தீயாய் சுடும் என் நிலவு 13
"ரொம்ப சந்தோஷம் அமுதா. இன்னும் நீ பெருசா வளரனும்" என்றாள் மலர்ந்த முகத்துடன் மிருதி.
"என்னால கண்டிப்பா முடியும் தி. ஆனா உன்னோட உதவி வேணும் எனக்கு" என்றான் அமுதன் தயக்கமாய்.
"என்ன உதவி அமுதா? எதுக்கு இப்பைத் தயங்குற?" என்றாள் மிருதி.
"இல்ல.. இந்த கேப் நல்லா போய்ட்ருக்கு. எல்லா கடனும் ஆறு மாசதுக்கு முன்னயே அடைச்சிட்டேன். இப்போ இன்னொரு கேப் நல்ல விலைக்கு வருது" என்றான் அமுதன்.
"வாவ் அமுதா! சூப்பர். சோ, அதுக்கு பணம் இருக்கா இல்லை இன்னும் நிறைய தேவைபடுதா? நிறைய தேவைபடுமே? என்ன பண்ண போற?" என்றாள் நெற்றி சுருக்கி கவலையாய்.
அவளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவன்.
"நீ அதை பத்தி எல்லாம் கவலை படவேண்டாம் தி. உண்மை தான். பணம் ஓரளவு இருந்தது. ஓரளவு பிரட்டிட்டேன். இன்னும் கொஞ்சம் தேவைபடுது. பட் அதையும் நான் சரி பண்ணிடுவேன். ஆனா உன்னோட உதவியாய் நான் கேட்டது நான் புது கேப் திறக்க அலைஞ்சிட்டு இருக்கேன். ஸ்ரீயும் அவ வர்க் ல இருக்கா. சோ இப்போ கேப்பை பார்த்துக்க யாரும் இல்லை. உன்னால பார்த்துக்க முடியுமா?" என்றான் அமுதன் கெஞ்சலாய்.
அவளை முறைத்த மிருதி, "இதுக்கு ஏன்டா இவ்ளோ யோசிக்கிற?" என்றாள் மிருதி.
"ஹ்ம்... நீ இனி என் கேப்கு மேனேஜர் உனக்கு சம்பளம் 20000" என்றான் அமுதன்.
"ஏய்! திருட்டு பயலே! நான் வேற எங்கையும் வேலைக்கு போக கூடாதுன்னு நீங்க ரெண்டு பேரும் செய்ற வேலையா இது?" என்றாள் மிருதி.
ஸ்ரீயும் அமுதனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.
"எனக்கு நீ இந்த நிலமைல வெளிய வேலைக்கு போறது பிடிக்கலை தி. அது உனக்கு சேஃப்டி இல்ல தி. பிளீஸ், எனக்கும் இப்போ ஆள் தேவை. அது நீயா இருந்தா நான் கவலை இல்லாம என் வேலைய பார்ப்பேன்." என்றான் அமுதன்.
"ஆமாக்கா! சரி சொல்லுங்க" என்றாள் ஸ்ரீ.
"சரி! ஆனா ஒரு கண்டிஷன் " என்றாள் மிருதி.
"என்ன?" என்றனர் இருவரும்.
உள்ளே சென்று ஒரு பெட்டியுடன் வந்தவள் தன் கையில் இருந்த பெட்டியை அமுதனிடம் கொடுத்தாள்.
"என்னதிது தி?" என்றான் அமுதன் வாங்காமல்."இதை நீ வாங்கிக்கிட்டா தான் நான் வருவேன்" என்றாள் மிருதி.
வாங்கி திறந்து பார்த்தவன். "இல்ல தி. என்னால ஏற்பாடு பண்ண முடியும். உன் நகையெல்லாம் இருக்கட்டும். நான் கேக்காமயே நீ கொடுத்த பார்த்தியா அது போதும் எனக்கு." என்றான் அமுதன் சிரித்து.
"அமுதா! என்கிட்ட இந்த நகையெல்லாம் சும்மா தான் இருக்கு. உனக்கு இப்போ காசு தேவைப்படுது. இதை யுஸ் பண்ணிக்க" என்றாள் மிருதி.
"இல்ல தி" என்றான் அமுதன்.
"அப்போ என்னால வர முடியாது" என்றாள் கோபமாய் நெஞ்சிற்கு குறுக்கே கைகளை கட்டி கொண்டு.
சிறு குழந்தை போல் சண்டைக்கு நிற்கும் அவளை பார்த்து இருவரும் சிரிக்க, அமுதன் ஸ்ரீயை விழிகளால் கேட்க, 'வாங்கிக்க' என்றாள் ஸ்ரீ விழிகளை மூடி ஆதரவாய்.
"சரி தி. நான் எடுத்துக்குறேன்" என்றான் அமுதன்.
"அப்போ நானும் வரேன்" என்று அன்றில் இருந்து அமுதனின் கேப்பை கவனிக்க ஆரம்பித்தாள் மிருதி.
மாதங்கள் உருண்டோட, கேபும் நன்றாக ஓடியது.
மிருதிக்கு இது ஒன்பதாவது மாதம். அவளின் விழியில் ஒரு வித ஏக்கம் இருப்பதை கண்டு இருவரும் என்ன என்று கேட்க, ஒன்றுமில்லை என்றாள் மிருதி.
"ஸ்ரீ! அவளுக்கு வளைகாப்பு பண்ணலாமா?" என்றான் அமுதன்.
"நானும் அதையே தான் நினைச்சேன் அமுதன். அவங்களுக்கு அவங்க அம்மா அப்பா ஏக்கமும் இருக்கு. நாம அவங்களை வர சொல்லலாம்" என்றாள் ஸ்ரீஷா.
அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு கேபின் ஊழியர்கள் ஸ்நேகிதர்கள் என்று அனைவரையும் வரவழைத்து வளைகாப்பு ஏற்பாடு செய்யபட்டது.
"எதுக்கு டா இதெல்லாம்?" என்றாள் மிருதி வார்த்தைகளில் வேண்டாம் என்று சொன்னாலும் விழிகளில் ஒரு ஒளி மின்னியது. இதை கண்டு இருவரும் சிரித்தனர்.
"உன்னை பார்க்க ஒரு சிலர் வந்துருக்காங்க" என்றான் அமுதன்.
"யாரு?" என்றாள் மிருதி.
"இவங்க தான்." என்று விலகி நிற்க அங்கே அவளின் பெற்றோர் கண்ணீருடன் நின்றிருந்தனர்.
அவர்களை கண்டவுடன் மனதில் ஒரு இன்பம் இழைந்தோட, முகத்தில் மட்டும் வெறுமை காட்டி, "அமுதா! இவங்க எதுக்கு வந்துருக்காங்க?" என்றாள் மிருதி.
"அம்மாடி! நீ எங்க இருக்கன்னு தெரியாம எவ்ளோ தவிச்சு போனோம்னு தெரியுமா? இவ்ளோ நாள் கழிச்சு எங்க பொண்ணு இருக்க இடம் தெரிஞ்சு எவ்ளோ சந்தோஷமா உன்னை பார்க்க வந்துருக்கோம். எங்களை பார்த்து இப்படி கேக்குறியேம்மா?" என்றார் அவளின் தந்தை.
"நீங்க உங்க பெண்ணை வாழவைச்சிருந்தா அவ ஏன் இப்படி கேக்க போறா? நீங்க உங்க தங்கச்சியோட கண்ணீருக்கும் அவங்க கவரவத்தை காப்பத்துறதுக்கும் என்ன ஏதுன்னு விசாரிக்காம என் வாழக்கைய தாரை வார்த்து கொடுத்துட்டிங்க." என்றாள் மிருதி.
"அம்மாடி இப்படி உன் வாழ்க்கை ஆகும்னு எனக்கு தெரியாதுமா. என்னை மன்னிச்சிரும்மா" என்றார் அவளின் அப்பா.
அடக்கி வைத்திருந்த துக்கம் அனைத்தும் வெளியே கண்ணீராய் வெளியே வர உடைந்து அழுதாள் மிருதி.
"அம்மாடி அழாதடா. எல்லாம் முடிஞ்சிருச்சி. அப்பா இருக்கேன்டா உனக்கு" என்று அவளை அணைத்து கொள்ள. அன்றில் இருந்து அவளின் பெற்றோர் அவளை அவ்வபொழுது வந்து பார்த்து சென்றனர். தான் இங்கிருப்பது அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் சொல்ல கூடாது என்ற மிருதியின் கண்டிப்பின் பேரில்.
அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றேடுத்தாள் மிருதி.
அவளின் காதிலிற்கு சாட்சியாய் அவளின் கணவனின் மறு உருவமாய் இருந்தாள் அவளின் மகள்.
அதன்பிறகு மிருதியின் பெற்றோர் ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி மிருதியை கவனித்து கொண்டனர். மிருதி தேரிய பின் வீட்டிற்கு சென்றனர்.
மிருதியை தன்னோடு வருமாறு எவ்ளோ வற்புறுத்தியும் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
அமுதன் எவ்வளவு தடுத்தும் குழந்தையுடன் கேப்பிற்கு வந்தாள் மிருதி.
மிருதியின் ஆலோசனைபடி புது கேஃபை அவள் பொறுப்பெடுத்துகொண்டு அதில் சிறு மாற்றங்களை கொண்டு வந்து ரெஸ்டாரன்ட்டாய் மாற்றினாள்.
தன் கைவண்ணங்களை தினமும் ஒரு புதிய சமையல் என்று காட்ட, அவளின் உணவின் ருசிக்கு அடிமையான கஸ்டமர்கள் அதிகரிக்க நல்ல பெயரை எட்டியது ரெஸ்டாரண்ட்.
அமுதனுக்கு மிருதியின் திறமையை பார்த்து பெருமையாக இருந்தது.
"சத்தியமா சொல்ட்றேன் தி. நான் ஓபன் பண்ணிருந்தா கண்டிப்பா கேப்பா தான் இருந்திருக்கும். ஆனா உன்கிட்ட பொறுப்பை கொடுத்தப்புறம் எவ்ளோ மாற்றங்கள். இவ்ளோ மாற்றங்கள் வரும்னு நான் எதிர்பார்கலை தி." என்றான் அமுதன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top