சுவாசம் 31❤️

எழில் சென்று மருத்துவரை அழைத்து வர மருத்துவர் இசையை சோதித்து பார்த்தவர் மிஸ்டர் எழில்...என அழைக்க

சொல்லுங்க டாக்டர்... என்றான் அவனும்

உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் .. என எழிலை இசையிடம் இருந்து சற்று தொலைவில் அழைத்து சென்றார் மருத்துவர்.

உங்க ஒய்ப்க்கு ஹார்ட்பீட் அன்ட் பல்ஸ் எல்லாமே நார்மலாகிடுச்சி... பட் முழுசா கியூர் ஆகல..இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட முடியாது...ஸ்ட்ரெஸ் ஆகாம மட்டும் பாத்துக்கோங்க..கம்ப்ளீட்டா ரெஸ்ட் வேணும் அவங்கள கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்கோங்க...எனவும்

ஓகே டாக்டர் தேங்க் யூ ...என்ற எழில் பெருமூச்சு விட்டு நின்றான்..

நாங்க எங்க கடமையை தான் செஞ்சோம்... நீங்க கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்... அத விட உங்களோட அன்பு தான் உங்க மனைவிய காப்பாத்தத்திருக்கு...ஒன் வீக்ல நீங்க அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க.. பட் டூடேஸ் இவங்க ஐசியூலருந்து தான் ஆகணும். டூ டேஸ்க்கு அப்புறம் நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்..பேபிக்கும் பிரீத்திங் எல்லாம் நார்மலாகிடுச்சுனா வார்டுக்கு மாத்திரலாம்...என்ற மருத்துவரின் சொற்களில் நிம்மதியடைந்தான் எழில்.

டாக்டர் கொழந்தைய பாக்கலாமா..தயக்கமுடன் கேட்கவும்

நீங்க மட்டும் போய் கொழந்தய பாக்கலாம்...

டாக்டர் அவ கொழந்தைய பாக்கணும்னு சொல்றா..

பட் இப்போ முடியாது எழில்.. இவங்க கண்டிஷன்க்கு டூ டேஸ் இவங்க ஐசியூல தான் இருக்கணும்..நார்மலாகிட்டா நாளைக்கே வார்டுக்கு மாத்திரலாம்.. ஆனா கொழந்த ஐசியூல அலவுட் இல்லை..

ஓகே.. டாக்டர்..வீட்ல எல்லோரும் அவள பாக்கணும்னு சொல்றாங்க.

ஓகே மிஸ்டர் எழில் . ஆனால் டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க..எதிர்பாராம டெலிவரி ஆனதால அவங்க பாடி கண்டிஷன் கொஞ்சம் மோசமா தான் இருக்கு.. அதுலயும் சிசரியன் வேற இப்போ அவங்களுக்கு ஒரு இன்ஜெக்ஷன் போடணும்.அதனால அவங்களுக்கு டென் ஹவர்ஸ் கான்சீயஸ் இருக்காது.. கொஞ்சம் கேர்புல்லா பாத்துக்கோங்க.. அந்த டைம் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கு..
என்ற மருத்துவர் வெளியே சென்று விட்டார்

தன்னவளின் அருகில் சென்று நின்ற எழில் தன்னவளின் நெற்றியில் முத்தமிட்டவன் வெளியே நின்ற தன் குடும்பத்தினரை அழைக்க அனைவரும் உள்ளே வந்தனர்..

இசை என அழுது கொண்டே ஓடி வந்தார் புவனலட்சுமி..
இசை.. ஏன் டி இப்படி ஒரு வேலைய பண்ணிட்டியே என அழ இசையை நெருங்கி வந்த சுஜாதா உனக்கு ஏதாவது பிரச்சனைனா எங்க கிட்ட சொல்லிருக்க வேண்டியது தான.. அத விட்டுடு இப்படி பண்ணிட்டியே இசை என்றார் ஆதங்கத்துடன்.

அம்மாடி இப்போ பரவாயில்லயாமா என்றார் மனோகரன் அக்கறையுடன் .

அக்கா ஏன் கா இப்படி பண்ணீங்க... உங்களால மாமாக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா... அவர் நொறுங்கிட்டாரு.. என்றாள் சுருதி சற்றே கோபமுடன்..

ஏம்மா இப்படி பண்ண.. எந்த பிரச்சனைனாலும் எங்க கிட்ட சொல்லிருந்தா நாங்க உனக்கு உதவி செஞ்சுருக்க மாட்டோமா என்ன.... என்றார் குணசேகர்.

இசையால் எதுவும் பேசமுடியவில்லை...அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் மௌனித்திருந்தாள் இசை.

இசை விஜயாவை கண்ணீருடன் பார்க்க அவளை அமைதியாக பார்த்து கொண்டு நின்ற விஜயா அவள் அருகில் வந்தவர்

நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல இசை..மத்தவங்கள விடு என் கிட்ட எதையும் மறைக்காதவ இத மட்டும் ஏன்டி மறச்ச...என்ன காரணம்...இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்தா எல்லாம் சரியாகிடுமா என்ன...எங்கள பத்திலாம் நீ கொஞ்சம் கூட யோசிக்கலல...உனக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்தா நான் என்ன டி பண்ணுவேன் என அழுதுகொண்டே அவர் கேட்கவும் என்ன மன்னிச்சுடுங்க அத்தை என்றாள் இசையும் கண்ணீருடன்.

அவள் நெற்றியில் விஜயா இதழ் பதிக்க இசை விஜயாவை கட்டிக்கொண்டாள்..

சிறிது நேரத்தில் எழிலை தவிர அனைவரும் வெளியில் சென்று விட இசைக்கு சில ஊசிகள் ஏற்றப்பட அவளோ மயங்கி விட்டாள்..

எழில் ரம்யாக்கு போன் செய்தவன்
ஹலோ ரம்யா..

சொல்லு எழில்... என்னாச்சு.. இப்போ இசைக்கு எப்படி இருக்கு..

ம்ம் டிரீட்மென்ட் போய்ட்டுருக்கு ரம்யா.. எனக்கு உன் ஹெல்ப் தேவை படுது நீ கொஞ்சம் சீக்கிரம் என் வீட்டுக்கு வர முடியுமா.. உன்னால முடியாதுனா வேண்டாம்....

அய்யோ என்ன எழில் இப்படி சொல்லிட்ட.. நான் இப்போவே கிளம்பி வரேன்.. நீ ஒன்னும் கவலைபடாத நான் காலையில அங்க இருப்பேன். போனை கட் செய்தாள் ரம்யா..

எழில் கோபமுடன் போனை பார்த்தவன் வாடி... வா.. நீ இங்க வந்ததுக்கு அப்புறம் தெரியும் இந்த எழில் யாருனு... எவ்வளவு தைரியம் இருந்தா என் இசைய தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு டார்ச்சர் பண்ணிருப்ப... உன்னை இதுக்கு மேலயும் நான் சும்மா விட போறதில்ல... கோபமுடன் மனதில் நினைத்து கொண்டிருந்தான்..

மறுநாள் விடிந்தது....
எழில் விஜயாவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல ரம்யா அங்கு வந்தவள் எழில் என்ன ஆச்சு என்று அவள் வினவ

வா ரம்யா..வந்துட்டியா.. உனக்கு தான் வெயிட் பண்ணேன்,.

என்ன சொல்லு எழில்...என்னாச்சு..

ரம்யா.. நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா...

என்ன சொல்ற எழில்...என்றாள் ரம்யா இன்ப அதிர்ச்சியுடன்..

ஆமா ரம்யா.. அந்த இசை ரொம்ப மோசமானவ...அத புரிஞ்சிக்காம நான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..உனக்கு விருப்பம் இல்லனா வேண்டாம்...

இப்போவாவது புரிஞ்சிகிட்டியே எழில்...இது கண்டிப்பா ஒருநாள் நடக்கும்னு எனக்கு தெரியும்...அதனால தான் நான் இவ்வளவு நாள் வேற கல்யாணம் பண்ணிக்காம நான் உனக்காக கத்துக்கிட்டுருந்தேன்.. நான் எதிர்பார்த்த நாள் வந்துருச்சு.. என மனதில் நினைத்து கொண்டவள் உனக்கு விருப்பம்னா எனக்கும் ஓகே தான் எழில்... நீ முடிவெடுத்தா கரெக்டா தான் இருக்கும்... எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம்.. உனக்காக நான் என்னவேனாலும் செய்வேன் எழில் என மகிழ்ச்சியுடன் ரம்யா கூற

சரி ரம்யா எனக்காக என்ன வேணாலும் செய்வியா...?

ஆமா எழில்... நான் என்ன செய்யணும்னு சொல்லு.. செய்றேன்..

அப்படினா நீ செத்துரு... என கோபமாக கத்தினான் எழில்..

எழில் என அதிர்ச்சியுடன் ரம்யா அவனை பார்க்க...எழிலின் கைத்தடம் அவள் இரு கன்னத்திலும் அழுத்தமாக பதிந்திருந்தது...
...

ரம்யா அதிர்ச்சியுடன் எழிலை பார்த்து நின்றாள்..

எவ்வளவு திமிரிருந்தா என் கம்பெனிலேயே வேலை செஞ்சுக்கிட்டு எனக்கே துரோகம் பண்ணுவ... துரோகி...உன்னை போய்  நம்பினேன் பாரு.. என்ன சொல்லணும்...இப்படி நம்பவெச்சு கழுத்தருத்திட்டியேடி பாவி... நீ என் பெஸ்ட் பிரண்ட்னு தான டி நான் என் குடும்ப விஷயத்தை எல்லாம் உன் கிட்ட சொன்னேன்.. ஆனா நீ அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுகிட்டு என் வாழ்க்கையையே நாசமாகிட்டியே டி..

எழில் என கண்களை விரித்து குழப்பமுடன் அவனை கண்டு நின்றாள் ரம்யா..

என்ன எனக்கு எல்லாம் எப்படி தெரியும்னு தான பாக்குற... யாரு சொல்லிருப்பாங்கனு யோசிக்கிறியா... நீ யாரு இதெல்லாம் என் கிட்ட சொல்லமாட்டாங்கனு நினைச்சியோ அவங்க தான் சொன்னாங்க..

என் இசைக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து அவள என் கிட்டருந்து ஒரேடியா பிரிக்கலாம்னு பாக்குறியா அது நான் செத்தாலும் நடக்காது... என்ன டி நினைச்சுட்டுருக்க உன் மனசுல... என்ன பாத்தா உனக்கு பைத்தியகாரன் மாதிரி தெரியுதா என்ன...நானும் எங்க வீட்ல இருக்கவங்கலாம் முட்டாளா.. நீ எது சொன்னாலும் நான் வாய மூடிட்டுருப்பேன் நினைச்சியா.. புள்ளத்தாச்சி பொண்ணுனு கூட பாக்காம அவளோட மனச நோகடிச்சி அவள இந்த நிலைமைல படுக்க வெச்சுருக்க.. என்றவன் அவள் கழுத்தை பிடித்தான்..

என் இசையோட இந்த நிலைமைக்கு காரணமான உன்னை நான் உயிரோடவே விட மாட்டேன் என ரம்யாவின் கழுத்தை மேலும் நெறிக்க..

ஆஹ்ஹ் என கத்திய ரம்யா எழிலரசன் கையை தட்டி விட்டவள்
இவ்வளவு பேசுறியே.. இதெல்லாம் நான் ஏன் செஞ்சேன்..யாருக்காக செஞ்சேன்னு யோசிச்சியா... என சிணுங்கியவள் எல்லாம் உனக்காகவும் உன் காதலுக்காகவும் தான் டா.. ஸ்கூல் படிக்கும் போதுலருந்தே உன்ன காதலிச்சிட்டுருக்கேன்... ஆனால் நீ இது வரைக்கும் என் காதல ஒரு துளி கூட புரிஞ்சிக்கவே இல்லை... காலேஜ் படிக்கும் போதும் உன் கிட்ட என் காதல சொல்ல ஆசையோடுருந்தேன்.. அப்போ அதே காலேஜ் படிச்ச அந்த இசைய நீ காதலிக்க ஆரம்பிச்ச.. உன் சந்தோஷம் தான் முக்கியம் உன்னை மறக்க முயற்சி செஞ்சேன் ஆனால் என்னால முடியல... உன்னை நினைச்சு நினச்சு நான் படிக்காம தூங்காம சாப்பிடாம பைத்தியம் மாதிரி இருந்தேன் என் வீட்ல ..காலேஜ் முடிஞ்சதும் உனக்கு கல்யாணம் முடிவு பண்ணாங்க.. உன் கல்யாணத்தை நிறுத்தர அளவுக்கு அப்போ எனக்கு தைரியம் இல்லை..

நாளுக்கு நாள் உன் மேல இருந்த காதல் எனக்குள்ள வெறியா மாறிடுச்சு.அப்போ தான் நான் உன் கம்பெனில வந்து உனக்கு பிஏ வா ஜாயின் பண்ணேன். நீ கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சும் உன் பக்கத்துல இன்னொருத்திய என்னால பாக்க முடியல.. அப்போ தான் நினைச்சேன் இசைய எப்படியாவது உன் கிட்டருந்து பிரிக்கணும்னு நினச்சேன்.. அதே மாதிரி நீயும் என்னை உன் பெஸ்ட் பிரண்ட்டா நினச்சு உன்னுடைய எல்லா பர்சனல் விஷயத்தையும் என் கிட்ட ஷேர் பண்ண...அதே மாதிரி ஒரு நாள் அவள சந்திகிற வாய்ப்பு கிடைச்சுது.. அத நான் எனக்கு சாதகமாக மாத்திகிட்டேன்..

இதெல்லாமே உனக்காக தான் எழில் நான் பண்ணேன் என்னை ஏத்துக்கோடா..

அந்த இசை உனக்கு வேணாம்... உன் காதலுக்கு அவள் தகுதி இல்லாதவ...நான் இருக்கேன் எழில் உனக்கு... அவளும் வேணாம் அவ கொழந்தையும் வேணாம் அதுங்க எங்கனா போய் சாகட்டும் என கூறி முடிக்க எழிலின் கைத்தடம் மீண்டும் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது..

கொன்னுடுவேன் டி உன்னை... உனக்கு அவ்வளவு தான் மரியாதை...சாகவேண்டியது அவள் இல்லை நீ தான்...நீ செத்துபோ அவ ஏன் சாகனும்.....

யாரு காதலுக்கு யாருக்கு தகுதி இல்லை... ஏய் அவள பற்றி பேசறதுக்குலாம் உனக்கு எந்த தகுதியும் இல்லை.. அவள் என் பொண்டாட்டி..என் இசை.. அவள் தான் என் உயிர் என் எல்லாமே... நான் காதலிச்சது காதலிக்கிறது காதலிக்கப்போறது எல்லாமே என் இசை தான்..நீ இல்லை... இனிமேலும் நான் உன்னை விட்டுவைக்க போறதில்ல.. இங்க நீ செஞ்ச வேலைக்கு உள்ள போய் கம்பி எண்ணு காலத்துக்கும் என்றவன் இன்ஸ்பெக்டர் என அழைக்க

அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த போலீஸ் வந்தனர் .

எழில்... நான் உன் ரம்யா எழில்..என்னையே போலீஸ்ல பிடிச்சி கொடுக்கிறியா..நான் எந்த கொலையும் பண்ணலையே எழில் ..

கொலை பண்ணதா குற்றம்னு இல்லை... ஒருத்தவங்கள பிளாக்மெயில் பண்றதும் மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறதும் குற்றம் தான்.. நீ என் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்க காரணமானவ...கொழந்தைய கடத்தி வெச்சு பிளாக் மெயில் பண்ணிருக்க. உனக்கு அதுக்கும் சேர்த்து தான் தண்டனை..

எழில்.. நான் இதெல்லாம் உனக்காக தான் பண்ணேன்.. என்னை விட சொல்லு எழில் என ரம்யா அழ..

எழில் வேறு பக்கம் திரும்பி நிற்க்க..

எழில்.. என்னை விட சொல்லு எழில் என ரம்யா கத்த காவலர்கள் அவளை அழைத்து சென்றனர்..

எழில் மருத்துவமனைக்கு சென்றான்..

எழில் எங்க போயிருந்த... சரி நீ நேத்துலயிருந்து எதுவும் சாப்பிடல.. ஹோட்டல்ல போய்ட்டு சாப்பிட்டு வா பா என்றார் விஜயா..

இல்லை மா வேண்டாம் எனக்கு பசிக்கல..

எழில் அப்படி சொல்லாத சாப்பிடலனா உடம்பு என்னதுக்கு ஆகும்.. இசை தான் கண் முழிச்சிட்டாள.. அப்புறம் என்ன பா.. போய் சாப்பிட்டு தெம்பா இருக்கவேணாம்.. போ பா என்றார் சுஜாதா..

சரி என எழிலும் சென்று விட்டான்..

இசை அன்று முழுவதும் மயங்கிய நிலையில் இருந்தாள்...

எழில் சாப்பிட்டு முடித்து வந்தவன் ஐசியூ விற்கு சென்று தன்னவளின் அருகில் அமர்ந்தான்..

மறுநாள் விடிந்தது..

இசையின் உடல் நிலை சிறிது சரியாக அவளை தனி வார்டிற்கு மாற்றினர்..

ஒரு செவிலியர் குழந்தையை எழிலிடம் தூக்கி சென்று கொடுக்க முதன் முதலில் தன் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தியவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது ..

தன் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை கண்ணிமைக்காமல் பார்த்தவன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான் அன்புடன்..

எழில் குழந்தையை தூக்கி கொண்டு இசையின் வார்டுக்குள் செல்லும் முன் வெளியில் அமந்திருந்த அனைவரும் குழந்தையை தூக்கி கொஞ்சினர்..

எழிலிடமிருந்து குழந்தையை வாங்கிகொண்ட விஜயா குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சினார்..
எழில் என் பேத்திக்கு மூக்கு வாய் கண்ணு எல்லாம் உன்னை மாதிரியே இருக்குடா..

என் செல்லத்தை என் கிட்ட கொடுங்க... என குழந்தையை கையில் வாங்கினார் சுஜாதா..
அட இவ எவ்வளவு அழகா இருக்கா பாருங்க கா.....

ஆமா பின்ன இசை அக்காவோட பாப்பாவாச்சே அத்தை... அவங்கள மாதிரி அழகா தான இருப்பா இவளும் என்றாள் சுருதி...

எங்க அண்ணன் அப்போ அழகில்லையா என்ன  என்றாள் ருத்ரா..

இல்லை.. இசை அக்கா தான் அழகு என்றாள் சுருதியும் சிரித்து கொண்டே..

புவனலட்சுமியும் மனோகரனும் குழந்தையை தூக்கி கொஞ்சினர்..

ரவி தேவி குணசேகரன் வெங்கடேசன் ருத்ரா என அனைவரும் மகிழ்ச்சியுடன் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர்..

போதும் போதும்.. கொஞ்சனது போதும் குழந்தைய கொடுங்க... ரொம்ப நேரம் கொழந்தய வெளியே வெச்சுட்டுருக்க கூடாது... இசை குழந்தைய பாக்க வேணாமா.. எழில் இந்தா கொழந்தைய உள்ள தூக்கிட்டு போ என்றார் விஜயா.

எழில் குழந்தையை தூக்கிக் கொண்டு இசை அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் செல்ல இசையோ கண்களை மூடி படுத்திருந்தாள்..அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருந்தது..

பொறுமையாக அவள் அருகில் சென்று அமர்ந்தவன் இசை என அழைக்க சில நொடிகளுக்கு பின் கண் விழித்தவள் எழிலை பார்த்தவள் அவன் கையில் இருக்கும் குழந்தையை கண்டதும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்..

இசை.. பாத்து பொறுமையா எழுந்துக்க மாட்டியா.... எதுக்கு இப்படி....என அவன் கூறி முடிக்கும் முன்பே என் கொழந்தைய குடுங்க என அவனிடமிருந்து தன் குழந்தையை வேகமாக வாங்கி கொண்டாள்..

இசை...என எழில் அவளை ஆச்சர்யமாக பார்க்க இசையோ குழந்தையை ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் பார்த்தவள் சட்டென குழந்தையின் முகம் முழுவதும் முத்தமிட்டு தன் மார்போடு அணைத்து கொண்டு அழுதாள் சத்தமாக...

அம்மாவ... மன்னிச்சுருடா செல்லம்.. உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா... எனக்கு வேற வழி தெரியல டா செல்லம்.. அதான் அப்படி ஒரு முடிவெடுத்துட்டேன்.. ஆனால் எனக்கு தெரியும் உனக்கு எதுவும் ஆகாதுனு... எனக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது உனக்கு எதுவும் ஆகாதுனு.. உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா அடுத்த செகண்ட் என் உயிரையே நான் விட்டுருப்பேன்...

இசை.. அதான் எதுவும் ஆகலைல.. அப்புறம் ஏன் இப்படி பேசிட்டுருக்க...

அவன் வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளாதவள் அம்மாமேல உனக்கு எந்த கோவமும் இல்லையே டா செல்லம்... உன்னை போய் வேணாம்னு சொல்லிட்டேன் டா உன் அம்மா.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ரம்யா தான் டா என அழுதுக்கொண்டே அவள் கூற

இசை இனிமேல் அந்த ரம்யானு ஒருத்தி நம்ம லைப்ல இல்லை.. அவள் ஜெயிலுக்கு போய்ட்டா என்றான் எழில்..

என்ன என அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் இசை..

ஆமா இசை... என வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியவன் இனிமேல் அவளால நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை... இனிமேல் அது எல்லாத்தையும் மறந்துடு இசை ப்ளீஸ்.. முடிஞ்சது முடிஞ்சு போச்சு.. அத அப்படியே விடு.. இனிமேல் நமக்கு நம்ம கொழந்த வந்துட்டா.. நம்ம சந்தோசமாவும் நல்லபடியாவும் இவள வளர்க்க வேண்டிய வேலைய பாக்கணும் என்ற எழில் குழந்தையின் கையை பிடித்து முத்தமிட

ஆமாம்...  என்பது போல தலை அசைத்தவள் இப்போவாவது புரிஞ்சிக்கிட்டிங்களா நம்மளோட பர்சனல் விஷயத்தை பிரண்ட்சா இருந்தாலும் ஓரளவுக்கு மேல சொல்ல கூடாதுனு... அது சில டைம் நன்மைல முடிஞ்சாலும் பல டைம் ஆபத்து தான்...

நம்பிக்கை வெக்கறது தப்பில்லை.. ஆனால் அந்த நம்பிக்கைக்கு தகுதியானவங்க மேல நம்பிக்கை வெக்கணும்..இல்லனா அவங்க செய்றது நம்பிக்கை துரோகமா மாறிடும் என்றாள் இசை...

நீ சொல்றது தான் இசை சரி... தப்பு என்னுடையது தான்... இனிமேல் அந்த மாதிரி தப்ப என் வாழ்க்கைல இன்னோரு முறை நான் பண்ணவே மாட்டேன் என்றவன் தன்னவளின் நெற்றியில் இதழ் பதிக்க... இசையோ குழந்தையுடன் தன்னவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

லவ் யூங்க...

லவ் யூ டூ இசை..

இசை எழில் அவர்கள் குழந்தைக்கு நேத்ரா என பெயர் வைத்தனர்..

******

ஒரு வருடம் சென்றது..

ரவி பிசினஸ் விஷயமாக இரண்டு வருடம் மும்பையில் தங்கவேண்டிய சூழ்நிலையால் தேவியும் அவனுடன் மும்பை சென்று விட்டாள்..

ஸ்வாதி படிப்பை முடிக்க அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணத்தை முடித்தனர்..

சுருதி தன் காதலித்தவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாள்..

ருத்ரா மேல் படிப்பிற்காக டெல்லிக்கு சென்று விட்டாள்..

கலையரசி கருவுற்றிருக்க சிவாவையும் கலையையும் குணசேகரன் குடும்பம் ஏற்று கொண்டனர்..
ஆனால் மனோகரன் குடும்பத்தினர் அவளை ஏற்று கொள்ள வில்லை..

குணசேகரன் வெங்கடேசன் இருவரும் வேலையில் ஓய்வு பெற்றனர்.

விஜயாவும் சுஜாதாவும் நேத்ராவுடன் சந்தோசமாக நேரத்தை கழித்தனர்.

முடிவுற்றது...

......❤நன்றி❤....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top