61 இறுதி பகுதி


61 இறுதி பகுதி

எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பயங்கர கோபத்தில் இருந்தாள் பூங்குழலி. அவளது பிறந்த நாளை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்று மலரவன் கூறவில்லையா? அப்படி இருக்கும் போது, எப்படி அவன் அவளது பிறந்த நாளை மறந்தான்? அவர்களது நிகழ்ச்சிக்கான தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து அவன் அதைப் பற்றி பேசுவான் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாள். ஆம், அவளது பிறந்தநாள் அன்று தான் அவர்களது நிகழ்ச்சிக்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. மலரவன் அது குறித்து ரியாக்ட் செய்யவே இல்லை. அதைப்பற்றி அவனிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் தயக்கத்துடன் இருந்து விட்டாள். அதே நேரம், அவளுக்கு அவன் மீது கோபமாகவும் இருந்தது. அவளிடம் காதலை வெளிப்படுத்தும் முன், அவளிடம் கொடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும், அவளுக்காக அவ்வளவு பரிசுப் பொருட்களை வாங்கி வைத்திருந்தான் அவன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவளது பிறந்த தேதி கூட அவனுக்கு ஞாபகம் இல்லை. திருமணத்திற்கு பிறகு எல்லா ஆண்களும் இப்படித்தான் மாறி போவார்களோ?

ஒருவேளை நிகழ்ச்சியின் பரபரப்பில் அவன் அதை மறந்திருக்கலாம். தன்னை தானே தேற்றிக் கொண்டாள் பூங்குழலி.

அப்பொழுது அவளது பெயரை கூறி அழைத்தபடி உள்ளே ஓடி வந்தான் மலரவன்.

"பூங்குழலி...."

கட்டிலை விட்டு எழுந்து நின்றாள் பூங்குழலி.

"நீ இன்னுமா ரெடியாகாம இருக்க? நமக்கு டைம் ஆகுது. சீக்கிரம் ரெடி ஆகு" என்று பரபரத்தான்.

அலமாரியின் கதவை திறந்து, அதிலிருந்த ஒரு காகித பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"இதை போட்டுக்கிட்டு ரெடியாகு" என்று அதை அவளிடம் கொடுத்தான்.

அந்தப் பையில் இருந்த உடையை எடுத்து பார்த்த பூங்குழலி அதிர்ச்சி அடைந்தாள். அது ஒரு கடல் கன்னி வகையான உடை. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்தது. அது, அவளுடைய மனதை, பார்த்த உடனேயே கொள்ளை கொண்டது. அதில் நிச்சயம் அவள் ஒரு அப்சரஸ் போன்று இருப்பாள் என்பது நிச்சயம். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த உடையை அவளுக்கு எதற்காக கொடுக்கிறான் மலரவன் என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவள் தான் திருமதி மலரவன் ஆயிற்றே...!

அந்த உடையை அணிந்து கொண்டு தயாரானாள் பூங்குழலி. அந்த உடைக்கு தோதாய் மலரவன் அளித்த வெள்ளை கல் வைத்த தொங்கட்டான் கம்மலை அணிந்து, பார்க்கும் கண்களுக்கு திவ்யமாய் காட்சியளித்தாள் பூங்குழலி. அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது என்று நாம் சாதாரணமாய் சொல்லிவிட முடியாது. அது அவளது மனதை கொள்ளை கொண்டது. கண்ணாடியில் ஒளிர்ந்த தன் பிம்பத்தை பார்த்து புன்னகைத்தாள். அவளது அழகில் தன்னை தொலைத்து விட்டிருந்த மலரவனை கண்ணாடியில் கண்டாள் அவள். அவள் அவ்வளவு அழகாய் இருந்தால், அவன் ஏன் தொலைந்து போக மாட்டான்? அவனைக் கண்டும் காணாமல், தெனாவட்டாய் கடந்து சென்றாள் பூங்குழலி. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், அவளது பிறந்த நாளை மறப்பான்?

அவள் அப்படி செய்வதை பார்த்த மலரவன் கள்ள புன்னகை பூத்தான். ஓடிச் சென்று, பின்னால் இருந்து அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டான்.

"க்கும்" அலட்சியமாய் முகத்தை திருப்பினாள்.

"ஏன் இப்படி இன்டெரெஸ்ட் இல்லாம இருக்க?"

"அது நான் இல்ல. நீங்க தான்" என்றாள் முகத்தை சுளுக்கு என்று வைத்துக் கொண்டு.

"நானா? நான் உன்மேல விருப்பம் இல்லாம இருக்கேன்னு நினைக்கிறியா?"

அவள் அதற்கு பதில் சொல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாலள்.

"சரி, நமக்கு டைம் ஆகுது. நமக்காக ப்ரோக்ராம் ஆர்கனைசர்ஸ் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இப்போ நம்ம கிளம்பலாம். அப்புறமா வந்து பேசிக்கலாம்" என்று அவளை தன்னுடன் இழுத்துக் கொண்டு நடந்தான் மலரவன்.

அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் வெளி அரங்கத்திற்கு வந்தார்கள். மலரவனுடன் கையோடு கையைப் பிணைத்துக் கொண்டு வந்த பூங்குழலியின் மீது தான் அனைத்து கண்களும் இருந்தது. அவ்வளவு பார்வையையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாய் எதிர் கொள்ள திணறிப் போனாள் பூங்குழலி.

முதல் வரிசையில் இருந்த விஐபி இருக்கையில் அவர்களை அமர வைத்தார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். நிகழ்ச்சி துவங்கியது. அவர்களது நிறுவனத்தின் உடைகளை அணிந்து கொண்டு, மாடல்கள் மேடையில் வலம் வர துவங்கினார்கள்.

மலரவனை மீண்டும் மீண்டும் பார்த்தபடி இருந்தாள் பூங்குலி. ஆனால் அவனோ, நிகழ்ச்சியை கவனமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்து விட்டிருந்தாள். அவளுக்கு அழ வேண்டும் என்று தோன்றியது. அவன் இன்று இரவு தன்னிடம் நெருங்கட்டும், அப்பொழுது இருக்கிறது சங்கதி. அவளது பிறந்த நாளை மறந்ததற்கு தண்டனையாய் அவனை தள்ளி வைப்பது என்று முடிவெடுத்தாள் பூங்குழலி.

நிகழ்ச்சி முடிவடைந்தது. மேடையில் தோன்றிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,

"இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக உழைத்த திரு மற்றும் திருமதி மலரவனை மேடைக்கு அழைக்கிறேன்" என்றார்.

மலரவனை பதற்றத்துடன் ஏறிட்டாள் பூங்குழலி. புன்னகையுடன் எழுந்து நின்ற மலரவன், தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான். தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பூங்குழலி.

"கமான் மிஸஸ் மலரவன்" என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.

அவன் கையின் மீது தன் கையை வைத்த பூங்குழலி, எழுந்து நின்றாள். அரங்கம் அதிரும் கைதட்டல் ஒலியுடன் அவர்கள் மேடையை நோக்கி நடந்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கையில் இருந்து  ஒலிபெருக்கியை பெற்றுக் கொண்ட மலரவன்,

"இந்த நிகழ்ச்சி வெற்றியடைய நாங்கள் இருவர் மட்டும் காரணம் அல்ல. தனது முழு அர்ப்பணிப்பையும் தந்த வேறொரு நபரும் இருக்கிறார். எனது மேலாளரும், நண்பருமான ஸ்டீவ். அவர் இல்லாமல் இந்த வெற்றியை எங்களால் ஈட்டி இருக்க முடியாது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவர் என்னுடன் இந்த மேடையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஸ்டீவ்... மேடைக்கு வா" என்று அழைத்தான் மலரவன்.

மேடைக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஸ்டீவ், நாலு கால் பாய்ச்சலில் ஓடிவந்து, மலரவனை தழுவிக் கொண்டான்.

"டேம் யு மேன்... என்னை நீங்க எமோஷனல் ஆக்கிட்டிங்க" என்றான்.

மலரவன் புன்னகைத்தான். ஸ்டீவ்வுடன் கைக்கூலுக்கிய பூங்குழலி,

"கங்கிராஜுலேஷன்ஸ்" என்றாள்.

"தேங்க்யூ மேம்... நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்க" என்றான்.

மலரவனை பார்த்த அவன், சைகையால் ஏதோ கேட்க, சரி என்று தலையசைத்தான் மலரவன். அவர்கள் பேசிக் கொண்ட விஷயம் புரியாததால் தன் முகத்தை சுருக்கினாள் பூங்குழலி.

மேடையின் பின்னால் நின்று கொண்டிருந்த சிலரை நோக்கி சைகை செய்தான் ஸ்டீவ். அவர்கள், அலங்கரிக்கப்பட்ட ஒரு மேஜையை மேடைக்கு தூக்கி வந்தார்கள். பூங்குழலியின் விழி விரிந்தது, அந்த மேசையின் மீது மிகப்பெரிய கேக் வைக்கப்பட்டிருந்தது பார்த்தபோது.

*ஹேப்பி பர்த்டே மை டியர் வைஃப்* என்று அதன் மீது எழுதியிருந்தது.

மலரவனை திகைப்புடன் பார்த்தாள் பூங்குழலி.

"என் மனைவியின் பிறந்த நாளை உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்றான் பூங்குழலியை  பார்த்தபடி.

அப்போது மேடையின் நாலா புறத்திலும் வைக்கப்பட்டிருந்த பூ பட்டாசுகள் வெடிக்க, அதில் இருந்து கிளம்பிய, இளஞ்சிவப்பு செயற்கை ரோஜா இதழ்கள் அந்த அரங்கத்தில் மழையாய் பொழிந்தன. அவற்றை மலைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்குழலி. அவள் அதை எல்லாம் நம்ப தயாராக இல்லை போல் தெரிகிறது. ஆம், அதை அவள் கனவு என்று நினைத்தாள்.

அவளிடம் ஒரு கத்தியை நீட்டிய மலரவன், அந்த கேக்கை வெட்டுமாறு கூறினான். திகைப்பில் இருந்து வெளியே வராத பூங்குழலி, அப்படியே நின்றாள். அவளது கையில் அந்த கத்தியை திணித்த அவன், அவள் தோளை பற்றி கொண்டு, அவளை அந்த கேக்கை வெட்டச் செய்தான். ஒரு சிறு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான், மாபெரும் கரவொலியின் இடையில்.

தன் பாக்கெட்டில் இருந்த வைர நெக்லஸை எடுத்த அவன், அதை அவள் கழுத்தில் அணிவித்தான். அவள் அணிந்திருந்த தொங்கட்டானுக்கு சரியாய் பொருந்தியது, அதற்கு இணையான அந்த நெக்லஸ்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், மாடல்களும் பூங்குழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அதை புன்னகையுடன் ஏற்றாள் பூங்குழலி.

வீடு வந்து சேரும் வரை ஒன்றுமே பேசவில்லை பூங்குழலி. அவ்வப்போது அவளை பார்த்தபடி இருந்தான் மலரவன். வீடு வந்து சேர்ந்ததும், மலரவனை அடிக்கத் துவங்கினாள் அவள்.

"பூங்குழலி, என்ன ஆச்சு? இப்படி தான் உன்னோட புருஷனை நீ அப்ரிசியேட் பண்ணுவியா?" என்றான் அடி வாங்கியபடி.

அடிப்பதை நிறுத்திவிட்டு அவனை அணைத்துக் கொண்டாள் பூங்குழலி.

"இப்படி செஞ்சதுக்காக நான் உங்களை ரொம்ப வெறுக்கிறேன்" என்றாள் நா தழுதழுக்க.

"தேங்க்ஸ்" என்று சிரித்த அவன்,

"நீ இவ்வளவு அழகா இருக்கிறதுக்காக நானும் உன்னை வெறுக்கிறேன். என்னை என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல தெரியுமா?" என்றான்.

"நான் என்ன நெனச்சேன்னா..."

அவளது பேச்சை வெட்டி,

"நான் உன் பிறந்த நாளை மறந்துட்டேன்னு நினைச்சியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"பைத்தியக்காரி. அது எப்படி நான் உன் பர்த்டேவை மறப்பேன்? அது தான் என் ரத்தத்திலேயே ஓடிக்கிட்டு இருக்கே" என்று சிரித்தான்.

"ஐ லவ் யூ சோ மச்"

"இப்போ தான் என்னை வெறுக்கிறேன்னு சொன்ன...?"

"ஆமாம் என்னை ரொம்ப நேரம் காக்க வச்சதுக்காக உங்களை நான் வெறுக்கிறேன்"

"நான் உனக்காக ஒரு வருஷம் காத்திருந்தேனே, அதுக்கு என்ன சொல்ற?"

"நீங்க எனக்காக காத்திருந்த விஷயமே எனக்கு தெரியாதே..."

"யாருக்குமே தெரியாது. நான் உனக்காக எவ்வளவு அழுதேன்னு என் இதயத்துக்கு மட்டும் தான் தெரியும்"

"இப்போ தான் நான் உங்களுக்கு சொந்தம் ஆயிட்டேனே..." அவன் தோளில் சாய்ந்த அவள்,

"இது தான் என் வாழ்க்கையோட பெஸ்ட் பர்த்டே. நீங்க என்னை இப்படி திக்கு முக்காட செய்வீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

"ஏன்னா, நீ ரொம்ப கிரேட்"

"அதெல்லாம் உங்களால தான். என்னோட பலத்தை என்னை உணர வெச்சது நீங்க தான்"

அவனை அணைத்துக் கொண்டாள் பூங்குழலி. வாஞ்சையுடன் அவளைத் தன் கரங்களில் சுற்றி வளைத்துக் கொண்டான் மலரவன். அவர்கள் சிறப்புடன் வாழ வாழ்த்திவிட்டு நாம் விடை பெறுவோம்.

முற்றும்.

அடுத்த தொடர்கதை :

உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக,  நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் தன் வாழ்வில் விடியலை காண்பானா? அவனது முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழுமனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?

*மாண்புமிகு கொலைகாரா...!*

அடுத்து ஆரம்பமாகிறது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top