் எனக்கு ஹெல்ப் பண்ணு." என்றாள்.

இருவரும் சேர்ந்து நித்திலாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

"நான் ஸ்வாமிஜிகிட்ட பேசிட்டேன். அவர் சென்னைக்கு வர ஒத்துக்கிட்டாரு. அவர் தான் அக்காவுக்கு தூக்க மருந்து கொடுக்க சொன்னாரு. அதை நான் பாலில் கலந்து கொடுத்து இருக்கேன். அவங்க நல்லா தூங்குவாங்க. நீங்களும் போய் தூங்குங்க. அக்காவை பத்தி இன்னைக்கு ராத்திரி நம்ம கவலைப்பட வேண்டாம். அவங்க நிம்மதியா தூங்கட்டும்" என்றாள். 

பாட்டி சரி என்று தலையசைத்தார்.

"பாட்டி, எந்த நேரமா இருந்தாலும் நீங்க அவரை கூப்பிடுங்க." என்றாள்.

"சரி ஆழ்வி. நீயும் போய் தூங்கு." என்றார் பாட்டி.

சரி என்று தலையசைத்து விட்டு தங்கள் அறைக்கு வந்தாள் ஆழ்வி.

"அக்கா மருந்து சாப்பிட்டாங்களா?"

"சாப்பிட்டாங்க."

"எப்படி நீ அந்த மருந்தை கொடுத்த?"

"பாலில் கலந்து கொடுத்துட்டேன்."

"ஓஹோ!"

"நீங்க வந்து சாப்பிடுங்க."

"அக்காவை தூங்க வெச்சதுக்கு பிறகு, எனக்கு நீ கிடைப்பேன்னு சொன்னியே...!"

"சாப்பிட்ட பிறகு..."

"எனக்கு சாப்பிட இப்ப மூடே இல்ல."

"என்னங்க..."

அவளை தன்னை நோக்கி இழுத்த இனியவன்,

"சாப்பாடு எப்ப வேணா சாப்பிடலாம்." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top