தீயாய் சுடும் என் நிலவு 5
தீயாய் சுடும் என் நிலவு 5
"இரு ஒரு நிமிஷம்" என்று உள்ளே ஓடியவன் ஒரு கிளாஸ் தண்ணீருடன் அவளுடைய மாத்திரைகளை எடுத்து வந்தான்.
"இந்தா இந்த மாத்திரையை முதல்ல போடு" என்று நீட்ட, அமைதியாய் வாங்கி போட்டுக்கொண்டு மீண்டும் சோபாவில் சாய்ந்தாள்.
அவளின் அருகினில் தரையினில் அமர்ந்தவன் மிருதியின் தலையை லேசாக கோதிவிட்டான்.
"பாப்பா எங்க அமு?" என்றாள் மிருதி.
"பாப்பா சாப்பிட்டு தூங்குறா. நீ ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்குறேன்." என்றான் அமுதன்.
இங்கு வந்த புதிதில், அமுதனை தன்னுடன் பார்த்த சில தினங்களில் அப்பா ஒரு நாள், "அம்மா மிருதி. எனக்கு எப்படி கேக்குறதுன்னு தெரியலை.... அந்த தம்பி அமுதன் ரொம்ப நல்ல பையனா இருக்கான். நீங்க ரெண்டு பேரும் விரும்புறிங்களாம்மா? அப்படி எதுவாது இருந்தா சொல்லும்மா? நான் அந்த தம்பிகிட்ட பேசுறேன்." என்றார்.
அவரை சிரித்து கொண்டே பார்த்த மிருதி, "அப்பா. கட்டிக்க போறவனுக்கும் பிரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குப்பா. எனக்கு அமுதனை பிடிக்கும். ஆனா, அது நண்பன்ற உறவுல தான். அவனுக்கும் அப்படிதான். அதுவுமில்லாம என்கூட இருக்க ஸ்ரீஷா யாருன்னு நினைச்சிங்க? அவங்க ரெண்டு பேரும் ஒன்றரை வருஷமா விரும்புறாங்கப்பா. நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம, எனக்கு ஆறுதலாகவும் பாதுகாப்பாவும் இருக்க ஸ்ரீஷாகூடயே தங்க வச்சிட்டான். ஸ்ரீஷாவும் ரொம்ப நல்ல பொண்ணுப்பா. என்கூட பொறந்த தங்கச்சியா பாரக்கறேன் பா. அவளும் அப்படி தான் அக்கா அக்கான்னு ரொம்ப அன்பா இருப்பா. நல்ல வேலை இதை என்கிட்ட கேட்டீங்க. அமுதங்கிட்ட கேட்டிருந்தா என்ன நினைச்சிருப்பான்? இங்க என்னை அவங்க ரெண்டு பேரும் தான் நல்லா பார்த்துகுறாங்கப்பா." என்றாள் மிருதி.
"அடக்கடவுளே! நல்ல வேலை. நான் அந்த தம்பிக்கிட்ட பேசலாம்னு இருந்தேன். எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்கிட்ட கேட்டது நல்லதா போச்சு." என்றார் அவளின் அப்பா.
அதை இப்பொழுது நினைத்தவள் சிரித்தாள்.
"எதுக்கு சிரிக்கிற மிருதி?" என்றான் அமுதன்.
அன்று நடந்ததை கூறினாள்.
"அயையோ! அப்பா அப்படியா சொன்னார். பாவம் வெகுளியான மனுஷன்" என்றான் அமுதன்.
"ஸ்ரீஷா எங்க அமு?" என்றாள் மிருதி.
"இப்போ தான் போன் பண்ணா. வந்துட்டே இருக்கேன். வரவரைக்கும் கூட இருன்னு சொன்னா. வந்துடுவா." என்றான் அமுதன்.
"ஓஹ் அப்போ. உங்க வீட்டுக்காரம்மா சொன்னா தான் இருப்பிங்களோ?" என்றாள் அமுதனை வம்பிழுக்க.
"அயையோ! அப்படியெல்லாம் இல்ல தி. நான் என் டார்லிகூட விளையாடிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை. ஷி இஸ் சோ கியூட் இல்ல. அவ இல்லாம நாங்க எப்படி இருக்க போறோம்னு தெரியலை" என்றான் அமுதன் சோகமாக.
"நான் என்ன பண்ணபோறேன்னு தெரியலை அமு." என்று கண்கலங்கினாள் மிருதி.
"சரி. இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். நீ அமைதியா தூங்கு" என்றான் அமுதன்.
மாத்திரையின் வேலையால் உறக்கம் தன்னை தழுவ, அவளின் விழிகள் மூடும் முன் தன்னவனின் கெஞ்சல் முகம் தோன்றியது.
"மிருதி. பிளிஸ் போதும் எனக்கு இந்த மூணு வருஷ தண்டனை. என்கிட்ட வந்துடு" என்றான் தீரன்.
'எனக்கும் ஆசை தான் தீரா. ஆனா, அது நடக்காது.' என்றவள் எண்ணங்கள் மூன்று வருடங்களுக்கு முன் சுழன்றோடியது.
****
மசக்கையின் மயக்கத்தில் உறங்கி கொண்டிருந்தாள் மிருதி.
இரவு பதினோரு மணி, முட்ட முட்ட குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் தீரன்.
வழக்கமாக தனக்கான காத்திருக்கும் மிருதியை காணாமல் போக, நேராக சமையலறை சென்றான்.
அங்கு சமைத்து வைக்கப்படாததால் எரிச்சல் அடைந்தான்.
'வீட்ல இருக்கிறதே சமைக்கிறது ஒரு வேலை தான். அதைக்கூட செய்யாம என்ன பண்றா இவ?' என்று புலம்பியபடி மாடியேறினான்.
தங்களின் அறையிலும் இல்லாததால் கோபம் அதிகமாக, "மிருதி"
"மிருதி" என்று கோபமாக கத்திகொண்டே கீழே இறங்கினான்.
அவளின் குரல் எங்கும் கேட்காததால் அருகிலிருந்த அறைக்கு தள்ளாடியபடியே சென்றான்.
அங்கே மாத்திரையின் மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த மிருதிக்கு இவை எதுவும் தெரிய வாய்ப்பில்லை.
மிருதியின் கையை தன் காலால் மெல்ல தள்ளினான்.
எந்த அசைவும் இல்லாமல் போக மீண்டும் இரண்டு முறை தள்ளினான்.
"ஏய் மிருதி. எந்திருடி. "
*****
Sorry friends. Periya epiya type pannitu thirumbi open ulla onnume illa. Rombha tension aagi again first la irundhu paadhi type panni publish pandren.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top