சுவாசம் 14
நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியுடன் உறங்கினாள் இசை .
மறுநாள் காலை கதிரவன் செந்நிற ஒளிவீசி விடிய உறக்கம் களைந்த இசை ஒரு புன்னகையுடன் கண்விழித்தாள்.
கண்விழித்த இசை ஏதோ ஒரு உணர்வை உணர்ந்தவளுக்கு அப்போது தான் புரிந்தது இசை தன்னவன் மார்பில் தலை வைத்து படுத்து கொண்டிருக்கிறாள் என்று .
சட்டென அவன் மேல் இருந்து எழுந்தவளின் கன்னம் வெட்கத்தால் சிவக்க அவள் தன்னவனை திரும்பி பார்க்கவோ அவனோ ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தான்.
இசை பொறுமையாக எழில் அருகில் சென்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டவள் என்னங்க என்ன மன்னிச்சிருங்க..அன்னைக்கு நடந்த விஷயம் என்னை ரொம்ப பாதிச்சிருச்சு அந்த காரணத்தால மட்டும் தான் நான் உங்ககிட்ட அப்படி நடந்து கிட்டேன்..ஆனா என் மனசுல இருக்க உங்க மேல வெச்ச என் காதல் என்னைக்கும் மாறாதது.. என் வாழ்க்கைல உங்கள தவிர வேற யாருக்கும் இடம் இல்லை..ஐ லவ் யூங்க நான் இத கூடிய சீக்கிரமே உங்க கிட்ட சொல்றேன் ஆனா இப்போ இல்லை என்று அவள் மனதில் நினைத்தவள் எழுந்து சென்று குளியல் அறைக்கு புகுந்து கொண்டாள்.
கண்விழித்து பார்த்த எழில் சிறு சிரிப்பை சிந்தியவன் இசை இந்த சந்தோசத்துக்காக தான் நான் இத்தனை நாள் கத்துக்கிட்டுருந்தேன்.. உன்னை காதலிச்ச எனக்கு அப்போ இருந்த மிகப்பெரிய கனவு உன்னை என் மனைவியாக்கிக்கணும் தான்... ஆனா நான் நினைச்சது போல நீ என் மனைவியா இந்த வீட்டுக்குள்ள வந்த ஆனா என் வாழ்க்கைக்குள்ள வரல.. ஆனா இன்னைலருந்து என் என் இசை என் அன்பான மனைவியா எனக்கு கிடைச்சிட்டானு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ...ஐ லவ் யூ டி இசை என்றான் எழிலரசன் முகமலர்ச்சியுடன்..
இசை குளித்து முடித்து வெளியில் வர எழிலரசன் உறக்கத்தில் இருந்து எழுந்திருந்தவன் இசை சீக்கிரம் ரெடி ஆகு வெளிய போகலாம்
என கூறவும்..
ஆச்சர்யமுடன் தன்னவனை பார்த்தவள் என்ன உண்மையாவா ஆச்சர்யமுடன் கேட்கவும்
ஆமாம்..என்றான் எழிலரசன்..
இசை, ஆனா அத்தை கிட்ட சொல்லவே இல்லையே..
பரவாயில்லை சொல்லிக்கலாம் வா அவங்க ஒன்னும
சொல்லமாட்டாங்க..சரி நான் உனக்காக வாங்கி குடுத்தேன்ல ஒரு பட்டு சேரி அதை கட்டிட்டு ரெடியாகு நான் போய் குளிச்சிட்டு வரேன்..என்றவன் குளிக்க குளியல் அறைக்கு சென்று விட்டான்.
இசை எழில் வாங்கி தந்த நீல நிற பட்டு சேலையை கட்டியவள் அவளுக்காக அவன் வாங்கி தந்த சில நகைகளையும் போட்டு கொண்டு தயாராகி இருந்தாள்..
குளித்து முடித்து வெளியில் வந்த எழில் உடையை மாற்றிக்கொண்டு தன்னவள் அருகில் வந்தவன் ஒரு நிமிடம் அவளை கண்ணிமைக்காமல் பார்த்தவன் சோ பியூட்டிபுல் என மெல்லிய குரலில் கூற இசை வெட்கமுடன் தலையை குனிந்து நின்றாள்.
தன் ஒரு விரலால் தன்னவளின் முகத்தை பொறுமையாக உயர்த்தியவன் இசையின் நெற்றியில் முத்தமிட இசையின் கண்களில் கண்ணீர் தேங்கியது..
நோ டியர்ஸ்... என்றவன் சரி வா போகலாம் என்றவாறு அவள் கரம் பற்றி கீழே அழைத்து சென்றான்...
இருவரும் கீழே செல்ல வா இசை எழில் என்ன ரெண்டு பேரும் வெளிய கிளம்புறீங்க போல விஜயா கேட்கவும்
ஆமா மா இன்னைக்கு நான் ஆபிஸ் போகல.. இசைய இது வரைக்கும் நான் எங்கேயும் கூட்டிட்டு போகல அதான் இன்னைக்கு எங்கயாவது கூட்டிட்டு போகலாம்னு..என்ற மகனை புன்னகையுடன் பார்த்து
சரி எழில் தாராளமா கூட்டிட்டு போ.. என்றார் விஜயா...
கல்லூரிக்கு தயாராகி கீழே வந்த ருத்ரா அண்ணி ஒரு காபி என இசையிடம் கேட்க இதோ கொண்டு வரேன் என்ற இசை அங்கிருந்து செல்லும் முன் அவள் கரத்தை பிடித்த எழில் நில்லு.. எங்க போற நமக்கு டைம் ஆகிருச்சு..ருத்ரா சமையல் வேலைப்பாக்குறவங்க யாராவது உள்ள இருப்பாங்க அவங்க கிட்ட கேளு நானும் இசையும் வெளிய போகிறோம் என்றான் எழில் கோபகுரலில்...
அண்ணா இல்லைணா அண்ணி காபி போட்டா டேஸ்ட்டா இருக்கும் அதான் கேட்டேன் என்றாள் அவள் வாடியமுகமாய்
ஏய் அதான் அவன் சொல்றான்ல வெளிய கிளம்புறோம்னு அப்புறம் என்ன.. உனக்கு காபி தான வேணும் வா நான் போட்டு கொடுக்குறேன் என்றார் விஜயா சிடுசிடுப்புடன்..
சரி என கூறிவிட்டு அங்கிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்தாள் ருத்ரா.
எழில் இசை இருவரும் அவர்களிடம் கூறிவிட்டு சென்று காரில் அமர எழில் காரை ஓட்டி சென்றான்.
இருவரும் முதலில் ஒரு ரெஸ்டாரண்ட் சென்று காலை உணவை முடித்தவர்கள் அங்கிருந்து
இசையின் வீட்டிற்கு சென்றனர்.
அதை துளியும் எதிர்பாராத இசையின் மனம் மகிழ்ச்சியில் நிரம்பியது..நீண்ட நாட்களுக்கு பின் தன் குடும்பத்தை பார்த்த இசை தன் தாய் தந்தையை கட்டி கொண்டு குழந்தை போல அழ அவளது அண்ணியும் அண்ணனும் அவளை சமாதானம் செய்தனர்.அண்ணன் குழந்தை, பாட்டி அனைவரையும் பார்த்தவள் மகிழ்ச்சியில் துள்ளினாள்.
ரொம்ப நன்றிங்க மாப்பிள்ளை... என் பொண்ண எங்களால பாக்கவே முடியாம போய்டும்னு நினைச்சோம்..என்றார் மனோகரன் கண்ணீருடன்..
அய்யோ மாமா பெரிய வார்த்தைலாம் சொல்லாதீங்க.. அவ உங்க பொண்ணு.. அவ மேல உங்களுக்கு இல்லாத உரிமையா..நீங்க அங்க எப்ப வேணா வந்து உங்க பொண்ண பாக்கலாம்.. அம்மா அப்போ கொஞ்சம் கோவத்துல அப்படி நடந்துகிட்டாங்க..அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..எழில் பெருந்தன்மையுடன் கூறினான்
அய்யோ மாப்பிளை நீங்க போய் மன்னிப்புலாம் கேட்டு கிட்டு..
பரவாயில்ல மாமா இருக்கட்டும்.. நீங்க ஒன்னும் கவலை படவே வேண்டாம் உங்க பொண்ணு அங்க ரொம்ப சந்தோசமா இருக்கா என எழில் கூற ரொம்ப சந்தோஷம் தம்பி என்றார் இசையின் தாய் புவனலக்ஷ்மி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top