சுவாசம் 30

எழில் அந்த காகிதத்தில் எழுதியிருந்ததை முழுவதும் படித்தவன் அந்த காகிதத்தை கசக்கி கட்டில் மேல் தூக்கி எரிந்தான் கோபமாக..

இசை... இவ்ளோ விஷயம் நடந்துருக்கு ஆனால் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம மூடி வெச்சு என் வாழ்க்கையை நாசமாகிட்டியே... முட்டாள்....ஒரு வார்த்தை இது மாதிரினு நீ சொல்லிருந்தா அப்போவே அந்த ரம்யா கொன்னுப்போட்டுருப்பேன்.. ஆனால் அதெல்லாம் விட்டு இப்படி ஒரு முடிவ எடுத்துட்டியே... என சத்தமாக கத்தி அழுதான் அவன்..

அந்த நேரம் எழிலின் செல்பேசி சினுங்கியது..

அதை அவசரமாக எடுத்து பேச தொடங்கினான்..

ஹெலோ.. ரவி..

டேய் எழில் சீக்கிரம் கிளம்பி வாடா..

ரவி என்ன ஆச்சு... இசைக்கு ஏதாவது பிரச்சனையா என பயந்தபடி அவன் கேட்கவும்

இசைக்கு ஹார்ட் பீட் கம்மியாகிட்டே போகுதாம் நீ கொஞ்சம் சீக்கிரம் வாடா... என்றான் ரவி...

இதோ வரேன் டா என்றவன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடினான்..

எழில் மருத்துவ மனைக்கு சென்றவன் மா அவளுக்கு என்ன ஆச்சு.. என பயத்துடனும் பதட்டத்துடனும் கேட்கவும்
எழில் எங்க டா போன இசைக்கு ஹார்ட் பீட் கொறஞ்சிட்டு போகுதுனு டாக்டர் இப்போதான் சொல்லிட்டு போனாங்க.. என்று சுஜாதா கூறிகொண்டிருக்கும் போது அங்கு வெளியில் வந்த மருத்துவர் மிஸ்டர் எழில் என்றழைக்க..

டாக்டர் என அவர் அருகில் சென்ற எழில் டாக்டர் என் மனைவி இப்போ எப்படி..இருக்காங்க என்றவன் குரல் வாடியிருந்தது..

மிஸ்டர் எழில்.. உங்க ஒய்ப் எழில்னு சொல்லி முனகிட்டுட்டுருக்காங்க.. பட் மயக்கம் தெளியல.. அதிகமான டிபிரஷன்னும் இதுக்கு காரணம்..ஹார்ட் பீட் லோ ஆகிட்டே போகுது....நீங்க ஏதாவது பேச்சு கொடுங்க அதனால அவங்களுக்கு ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் ஆகுதான்னு பாப்போம்..
நீங்க மட்டும் போய் பாருங்க அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க ..

ஓகே டாக்டர் தேங்க் யூ என கூறியவன் வேகமாக ஐசியூவின் உள்ளே ஓடினான்..

மருத்துவமனை கட்டிலில் பல ஒயர்களுக்கு இடையே மருத்துவமனை உடையை அணிந்து மூக்கில் அக்சிஜன் மாஸ்க்கும் கை நரம்புகளில் ஊசிகள் ஏற்றுபட்டு மரணத்துடன் போராடி கொண்டு சுயநினைவில்லாமல் படுத்து கிடந்த தன்னவளை பார்த்தவன் கண்களில் கண்ணீர் சுரந்தது...மறுபக்கம் தன்னவளின் இதய துடிப்பு குறைந்து கொண்டு செல்வதை அங்கிருந்த இதய துடிப்பு கருவியில் பார்த்தான் எழில் மன வலியுடன்..

இசை... என அழைத்து கொண்டு அவன் அவள் அருகில் செல்ல அவளோ எழில் என பொறுமையாக முனகி கொண்டிருந்தாள் நிமிடத்திற்கு ஒருமுறை....

இசை என தன்னவளின் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் கையை பொறுமையாக பிடித்து முத்தமிட்டான்..

இசை... என்ன பாரு இசை... நான் உன் எழில் வந்துருக்கேன்.. உன் புருஷன் வந்துருக்கேன்..என்ன கண்ண தொறந்து பாரு இசை..
இசை.. என்னால உன்னை இந்த நிலைமைல பாக்க முடியல டி..ப்ளீஸ் டி.... நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நினச்சு கூட பாக்க முடியாது.. இசை..என கதறி அழுதான் எழில் சிலநிமிடம்.

இசை என்னை கொள்ளாத டி... என்றவன் அவள் தோளில் முகம் புதைத்து  அழுதான் அவன்..

இசை தன் கை விரல்களை லேசாக அசைத்தவள் கண்களில் கண்ணீர் வழிய எழில் என பொறுமையாக முனகினாள்.

இசையின் அசைவை உணர்ந்தவன் சட்டென எழுந்து தன்னவளின் முகத்தை பார்க்க கண்களில் கண்ணீர் வழிய எழில் என அவனது கையை இருக்கமாக பிடித்து கொண்டாள் இசை..

இசை... என்றவன் அருகில் இருந்த கருவியை பார்க்க அதில் அவளின் இதய துடிப்பு சிறுது சீராகி இருந்தது..

நான் உன் எழில் வந்துருக்கேன்....ப்ளீஸ்  என்னை பாரு இசை என்று அவன் கெஞ்ச இசை சில  நிமிடங்களில் பொறுமையாக கண்களை திறந்து பார்த்தாள்..

இசையின் கண்களை ஒரு நிமிடம் வேதனையுடன் பார்த்து நின்ற எழிலரசன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது....

என்னங்க... என இசை பொறுமையாக தன்னவனை அழைக்க அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை இறுக்கமாக கட்டிகொண்டு அழுதான் சத்தமாக...

ஏன் டி இப்படி பண்ண... கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு முட்டாள் தனமான வேலைய பண்ணிட்டியே டி என்றவன் அவள் முகத்தை பார்க்க இசை எதுவும் பேசவில்லை...

இவ்வளவு விஷயத்தையும் என் கிட்டருந்து மறச்சிட்டு எப்படி உன்னால இப்படி இருக்க முடிஞ்சுது...ஒரு வார்த்தை இது மாதிரினு நீ முன்னாடியே சொல்லிருந்தா இந்த பிரச்சனை இவ்ளோ தூரம் வந்துருக்காது...நான் இப்படிலாம் நடக்கவும் விட்டுருக்கமாட்டேன்..நமக்குள்ள அந்த அளவுக்கு பிரச்சனை வதுருக்காது...
அந்த ரம்யா இப்படிலாம் பண்ணிருக்கானு நீ என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா அப்போவே அந்த ரம்யாவ உண்டில்லனு பண்ணிருப்பேன்.. எல்லா பிரச்சனைக்கும் காரணம் அந்த ரம்யா தான் .. ஆனா தண்டனைய அனுபவிக்கறது நீயா.. நோ.. இனிமேலும் நான் அவளை சும்மா விட போறதில்ல.. இந்த எழில் யாருனு அவளுக்கு காட்றேன்..என்றான் எழில் கோபமுடன்...

இசை..நீ இந்த மாதிரி ஒரு முடிவெடுப்பனு நான் நினச்சு கூட பாக்கல...என்றான் எழில்

எனக்கு வேற..... வழி தெரியலங்க.. என்னால அவளோட டார்ச்சர தாங்கிக்க முடியல என்றாள் மூச்சு வாங்கியபடி..

என்னால உன்னை இந்த நிலைமைல பாக்கவே முடியல டி..இசை உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா நான் மட்டும் உயிரோடு இருப்பேனா.. நானும் செத்துருவேன் டி... என எழில் அழுது கொண்டே கூறவும்

என்னங்க... வேண்டாம் ப்ளீஸ் என்றாள் அழுது கொண்டே...

தன்னவளின் கையை பிடித்து முத்தமிட்ட எழில் இசை லவ் யூ டி என்க..

கண்ணீருக்கிடையில் லேசாக புன்னகைத்தவள்

என்னங்க....நம்ம கொழந்தக்கு எதுவும் ஆகலையே.. என ஒருவித பயத்துடன் அவள் கேட்கவும்

இல்லை..என்றான் அவன்

எனக்கு என் கொழந்தய பாக்கணும் அவள் பொறுமையாக முனகவும்

இசை கொழந்தக்கு எந்த பிரச்சனையும் இல்லை நல்லாருக்கா...நமக்கு பொண்ணு பிறந்துருக்கா...டெலிவரிக்கு முன்னாடி பிறந்ததால இப்போ அப்சர்வேஷன்ல வெச்சுருக்காங்க..

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top