43 அந்தாக்ஷரி
43 அந்தாக்ஷரி
சிவகாமியும், வடிவுக்கரசியும், மின்னல்கொடியுடன் தங்கிக் கொண்டார்கள். தனது கால் வலியை மறந்தே போனார் மின்னல்கொடி. எப்போதும் இல்லாத அளவிற்கு, சிவகாமியுடனும் வடிவுக்கரசியுடனும் பழைய கதைகளை பேசி சிரித்தபடி இருந்தார் அவர். அவர்களது வாழ்வில் நிகழ்ந்த ரகளையான நிகழ்வுகளை அந்த மூவரும் அசை போட்டுக் கொண்டிருந்தார்கள். அது பூங்குழலியின் யோசனை தான். அவள் தான், பழைய கதைகளை பேசி மின்னல்கொடியை குதூகலமாய் வைத்துக் கொள்ளச் சொல்லி தன் அம்மாவிடமும் அத்தையிடமும் கூறியது. அவர்களுடன் வெறுப்பே வடிவாய் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. அவளை உட்கார விடாமல் ஓடவிட்டுக் கொண்டிருந்தார் வடிவுக்கரசி. அவர்களை சபித்தபடி அதை செய்து கொண்டு இருந்தாள் கீர்த்தி வேறு வழியின்றி.
*தேங்காய் எண்ணெயை தரையில கொட்றதுக்கு முன்னாடி நான் ஜாக்கிரதையா இருந்திருக்கணும். பூங்குழலி அங்க இருந்ததை நான் எப்படி கவனிக்காம விட்டேன்? அந்த சண்டாளி எல்லாத்தையும் தலைகீழா மாத்திட்டாளே... எல்லாம் என்னால தான் வந்தது...* தனக்குத்தானே புலம்பி தீர்த்தாள் கீர்த்தி.
வடிவுக்கரசியின் குரல், அவளது புலம்பலை தடுத்தது.
"கீர்த்தி, தண்டபாணி கிட்ட சொல்லி மின்னலுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா" என்றார்.
அவர் கூறியதை தண்டபாணியிடம் கூற, முனுமுனுத்தபடி அங்கிருந்து சென்றாள் கீர்த்தி. வடிவுக்கரசி அங்கு வந்ததற்கு பிறகு, அவள் சமையலறைக்கு செல்வது இது ஆறாவது முறை.
இரவு
தங்கள் அறைக்கு வந்தாள் பூங்குழலி. மலரவனை சிறிதும் ஏறெடுத்து பார்க்காமல், தனக்கு கொஞ்சம் கூட பதற்றமே இல்லை என்பது போல் காட்டிக்கொண்டாள். மென்மையான புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன். வழக்கம் போல் உடைமாற்றிக் கொள்ள குளியலறைக்கு சென்றாள் பூங்குழலி. ஒற்றை வார்த்தையை கூட உதிர்க்காத மலரவனின் பார்வை, அவளையே பின்தொடர்ந்து கொண்டிருந்தது.
உடைமாற்றிக் கொண்டு அவள் வெளியே வந்த போது, தனது ஒரு கையை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் மலரவன். சந்தேகமின்றி, அவனது பார்வை அவள் மீது தான் இருந்தது. கட்டிலில் வந்து அமர்ந்த பூங்குழலி,
"லைட்டை ஆஃப் பண்ணிடட்டுமா?" என்றாள்.
"ம்ம்ம்"
ஸ்விட்ச் போர்டை நோக்கி தன் கைகளை அவள் நீட்ட,
"கொஞ்சம் இரு" என்றான் மலரவன்.
அவள் அவனைப் பார்க்க,
"நான் அப்புறம் ஆஃப் பண்ணிக்கிறேன்" என்றான்.
"சரி" என்று அவள் படுத்துக்கொள்ள,
"எதுவும் சொல்ல மாட்டியா?" என்றான்.
"எதைப் பத்தி?" என்றாள்.
"இன்னைக்கு சாயங்காலம் நமக்குள்ள ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கிட்டோமே, அதை பத்தி"
"உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா நேரடியா சொல்லுங்க"
"நீ அதை மறந்துட்டியா?"
"நீங்க தான் அதை மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்"
"என்னால அதை மறக்க முடியும்னு நினைக்கிறியா?"
"ம்ம்ம்"
"நெஜமாவா?"
"ம்ம்ம்... ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்த ஒரு மனுஷன், அதைப் பத்தி ஒன்றுமே பேசலைன்னா, நான் வேற என்ன நினைக்கிறது?"
"பேசினது போதும்னு நினைக்கலாமே"
தன் கண்களை மூடிக்கொண்டாள் பூங்குழலி.
"உனக்கு தூக்கம் வருதா?"
"ம்ம்ம்"
"இல்ல... உனக்கு தூக்கம் வரல"
"அப்படியா?"
"நீ தூங்கிட்டா நான் என்ன செய்ய முடியும்?"
"நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?" என்றாள் கண்களை திறக்காமல்.
"என்ன செய்யணும்னு விளக்கி சொல்லனுமா? இல்ல, செஞ்சு காட்டணுமா?"
"எனக்கு தெரியல..."
"விஷயத்தை என் இஷ்டத்துக்கு, என்கிட்ட நீ விட்டுட்டா, நான் உன்னை தூங்க விட மாட்டேன்"
"நான் ஏற்கனவே தூங்கிட்டேன்" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.
"அப்பாடா நல்ல காலம் நீ தூங்கிட்ட... நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை நெனச்சி எனக்கு ரொம்ப வெக்கமா இருந்தது. ( சிரிக்காமல் இருக்க முடியவில்லை பூங்குழலியால்) இப்போ, நான் எந்த தயக்கமும் இல்லாம, முன்னேறி போய்க்கிட்டே இருப்பேன். ப்ளீஸ் தயவு செய்து தூங்கு... ரெண்டு நாளைக்கு எழுந்துக்காதே"
திடுக்கிட்டு கண் திறந்த பூங்குழலி,
"என்னது? ரெண்டு நாளைக்கா?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"என்ன பண்றது? ரெண்டு நாள் போதாது தான்... நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என்றான் நல்லவனை போல.
புன்னகைத்தபடி தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள் பூங்குழலி. அப்போது, அவன் அவளது கன்னத்தில் கோடுகள் வரைவதை உணர்ந்தாள் அவள். ஒட்டி இருந்த அவளது உதடுகள் பிரிந்தன.
"தூங்கு... கண்ணை திறக்காத..." தன் உதடுகளால் அவளது காதை தொட்டபடி ரகசியமாய் கூறினான்.
கூச்சத்தை உணர்ந்த அவள், கழுத்தை சுளுக்கினாள். அவள் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்ட அவன், அவளது கரத்தில் முத்தமிட்டு, பின் அவளது முகத்தை முத்தம் மழையால் நனைத்தான்.
"நான் நெஜமாவே தூங்கணும்னு நினைக்கிறீங்களா?" என்றாள் அவள் மெல்லிய குரலில்.
"நெஜமாவே நீ தூங்கனுமா?" என்றான் அவள் கன்னத்தில் முத்தமிட்டு.
தன் கண்களை திறந்த அவள், அவன் முகத்தை தன் கரங்களால் ஏந்தினாள்.
"உனக்கு பிடிச்ச என்னோட உதடு தொடும் போது, உனக்கு எப்படி தூக்கம் வரும்?"
"நான் தூங்கலன்னா, உங்க உதடு காயம் படும் பரவாயில்லயா?" என்றாள் எச்சரிக்கும் தொணியில்.
"அதுக்காகவே ஏக்கத்தோட காத்துக்கிட்டு இருக்கு" தன் இதழ்களை அவளது இதழ்களோடு உரசினான்.
"என் உதடை காயப்படுத்து" வேண்டினான் அவன்.
அவனது வேண்டுதலை நிறைவேற்ற, அவன் இதழ்களை பற்றி, தாம்பத்தியத்தின் நுழைவு வாயிலை திறந்து விட்டாள் பூங்குழலி. ஒரு வருடத்திற்கும் மேலாக பூங்குழலியை மனதிற்குள் பூட்டி வைத்து காதலிப்பது என்னவோ மலரவன் தான். ஆனால் பூங்குழலியின் முத்தம், அவளது காதல் அவனுக்கு சளைத்ததில்லை என்று காட்டியது. திருமண பேச்சை ஆரம்பித்த உடனேயே பூங்குழலிக்கும் தன் மீது காதல் மலர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினான் மலரவன். அவளும் கூட, அவனைப் போலவே அவனை மனதில் வைத்து ஆராதித்திருக்க வேண்டும்... தன்னை அறியாமலேயே...!
அவள் கூறியபடி, அவள் அவனை காயப்படுத்த முனைந்தாள் தான்... ஆனால், அதனால் அவன் காயப்பட்டான் என்று கூறுவதற்கு இல்லை. விரும்புவதை அடையும் போது அதில் காயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அது அவனை பரவசத்தில் ஆழ்த்தியது. பூங்குழலி தங்கள் உறவை இவ்வளவு சீக்கிரம் அரவணைத்துக் கொண்டது அவனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. தங்கள் உறவை அவள் ஏற்றுக் கொண்டாள் என்பதற்காக அவள் அவனை முத்தமிட்டாளா? அல்லது அவளும் அவனை காதலிப்பதால் முத்தமிட்டாளா? அதை தெரிந்து கொள்ள வேண்டும் அவனுக்கு. அவளிடமிருந்து பின் வாங்கிய அவன்,
"ஏய் பொண்ணே... நீ உண்மையிலேயே என்னை இவ்வளவு லவ் பண்றியா?" என்றான்.
"இந்த மாதிரி அர்த்தமில்லாத அல்பத்தானமான கேள்வி எல்லாம் கேட்டா, உண்மையிலேயே நான் உங்க உதட்டை கடிச்சிடுவேன்" என்றாள்.
"உன்னோட மிரட்டல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" தன் முக்கால் அவள் கன்னத்தை வருடினான்.
"இந்த உறவை ஏத்துக்க உனக்கு டைம் வேண்டாமா?" என்றான் சிரித்தபடி.
"நான் எப்பவோ ஏத்துக்கிட்டேன்..."
"இப்படி சொன்னா நான் டைம் வேஸ்ட் பண்ணவே மாட்டேன்"
"ம்ம்ம்ம்"
"நெஜமா தான் சொல்றியா?"
"நிஜம் இல்லைன்னு சொன்னா என்னை தூங்க விட்டுடுவீங்களா?"
"நிஜம்னு உன்னை சொல்ல வைப்பேன்... அதோட மட்டுமில்லாம, என் பாவப்பட்ட உதட்டை இந்த பாடு படுத்தி வச்சதுக்கு பிறகு, நீ தூங்க நினைக்கிறது அநியாயம் இல்லையா?"
"உண்மையிலேயே வலிக்குதா?"
"ஜில்லுனு இருக்கு... அதே நேரம், என் நரம்பு எல்லாம் சூடாக்கிடுச்சு... நீ எப்படி அதை கூல் பண்ண போற?"
"நானா?"
"நீ தானே சூடேத்திவிட்ட? அப்ப அதை கூல் பண்ண வேண்டியதும் உன்னுடைய பொறுப்பு தான்"
"அப்படியா?"
"நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு உனக்கு தெரியுமா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"காட்டட்டுமா?"
அவள் மெல்ல கண்ணிமைத்தாள். அதற்குப் பிறகு அவர்களுக்கிடையில் எந்த உரையாடலும் இடம்பெறவில்லை. செயல் மட்டுமே உயிர் பெற்றது, உணர்ச்சிகளே வடிவாய்...! மலரவன் வெளிப்படுத்தியது எல்லாம், அவனது அடி ஆழத்தில் அவனுக்கே தெரியாமல் சேமித்து வைக்கப்பட்ட ஆழமான காதல். பூங்குழலியின் பக்கம் இருந்து வெளிப்பட்டதெல்லாம் *ஏற்றுக்கொள்ளல்* மட்டுமே.
ஒருவருடைய தேவையை மற்றொருவர் புரிந்து கொண்டபின், அங்கு கூடல் சாத்தியப்பட்டது. அவனது ஒவ்வொரு தொடுதலிலும் அவனது ஏக்கம் வெளிப்பட்டது. ஏக்கங்கள் முடிவடைந்து, அவனது முயற்சிகள் வெற்றி அடைந்தது.
தாம்பத்தியத்தின் மிகச்சிறந்த பாதியை வென்று விட்ட பின், மூச்சு வாங்க அவள் மீது சரிந்தான் மலரவன். கண்களை மூடி சிறிது நேரம் அவளது ஸ்பரிசத்தை உணர்ந்த அவன்,
"என்னால இதை நம்பவே முடியல... நீயும், நானும்..." என்று சிரித்தான் மலரவன்.
கண்களைத் திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள் பூங்குழலி. அவளுக்கு நெருக்கமாய் நகர்ந்து, வியர்த்திருந்த அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
"நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு தெரியுமா?"
"எனக்கு தெரியும். உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது"
"நீயும் என்னை காதலிக்கிறேன்னு என்னால நம்பவே முடியல..."
"நீங்க எதையுமே நம்ப மாட்டீங்களா? நான் உங்களை காதலிக்கிறேன்னும் நீங்க நம்பல... நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னும் நீங்க நம்பல..." சிரித்தாள் அவள்.
"நீ நிஜமாவே என்னை காதலிக்கிறியா?"
"நான் ஏன் உங்களை காதலிக்காம போகப் போறேன்? உங்களை மாதிரி ஒரு பைத்தியக்காரனை யார் வேணாலும் காதலிப்பாங்க..."
அதைக் கேட்டு சிரித்த மலரவன்,
"நீ என்னை காதலிப்பேன்னா, நான் பைத்தியக்காரனா இருக்கிறதை சந்தோஷமா நினைப்பேன்"
"நீங்க லட்சத்துல ஒருத்தன் உங்களை மாதிரி யாருமே இல்ல" என்றாள் மெல்லிய புன்னகையோடு.
அவளது கழுத்தடிக்கில் தன் முகத்தை புதைத்துக் கொண்ட அவன்,
"என்னை ரசிக்கிறதை நிறுத்து... இல்லன்னா என்னோட பைத்தியக்காரத்தனம் கட்டுக்கடங்காம போகும்" அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
"நீங்களும் பைத்தியமா மாறி, என்னையும் பைத்தியமா மாத்திடுங்க"
"ஏற்கனவே நீ அப்படித்தான் இருக்க"
"மலர்"
"ம்ம்ம்?"
"உங்களுக்கு ஏன் என்னை பிடிச்சது?"
சிரித்தான் மலரவன்.
"நானும் அந்த கேள்விக்கு தான் பதிலை தேடிக்கிட்டு இருக்கேன். உன்னை ஏன் எனக்கு பிடிச்சதுன்னு எனக்கே தெரியல. ஒருவேளை நீ அந்தாக்ஷரி விளையாடின அழகுல நான் மயங்கிட்டேனோ" என்று சிரித்தான்.
"அடக்கடவுளே... இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல? லவ் மேகிங்க்கு பதிலா நம்ம அந்தாக்ஷரி விளையாடிருக்கலாமே" என்றாள் கிண்டலாய்.
தன் முகத்தை உயர்த்தி அவளை பார்த்தவன், வெடித்து சிரித்தான்.
"என்னை பொருத்தவரை, இப்போ நம்ம ஆடினது கூட அந்தாக்ஷரி தான்... ஏன்னா, இது முடிவில்லாமல் தொடர்ந்துக்கிட்டே தானே இருக்க போகுது... ஒவ்வொரு நாளும்...!" என்று அவளை அணைத்துக் கொண்டான் மலரவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top