♡(︶ó. துளி 06 .ò︶)♡
விடியல் தன் வேலையை செவ்வனே செய்துகொண்டிருந்தது. நேற்றை இரவிலிருந்து தொற்றிக்கொண்ட பதற்றம், தூக்கத்தை தொந்தரவு செய்ய, விடியும் முன் எழுந்து கொண்ட ரிஷி கிளம்பி வழக்கமாக செல்லும் பூங்காவுக்குள் நுழைந்தான்.
நிதானமாய் சுவாசிக்க கிடைக்கும் இந்த பொழுதுகளின் மயக்கத்தை தூக்கத்தில் தொலைத்திட விருப்பமின்றி , ஊரிலிருக்கும் ஓவ்வோரு விடுமுறை நாட்களிலின் சூரியஉதயம் அவனுக்கு இங்கு தான்.
காலை குளிரை ரசித்தபடி ஓடும், இந்த வார இறுதிகளுக்குகாக அவனது டைரியில் புதுபக்கங்கள் உண்டு.
காற்றில் கசிந்து காதில் கேட்ட புது பாடல்...
கடந்துசென்ற மனிதர்கள் விட்டு சென்ற புன்னகை...
சரியாக எதிர்திசையில் ஓடிவரும் விநோதங்கள் ...
அப்போதுதான் உதிர்ந்து எவர் காலிலும் மிதி படாத தூங்குமூஞ்சி மலர்கள் ...
அருகல்புல் சாற்றின் சுவையில் உதட்டை சுளிக்கும் வயதான சிறுமிகள்....
என ஏதோ ஒன்றை தன்னுள் நிரப்பிக்கொள்ள.
உடல் வேர்த்து, உடை நனைய உள்ளே வந்தவனை, வழக்கத்திற்கு மாறாக வீட்டிருந்த அமைதி ஈர்த்திட , அடுக்கலையினுள் எட்டி பார்த்தான்.
அதிசயமாய் இன்று வாணொளி வாய்மூடி அமர்ந்திருக்க, வாணி மும்முரமாக பாத்திரங்களை அடுக்கி கொண்டிருந்தார்.
யோசனையாய் நகர்ந்து பின்வாசளுக்கு சென்றால், போனவாரம் வாங்கிவந்த ரோஜாச்செடியை, கவனமாக சிறிதிலிருந்து பெரியத்தொட்டிக்கு மாற்றிக்கொண்டிருந்தார் சுந்தர்ராஜன்.
இந்த அமைதி சரியிலையேயென எண்ணியவாறே, கொடியில் கிடந்த துண்டை இழுத்து தோளில் போட்டுகொண்டு, அவன் அறைக்குள் நுழைந்தான்.
குளியலறை கதவுதிறந்து, வெளிவந்த ரிஷி சற்றே அதிர்ந்து அதன் வாசலியேயே நின்றான். அவன் அம்மாவோ அப்பாவோ, வயதுவந்த பிள்ளைகள் அறைக்குள் அனுமதியின்றி வந்ததே இல்லை எனலாம்.
இன்றோ இருவரும் எதிர்பாரா நேரத்தில் ஒன்றாக வந்திருந்தனர் அதிலும் வாணி அவனது கப்போர்டில் மூழ்கி போயிருக்க, சுந்தரராஜன் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வெளியே வெறித்துக்கொண்டிருந்தார்.
என்னவெண்டறிய, 'அம்மா' என வாயேடுக்க, அவன் வந்தலாலோ இல்லை வாசனை வந்ததாலோ திரும்பிய வாணி, 'ரிஷி, நீ இப்போ போட எந்த டிரஸ் எடுத்து வைச்சிருக்க?' என்றார்.
சற்றும் எதிர்பாரா கேள்வி, அவன் அதை உள்வாங்கி, பதில் சொல்லும் முன், சுந்தரராஜன், 'நான் தான், அவனுக்கு இத எடுத்து வைச்சிருக்கேனே , திரும்பவும் நீ அவன்கிட்ட கேட்டா என்ன அர்த்தம்' என்றார்
'ஏன்னா , உங்க செலக்சன் சகிக்கலை. ஏங்க அவனை அதையே போடவச்சுருவீங்களோனு தான் நான் இங்கயே நிக்கிறேன்' என வாணியும் அவருக்கு பதிலளித்தது விட்டு, திருப்பவும் ரிஷியை பார்த்து 'எது?' என கேட்டார்.
இது தான் விஷயமா என சிரித்து கொண்டே அவன் 'ஏதோ ஒன்னு, அதெல்லாம் யோசிக்கல' என சொல்லிவிட்டு கட்டிலின் மேலிருந்த, வெளிர் நீல நிற முழுக்கை சட்டையும், சாம்பல் நிற பேண்டையும் கையிலெடுத்தான்.
நல்லாத்தானே இருக்கு என அவன் யோசிக்கும்முன் 'அது வேண்டாம், நான் உனக்கு வேற செலக்ட் பண்ணறேன்' என அவன் கையிலிருந்ததை வெடுக்கென பிடிங்கினார் வாணி.
'ஒன்னும் தேவையில்லை, இது தான் நீட்டா இருக்கு. நீ திருவிழாக்கு போறமாதிரி எதையாவது எடுத்துவைக்காத' என சுந்தரராஜன் முறைத்துக்கொள்ள
வாணி ஒரு வெள்ளை நிற காட்டன் சட்டையும் நீல நிற ஜீன்சையும் அவன் கையில் கொடுத்தவாறே 'அவன பொண்ணு பார்க்க கூட்டிட்டு போறோம், போஸ்ட் ஆபீஸ்க்கு போகல, நீ சீக்கிரம் இத மாத்திட்டு கெளம்பிவா 9.30 க்கு சரியாய் கிளம்பணும்' என்றுவிட்டு வெளியே நடந்தார்
எப்படியும் இவன் அவன் அம்மா சொன்னதை தான் செய்யவான் என உறுதியாக தெரிய அவனை அடிக்கண்ணில் நோக்கிவிட்டு 'உன் இஷ்டம்' அவரும் கிளம்பினார்
தலையசைத்து அனுப்பிய அவரை கொஞ்சம் கூட ஏமாற்றாமல், அவர் நினைத்த மாதிரியே வந்து நின்றான். சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனிடம் கண்ணாலேயே பார்த்தீங்களா என் பையனை என சீண்டிவிட்டு ரிஷியின் தட்டில் அப்போதுதான் பொறித்த பூரிகளை வைத்தார் வாணி.
இங்கு இது ஒரு பழக்கம், ஞாயிற்று கிழமையின் மாறாத காலைஉணவு, ரஞ்சியின் பிடிவாதத்திற்காக ஆரம்பித்தது, அவள் அங்கு இல்லாத நாட்களிலிலும் மறக்காமல் இன்றும் மாறாமல் இருப்பது,சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்
'ரிஷி...' என துவங்கி, அவன் கேள்வியாய் பார்க்கவும், ஏதோ உரைக்க 'சரி சாப்பிடு' என்று அமைதியானார்
அப்பாவுக்கும் மகனும் ஒருவிதத்தில் ஒன்றி போவதென்றால் அது சாப்பிடும் போது பேசாமலிருப்பது மட்டும் தான், தானும் பேசுவதில்லை அடுத்தவர் பேசுவதும் பிடிப்பதில்லை,
அதற்ககாகவே ரஞ்சி தட்டை எடுத்துக்கொண்டு டிவி முன் உட்கார்ந்துவிடுவாள். அங்கே தொட்டு, இங்கே தொட்டு மூவருக்கும் காலையில் இருந்து ரஞ்சியின் நினைவுதான், வீட்டில் ஒரு முக்கியமான நிகழ்வு, அவளில்லாமல் நடப்பதாலோ என்னவோ. மற்ற இருவரும் காட்டிக்கொள்ளாவிட்டாலும் வாணி வாய்விட்டு இரண்டுதடவை சொல்லியாயிற்று.
அவன் உண்டுமுடிக்கும் வரை காத்திருந்து ' ரஞ்சி கூப்பிட்டுட்டே இருக்கலேடா, அவகிட்ட ஒரு தடவ பேசிறேன் '
'நான் தான் இன்னைக்கு சாய்ந்திரம் பேசுறதா சொல்லிருக்கேனே, இப்போவே என்ன அவசரம்'
'இல்ல, அவ அனுப்பிச்ச போட்டோவ நீ இன்னும் பார்க்கலைன்னு சொன்னா, நாம அங்க போறதுக்குள்ள ஒரு தடவை பார்த்துறேன், அவ அதுக்கு தான் காலையிலே இருந்து போன் அடிச்சிட்டே இருக்கா '
சிறிது நேரம் பற்களால் கீழுதட்டை அழுந்த பற்றியவாறே பேசாமலிருந்தான். மற்ற இருவரும் கலக்கமாய் பார்த்துக்கொள்ள மெதுவாய் ' நான் அந்த போட்டோவை பார்க்குறதுனால நாம இப்போ அங்க போறதுல எதுவும் மாற்றம் இருக்கா?' என்றான்.
பதறிய வாணி 'அதெல்லாம் இல்லடா, நிதானமா பார்த்துக்கலாம்ல அதுக்குத்தான் சொல்றோம்'
ரிஷி 'ஹ்ம்ம் நான் நேரிலேயே பார்த்துகிறேனே' என்றுவிட்டு இருவரையும் ஆழமாக பார்க்க,
சுந்தரராஜன் ஒரு மென்னகையுடன் அவன் தோளில் தட்டி, 'நேரமாச்சு கெளம்பு, போய் வண்டியை எடு நாங்க வந்துறோம்' என்று உள்ளே சென்றார்.
***************************************************
காலை பரபரப்பில் மறந்திருந்த, வாசல் கோலத்தை அவசரமாக போட்டுவிட்டு உள்ளே வந்தார் லலிதாம்பிகை, வந்த வேகத்தில் கையில் காப்பியுடன் வந்த பூரணியின் மேல் மோதியதால் காப்பி டம்பளர் தரையில் விழுந்து சுவரில் பற்று தெறித்தது.
மழையில் நனைந்த கோழியாய் வேடவிடுத்து நின்ற பூரணிக்கு லலிதா பார்த்த பார்வையில் உள்ளே குளிரடித்தது..
'என்ன கோவப்படுத்தணும்னு ரெண்டுபேரும் வீம்புக்கு பண்ணுறீங்களே' என்றபடி லலிதா சோர்வாக படியில் உட்கார்ந்தார்.
லலிதா ஒரு சுத்தப்பிரியை, இந்த வீட்டிற்கு வயது எட்டு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், அவளின் பராமரிப்பில் ஏதோ நாலு மாதம் முன் கட்டிமுடித்ததை போலிருக்கும்.
நேற்றிருந்து இன்னும் பார்த்து பார்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தவருக்கு, மாப்பிள்ளை வீடு வரும் நேரத்தில் வாசல் சுவரில் தெறிதித்திருந்த காபி கறையில், கண்ணில் கண்ணீர் கோர்த்தது.
பெரிதாய் திட்டு விழப்போவதையெண்ணி பயந்த பூரணி , அவர் அப்படி அமர்ந்ததை பார்த்து 'சாரி அத்தை, அவர் காபி கேட்டாருனு அவசரமா கொண்டுவந்தேன், உங்கள கவனிக்கல. இதோ இப்போ சுத்தம் பண்ணிடுறேன்' என்றவாறு துணியை எடுத்துவர உள்ளே ஓடினாள்.
லலிதாவினின் பார்வை தன் பக்கம் நகருவதை கண்டு மிரண்ட அரவிந்தன் ஓடிடும் மனைவியை பார்த்து அடியே யாருகிட்ட கோர்த்துவிடுற என்று மனதிற்குள் திட்டியவாறே, கழுவிக்கொண்டிருந்த காரின் பின் பக்கம் துடைப்பதாய் மறைந்து கொண்டான்
'ஏன் அந்த காபிய செய்யற வேலைய முடிச்சிட்டு உள்ள வந்து குடிக்க கூடாது, ரொம்ப சோம்பேறி அயிட்டடா, இருக்கட்டும் பார்த்துகிறேன்' என்றுவிட்டு எழுந்து சென்றார்.
சே, காலையிலே இருந்து எத்தனை தடவை. சண்டே நிம்மதியா தூங்கவிடாம ஏழு மணிக்கெல்லாம் எழுப்பி வாசல தூசியாய் நிக்குதுனு காரை கழுவச்சொல்லி திட்டியாச்சு, அடுத்து இது. இப்போ மாப்பிள்ளை பொண்ண பார்க்க வர்றாரா இல்ல என் கார பார்கவர்றாரா,
என தன்னோடு புலம்பிக்கொண்டு வந்தவன், ஹாலில் பார்த்தக்காட்சியில் கையால் வாய்பொத்தி சிரித்துக்கொண்டே 'அப்பா' என்றான்.
அங்கு இத்தோடு நாலாவது தடவையாக டீப்பாயின் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார் சீனிவாசன், அவன் கூப்பிட்டகுரலில் தலையை தூக்கி என்ன என்றவர், அவன் 'இது எத்தனையாவது?' என கேட்க, சமையலறையை பார்த்துக்கொண்டு சத்தம் வராமல் செய்கையில் போடா என்றார். அவனும் 'நடக்கட்டும்' என்று நகர்ந்தான்.
மெதுவாய் கதவை திறந்து உள்ளே வந்த பூரணி, 'இன்னும் என்ன பண்ணுற ரேகா, ஒரு புடவை கட்டவா உனக்கு இப்படி வேர்த்து வைச்சிருக்கு? '
'அப்பாடி ஒருவழியா வந்தாச்சா, எவ்ளோ நேரமா நீங்க வருவீங்கன்னு காத்துட்டு இருக்கேன் அண்ணி, இது மேல பின்பண்ணுறதுக்குள்ள கீழ கழண்டுக்குது, அத சரி பண்ணா மேல கசங்கிடுது எனக்கு இப்போவே டையர்டு ஆயிருச்சு' என ரேகா பின்னலை முடிசிட்டாள்.
பூரணி அவள் புடவையின் கீழ்மடிப்புகளை சரிசெய்துகொண்டே 'அதுக்குத்தான் உன்ன லேசான பட்டா கட்ட சொன்னேன், நீ தான் காட்டன் புடவைதான் கட்டுவேன்னு நின்ன, இது அவனுங்க வரவரைக்கும் கூட தாங்காது போலயே',
'நானும், அது தான் யோசிக்கிறேன். இப்போவே பாதிக்கு மேல கசங்கிப்போச்சு வேர்த்தது வேற. ஏன் தான் உங்க ஊரு இப்படி வேர்க்குதோ?'
'அதுக்கு தான் எங்களுக்கு AC னு ஒன்னு இருக்குல்ல, உனக்கு அது ஒத்துக்காது வேற .அதுசரி பொசுக்குன்னு இதை எங்க ஊருனு சொல்லிட்டல, மாப்பிள்ளை ஓகேனு சொன்னா உனக்கும் இதுதான் ஊரு பார்த்துக்கோ.' என்றால் மடிப்பினுள் மறைந்திருந்த டாலரை எடுத்து வெளியே போட்டபடியே
'அவரு ஓகே சொல்லுவாருங்கிறீங்க ?, எனக்கு கொஞ்சம் டவுட் தான்'
'ஏன் அப்படி சொல்ற, அதெல்லாம் நல்லபடியா நடக்கும், நீ கொஞ்சம் நேரம் அமைதியாய் உட்க்காரு, வேர்வை கொஞ்சம் காயும் அவுங்க வர்ர நேரமாச்சு'
'பேசாம, இத மாத்திட்டு ஒரு சுடிதார் போட்டுக்கவா, பத்து நிமிசத்துல ரெடி ஆயிருவேன்.'
'கடைசியா, அத்தைகிட்ட எப்போ அடிவாங்குனனு நியாபகம் இருக்கா ?'
'ஐயையோ, நீங்க வேற நான் சும்மா சொன்னேன்.. அம்மாகிட்ட மாட்டிவிட்டுராதீங்க பிளீஸ் ..'
'சரி சரி திரும்பு, இந்த பூவை வச்சுவிட தான் வந்தேன், லேசா கொஞ்சம் பவுடர் போடேன் ரேகா'
'வேணாம் அண்ணி, எப்படியும் வேர்க்கும், துடைச்சா போகப்போறதுக்கு எதுக்கு. நான் இப்டியே இருந்துகிறேன்'
பூவை அவள் தலையில் வைத்தவாறே பூரணி 'சொன்னதை கேட்ருராத, சரியா?, இப்டியே இருந்துக்கோ' எனும் பொழுது, வாசலில் கார் வந்து நிக்கும் சத்தம் கேட்டு, 'வந்துட்டாங்க' என பூரணி வெளியே ஓட, ரேகா ஜன்னலுக்கு ஓடினாள்
சுந்தரராஜன் முதலில் இறங்க, பின்னிலிருந்து அவரது அண்ணன் மனைவி ஜெயந்தியுடன் வாணியும் வர, வாசலில் நின்ற சீனிவாசன் அவர்களை உள்ளே அழைத்து சென்றார்
வண்டியை ஓரமாய் பத்திரமாய் நிறுத்திவிட்டு வந்த ரிஷியை, வாசலுக்கு வெளியே சென்று அரவிந்தும் கைகுலுக்கி உடன் கூட்டிசென்றான்.
அவன் நடந்து வருவது தெரிந்தாலும், வெளியே நின்ற செம்பருத்தி செடியின் இலைகளை தாண்டி எத்துணை முயன்றும் ரேகாவால் ஜன்னலின் வழியே, அவனது முகம் பார்க்கமுடியவில்லை
'சே, போச்சு... போச்சு.... உள்ள போய்ட்டாங்க. எல்லாரும் இருக்கறப்போ எப்படி முகத்தை பார்க்குறது.. இந்த செடி போனதடவ நாம வந்தப்ப இவ்ளோ உயரமாவ இருந்துச்சு', என் தன்னுள் பேசிக்கொண்டே கதவருகே சென்று வெளியே பேசும் சத்தம் கேக்கிறதா என கூர்ந்துக்கேட்க முயற்சிதாள்
அங்கே, வழக்கமான வரவேற்புகளும், பரஸ்பர அறிமுகங்களும் முடிந்து, சுந்தரராஜனும், ஜெயந்தியும், சீனிவாசனிடம் இரு குடும்ப பூர்வீகங்களின் பிணைப்புகளை தேடி தேடி சமந்தப்படுத்தி கொண்டுருக்க, வாணியும் லலிதாவிடம் மெதுவாய் பேச்சை வளர்த்து கொண்டிருந்தார்.
வேலை படிப்பு என சில பொதுவான கேளிவிகளுக்கு பின் அரவிந்தும் அமைதியாகிவிட, ரிஷி சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
அங்கே அரவிந்தன் பூரணி கல்யாண போட்டோக்களை தவிர ஒரு வயது குழந்தையின், வேறு வேறு கோணங்களில் எடுத்திருந்தது போட்டோக்கள் மட்டுமே இருந்தது.
வேடிக்கை பார்த்தது போதுமென தலையை குனிந்து அமர்த்திருந்தவன் இடது புறம், ஷோகேசில் ஒரு சின்ன லேமினேஷன் போட்டோவில், அதே குழந்தையை மேல தூக்கிப்பிடித்து, கண்ணோரம் சுருங்கி லேசாய் தலைசாய்த்து சிரித்து கொண்டிருந்தாள் ரேகா.
காதில் ஒன்றுமே விழாமல் போகவே , புடவையின் தலைப்பை கையில் திரித்துக்கொண்டு, ரேகா அறைக்குள் நடைபயின்று கொண்டிருக்க, வேகமாய் உள்ளே வந்த பூரணி , எதிர் பாராமல் முழித்து கொண்டதால், திரு திரு என விழித்து கொண்டிருந்த யுவனை அவளிடம் கொடுத்துவிட்டு, 'அழுது சத்தம் போடாம பார்த்துக்கோ, நான் காப்பி போட போறேன்' என நகர ரேகா 'அண்ணி' என்று அழைத்து அவள் முகத்தை கேள்வியாய் பார்க்க பூரணி, கட்டைவிரல் உயர்த்தி, தலையாட்டி பளிச்சென சிரித்துவிட்டு போனாள்.
🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§§🍬
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top