சுவாசம் 28
இப்போ நான் கடைசியா சொல்ற ஒரே வார்த்தை....ஐ லவ் யூ எழில்...நீங்க மட்டும் என்னை காதலிக்கல.. நானும் தான் உங்கள காதலிச்சேன்..காலேஜ் படிக்கும் போது நான் காதலிச்சது உங்களை தான்.. ஆனால் என் அக்காவ பாக்க வந்த மாப்பிளை நீங்கனு தெரிஞ்சதும் நான் உங்கள மறக்க முயற்சி செய்தேன் ஆனால் என்னால முடியல..
அவளை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு நின்றான் எழில்..
என் காதல எனக்குள்ளே வெச்சு புதச்சுகிட்டேன்... அப்புறம் எதிர்பாராத விதமா நம்ம கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாட்களையே உங்க மேல இருந்த காதலுக்கு மறுபடியும் உயிர் கிடைச்சுது..நான் உங்களை என் உயிருக்கு உயிரா காதலிச்சேன்..காதலிக்கிறேன்...இனிமேல் காதலிக்க நான் உங்க கூட இருக்க மாட்டேன்...எனக்கு உங்க கூடயும் நம்ம கொழந்த கூடயும் வாழனும்னு ஆசை தான்.. ஆனால் அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல...என்ற இசை தன்னவனின் இதழில் முதல் முதலாக இதழ் பதித்தாள் காதலுடன்..
எழில் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தன்னவளின் முகத்தை தன் கரங்களால் ஏந்தியவன் அவள் சிவந்த விழிகளை காண அதுவோ
வலியில் துடித்து கொண்டிருந்தது..
இசை.... என்றான் எழில் மெல்லிய குரலில்..
நான் போனதுக்கு அப்புறமாவது ஒரு நல்ல பொண்ணாப்பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு.... அவள் கூறி முடிக்கும் அவள் உதட்டில் விரல் வைத்து தடுத்தவன் இன்னொரு முறை அப்படிலாம் சொல்லாதடி ப்ளீஸ்.. என்றான் பரிதவிப்புடன் ..
அவன் கையை தன் உதட்டிலிருந்து எடுத்தவள் என்ன சொல்லவிடுங்க.. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க..நிச்சயமா சந்தோசமா வாழனும்..ஆனால் என் கொழந்தய தயவு செஞ்சு அனாதையா விட்ராதிங்க ப்ளீஸ் என்றவள் எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி மட்டும் கொண்டு வறீங்களா ப்ளீஸ்.. என்று அவள் கேட்கவும்
அவளை கண்ணீருடன் பார்த்து நின்றவன் ம்ம் சரி நீ இன்னும் எதுவும் சாப்பிடல.. அதனால சாப்பாடும் கொண்டு வரேன் என்ற எழில் கீழே செல்ல சட்டென கதவை தாழிட்ட இசை வேகமாக சைடு டேபிள் அருகில் சென்று நின்றாள்..
அங்கிருந்த எழிலரசனின் போட்டோவை பார்த்தவள்
நான் போறேன்ங்க.. நான் உங்கள விட்டு ரொம்ப தூரம் போறேன்..என்றவள் சட்டென அவள் நிறைமாத வயிற்றில் கை வைத்தவள் கண்களை ஒரு நிமிடம் முடிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர் துளி தரையில் விழுந்தது.
செல்ல குட்டி.. அம்மா உன்னை விட்டு போறேன் டா...உனக்கு இனிமேல் அம்மா இல்லை அப்பா மட்டும் தான்...உன் அம்மாவ உன்னால எப்பவும் பாக்க முடியாது...உன்னையும் என்னால பாக்க கூட முடியாத பாவியா ஆகபோறேன் டா ஆனா எனக்கு வேற வழி தெரியல..உன் அப்பாவுக்கு என்னை பிடிக்காம போயிருச்சு..இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ரம்யா.... ஆனால் அவர்கிட்ட நான் அவளை பத்தி என்ன சொன்னாலும் இனிமேல் அவர் கேக்க மாட்டாரோனு தோணுது...நான் எது சொன்னாலும் இனி அவர் நம்பபோறது இல்லை..என் புருஷன் இன்னொருத்தி கூட வாழறத பாக்குற சக்தி எனக்கு இல்லை....என்னால அவளுடைய டார்ச்சர தாங்கிக்கவும் முடியாது..என்றவள் ட்ராவ் வில் இருந்த ஒரு கத்தியை வெளியே எடுத்தாள்..
நான் விஷம் குடிச்சாளோ வேற என்ன செஞ்சாலும் உனக்கு பிரச்சனை ஆகிடும்...நான் இப்படி பண்ணா தான் உன்னை சீக்கிரம் வெளிய எடுப்பாங்க டா... அம்மா உனக்கு எதுவும் ஆகவிட மாட்டேன் டா..இப்படி செஞ்சா தான் நான் உன் அப்பாவ விட்டு சீக்கிரம் போக முடியும்..என்றவள் கத்தியை கொண்டு தன் இடது கை நாடி துடிப்பில் வேகமாக அறுத்து கொள்ள இசையின் கைகளில் உள்ள ரத்தம் தரையில் சிந்தியது..
சில நிமிடங்களிலேயே இசை மயங்கி கீழே விழுந்தாள்..
சில நிமிடங்களுக்கு பின் எழில் அவளுக்கு உணவை கொண்டு வர கதவு உள்ளே தாழ்போடப்பட்டிருப்பதை
கண்டவன் இவ இப்போ கதவை எதுக்கு மூடி வெச்சுருக்கா என நினைத்தவன் இசை இசை என அவளை அழைக்க உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை..
இசை இசை என மீண்டும் சத்தமாக அழைத்தவன் என்ன ஆச்சு..தண்ணி எடுத்துட்டு வர சொல்லிட்டு இப்போ இவ கதவை லாக் பண்ணிக்கிட்டு என்ன பண்ணுறா..இசை இசை என சத்தமாக கத்தினான் அவன்.
மீண்டும் எந்த பதிலும் உள்ளிருந்து வராததால் மிகவும் பயந்தவன் கதவை வேகமாக தட்ட வீட்டிலுள்ள அனைவரும் அங்கே வந்தனர்..
எழில் என்ன பா ஆச்சு...என ஓடி வந்தார் வெங்கடேசன்..
சித்தப்பா இசை உள்ள போய் கதவ லாக் பண்ணிக்கிட்டா.. தட்டனாலும் திறக்க மாட்டேங்குறா..
என்ன ஏன் என்றார் விஜயா கேள்வியாய்...
டேய் நீ அவளை ஏதாவது சொன்னியா டா என்றார் சுஜாதா பதட்டமுடன் ...
பேச டைம் இல்லை எழில் கதவை ஒட என்றார் விஜயா பதட்டமான குரலில்..
ஓ ஓ...நம்ம பிளான் சக்ஸஸ் ஆகற நேரம் நெருங்கிடுச்சு.. என மகிழ்ச்சியுடன் மனதில் நினைத்து கொண்டாள் ரம்யா..
சரி என்ற எழில் சில நிமிடங்களில் கதவை உடைத்துகொண்டு ள்ளே செல்ல மற்ற அனைவரும் அவன் பின்னே சென்றனர்..
உள்ளே சென்ற எழில் இசை என அங்குமிங்கும் பார்த்தவன் சற்று கீழே பார்க்க இசையோ ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடைந்தாள்..
அவளின் நிலையை கண்ட எழில் அதர்ச்சியுடன் கண்களை விரித்து பார்த்தவனின் இதயம் ஒரு நிமிடம் நின்றதை போன்று உணர்ந்தான் எழில்...
உள்ளே வந்த மற்ற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி ரம்யாவை தவிர்த்து..
இசை என சத்தமாக கத்திக்கொண்டு தன்னவள் அருகில் ஓடிய எழில் இசை... இசை... என்ன பாரு என அவளை தூக்கி மடியில் போட்டு கொண்டவன், இசை.. இசை என்ன காரியம் டி பண்ணிருக்க என்று கதறி அழுதான் எழில்..
இசை.. அய்யோ எவ்ளோ ரத்தம் போயிருக்கு.. பாவி எதுக்கு டி இப்படி பண்ண சத்தமாக அழுத விஜயாவை பார்த்து அக்கா ரத்தம் நிறைய போகுது என்ற சுஜாதா ஒரு துணியை எடுத்து வேகமாக இசையின் கையில் கட்டினார்.
எழில் பேச டைம் இல்லை உடனே அவளை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போகணும் சீக்கிரம் என்றனர் தேவியும் சுருதியும்.
இசை உன் நிலைமைய பாத்தா இன்னைக்கே நீ செத்துருவ போல என தனக்குள் முனகி கொண்டாள் ரம்யா..
எழில் அவளை உடனே வேகமாக காரில் ஏற்றி கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தான்....
அவளை சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதித்தான்..
இசையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்..
மருத்துவர் அவளின் வெட்டுப்பட்ட கைக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்க இசையோ மூச்சு பேச்சற்று கிடந்தாள்..
எழில் மற்றும் அவன் குடுபத்தினர் அந்த அறையின் வெளியே காத்திருக்க எழில் அந்த கதவின் ஓரம் நின்று கதறி அழுதுக்கொண்டிருந்தான்..
டேய் அழாத டா.. இசைக்கு ஒன்னும் ஆகாது....ரவி எழிலை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் வெளியில் வந்தார் மருத்துவர்...
கண்களை துடைத்து கொண்டு அவர் அருகில் சென்ற எழிலரசன் "மேடம் என் ஒய்ப்க்கு எந்த பிரச்சனையும் இல்லையே.. அவ நல்லாருக்காள என பதட்டமுடன் அவன் கேட்க..
மிஸ்டர் எழில்.. உங்க ஒய்ப் க்கு ரொம்ப அதிகமா பிளட் லாஸ் ஆகிருக்கு...அவங்களுக்கு காயம் கொஞ்சம் அழுத்தமாவே ஏற்பட்டிருக்கு..நீங்க கரெக்ட் டைம் அவங்கள இங்க கூட்டிடு வந்ததால பஸ்ட் எயிட் பண்ணி பிளட் வரத ஸ்டாப் பண்ணியாச்சு..பட் ரொம்ப அதிகமான பிளட் போனதால அவங்க இப்போ அன்கான்சியஸ் ஸ்டேஜ்ல ரொம்ப சீரியஸா இருகாங்க...என்ற மருத்துவரை அதிர்ச்சியுடன் பார்த்த எழில் கலங்கி நின்றான் ஒன்றும் புரியாமல்..
இப்போ அவங்க பிரெக்னேண்டா இருக்கறதால கொழந்தைக்கும் ப்ரோப்லேம் தான் ..அதனால
இம்மிடியேட்டா ஆப்ரேஷன் பண்ணி கொழந்தய வெளிய எடுத்தாகணும்...
இன்ஜெக்ஷன் போட்டு வலி வர வெச்சாலும் அவங்களுக்கு இப்போ சுயநினைவில்லை..அது உங்க ஒய்ப்க்கு ப்ரோப்லேம் தான்..பட் வேற வழி இல்லை.. ஓகே இம்மிடியேட்டா பிளட் ஏத்தி ஆகணும் இல்லைனா இன்னும் ரொம்ப சீரியஸ் ஆகிரும்.. அதுக்கு கொஞ்சம் சீக்கிரம் அரேஞ் பண்ணுங்க ப்ளீஸ் ...
கடவுளே இசை சீக்கிரம் செத்துரனும்... என வேண்டி கொண்டாள் ரம்யா பாவமான முகத்துடன்..
டாக்டர் எனக்கும் என் மருமளுக்கும் ஒரே குரூப் தான் ரத்தம்.. எனக்கு எந்த வியாதியும் இல்லை...நானே என் மருமகளுக்கு ரத்தம் கொடுக்குறேன்... என் மருமகளயும் அவ கொழந்தையையும் மட்டும் எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. என அழுதார் விஜயா..
ஓகே..சீக்கிரம் பிளட் அரேஞ் பண்ணா தான் ஆப்ரேஷன ஸ்டார்ட் பண்ண முடியும் என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்..
விஜயா ரத்தம் கொடுக்க செல்ல ரவி தேவி இருவரும் அவருடன் சென்றனர்..
எழில் மருத்துவர் கூறியதை கேட்டவன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து மனம் விட்டு கதறி அழுதான்... இசை...எதுக்கு டி இப்படி பண்ண.. நான் என்ன டி உனக்கு பாவம் பண்ணேன்.. என்னை இப்படி அணு அணுவா கொல்லுறியே டி.. என்னால தாங்க முடியல.. எதுக்கு டி இந்த மாதிரி ஒரு முடிவெடுத்த... உனக்கு என்ன தான் டி பிரச்சனை அதை எதுவும் சொல்லாம இப்படி பண்ணிட்டியே டி.. நீ வயித்துலருக்க கொழந்தய பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பாக்கலல....நான் இப்போ என்ன டி பண்ணுவேன்...என மனதிற்குள் எண்ணிக்கொண்டு அழுதான் எழில்..
விஷயம் அறிந்து இசையின் குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
அய்யோ மாப்பிள்ளை என் பொண்ணுக்கு என்ன ஆச்சு என மனோகரன் அழ எழிலோ பதில் கூற முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்..
சுஜாதா நடந்த அனைத்தையும் மனோகரன் குடும்பத்தாரிடம் கூற அவர்களும் தாங்க முடியாமல் அழுதனர்..
அடிப்பாவி என்ன வேலை பண்ணிட்டா... கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு முடிவெடுத்துட்டாளே.. இசை... அய்யோ கடவுளே என் பொண்ணயும் அவ வயித்துலருக்க கொழந்தையும் எப்படியாவது காப்பாத்து கடவுளே என கதறினார் புவனலக்ஷ்மி..
விஜயா சில நிமிடங்களில் ரத்தம் கொடுத்து விட்டு வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் சோர்வாக அமர்ந்தார்... இசை... உனக்கு ஒன்னும் ஆகாது டா..நான் இருக்கேன் டா உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் என அழுதார் விஜயா..
ரம்யா "இந்த பொம்பள என்ன மருமகளுக்குனு இப்படி உருகுறா... விஜயா உனக்கு நான் தான் மருமகள்.. அந்த இசை இல்லை. என நினைத்து கொண்டு நிற்க்க ரம்யாவிற்கு அவன் அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது அவசரமாக கிளம்பி வருமாறு...அதனால் ரம்யா எழிலிடம் மட்டும் கூறி விட்டு சென்றாள்..
சிறிது நேரத்தில் இசைக்கு ஆப்ரேஷன் தொடங்கியது..
இசை மயங்கிய நிலையில் இருக்க அவள் வயிற்றில் உள்ள குழந்தையை மருத்துவர்கள்
ஆப்ரேஷன் செய்து வெளியில் எடுக்க இசையின் இதய துடிப்பு குறைந்து கொண்டே சென்றது...
தொடரும்..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top