வணக்கம்


தமிழம் விருதுகள் 2021ஐ உங்கள்முன் அறிமுகம் செய்வதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறோம்.





வாட்பேடை வசிப்பிடமாகக் கொண்டுள்ள சில ஜீவராசிகளில் நாங்களும் அடக்கம். வீடாக இதைக் கருதுபவர்கள் நாங்கள். எனவே, வீட்டுக்கு ஒருமுறை வெள்ளையடித்து விழாக் கொண்டாட வேண்டாமா என யோசித்து, அதற்காகத் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி தான், தமிழம்.

.

தமிழம் என்றால் என்ன? 'அம்' என்ற அடைச் சொல்லுக்கு, கூடியிருத்தல், குழுவாக இருத்தல் போன்றவை பொருளாக வரும். 'குடும்பம்', 'கழகம்' , 'கதம்பம்' போன்றவை எடுத்துக்காட்டுகள். தமிழ் மக்கள் யாவரும் கூடும் ஒரு விழாவுக்கு தமிழம் என்ற பெயரைத்தவிரப் பொருத்தம் ஏது? தமிழ்க்குலம், தமிழ்க் குடும்பம் என்பதே தமிழம்.

வாட்பேடின் தமிழ் எழுத்தாளர்களுக்கான, தமிழ் கதைகளுக்கான ஒரு சங்கமம். விதிமுறைகள், விழா அட்டவணைகள் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும். இப்போதைக்கு, இந்தப் பெயர் உங்கள் மனதில் நிற்கட்டும். வார்த்தை பரவட்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லுங்கள். அவர்களும் வந்து எட்டிப் பார்க்கட்டும்!😊

Let the word spread around... let everyone have a look around...let the party start in style!!!

Any questions? Pop it up here!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top