51 உறவின் முக்கியத்துவம்
51 உறவின் முக்கியத்துவம்
ஒரு மணி நேரம் தண்ணீரில் நனைந்த பின் தான் ஹரிணியால் குளியலறையை விட்டு வெளியே வர முடிந்தது. அவளது ஈர தலையை உலர்த்த, அவளுக்கு ஹேர் ட்ரையரை கொடுத்தான் சித்தார்த்.
"நான் ஹேர் டிரையர் யூஸ் பண்றதில்ல. முடி கொட்டும்"
"ஒரு தடவை யூஸ் பண்ணாவெல்லாம் முடி கொட்டாது. உன்னுடைய முடி, நீளமா இருக்கிறதால அவ்வளவு சீக்கிரம் காயாது. ஈர தலையோட தூங்குறது நல்லதில்ல. வா, நான் ட்ரை பண்ணி விடுறேன்..."
டிரையரை ஆன் செய்து, தேவையான அளவு இடைவெளியில் ட்ரையரை வைத்து, அவளுடைய ஈர கூந்தலை ஆற்ற துவங்கினான் சித்தார்த்.
படுக்கைக்கு வந்த பிறகு, அவளது உள்ளங்கையிலும் காலிலும் தைலத்தைத் தேய்த்து விட்டான் சித்தார்த்.
"என்ன பண்றீங்க?"
"கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தண்ணீயில நனைச்சிருக்க. உனக்கு சளி பிடிச்சுக்கும்"
"உங்களுக்கு பிடிக்காதா?"
"என்னோடது ஸ்டீல் பாடி. விட்டா இன்னும் ஒரு மணி நேரம் கூட நான் தண்ணியிலே இருப்பேன்"
"முடிஞ்சிடுச்சா?"
"இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு"
"என்னது?"
"தண்ணில இருந்ததால உன்னோட உடம்பு ரொம்ப ஜில்லுனு இருக்கு"
"அதனால?"
"இறுக்கமா கட்டிப்பிடிச்சுகிட்டா, கதகதன்னு ஆயிடும்."
"கட்டிப்பிடிக்கிறதோட நின்னா சந்தோஷம்"
"அந்த கேரண்டீயை நான் கொடுக்க முடியாது"
"அப்படின்னா தள்ளிப் படுங்க"
"என்னையா உங்ககிட்ட இருந்து தள்ளி போக சொல்ற ஹரிணி?"
"இல்ல இந்த பெட்டுகிட்ட அந்த சோஃபாகிட்ட இந்த கண்ணாடிகிட்ட சொல்றேன்..."
"அதானே பார்த்தேன். நீ என்னை தான் சொல்றியோன்னு நினைச்சுட்டேன்..." என்று பல்லைக் காட்டி சிரித்தான்.
"எனக்கு தூக்கம் வருது"
"தூங்கு... யார் உன்னை தடுத்தா?"
தன்னை போர்வையால் போர்த்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் ஹரிணி. அதே போர்வையில் தானும் புகுந்து கொண்டு, அவளை அணைத்து தேவையான கதகதப்பை வழங்கினான் சித்தார்த்.
மறுநாள் காலை
சிற்றுண்டிக்காக அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள். இடைவிடாமல் தும்மிக் கொண்டிருந்த ஹரிணியை சுவாமிநாதனும், தேவயானியும் கவலையுடன் பார்த்தார்கள்.
"என்ன ஆச்சு ஹரிணி?" என்றார் தேவயானி.
"அது வந்து மா... ஆஆஆச்..." மீண்டும் தும்மினாள் ஹரிணி.
"குளிர்ச்சியான ஏதாவது சாப்பிட்டியாம்மா?" என்றார் சுவாமிநாதன்.
"இல்லங்கப்பா... ஆஆஆச்... "
அலுப்புடன் பெருமூச்சு விட்டாள் ஹரிணி. சித்தார்த்தோ கள்ளப்புன்னகை பூத்தான்.
"சித்து, அவளுக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியாதா?" என்றார் தேவயானி.
"ரொம்ப நேரம் குளிச்சுக்கிட்டு இருந்தா"
தன் பல்லை கடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் ஹரிணி.
"குளிச்சாளா? எப்போ?"
"நேத்து சாயங்காலம்"
"ஸ்விம்மிங் பண்ணியா ஹரிணி?" என்றார் தேவயானி.
அவள் இல்லை என்று தலையசைக்க,
"அவளுக்கு ஸ்விம்மிங் தெரியாது" என்றான் சித்தார்த்.
"சித்து உனக்கு சொல்லிக் கொடுப்பான்" என்றார் தேவயானி.
"அதுக்கு இன்னொரு *பெட்* டை போட்டுட வேண்டியது தான்" ஹரிணி மட்டும் கேட்கக்கூடிய மெல்லிய குரலில் கூறினான் சித்தார்த்.
"ஆனா, எதுக்காக அவ ரொம்ப நேரம் குளிச்சிட்டு இருந்தா? ஏதாவது காரணம் இருக்கா என்ன?" என்றார் தேவயானி.
"நீங்க வீட்ல இல்லல... அதான்"
சுவாமிநாதனும், தேவயானியும் புரியாமல் முகம் சுளித்தார்கள். ஹரிணி அவன் தொடையை பிடித்து அழுத்தமாக கிள்ளினாள்.
"ஆஆஆ.... என்னை ஏன் கிள்ற ஹரிணி?" என்று அலறினான்.
தன் தலையில் அடித்துக் கொண்டாள் ஹரிணி.
"ஆனா ஒரு விஷயம் தான் எனக்கு புரியல. நான் மட்டும் ஏன் தும்மவே இல்ல?" என்ற அவனைப் பார்த்து, பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள் ஹரிணி.
"ஹரிணி, நீ அவனைப் பார்த்து முறைக்க வேண்டியதில்ல. நாங்க எதையுமே புரிஞ்சுக்கலன்னு நினைச்சுக்கோ. நான் சொல்றது சரிதானேங்க?"
"ஆமாமா... எனக்கு ஒன்னும் புரியல. அவன் என்ன சொன்னான்னு கூட நான் மறந்துட்டேன். நீயும் மறந்திடு தேவா" என்றார் ஸ்வாமிநாதன்.
"நான் எப்பவோ மறந்துட்டேன். ஹரிணி, நீ நாளைக்கு தும்மலாம். நாங்க எதையுமே ஞாபகம் வச்சுக்க மாட்டோம்"
"அம்மா ப்ளீஸ்... போதும் கிண்டல் பண்றது நிறுத்துங்க மா." கெஞ்சினாள்
சித்தார்த்தை நோக்கி திரும்பிய அவள்,
"இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். வேணுமின்னே, எல்லாத்தையும் அவங்க முன்னாடி சொல்லி என்னை கிண்டல் செய்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு. போங்க உங்க கூட நான் பேசமாட்டேன்"
அங்கிருந்து தன் அறையை நோக்கி சென்றாள் ஹரிணி.
"நீங்க செய்யறது கொஞ்சம்கூட நியாயமே இல்லம்மா. உங்களால தான் என் பொண்டாட்டி என்கிட்ட கோச்சுக்கிட்டா" என்றான் சித்தார்த்.
"என்னமோ, நாங்க உன்னோட ரூமுக்கே வந்து, அங்க என்ன நடந்ததுன்னு பார்த்த மாதிரி பேசுற?"
"டேய் சித்து, நீ இவ்வளவு சேட்டைக்காரனா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல டா. எதுக்காக ஹரிணியை இப்படி வம்பு செய்யற? அவளுக்கு சங்கடமா இருக்கிறதா?" என்றார் சாமிநாதன்.
"அவ ரொம்ப அப்செட்டா இருக்கா பா. அத வெளியில காட்டிக்க மாட்டேங்குற. ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா. ஏதாவது செஞ்சு அவ மைண்டை மாற்ற முடியுமான்னு தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்."
"என்ன ஆச்சு சித்து?"
அனுவைப் பற்றியும் ரோஹித்தை பற்றியும் அவர்களிடம் கூறினான் சித்தார்த்.
"பாத்து ஜாக்கிரதையா கையாளு, சித்து. ஏன்னா, இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தாங்குறது சாதாரணமில்ல. அவளுடைய நம்பிக்கையை சம்பாதிக்கிறது ரொம்ப முக்கியம். இந்த அனுபவத்துக்கு பிறகு, அவளுடைய கண்ணோட்டம் மாறுபடும். எல்லாத்தையும் வேற கண்ணோட்டத்துல சந்தேகக் கண்ணோடு தான் பாக்க துவங்குவா. அது அவளுடைய தப்பில்ல. அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் அவளுக்கு அதை செய்ய சொல்லிக் கொடுத்திருக்கும்" என்றார் சுவாமிநாதன்.
"ஒரு பொண்ணு அவ்வளவு சீக்கிரமாக யாரையும் நம்ப மாட்டா. அப்படி அவ நம்பிட்டானா, அதை முழு மனசோடு செய்வா. நீ அந்த விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்" என்றார் தேவயானி.
"தெரியுமா, நான் பார்த்துக்கிறேன்"
"ஏதோ ட்ரிப்புக்கு பிளான் பண்ணிக்கிட்டு இருந்தியே அது என்ன ஆச்சு? நம்ம அப்படி போயிட்டு வந்தாலாவது அவளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்லையா?"
"இப்போ நான் அதைப் பத்தி எதுவும் சொல்றதுக்கு இல்ல"
"ஏன்?"
ஷிவானியின் கடிதத்தைப் பற்றி, ஹரிணி அவளது பெற்றோரிடம் கூறிய விதத்தை, அவர்களிடம் கூறினார் சித்தார்த்.
"பாத்தியா... நான் சொல்லல? தன்னோட புருஷன் நல்லவன்னு தெரிஞ்சா, அவனுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு வர, எந்த பெண்ணுமே தயங்கவே மாட்டா" என்றார் தேவயானி பெருமையாக.
"அவ மனசுல உனக்கு ஒரு மரியாதையான இடத்தை கொடுத்து இருக்கா. அதை எப்பவும் பாழாக்கிடாத. அப்படிப்பட்ட கௌரவம் கிடைக்கிறதெல்லாம் ரொம்ப பெரிய கொடுப்பனை" என்றார் சுவாமிநாதன்.
"எனக்கு தெரியும் பா"
"நம்ம ப்ளான் பண்ண படி ட்ரிப்புக்கு போறதுக்கான ஏற்பாடுகளை கவனி"
"நம்ம நிச்சயம் போகத்தான் பா போறோம்"
"நான் இன்னைக்கு வெங்கடேசன்கிட்ட பேசுறேன்" என்றார் சுவாமிநாதன்.
சரி என்று தலை அசைத்தான் சித்தார்த்.
"நீ போய் உன்னோட பொண்டாட்டியை சமாதானப்படுத்துற வழியை பாரு."
"ஏதாவது *கேடயம்* இருந்தா, உஷாரா எடுத்துகிட்டு போடா" என்று கிண்டலடித்தார் சாமிநாதன்.
சிரித்தபடி தன் அறையை நோக்கி நடந்தான் சித்தார்த். தன் தலையில் தைலம் தடவிக் கொண்டிருந்தாள் ஹரிணி.
"நான் தடவி விடட்டுமா?"
"கிட்ட வந்திங்க... நான் பொல்லாதவளா மாறிடுவேன்" கட்டில் மிதிருந்த தலையணையை அவனை நோக்கி தூக்கி எறிந்தாள் ஹரிணி. சிரித்தபடி அதை பிடித்துக் கொண்டான் சித்தார்த்.
"ஏன் என் மேல இவ்வளவு கோவமா இருக்க? நான் என்ன செஞ்சேன்?"
"நடிக்கிறதை நிறுத்துங்க"
"இப்போ என்ன ஆயிடுச்சு?"
"கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா உங்களுக்கு? பெத்த அம்மா அப்பா முன்னாடி இப்படி எல்லாமா பேசுவாங்க?"
"நான் எதுவுமே சொல்லலையே..."
"எனக்கு மட்டும் ஏன் தும்மல் வரலன்னு ஏன் அவங்க முன்னாடி சொன்னிங்க?"
"ஏன்னா, எனக்கு தும்மல் வரல... அதனால சொன்னேன்" என்றான் தோள்களை குலுக்கிக்கொண்டே.
"நீங்க அப்படி சொன்னதால தான், என்ன நடந்துச்சுன்னு அவங்க புரிஞ்சுகிட்டாங்க"
"அவங்க புரிஞ்சுகிட்டாங்க... அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? அவங்க புத்திசாலி. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து குளிச்சதை நான் அவங்க கிட்ட சொன்ன மாதிரில்ல நீ என்னை திட்டிகிட்டு இருக்க..."
"அந்த மாதிரியெல்லாம் ஏதாவது செஞ்சீங்கன்னா உங்கள நான் கொன்னுடுவேன்"
"சீச்சி... அப்படியெல்லாம் கூடவா செய்வேன்? எனக்கு வெட்கமில்லயா?"
"ஓ... இருக்கா...?"
"நிறைய..." என்றான் தன் கைகளை விரித்து.
"உங்களுக்குள்ள அது எங்க ஒட்டிக்கிட்டு இருக்குன்னு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்"
"நீ பாக்கணும்னு நினைச்சா நான் வேணா காட்டட்டுமா?"
"போதும்பா போதும்..." என்றாள் கைகளை குவித்து.
"ஏன் இப்படி அலுத்துகிற?"
"நீங்க பண்றதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலங்க... எல்லாத்துக்கும் எல்லை இருக்கு. நீங்க ரொம்ப ஓவரா போறீங்க"
அவளை இழுத்து கட்டிலில் அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டான்.
"உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நிச்சயமா உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா?"
"எல்லாமே ஒரு அளவோட இருந்தா தானே நல்லது?"
"அவங்க உன்னை தன்னோட சொந்த மகள் மாதிரி நடத்துறாங்க. அவங்க கம்பெனியை என்ஜாய் பண்ணு. இந்த வயசுல நம்ம தனியாயிட்டோம்னு அவங்களுக்கு ஒரு உணர்வு ஏற்படும். நம்ம அவங்களை அப்படி உணர விடக்கூடாது. உங்க அப்பா அம்மாவுக்கும் அதையே தான் சொல்றேன். அவங்களுக்கு நம்ம வேணும். தலைமுறை இடைவெளியை காரணம் காட்டி அவங்களை பிரிச்சி வைக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல. எல்லாமே நம்ம மனசு சார்ந்த விஷயம் தான். நம்மளோட சந்தோஷத்துல அவங்களையும் சேர்த்துக்கிட்டா, அந்த பிரச்சனை வராது."
உறவின் முக்கியத்துவத்தை பற்றி அவன் பேசியதை, அழகான புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.
"உன் பார்வையாலே என்னை முழுங்குறதை நிறுத்து"
"அதை சொல்ல நீங்க யாரு?"
"நீ என்னை இப்படி பார்த்தா, விளைவுகள் மோசமாக இருக்கும்"
"ஐ டோன்ட் கேர்"
"ஸ்விம்மிங் பண்ணலாமா? நான் உனக்கு சொல்லித் தரேன்"
"நோ தேங்க்ஸ்"
"நல்லா யோசிச்சிக்கோ. என்னை மாதிரி ஒரு டேலண்டெட் ட்ரெயினர் உனக்கு கிடைக்க மாட்டான்."
"ஆமாம், நீங்க எவ்வளவு பெரிய திறமைசாலின்னு எனக்கு தெரியும்"
"தெரிஞ்சிருந்துமா எங்கிட்ட கத்துக்க மாட்டேன்னு சொல்ற?"
"தெரிஞ்சதனால தான் சொல்றேன்"
"ஏம்பா?"
"உங்க வில்லங்கம் பிடிச்ச மண்டைக்குள்ள என்ன அவியிதுன்னு யாருக்கு தெரியும்?"
"வில்லங்கம் பிடிச்ச மண்டையா? அது வில்லங்கம் கிடையாது. வாழ்க்கையை எப்படி சந்தோஷமா பொண்டாட்டியோட சேர்ந்து அனுபவிக்கனும்னு யோசிச்சுக்கிட்டே இருக்குற அறிய பொக்கிஷம்"
"வில்லங்கமான வழியில தானே..."
"நேத்து நடந்த விஷயத்திலிருந்து நீ இன்னும் வெளியில வரலைனு நினைக்கிறேன். நீ அனுமதி கொடுத்தா, நான் இன்னும் நிறைய விஷயங்களை உனக்கு சொல்லிக் கொடுப்பேன். வாயேன் செஸ் ஆடலாம்"
"எனக்கு வேலை இருக்கு"
"ஒரே ஒரு ஆட்டம் ஹரிணி..."
"வாயை மூடுங்க"
"ஹரிணி..."
அந்த அறையை விட்டு வெளியே ஓடிப் போனாள் ஹரிணி. வாய் விட்டு சிரித்தான் சித்தார்த்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top