தீயாய் சுடும் என் நிலவு 46

'அவரை எப்பவோ மன்னிச்சாலும் என் உயிரே போக போகுது இதுல அவரிடம் மீண்டும் தன் அன்பை முழுதும் கொட்டி வாழ ஆரம்பித்தபின், என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் மாமா ... நான் இல்லாமல் போனால் எப்படி தாங்குவார்?' என்றே மனதை கல்லாக்கி கொண்டு தீரனை இத்தனை நாள் தள்ளி வைத்திருந்தாள் மிருதி.

ஆனால், இன்றோ.. அவன் தன்னிடமே எதுவும் கூறாமல் தன் உடல் நிலையை சீராக்கிவிட்டு, இன்று அவள் காணவேண்டும் என்று துடிக்கும் நேரத்தில் கண்முன் வராமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறான் என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியும் அவனை காண வேண்டும் என்று மேலும் ஏங்கி தவித்திருந்தாள்.

அவனும் இவளுக்கு சளைத்தவன் அல்ல என்று வெளிப்படையான அன்பை மறைத்து உருகி கொண்டிருந்தானென்பதை பேதையவள் அறிய வாய்ப்பில்லையே...

"தீரன். நாளைக்கு திய டிஸ்சார்ஜ் செய்யலாம்னு சொல்லிட்டாங்க" என்றான் அமுதன் அலைபேசியில்.

மனம் பூரித்து போனாலும் வெளிக்காட்டி கொள்ளாமல், "ஒஹ்! அப்படியா தீரன்? ரொம்ப நல்லது. பார்த்து பத்திரமா டிஸ்சார்ஜ் செஞ்சு அவங்க வீட்டுல விட்டுடுங்க." என்றான் தீரன்.

"எ..ன்.ன சொல்றிங்க தீரன்?" என்றான் காதுகளில் சரியாக விழவில்லையோ என்று.

"அவங்க வீட்ல சேப்பா கூட்டிட்டு வந்து விட்ருங்க அமுதன். எனக்கு நிறைய வேலையிருக்கு நான் வைக்கவா?" என்று வைத்துவிட்டான்.

ஸ்ரீஷாவிடம் இதை கூறியவன், "மிரு கண்ணு முழிச்சதுலர்ந்து இவன் ஆளே சரியில்ல. ஒன்னும் புரியலை." என்றான் கவலையாக அமுதன்.

"எல்லாம் சரியாகிடும்பா. மாமா அக்கா மேல அளவுகதிகமா லவ் வச்சிருக்காங்க. விடு.. ஏதோ கோபம். நிச்சயம் சீக்கிரம் சரி ஆகிடும்" என்று சமாதானம் கூறினாள் ஸ்ரீஷா.

இத்தனை நாள் தான், வரவில்லை இனியாவது வருவான். வந்து டிஸ்சார்ஜ் செய்து தன்னையும் கூட்டி செல்வான் என்ற மங்கையின் கனவில் மண்ணள்ளி போட்டான் மன்னனவன்.

"அமு எங்க அவர் வரலையா?" என்றாள் சற்று ஏக்கமாக.

அவளின் நிலை புரிந்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறேனே என்று மிகவும் நொந்து போனான் அமுதன்.

"இல்ல தி. வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிருக்கார். ரொம்ப முக்கியமான வேலையாம். சீக்கிரம் வந்துறேன்னு சொல்லிருக்கார்." என்றான் அமுதன்.

"அம்மா!" என்று வாசலில் குரல் கேட்டவுடன் தொலைந்து போன இன்பத்தில் பாதி மீண்டு வந்தது போல் இருந்தது மிருதிக்கு.

"திஷா செல்லம்!" என்றாள் அன்பாய்.

"அம்மா!" என்று மிருதியின் அருகில் ஓடியது குழந்தை.

"பேபி! பார்த்து அம்மாவை ஸ்டரைன் பண்ண வைக்காத" என்றான் அமுதன்.

திரும்பி அவனை பார்த்து முறைத்த குழந்தையை, 'என்ன இப்படி பார்க்கிறா? ஏதாவது ஏடாகூடமா திட்டிருவாளோ? என்னடா இது அமுதா இந்த மாதிரி சில்வண்டுகிட்ட எல்லா பயப்படுவேன்னு என் கனவுல கூட நினைச்சது இல்லையே? அய்யோ இப்போ குட்டிபிசாசு என்ன சொல்லபோறான்னு தெரியலையே.. குருகுறு ன்னு வேற பார்க்கிறாளே?' என்று யோசிக்க, "சரி டார்லி" என்றதோடு நிறுத்தி கொண்டது குழந்தை.

"சரி தீ. நீ பாப்பாகூட பேசிட்டு இரு. நான் போய் ஹாஸ்ப்பிட்டல் பில் எவ்வளவு கட்டணும்னு பார்த்து பே பண்ணிட்டு வரேன்" என்று வெளியே சென்றான் அமுதன்.

"திஷா செல்லம். நீ மட்டுமா வந்த உன்கூட யாரு வந்தா?" என்று விழிகளை வாசலில் நிறுத்தினாள்.

ஒருவேளை தீரன் தான் குழந்தையை கூட்டி  வந்திருப்பானோ என்ற ஒரு நப்பாசையில்.

"ஸ்ரீம்மா கூட வந்தேன் மா." என்றது குழந்தை.

"ஒஹ். சாப்பிட்டியா டா." என்றாள் மிருதி.

"சாப்பிட்டேன்" என்றாள் திஷா.

"சரி ஸ்ரீ எங்கடா?" என்றதும் திரும்பி பார்த்த குழந்தை, "போன் பேசுறாங்க" என்றாள்.

குழந்தையின் கரத்தில் இருக்கும் சிறு பையை பார்த்து, "என்னடா அது கைல ஏதோ வச்சிருக்க?" என்று கேட்கவும்.

"இது அப்பா உங்ககிட்ட கொடுக்க சொன்னார்" என்று அந்த கவரை மிருதியிடம் நீட்டியது.

'தீரன் கொடுத்துவிட்டானா? என்ன அது? எதுக்கு குழந்தையிடம் கொடுத்துருக்கார்?' திக் திக் என்று ஆயிரம் எண்ணங்கள் ஓட உள்ளம் படபடக்க கரத்தில் வாங்கினாள்.

பார்க்கலாமா... வேண்டாமா.. என்ற சிறிய போராட்டத்திற்கு பின், மெதுவாய் திறந்தாள்.

அதில், மிருதி தீரன் பேரில் எழுதி வைத்த கடை பத்திரம் இருந்தது கூடவே இன்னொரு பத்திரமும் இருந்தது.

மீண்டும் மிருதியின் பெயரிலேயே எழுதியிருந்தான். இப்பொழுது தீரன் இருக்கும் எதிர்வீட்டையும் மிருதியின் பெயரில் பதிந்திருந்தான்.

அவள் இவர்கள் எல்லோரையும் தவிக்கவிட்டு இந்நேரம் எந்த நாட்டிலிருக்க ஆசைப்பட்டாளோ? அந்த நாட்டிற்கு இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து செல்ல, பிளைட் டிக்கெட் இருந்தது.

இவற்றை பார்த்தவுடன், மிருதியின் இதயம் தாறுமாறாக ஓடத்தொடங்கியது.

எதுக்கு பிளைட் டிக்கெட் கொடுத்திருக்கான்.

அதில் இருந்த கடிதத்தையும் நடுங்கும் கரத்தோடு பிரித்து வழியும் கண்ணீரை துடைக்காமலே படிக்க தொடங்கினாள்.

என் அன்பிற்குரியவளே! என்று கூற ஆசை தான் இருந்தும் என் செய்வேன்?? என் அன்பில் இன்னும் உனக்கு சந்தேகம் இருப்பது உறுதி எனும்பொழுது எவ்வாறு கூறுவது..? அதனால் என் உயிருக்கு உரியவளே, உறுதியாக இவ்வாறு கூற என்னால் முடியும் ஆம் என் உயிர் என்றும் உனக்கு மட்டுமே சொந்தம்.

நான் கடந்த காலத்தில் செய்தது மன்னிக்க முடியாத மிகப்பெரும் தவறுதான். இருந்தும் உன் மன்னிப்பையும் அன்பையும் வேண்டி உன்னருகிலே தவமாய் இருந்தேன். என் அன்பே உன்னை கொல்லுவதாய் நினைத்து, என்று எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு தனியாய் சென்று வாழ நினைத்தாயோ அன்றே முடிவெடுத்து விட்டேன். இனி, உன் முன் வரக்கூடாது என்று. என் உயிராய் நினைக்கின்ற உன் உயிரை காப்பாற்றும் வரை இங்கிருக்க நினைத்திருந்தேன். கடவுளின் அருளால் நீ நலமாக பிழைத்துவிட்டாய்... என் பேரில் இருந்த சொதுக்கள் அணைத்தையும் உன் மீது எழுதியுள்ளேன். இனி உன்னை தொந்தரவு செய்யமாட்டேன். உன் விழிகள் தீண்டா இடதிற்கு செல்கிறேன். உயிரிருக்கும் வரை உன் நினைவே போதும் எனக்கு.

இப்படிக்கு

உன்னுடன் வாழமுடியா துர்பாக்யசாலி.

படிக்க படிக்க விழிகளில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

'நாம இனி வாழலாம்னு நினைக்கும் போது விட்டுட்டு போறாரா? வாழ ராசியில்லாதவ போல நான்.' என்று ஆழ தொடங்க அவளருகில் இருந்த கைபேசி ஒலித்தது.

எட்டி எடுத்தவள் தீரன் எண்கள் ஒளிர முகம் பிராகாசிக்க அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ!"

" " எதுவும் பேசாமல் கண்ணீர் வழிந்தது.

"நீ பேசமாட்டேன்னு தெரியும். இருந்தாலும் உன் குரலை கேட்கணும்னு பண்ணேன். இட்ஸ் ஒகே. நான் கிளம்புறேன். நீயும் திசாவும் பத்திரமா இருங்க. எங்க இருந்தாலும் என் மனசு உங்களை சுத்தி தான் இருக்கும். வரேன். .. இல்ல போறேன்" என்றான் தீரன்.

"மா... மா.. " உணர்ச்சிகளை தேக்கியிருந்த அவளின் குரலில் அவனும் நொறுங்கிவிட டான் போனான்.

"மாமா" மிருதி மீண்டும் அழைக்க, அவனோ தன்னை கட்டுபடுத்த முடியாமல் துண்டித்திருந்தான்.

"என்ன செய்யலாம்?? இனி அவரை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. என்ன ஆனாலும் அவர போக விடமாட்டேன்" என்றவள், "அமுதா" என்று உரக்க அழைத்தாள்.

"என்ன தி?" என்று பதறிக்கொண்டு வெளியில் இருந்து ஓடி வந்தான் அமுதன்.

எதுவும் பேசாமல் தீரன் எழுதிய கடிதத்தை நீட்டினாள்.

வாங்கி படித்த அமுதனும் ஸ்ரீஷாவும் அதிர்ந்து போனார்கள்.

"நீ என்ன செய்வியோ தெரியாது. அவர் எங்கயுமே போக கூடாது. என் வாழ்க்கை இனி அவர் கூட தான். " என்றாள் மிருதி திட்டவட்டமாக.

"உண்மையாவா?" என்றான் மகிழ்ச்சியாய் அமுதன்.      

'ஆம்' என்று புன்னகைத்தபடி தலையசைத்தாள் மிருதி.

"நீயே சொல்லிட்ட அப்புறம் மறுப்பேது? இனி அவன் எப்படி போறான்னு பார்க்கலாம்?" என்றவன் என்ன செய்வது என்று யோசித்தாள்.  

  "அமுதா" என்றாள் யோசனை வந்தது போல்.

"என்ன தி?" என்றாள் அமுதன்.

"அத்தை அவர்கூட தானே இருக்காங்க?" என்றாள்.

"ஆமா. அவன்கூட தான் இருக்காங்க" என்றான் அமுதன்.

"அவங்க நம்பர் இருக்கா?" என்றாள்.

"இருக்கே. எதுக்கு அவங்க நம்பர்? என்ன பண்ண போற?" என்றான் கேள்வியாய்.

"அத்தைக்கிட்ட நான் பேசணும். போன் பண்ணி கொடு" என்றாள் மிருதி.

"சரி." என்று தீரனின் அம்மாவிற்கு போன் செய்து கொடுத்தான்.

"ஹலோ!" எதிர் முனையில் அவள் அத்தையின் குரல்.

"அத்தை நான் மிருதி பேசுறேன். நான் பேசுறதா காட்டிக்காதீங்க. அவர் அங்க தான இருக்கார்?" என்றாள்.

"ஆமா" என்றார் ஒற்றை வரியில் எதிரில் வேலை செய்துக்கொண்டிருக்கும் தீரனை பார்த்தபடி.

"அத்தை நான் உங்கமகன் கூட சந்தோஷமா வாழணும்னு நீங்க நினைக்கிறீங்கல்ல?" என்றாள் மிருதி.

"ஆமா" என்றார் ஏக்கமாய்.

"அப்போ சரி அத்தை. நாங்க இனி குடும்பமா வாழ்றது உங்ககிட்ட தான் இருக்கு" என்றாள் மிருதி.

**********

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top