தீயாய் சுடும் என் நிலவு 28
'யாரோ சிரிச்சா மாதிரி இருக்கே?' என்று முணுமுணுத்தவள் சமையலறையில் இருந்து வெளியே வந்தாள்.
'டேய்! மாட்டிக்காத ஓடு ஓடு' என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டே ஓடி மறைந்தான் தீரன்.
வீட்டு வாசலில் இருந்து வெளியே எட்டி பார்த்தவள் யாருமில்லை என்றபின், 'இல்லையே யாரோ சிரிச்சா மாதிரி இருந்ததே?' என்று போனை காதில் வைக்க அமுதன் கலகலவென சிரித்தான்.
"நீ தானா எருமை சிரிச்சது? நா யாரோன்னு வெளிய போய் தேடிட்டு வரேன்." என்றாள் மிருதி.
"அதுசரி நீ என்ன பண்ற? உனக்கு போர் அடிக்கும்ல?" என்றான் நக்கலாக.
"எனக்கு பிடிச்ச மாதிரி கோவைக்காய் பச்சடி செஞ்சு சாப்பிட போறேன். அதுக்கு தாளிச்சிட்டு இருக்கேன். உனக்கு என்ன வேணும் இப்போ எதுக்கு போன் பண்ணி என் மூடை ஸ்பாயில் பண்ற?" என்றாள் நக்கலாய்.
"செல்லக்குட்டி நீ என் பெஸ்ட் பிரென்ட் தான? எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடேன். எப்போ பாரு ஒண்ணே சாப்பிட்டு நாக்கு வறண்டு போச்சும்மா. ப்ளீஸ்" என்றான்.
"டேய் அதுக்கு தான் உனக்குன்னு ஒருத்தி இருகால்ல அவகிட்ட போய் கேளு. நான் என் மாமனுக்கு தான் சொல்லி தரணும்" என்றதும்
"ஹுக்கும் சொல்லி தந்துட்டாலும்" என்றான் அமுதன்.
'அயோ என் செல்லம் இப்போ கூட என்னை தான் சொல்றா' என்று குதுகலித்தான்.
"நான் உன் பிரென்டுடி. ப்ளீஸ்" என்றான் அமுதன்.
"சரி போனா போகட்டும். இவ்ளோ கெஞ்சுறியே அதுக்காக சொல்லி தரேன்" என்றாள் மிருதி.
"சரி டி" என்றான் அமுதன்.
"என்னது டியா?" என்றாள் சத்தமாக.
"இல்லல்ல தி ன்னு சொன்னேன்" என்றான் அமுதன்.
"அதானே பார்த்தேன். சரி எனக்கு நேரமாகுது நான் செஞ்சுட்டே சொல்றேன். நீ கேட்டுக்கோ" என்று சமையலை செய்துகொண்டே பேசினாள்.
"முதல்ல ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, தேங்காய் ரெண்டு பத்தை கோவைக்காயை எல்லாம் அறிஞ்சுக்க. வாணலில ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்து கடலை பருப்பு போட்டு சிவந்ததும் வெங்காயம், கருவேப்பிலை, புலி, காஞ்ச மிளகாய் போட்டு ரெண்டு நிமிஷம் வதக்கணும் கோவைக்காய், தேங்காய் போட்டு நல்லா வதக்கணும் அப்புறம் ஆறவச்சி உப்பு போட்டு அறைக்கனும். நைஸ் சா அரைக்காம ரெண்டு முறை மட்டும் சுத்தனும் அபொ தான் சாப்பாட்டுக்கு பிசைந்து சாப்பிட நல்லா இருக்கும்."என்றாள் மிருதி.
"சரி. நான் செஞ்சு பார்க்கிறேன். நீ மட்டும் தனியா இருக்கணும் இல்ல?" என்றான் அமுதன்.
"டேய் கடுப்பை கிளப்பாத. ஆசையா சாப்பிடலாம்னு வந்தா. ஏன்டா எருமை இப்போ பண்ண?" என்றாள் மிருதி.
"நான் டார்லிங்கூட ஜாலியா விளையாடிட்டு இருக்கேன். நீ என்ன பண்றேன்னு கேட்கணும்னு தோணுச்சு அதான் போன் பண்ணேன்." என்று சிரித்தான்.
"டேய்! குரங்கு. என் மாமா எனக்காக அவர் ஞாபகமா கொடுத்த ஒரே பரிசு என் செல்ல குட்டி தான். அவமூலமா தான் தினமும் நான் அவரை பார்க்கிறேன். எருமை மாடு நான் மட்டும் தனியா இருக்கமாட்டேன்னு உனக்கு தெரிஞ்சும் இன்னைக்கு ஏமாத்தி அவளை கூட்டிட்டு போய்ட்ட." என்றாள் குறைகூறும் சிறுகுழந்தை போல்.
"இப்போ பிரச்சனை நான் டார்லிங்கை கூட்டிட்டு வந்ததா இல்ல உன் மாம்ஸ் கிப்ட்டை எடுத்துட்டு வந்துடேன்றதா? அவளோ உன் மாமாவை மிஸ் பண்ணா அங்கு வந்து உன் தரசினம் கிடைக்காதான்னு உட்கார்ந்திட்டு இருக்காரே, அவர்கிட்ட சொல்ல வேண்டியது தான?" என்றான் அவளை கோபப்படுத்தும் நோக்கத்தோடு.
"டேய் என் மாமாவை பத்தி எதுவும் பேசாத அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வந்துரும் சொல்லிட்டேன்" என்றாள் மிருதி எச்சரிக்கும் விதமாக.
"உன்கூட ஒழுங்கா வாழாம உன்னை கொடுமைப்படுத்தின உன் மாமன் உனக்கு நல்லவன். நான் அவனை பத்தி எதுவும் பேச கூடாதா? " என்றான் அமுதன்.
"யாரு சொன்னா கொடுமை படுத்தினான்னு? அவர் என் கூட வாழலைன்னா என்ன? உன்னைவிட என்னை நல்லா தெரிஞ்சவங்க யாரும் இருக்க முடியாது அமு. இந்த உலகத்துலையே என் கணவனா நான் நேசிச்ச நேசிக்க போறது அவரை மட்டும் தான்னு அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத பேச்சு?" என்றாள் மிருதி.
"அவ்ளோ ஆசை இருந்தா இவ்ளோ நாளா நீ பேச மாட்டியான்னு உன்னை சுத்தியே வராரே பேச வேண்டியது தானே தி. நீயும் வறுத்திக்கிட்டு அவரையும் கஷ்டப்படுத்துறியே எதுக்காக தி?" என்றான் அமுதன் தான் பேச வந்த விஷயத்தை கூற.
"என்ன பேசுற அம்மு நீ? மூணு வருஷத்துக்கு முன்னாடி அவர் என்ன பண்ணாரு ன்னு அவருக்கு தெரியுமான்றதே எனக்கு சந்தேகமா இருக்கு?. இந்நேரத்துக்கு எல்லாம் சரியா இருந்தா திஷா பாப்பாகூட இன்னொரு பையனோ பொண்ணோ விளையாடிட்டு இருக்கணும்? அது அவர் கொடுத்த இன்னொரு பரிசு. ரத்தமும் சதையுமுள்ள அவரோட உயிர். அதை அவரே அழிச்சிட்டார். ஆனா இன்னைக்கு மூணு வருஷம் கழிச்சு எதுவுமே நடக்காத மாதிரி நான் உன்கூட சேர்ந்து வாழனும்னு சொன்னா மட்டும் போதுமா? என்னை உடனே மன்னிக்க சொல்றியா? அன்னைக்கு அவர் பேசின வார்த்தைகள் இன்னும் ரணமா ஆறாமல் அப்படியே இருக்கு அமு" என்றாள் சமயலறையிலேயே மடங்கி அமர்ந்து கண்ணீரோடு.
"டேய் சாரி தி. ப்ளீஸ் நீ அழாத. இதை பத்தி இனி நான் பேசமாட்டேன்" என்றான் அமுதன்.
ஓடி சென்று அள்ளியணைக்க துடித்த கரங்களை கட்டி போட்டவன் உள்ளே நுழைந்தான் தீரன்.
அருகில் குனிந்தவன் ஒற்றை விரலால் அவளின் கண்ணீரை சுண்டிவிட்டு தன் விழிகளால் மருந்திட முடியுமா என்று முயன்று கொண்டிருந்தான்.
"ஹலோ! ஹலோ! " என்று பதட்டமாய் கத்தி கொண்டிருந்தான் அமுதன் எதிர்முனையில்.
"நான் அப்புறம் பேசுறேன்" என்று வைத்தவள் எழுந்து ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
என்ன நடந்தாலும் சரி இன்னைக்கு பேசியே ஆகணும் என்ற முடிவோடு எழுந்து அவளிடம் வந்தான் தீரன்.
மிருதிக்கு இப்பொழுது தான் அமுதன் மேல் சந்தேகம் வந்தது.
'வேணும்னே என் வாயை கிளறி போட்டு வாங்கிட்டானோ? பக்கி பய கைல மாட்டினான் தொலைஞ்சான்' என்று உள்ளுக்குள் குமுறினாள்.
தீரன் தன் எதிரே வந்து நிற்கிறான் என்பது தெரிந்ததும் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.
சமையலறை சென்றவன் மீண்டும் அவளின் முன் வந்து அமர்ந்தான்.
ஓரகண்ணில் அவனை நோட்டமிட கையில் தட்டுடன் இருந்தான்.
"இந்தா சாப்பிடு. என் மேல கோவமிருந்தா சாப்பாடு என்ன பண்ணுச்சு?" என்று சாப்பாடை ஊட்டிவிட, அவனை முறைத்து தட்டிவிட்டாள்.
"எனக்கே சாப்பிட தெரியும். உங்க அக்கறை ஒன்னும் தேவையில்லை." என்றாள் வெடுக்கென்று.
சாப்பாட்டு தட்டை கீழே வைத்தவன்.
"மிரு ப்ளீஸ். நான் பண்ணது தப்பு தான். அன்னைக்கு என்ன நடந்தது. ப்ளீஸ் சொல்லு. எனக்கு தெரிஞ்சிக்கணும்" என்றான் தீரன் கெஞ்சலாய்.
"என்ன மூணு வருஷமா இல்லாத அக்கறை திடீர்னு அன்னைக்கு நடந்ததை கேட்குறீங்க?" என்றாள் மிருதி.
"மிரு ப்ளீஸ். அன்னைக்கு அதிகமா குடிச்சிருந்ததால என்ன நடந்துதுன்னே தெரியலை. மறுநாள் நீ வீட்ல இல்லாம உன்னை தேடாத இடமில்லை. உன்னை தேடக்கூடாதுன்னு உங்கப்பா வந்து என்னை அடிச்சிட்டு போனாரு." என்றான் தீரன்.
"ஒஹ் எங்கப்பா வந்தாரு. உங்களை அடிச்சாரு. அதனால என்னை அதாவது உங்க பொண்டாட்டியை தேடி வரலை அப்படி தானே?" என்றாள் மிருதி மிகவும் கோபமாய்.
"இல்ல. மாமா என்ன பேசினாரோ தெரியாது. ஆனா, அம்மா வீட்டுக்கு வந்து ... அவங்க மேல கெரோஸின் ஊத்திகிட்டாங்க. பதறி தடுக்க போனப்ப, நான் எங்கண்ணன் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. உன்னால எங்க அண்ணன் அவர் மூஞ்சிலையே முழிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. இதுவரைக்கும் நீ அந்த பொண்ணுக்கு பண்ணதெல்லாம் போதும். நான் உயிரோட இருக்கணும்னா இனி நீ அவ எங்க இருக்கான்னு தேட கூடாது. அப்படி தேடினின்னா நான் இப்பயே சாகிறேன் என்னை விட்ருன்னு சொன்னாங்க. அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு என் மனசை கல்லாக்கிட்டு உன்னை தேடாம இருந்தேன்." என்றான் தீரன்.
எதுவும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் மிருதி.
"நீ என்கூட இருந்தப்ப நீ தான் என் வாழ்க்கைன்றதை நான் உணரலை. ஆனா, நீ போனப்புறம் அந்த வீடு எனக்கு நரகமாகிடுச்சு. உன்னோட சிரிப்பு சத்தம் இல்லாம வீடே களையிழந்து போச்சு. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் மிருதி" என்றான் தீரன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top