52 தலைக்கு வந்தது

52 தலைக்கு வந்தது...

ஏகமாய் உணர்ச்சி வசப்பட்டிருந்த பூங்குழலியை தூக்கி அணைத்துக் கொண்டான் மலரவன். தன் இதழ்களை அவன் இதழ்களோடு மோதினாள் பூங்குழலி. அது அவள் உணர்ச்சிவசப்பட்டு இருந்ததன் விளைவு. அது மலரவனுக்கும் தெரியும். அவளை தன்னை முத்தமிட விட்டு அமைதியாய் நின்றான் மலரவன். அந்த முத்தத்தை முடித்துக் கொண்டு அவன் நெற்றியில் ஆழமாய் இதழ் பதித்த அவள்,

"தேங்க்யூ சோ மச் மலர்" என்று இறுக்கமாய் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவன் அவளை கீழே இறக்கி விட எண்ண,

"என்னை கீழே விடாதீங்க" என்றாள்.

அவன் மீண்டும் அவளை இறுக்கிக் கொண்டு,

"எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்றது அவசியமா?" என்றான்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் உன் புருஷன் ஞாபகம் இருக்கா?"

"என்னால அதை மறந்துட முடியும்னு நெனைக்கிறீங்களா?" என்று பதில் கேள்வி கேட்டாள், பதில் கூறாமல்.

"உன் புருஷனுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு என்ன அவசியம்?"

"அப்போ நான் வேற என்ன சொல்றது?"

"நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"நான் என்ன நினைக்கிறேன்?"

"நீ எப்பவும் உன் புருஷனை பத்தி தான் நினைச்சுகிட்டு இருப்ப"

"அப்படியா?"

"ஆமாம்"

"நீங்க சொல்றது சரி தான்"

"உன் புருஷன் என்ன நினைக்கிறான்னு உனக்கு தெரியுமா?"

"அவர் எப்பவும் என் சந்தோஷத்தை பத்தி தான் நினைச்சுகிட்டு இருப்பார்"

"அதைத் தான் அவன் செய்றான்"

"என்னை கீழே இறக்கி விடுங்க"

மாட்டேன் என்று தலையசைத்தான்.

"ப்ளீஸ் விடுங்க"

அவன் அவளைக் கீழே இறக்கி விட,

"என்னோட அப்பாவை மறுபடியும் உயிரோட கொண்டு வர முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா நம்மால அவருடைய ஆன்மாவை சாந்தி அடைக்க வைக்க முடியும். அது கைலாசத்துக்கு பனிஷ்மென்ட் கிடைச்சா மட்டும் தான் நடக்கும். நான் அப்படி நடக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதை நீங்க செஞ்சிட்டிங்க" என்று மீண்டும் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவள் மிக அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள் என்பதை அது தெள்ளத் தெளிவாக காட்டியது.

"நீ இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியமே இல்ல. இது என்னோட கடமை. நீயும் சிவகாமி ஆன்ட்டியும் கூட என்னோட குடும்பம் தான். தில்லை அங்கிளோட சாவுக்கு காரணமா இருந்த குற்றவாளியை தண்டிக்கிற பொறுப்பு எனக்கும் இருக்கு. நான் அதை தான் செஞ்சேன்."

அவனை அணைத்துக் கொண்டு, அவனது நெஞ்சில் சாய்ந்தாள் பூங்குழலி.

"என்னை மூனாவது மனுஷன் மாதிரி பார்க்கிறதையும், தேங்க்ஸ் சொல்றதையும்  நிறுத்து... "

தலையை நிமிர்த்தி, உதடு சுழித்தாள் பூங்குழலி.

"பைத்தியக்காரி..." அவளது தலையில் முத்தமிட்டான்.

"நீங்க எப்படி கைலாசத்தை பிடிச்சீங்க?"

"என்னோட லாயர் பூபதி கிட்ட சொல்லி, உங்க சொத்து விவரத்தின் மேல ஒரு கண்ணு வைக்க சொல்லி இருந்தேன். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு கைலாசத்து மேலே சந்தேகம் இருந்தது"

"இந்த விஷயத்துல அந்த பேங்க் மேனேஜர் எப்படி வந்து மாட்டிக்கிட்டாரு?"

"அந்த ஆளு ஒரு ஃபிராடு அவன் நடத்துற பேங்க்கும் ஃபிராடு... சொல்லப்போனா, அது பேங்க்கே இல்ல"

"நெஜமாவா?" என்று கண்களை சுருக்கினாள் பூங்குழலி.

"ஆமாம், அவங்க பர்சன்டேஜ்காக தான் வேலை செய்றானுங்க"

"எவ்வளவு மோசமான மனுஷங்க..."

"ஆமாம் அவங்க அப்படித்தான்"

"அம்மா உங்களுக்காக காத்துகிட்டு இருக்காங்க"

"இல்ல நான் அவங்களை பார்க்க மாட்டேன்"

"ஏன்?"

"எமோஷன் சீன்ஸ் எல்லாம் போதும். அவங்க என் முன்னாடி அழறதை நான் விரும்பல. என்னை பார்த்தா அவங்க நிச்சயம் அழுவாங்க"

"நீங்க எங்களுக்காக என்ன செஞ்சிருக்கீங்கன்னு உங்களுக்கு புரியல. அதனால தான் இப்படி எல்லாம் பேசுறீங்க"

"நான் என்ன செஞ்சிருக்கேன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதுக்காக, உங்களை அழ விட்டுட்டு வேடிக்கை பார்க்க முடியாது"

"எப்படி இருந்தாலும் அவங்க அழுவாங்க. வாங்க போகலாம்"

"என்ன அவசரம்?"

"அவங்க உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்னு நினைப்பாங்க"

"எனக்கு தேங்க்ஸ் சொல்றதை தவிர உங்களுக்கு வேற எதுவும் தெரியாதா?"

அவள் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள, அவளை தன்னை நோக்கி இழுத்த மலரவன்,

"வேற எதுவும்  தெரியாதா?"என்றான் தன் குரலை தாழ்த்தி குழைந்து.

"எனக்கு என்ன தெரியணும்?"

"புதுசா எதுவும் கத்துக்க வேண்டிய அவசியம் இல்ல. உனக்கு ஏற்கனவே தெரிஞ்சதை செஞ்சாலே போதும்" என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதினான்.

"முதல்ல போய் உங்க மாமியாரை பார்த்துட்டு வாங்க. நம்ம விஷயத்தை  தீர்த்துக்க நம்மகிட்ட ஒரு முழு ராத்திரி இருக்கு"

சிரித்தபடி அவளை பார்த்துக் கொண்டு நின்ற அவன்,

"என்ன பிளான்?" என்றான்.

"உங்க கையை கட்டி போட போறேன்" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

"அப்பறம்...?"

"அப்புறம் என்ன?"

"என் கையை கட்டி போட்டு என்ன செய்யப் போற?"

"உங்க ஆர்வத்தை அடக்குங்க"

"ஏன் அடக்கணும்?"

"நீங்க கற்பனைக்கு எட்டாததை எல்லாம் யோசிப்பீங்க. அதனால..." என்று சிரித்தாள்.

"சரி, அப்போ நீ செய்யறேன்னு சொன்னதை, நான் செய்றேன்"

"என்ன செய்யப் போறீங்க?"

"உன் கையை கட்டிப்போட்டு என்ன செய்ய முடியும்னு காட்டுறேன்"

அவள் அதிர்ச்சியில் விழி விரிக்க, வாய்விட்டு சிரித்தான் மலரவன்.

"நீங்க ஒன்னும் போய் எங்க அம்மாவை பார்க்க வேண்டாம். இங்கேயே இருங்க" என்று கதவை நோக்கி நடந்தாள் அவள்.

"பிளான் மாறினாலும், வேற எதுவும் மாறிடாது"

"நீங்க என்கிட்ட அடி வாங்க போறீங்க மலர்" என்றபடி நடந்தாள் அவள்.

"கட்டில்ல நீ எவ்வளவு அடிச்சாலும் நான் சந்தோஷமா வாங்குவேன்"

அவனை நோக்கி திரும்பிய அவள்,

"அப்படியா? இன்னைக்கு ராத்திரி உங்களை கொல்றேனா இல்லையா பாருங்க" என்றாள்.

அவள் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம் அவளை நோக்கி ஓடிய மலரவன், அவள் கதவை திறக்கும் முன், பின்னால் இருந்து அவள் இடையை சுற்றி வளைத்து தூக்கிக் கொண்டான்.

"நீங்க என்ன செய்றீங்க மலர்?"

"நீ தானே என்னை கொல்ல போறேன்னு சொன்ன?"

"நான் சொன்னது ராத்திரி"

"என்னால அவ்வளவு நேரம் பொறுக்க முடியாது"

"அம்மாவும் ஆன்ட்டியும் எனக்காக காத்துகிட்டு இருப்பாங்க"

"நானும் தான் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்"

"எனக்கு தெரியும் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்க"

" சீக்கிரம் வரணும்"

"சரிரிரி...."

அவளைக் கீழே இறக்கி விட்டான் மலரவன்.

சிவகாமி உணர்ச்சி வசப்படுவார் என்று அவரைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்தான் மலரவன். ஆனால் சிவகாமி நேரடியாய் அவனது அறைக்கே வந்து, உணர்ச்சி குவியலாய் அவன் முன் நின்று, நன்றி கூறி அவனை திக்கு முக்காட செய்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் மலரவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. கடைசியில் பூங்குழலி அவன் உதவிக்கு வந்தாள். சிவகாமியை சமாதானம் செய்து, மின்னல்கொடியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

இதற்கிடையில்...

லண்டன் சென்று சேர்ந்தார் மணிமாறன். அவர் லண்டன் சென்று சேர்ந்த நேரம், வானம் கிழித்துக் கொண்டு, மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. அவருக்காக விமான நிலையத்தில் காத்திருந்த மலரவனின் மேலாளர் ஸ்டீவ்,

"உங்களுக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ண சொல்லி மலர் சார் சொல்லி இருந்தாரு சார்" என்றான்.

"மலரவனோட ஃபிளாட் என்ன ஆச்சு?"

"அது சவுத் லண்டன்ல இருக்கு சார். நம்ம ப்ரோக்ராம் நடக்குற இடத்துல இருந்து அது ரொம்ப தூரம். அதனால தான், ப்ரோக்ராம் முடியிற வரைக்கும் இங்க தங்க அவர் முடிவு பண்ணி இருந்தாரு. ப்ரோக்ராம் முடிஞ்சதுக்கு பிறகு தான் தன்னுடைய பிளாட்டுக்கு போகப் போறதா சொன்னாரு"

"ஒ..."

அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு அவரை அழைத்து வந்தான் ஸ்டீவ். வரவேற்புக்கு வந்த மணிமாறன் தனது அறையின் சாவியை கேட்க நினைத்த போது, பக்கத்தில் இருந்த ஒருவர் கேட்ட விஷயம் அவரை நிற்க செய்தது.

"மிஸஸ் பூங்குழலி மலரவன் எங்க ஸ்டே பண்ணி இருக்காங்க?"

தன் மருமகளைப் பற்றி விசாரிப்பது யார் என்று பார்க்க, பின்னால் திரும்பிய அவரது முகம் பிரகாசமானது.

"வில்லியம்..." என்று அந்த நபரை பார்த்து புன்னகைத்தார் மணிமாறன்.

ஆம், பூங்குழலியை கொல்வதற்காக குமரேசனால் அனுப்பப்பட்ட அதே வில்லியம் தான் அவன்.

"மணிமாறன் சார், நீங்களா??" என்றான் வில்லியம் ஆச்சரியமாய்.

"நான் இங்க ஒரு ப்ரோக்ராமுக்காக வந்திருக்கேன்"

"அப்படியா?"

"நீ யாரை தேடிக்கிட்டு இருக்க?" என்றார் மணிமாறன்.

"எனக்கு ஒரு முக்கியமான அசைன்மென்ட் இருக்கு. அதுக்காக தேடிக்கிட்டு இருக்கேன்" என்று அவன் கூறியதை கேட்டு அவர் துணுக்குற்றார். அவருக்கு தெரியும் வில்லியம் எப்படிப்பட்ட அசைன்மென்ட்டை கையாள கூடியவன் என்று.

"என்ன விஷயம் வில்லியம்?"

"என் வேலையை பத்தி உங்களுக்கு தான் தெரியுமே"

"நீ இன்னும் அப்படிப்பட்ட வாழ்க்கையை தான் வாழ்ந்துகிட்டு இருக்கியா?"

ஆமாம் என்று பெருமூச்சு விட்டான் வில்லியம்.

"இப்போ நீ செய்யப் போற டாஸ்கை உனக்கு கொடுத்தது யாரு?"

"உங்க ஃபிரண்ட் குமரேசன் தான்"

கோபத்தில் பல்லை கடித்தார் மணிமாறன். ஒரு விதத்தில் அவர் இதை எதிர்பார்த்தார். சில வருடங்களுக்கு முன்பு குமரேசனுக்கு வில்லியம்மை அறிமுகம் செய்து வைத்ததே மணிமாறன் தான்.

"உன்னை என்ன செய்ய சொல்லி சொன்னான் குமரேசன்?"

"ஒரு பொண்ணு அவரோட பெரிய எதிரியாம். அவளை முடிக்க சொல்லி சொன்னாரு"

"யாரு, மிஸஸ் பூங்குழலி மலரவனா?"

"ஆமாம். இன்னைக்கு அந்த பொண்ணு லண்டனுக்கு வரப்போறா"

"இல்ல அவ லண்டனுக்கு வரப்போறதில்ல" என்றார் உறுதியான பார்வையுடன்.

"உங்களுக்கு எப்படி தெரியும்? அந்த பொண்ணை உங்களுக்கு தெரியுமா?"

"ஆமாம், எனக்கு அவளை தெரியும். அவளுக்கு பதிலா தான் நான் லண்டனுக்கு வந்திருக்கேன்"

"என்னது, அவளுக்கு பதிலா நீங்க வந்தீங்களா?"

"ஆமாம். அவ வேற யாரும் இல்ல, என்னோட மருமக தான்" என்றார் மணிமாறன்.

அதைக் கேட்ட வில்லியம் திகில் அடைந்தான்

"என்ன சார் சொல்றீங்க, அவங்க உங்க மருமகளா?" என்றான் வில்லியம்

ஆம் என்று தலையசைத்தார் மணிமாறன்.

"எதுக்காக குமரேசன் உங்க மருமகளை கொல்ல நினைக்கிறாரு?"

"அது ஒரு பெரிய கதை. வா ரூமுக்கு போய் பேசலாம்"

மணிமாறனை பின் தொடர்ந்து அவரது அறைக்கு வந்தான் வில்லியம். அவர்களுடன் வந்த ஸ்டீவ் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தான். குமரேசனும் கீர்த்தியும் செய்த அழிச்சாட்டியங்களை வில்லியமிடம் கூறி முடித்தார் மணிமாறன்.

"ஐ அம் ரியலி சாரி சார். அவங்க உங்க மருமகள்னு எனக்கு தெரியாது"

"என் மகனோட பேரு மலரவன்னு உனக்கு தெரியுமே. அப்படி இருந்தும் உனக்கு என் ஞாபகம் வரலையா?"

"அந்த பேரு உங்க ஊர்ல நிறைய பேருக்கு இருக்கும்ன்னு நினைச்சேன்"

"இருக்கலாம், ஆனா இந்த விஷயத்துல குமரேசன் சம்பந்தப்பட்டிருக்கான்னு தெரிஞ்ச உடனே, நீ என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்"

"ஆமாம் சார். நான் அப்படி செஞ்சிருக்கணும். ஆனா குமரேசன் இவ்வளவு மோசமான ஆளா இருப்பார்னு நான் நினைக்கவே இல்ல. அந்தப் பொண்ணு அவரோட பிசினஸ் எதிரியா இருப்பான்னு நினைச்சேன்"

"அவன் இவ்வளவு கீழ்த்தரமா போவான்னு நானும் எதிர்பார்க்கல"

"இப்போ நான் என்ன செய்யணும் சார்?"

"இந்த விஷயத்துல நான் முடிவெடுக்க முடியாது"

"என்ன சார் சொல்றீங்க?"

"நான் என் மகன் கிட்ட பேசணும்"

"அவருக்கு குமரேசன் மேல ரொம்ப கோபம் வரும்"

"வரட்டும். வேற வழி இல்ல. அவனோட கைடன்ஸ் இல்லாம இந்த விஷயத்துல நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவன் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்ற விதமே அலாதியானது"

"அப்போ, என்ன செய்றதுன்னு அவர்கிட்டயே கேளுங்க"

"நான் இந்தியாவுக்கு கால் புக் பண்ணனும்"

"தேவையில்ல. என்னோட ஃபோன்ல பேசுங்க" என்று தனது கைபேசியை அவரிடம் கொடுத்தான் வில்லியம்.

மலரவனுக்கு ஃபோன் செய்தார் மணிமாறன். அந்த அழைப்பை ஏற்றான் மலரவன்.

"ஹலோ மலரா..."

"அப்பா நீங்க லண்டன் போய் சேர்ந்துட்டீங்களா?"

"இப்போ தான் வந்தேன்"

"அங்க பயங்கர மழை பெய்யுதுன்னு ஸ்டீவ் சொன்னான்"

"ஆமாம் மலரா இங்க கிளைமேட் கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு... அதுக்கு மேல நம்ம கண்டிஷன் மோசமா இருக்கு"

"நம்ம கண்டிஷனா? என்னப்பா சொல்றீங்க?"

"நல்ல வேலை நீங்க லண்டனுக்கு வரல..."

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"பூங்குழலியை முடிக்க இங்கு ஏற்பாடு நடந்திருக்கு"

"என்ன்னனது?" மலரவனின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

"ஆமாம் மலரா. உனக்கு ஞாபகம் இருக்கா, நான் என்னோட ஃப்ரெண்ட் வில்லியமை பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கேன்"

"ஆமாம்"

"அவன் ரவுடி அப்படிங்கிறதால, அவனை மீட் பண்ண நீ இன்ட்ரஸ்ட் காட்டவே இல்ல"

"ம்ம்ம்"

"பூங்குழலியை கொல்ல குமரேசன் அவனுக்கு பணம் கொடுத்திருக்கான்"

"என்னப்பா சொல்றீங்க?" பல்லை கடித்தான் மலரவன்.

"உங்களுக்கு பதிலா நான் லண்டனுக்கு வந்ததால, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு"

"அந்த குமரேசனை நான் சும்மா விட போறதில்ல" குமுறினான் மலரவன்.

"ஆமாம் மலரா. நம்ம அவனை சும்மா விடக்கூடாது. அவன் இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்"

"நமக்கு வில்லியம் ஹெல்ப் பண்ணுவானா?"

"நிச்சயமா பண்ணுவான்"

"சரி நான் சொல்றதை கேளுங்க. நான் சொல்றபடி அவனை செய்ய சொல்லுங்க"

"சரி என்ன செய்யணும்னு சொல்லு"

தன்னுடைய திட்டத்தை கூறினான் மலரவன். அதை கவனமாய் கேட்டுக் கொண்டார் மணிமாறன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top