40 பாவம் கடிகாரம்

40 பாவம் கடிகாரம்

சித்தார்த், ஹரிணியை கட்டிலை நோக்கி தூக்கி சென்ற போது, தன் கையையும், காலையும் காற்றில் உதைத்தாள் ஹரிணி.

"உனக்கு ஸ்விம்மிங் கத்துக்கணும்னா, நான் அப்புறமா கத்து தரேன். இப்போ காத்துல நீச்சல் அடிக்கிறத நிறுத்து" என்றான் சித்தார்த்.

"உங்களுக்கு ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ஸ். அது, நீங்க எவ்வளவு தலைக்கனம் பிடிச்ச ஆளுன்னு காட்டுது"

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்"

"உங்களால என்னை உங்க கண்ட்ரோல்ல வைக்க முடியும்னு நினைக்கிறீங்க. அது எப்படின்னு தான் எனக்கு புரியல"

"நான் தான் உனக்கு இப்போ காட்டப் போறேனே"

அவளைக் கட்டிலில் இட்டு, அவள் இரு கரங்களையும் கெட்டியாய் பற்றிக் கொண்டான் சித்தார்த்.

"என்ன செய்யப் போறீங்க?" என்ற அவளது குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

"லவ் மேக்கிங்" என்றான் சித்தார்த் சாதாரணமாய்.

"இப்படித் தான் நீங்க என்னை கண்ட்ரோல் பண்ண போறீங்களா?"

"நீ என்ன நெனச்ச?"

"நீங்க ஏதோ மேஜிக் பண்ண போறீங்கன்னு நினைச்சேன்" என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"ஒரு விதத்துல நீ நினைச்சது சரி தான்" ரகசியம் உரைத்தான் சித்தார்த்.

ஆணி அடித்தது போல, தன் கண்களை அகற்றாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவன் கண்களில் எண்ணற்ற உணர்ச்சிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவன் முகத்தில் சதா அலைந்து கொண்டிருக்கும் குறும்புப் புன்னகை மறைந்து போனது. அவனது முகம் உணர்ச்சிக்கு ஆட்பட்டது. அவளது முகத்தை முத்தத்தால் நிரப்ப துவங்கினான், அவளைத் தன்னிலை மறக்கச் செய்து. அவனது முத்தங்கள் ஒவ்வொன்றும் வெகு மென்மையாய் இருந்தபோதிலும் ஆர்வம் ததும்பி வழிந்தது.

*ஹரிணி* என்ற அவளது பெயரை அவன் திரும்பத் திரும்ப மந்திரம் போல் உச்சரித்த போது,

*காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா. கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா* என்ற வாலியின் வரிகளை எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அவனது கிறங்கடிக்கும் குரலில் ஒலித்த அவளது பெயரே, ஹரிணியை உருக செய்யப் போதுமானதாக இருந்தது. அவளது மூச்சின் வேகம் உயர்ந்த படி இருந்தது. அவளது புடைத்த நரம்புகள், எந்த நேரமும் வெடித்து விடும் போல் இருந்தது. விவரிக்க முடியாத அளவிற்கு அவளது உடல் சூடு அதிகரித்தது.

ஒவ்வொரு நொடியும் அவனது *தேவை* அதிகரித்துக் கொண்டே சென்றது. அது அவனது உணர்ச்சி வேகத்தை அதிகரித்தது. அவனுடைய  இந்தப் பக்கம், ஹரிணி இதற்கு முன் எப்போதும் பார்க்காதது. அவளது மென்மையான காது மடல்களை தனது உதடுகளால் வருடிக் கொடுத்தான் சித்தார்த், அவளது கை விரல்களை, தன் விரல்களுடன் பிணைத்துக் கொண்டு.

தன்னுடைய எந்த ஒரு செயலையும் அவள் தடுத்து விடக்கூடாது என்ற பேரவா அவன் எண்ணத்தில் உதயமானது. அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அவளும் அவனைத் தடுக்கவில்லை.

*பெட்* என்பதெல்லாம் வெறும் பேச்சு. நடப்பதை பார்த்தால் அதெல்லாம் வெறும் சாக்கு என்று புரிகிறது. சில நொடிகளிலேயே, ஹரிணி முழுதாய் சித்தார்த்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாள். அதைப் பற்றி எல்லாம் அவள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவளிடம் தன்னை முழுதும் தொலைத்தவனாய், அவளுக்குள் மொத்தமாய் மூழ்கிப் போனான் சித்தார்த். அவளது மெல்லிய முனங்கல், மெல்லிசை போல் ஒலித்தது. அது, அவனது மீதமிருந்த கட்டுப்பாட்டையும் மொத்தமாய் கொன்று குவித்தது.

அவர்களது ஒன்றுபட்ட இதயங்கள் ஒன்றுக்கொன்று இணங்கி துடித்தது. அவர்களது உயிர்மூச்சு ஒன்றிணைந்தது. அவனது வாளிப்பான கட்டுடல், அவளது மென்மையான உடலின் முன் மண்டியிட்டது. அது, அவளது மனதை தறிகெட்டு ஓட செய்தது. தன் மனதில் தேக்கி வைத்திருந்த எண்ணில்லா ஆசைகளை, ஒவ்வொன்றாய் கட்டவிழ்க்கத் தொடங்கினான் சித்தார்த். தன் மனம் கவர்ந்த பெண்ணுக்கான ஏக்கங்கள் அனைத்தும், தடைகளை உடைத்துக் கொண்டு வெளிவரும் வெள்ளமெனப் பாய்ந்தது. அவளை முழுதாய் தனதாக்கிக் கொள்ளும் ஆவலில் இதழ் கலந்தான்.

இதுவரை இல்லாத பரிச்சயம் அவர்களுக்குள் நிகழ்ந்தது. காதல் என்னும் அனலில், இருவரும் உருகி ஒன்று கலந்தனர். முன்பின் அறிந்திராத அன்னிய உணர்வால் ஆட்கொள்ளப்பட்ட ஹரிணி, சித்தார்த்தால் முழுமையாய் களவாட பட்டாள். தன்னையும் களவு கொடுத்தான் சித்தார்த்.

காதல் சாகரத்தில் மேலும் மேலும் மூழ்கிக் கொண்டிருந்த சித்தார்த், தனக்காக வழங்கப்பட்ட நேரம் ஓடிக்கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. தங்கள் திருமண வாழ்வின் *மிக முக்கியமான கட்டத்திற்கு* செல்ல தயாரானான் அவன். அப்பொழுது தான் அவன் புத்தியில் ஏதோ உரைத்தது. அவன் கடிகாரத்தை பார்க்க, மணி 10:58 என்றது. பல்லைக் கடித்தான் சித்தார்த். இப்படிப்பட்ட உச்சக்கட்டத்தில் எப்படி நிறுத்துவது? ஆனால் அவன் எதிர்பாராத வண்ணம், அருகில் இருந்த மேஜையின் மீது இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து, கடிகாரத்தின் மீது விட்டெறிந்தாள் ஹரிணி. அந்த பாவப்பட்ட கடிகாரம் தரையில் விழுந்து சுக்குநூறாக உடைந்தது.

அதிர்ச்சியுடன் அவளை நோக்கினான் சித்தார்த். தன் கைகளை அகல விரித்து, அவனை அணைத்துக் கொள்ளுமாறு வேண்டினாள் ஹரிணி. அவளது செயலால் திக்கு முக்காடி போன சித்தார்த், முத்தமழையில் அவளை நனைத்து திக்குமுக்காட செய்தான்.

அவன் கூறியது போலவே, அவனது ஆளுமை ஹரிணியை வென்று விட்டது. அவள் ஒட்டுமொத்தமாய் அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தாள். தனது மந்திரஜாலம் மிகுந்த தொடுதல் மூலம் அதை சாத்தியமாக்கினான் சித்தார்த்.

அதன் பிறகு அவன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அனைத்து தயக்கங்களையும் மூட்டைகட்டி தூற ஏறிந்து விட்டு, தான் ஆரம்பித்த வேலையில் இறங்கினான் சித்தார்த். இதற்கிடையில் சித்தார்த்தை பரவசப்படுத்திய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. இதுவரை எப்போதும் இல்லாத வகையில், ஹரிணி அவன் பெயரை  *சித்* என்று முனங்கினாள். தனது பெயரை முற்றிலும் வேறு கோணத்தில் கேட்ட அவனது மனதில் சொல்லாத பல மாற்றங்கள் நிகழ்ந்தது. அது அவன் ஆரம்பித்த கதையை  முடிவுக்குக் கொண்டுவர அவனை தூண்டியது. அவனது ஒவ்வொரு நரம்பிலும் ரத்த வெள்ளம் பாய்ந்தது. அவனது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது. அவனது தொண்டையோ, மொத்தமாய் வரண்டது. முத்தத்துடன் ஆரம்பமான தாம்பத்தியம், முத்ததுடனேயே முடிந்தது. அது வறண்டிருந்த அவர்களது தொண்டைக்கு இதமளித்தது.

உதடு கடித்து அவளை பார்த்து புன்னகைத்தான் சித்தார்த்.

"என்னங்க..."

தன் ஆள்காட்டி விரலை அவள் உதட்டின் மீது வைத்து, அவளைத் தடுத்து நிறுத்தி,

"சித்... " என்றான் சித்தார்த்.

"என்ன...???"  என்றாள் ஒன்றும் புரியாமல்.

"என்னை *சித்* ன்னு கூப்பிடு" என்றான்.

ஹரிணியின் கண்ணம் பரபரவென சிவந்து போனது.

"அந்த பேர் செம ஹாட்டா இருக்கு"

"அப்படின்னா அதை எல்லா நேரமும் கூப்பிட முடியாது... அது கட்டிலுக்கு மட்டும் தான் சொந்தம்"

"அது சித்தார்த்துக்கு சொந்தம்" என்று மறுத்து கூறினான் சித்தார்த்.

"இல்லங்க..."

"இன்னொரு தடவை, என்னங்க, நொன்னங்கன்னு சொல்லி கடுப்பு ஏத்தாத... அப்புறம் உன்னை மறுபடியும் அப்படி கூப்பிட செய்யுற வேலையில் இறங்கிடுவேன்" என்று செல்லமாய் மிரட்டினான்.

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் ஹரிணி.

"சொல்லு..."

"சித்..." என்றாள் இரகசியமாக.

அவளது மூக்கை தன் மூக்கால் வருடிய படி

"ஐ லவ் யூ..." என்றான்.

"ஐ டூ லவ் யூ..."

"ஏய்..."

"ம்ம்ம்ம்?"

"போட்டியில யார் ஜெயிச்சது?"

"நான் தான்"

"அப்படியா?" என்றான் கிண்டலாக.

"பின்ன என்ன? என்னால தான் நீங்க ஆரம்பிச்சதை முடிச்சிங்க"

"எப்படி?"

"நான் தான் கடிகாரத்தை உடைச்சு உங்களுக்கு சான்ஸ் கொடுத்தேன்"

"அப்படின்னா என்ன அர்த்தம்?"

"என்ன?"

"நீ என்னோட கண்ட்ரோலுக்கு வந்துட்ட. நான் ஆரம்பிச்சது உனக்கு பிடிச்சிருந்தது. நான் பாதியிலே நிறுத்துறதை நீ விரும்பல. நான் அதை முடிக்கணும்னு நீ நெனச்ச. பாவப்பட்ட கடிகாரத்தை கூட உடைச்சிட்ட. அப்படின்னா ஜெயிச்சது நான் தான்"

அவன் கூறுவது சரி தானே...? அவன் வெல்வதற்கு, இவள் தானே அவனுக்கு சந்தர்ப்பம் வழங்கி, அவன் துவங்கியதை முடிக்க செய்தாள்? முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உதடு சுளித்தாள் ஹரிணி. சிரித்தபடி அவள் உதட்டில் முத்தமிட்டான் சித்தார்த்.

"உண்மையைச் சொல்லப் போனா, ஜெயிச்சது நம்ம ரெண்டு பேரும் தான். லவ் மேக்கிங்கில் மட்டும் தான் அது சாத்தியம். சரி தானே?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி. அவளைத் தன் கையால் சுற்றி வளைத்துக் கொண்டு, அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் சித்தார்த். அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து, அவனது இதயத்துடிப்பை கேட்டவாறு உறங்கி போனாள் ஹரிணி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top