⋆♡துளி 2♡⋆

ரேகா சீனிவாசன்....

இது ஒன்னும் புது பெயரெல்லாம் இல்ல, ரொம்ப நாளா தெரிஞ்ச பெயர் தான், சொல்லபோனா அவனே சொல்லி பழக்கபட்ட பெயர் தான், ஆனா இந்த உணர்வு தான் ஏதொ புதுசா. அதுவும் ஏன் திடீருனு இவ்வளவு தொந்தரவா இருக்கு, இதே நிலைமை தான் ஆபீஸ் வந்ததிலிருந்து...

தினமும் வருகிற அதே பாதை, கண்ணும், கையும் காலும் தானா கொண்டுவந்து சேர்த்தாச்சு, தனியா எதுவும் பெருமுயற்சி செய்யவேண்டிய செயலல்லாம்யில்லை, ஆனா இதுக்கே ரொம்ப சோர்வா இருக்கற மாதிரி உணர்ந்தான். இந்த கேபின் அவனோடது தான்; எத்தனயோ ராத்திரி முழுசா தனியா இங்கயே உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறான், இன்னைக்கு இங்க ஏதோ மூச்சுமுட்டறமாதிரி இருந்தது. மெதுவா எந்திருச்சு ஜன்னலோரம் போய் நின்னு கீழ ரோட்டை கவனிக்க ஆரம்பிக்க, ரொம்ப பிஸியான வழக்கமான காலை நேரம் தான், ஆட்களும் காரும் பஸும் நிக்காம நகர்ந்திட்டு இருந்தது.

மனசும் மெதுவா நகர்ந்து, அந்த பேருக்கு தொரடர்பான ஞாபகங்களை நினைவுகொள்ள ஆரம்பிச்சது.

திரும்பரப்ப எல்லாம் கன்னத்துல பட்டு மின்னுற சின்ன காதுவளையங்கள்,

எப்போதும் உள்ளங்கைக்குள்ள ஒளிஞ்சுட்டிருக்காரு பிங்க் கலர் ஹாங்கி,

தினமும் ஒரே அளவுல மடிச்சு கட்டிருக்கும் ரெட்டைஜடை பின்னல்.

மறந்து கூட சிரிக்காத கண்கள்....

எல்லாம் எப்பவோ மறந்து போன விஷயங்கள்..

இதெல்லாம் எதுக்கு இப்போ ஞாபகம் வரனும் தன்னையே நோந்தவனாய், நினைவுகளை விலகும் முயற்சியாய்

தலையை திருப்பி தன்னோட, ஒய்டு டபுள் ஸ்கீரின் மானிடர பார்க்க, அது நான் ஒன்னும் பண்ண போறதில்ல நீயா வந்து ஏதாவது செய்ஞ்சாதான் உண்டுனு சொல்லுற மாதிரி கண்ணடித்தது..

இன்னைக்குனு பார்த்து ஒரு வேலையும் செய்யமாட்டேன்னு மூளையும் போராட்டம் செய்யதது,

தன்னோட இந்த மாற்றம் ரிஷிக்கு கொஞ்சம் கூட பிடிக்கல, இப்படி குழப்பமா அவன் நின்னதே இல்லை, என்ன செய்யணும், எப்போ செய்யணும், எப்படி செய்யணும்னு ரெண்டு நிமிசத்துக்கு மேல அவன் யோசிச்சதே கிடையாது.

ரிஷி தன்னோட கேரியரை ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆயிருச்சு, இப்போ இங்க அவன் ஒரு ப்ரின்ஸிபல் கான்சல்டன்ட். ஸ்லோ அண்ட் ஸ்டடினு சொல்லுற மாதிரியானா முன்னெற்றம் தான்.

எதுக்குமே ரொம்ப அவசர படாத நிதானம், எப்போதுமே ஒரு தெளிவான சிந்தனை, இது ரெண்டும் தான் அவனோட தனித்துவமே. எந்த விசையும் என்ன அவ்ளோ சீக்கிரம் இன்பிலுயென்ஸ் பண்ணாதுனு வெளிப்படையா சொல்லுற ஆள் அவன், அவனோட வயசு பசங்க கிட்ட இருக்கற எந்த தடுமாற்றமும் இல்லைங்கற ஒரு கர்வம் கூட உண்டு.

இதெல்லாம் சேர்ந்து அவன இந்த இயல்பான மாற்றங்களை கோவமபடமா கடந்து போக விடாம இந்த நிமிஷம் இப்படி தடுமாறி நிக்கவைச்சிருக்கு.

ஒரு பெண்ணோட பெயர் தன் கவனத்தை சிதற வைக்கற உண்மையை ஒதுக்க அவன் விரும்பல. இந்த உணர்வை ஒதுக்கி வைச்சிட்டு அடுத்த வேலை பாக்கணும்னா, அவனுக்கு கண்டிப்பா ஒரு காஃபி வேணும்,

பேன்ட்ரி தேடி நடந்துடே, சுத்தி இருகிற கூட்டதுல வழக்கமா தன்னை டீக்கு இழுத்துட்டு போகுற ஒரு ஜீவனும் கண்ணுல தெரியல, இருந்ததுல பாதி சீட்டுக்கும் மேலே காலியா தான் இருந்தது, திங்ககிழமை வேற, இப்போ மணி என்ன?., ச்சே, வெறும் 10.10 தானா, இன்னைக்கு காலையிருந்து நேரம் அநியாயத்துக்கும் மெதுவா போகுதே.

பத்து தடவை கூப்பிட்டும் எந்திருக்காத தன்னை சீட்டுக்கே வந்து சிஸ்டம் லாக் பண்ண வைச்சு தினமும் பிரேக்குக்கு கூடிட்டு வரும் இந்த பட்டாளம், இல்லமா தனியா காஃபிய பருக ஆரம்பிச்ச நிமிசம் இதமான ஏதோ ஒரு உணர்வு, எல்லாரும் மறக்கவே நினைக்காத பள்ளி நாட்களூக்கு இழுத்துட்டு போச்சு... அவன் கூட அப்பவும் இதுமாதிரி ஒரு நண்பர்குழாம் இருந்தது
.
.
.

" ......டேய் கௌதம், நீ மட்டும் ஏன் இங்க நிக்கற, எல்லாரையும் லேப்க்கு போக சொல்லுன்னு உன்கிட்ட தானே சொல்லிட்டு போன்னேன்"

" ரிஷி, அதெல்லாம் செஞ்ச்சாச்சுடா பாதி பேர் பாட்டனி லேப், மீதி பேர் சி.எஶ் லேப்ல தான் இருக்காங்க, ஆனா நடுவுல ரெண்டு ஜோடிய காணோம், அதுங்களதான் தேடிட்டு வந்தேன். நீ போன மீட்டிங் என்ன ஆச்சு, எதும் புது ருல்ஶ் போட்ருக்காங்க்லா?"

" அப்படி ஒன்னும் இல்ல, ஒரு சர்குலர். இன்னைக்கு +1 கிளாசஶ் ஆர்ம்பிச்சாச்சுல, நம்ம கேபினட் டீம் ஒரு இன்ட்ரோ கொடுதுட்டு வரணும். நீ போயி மனோவையும், ஶ்வேதாவையும் கூட்டிட்டு கன்வென்ஷன் ஹாலுக்கு வந்திரு. நான் கோஆரிடினேடர் மேம் பார்த்துட்டு வந்ததிடுரேன்"

" ஹாஹா , பெர்மிஷனொட சைட்சீய்ங்ஹா...நான் கூடவே கோகுலையும் கூட்டிட்டு வரவா  😉"

" டேய் உன்ன கொல்லபோரேன் பாரு...."

" சரி சரி மொரைக்காத...உனக்கு பிடிக்கலைனா போப்பா..எங்களுக்கு வேற டைம் கிடைக்காம போகாது... ஹே மறந்துடாம அந்த " ப்ரோசிஜர் பத்மினிய" கூப்பிட்டுரு, அப்புறம் அவ அதுக்கும் ஒரு கிளாஶ் எடுப்பா."

" That, I will take care. Can you make this quick?"

" Yes Boss, I" ll make a move" .." இப்போ ஏன் இவன் சட்னு உஜாலாக்கு மாறுனான்..ஒஹ்ஹ்ஹ் பி.டி ஸார் ஆஹ.....எஸ்கேப் அயிரு கௌதம்., இன்னைக்கும் நீ டைய மறந்துட்ட" ..

" ...

... .. ... ......

..... Hope I made everything clear to you guys; anytime you can reach us for any help, complaints or suggestions. We would be glad to hear from you. Myself and Gowtham will be in XII A, Swetha and Mano in XII B, Prasidha in XII D..." ரிஷி ஒரு வழியா சொல்ல வந்தெல்லாம் சொல்லி முடிச்ச கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஸ்டுடண்சஸ் மதியில ஒரே சலசலப்பு..

" ...விடுங்க கேர்ள்ஶ், நான் கண்டிப்பா கம்ப்ளைன்ட் பண்ணதான் போறேன், தோஸ் கைசஶ் வேர் இரிட்டேடடு அஸ்"

கூட்டத்தில் குரல் வந்த திசைய பார்த்து ரிஷி " என்ன ப்ராப்ளம், யாராவது ஒருத்தர் சொல்லுங்க பிளிஶ்."

அங்கே அந்த குரல் எழுந்து " உங்க ஃப்ரண்ட்ஶ் காலைலேயே எங்கள ரேகிங் பண்ணாங்க, அவுங்கள யாரு கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணுறது?'

'இவுங்க யாரும் அப்படி தெரிஞ்சு ஏதும் பண்ண மாட்ட்டாங்க, ஏதாவது மிஸ்அண்டரஸடண்டிங்க் அஹ் இருக்கும், பட் இருந்தாலும் எங்கிட்ட சொல்லாம்..... ......" அவன் முடிப்பதற்க்குள்

'நீங்க தப்பு பண்ணுணா?'

ரிஷிக்கு, என்னடா இது, இப்போ தான் மொத தடவையாய் பார்கிறோம் எடுத்த எடுப்பிலயே, மொத்த குருப்பையும், தன்னையும் கூட ஏதோ பெரிய குற்றவாளிகள் ரேஞ்சுக்கு இந்த பொண்ணு பேசுதுனு தோணூனாலும் கோபடாமல்.

'கோஆரிடினேடர் மேம் கிட்ட சொல்லுங்க, இல்லைனா எந்த டீச்சிங் ஸ்டாஃப் கிட்ட வேண்ணும்னாலும் சொல்லுங்க. இப்ப யாரு உங்கள டீஶ் பண்ணாங்க?"

"உங்க பின்னாடி நிற்க்கிறாங்களே, யு மென்ஷண்ட் ஹிம் அஸ் கெளதம், ஹீ அண்ட் ஹிஶ் கேங்"

'...ரிஷி நாங்க ஒன்னும் ரேகிங்கெல்லாம் பண்ணல, சும்மா பேரு என்னனு கேட்டோம், இவுங்க கிட்ட மட்டும் இல்ல, எல்லா நீயு அட்மிஷன்கிட்டெயும் கேட்டோம், அவ்ளோதான்.'

'பொய் சொல்லாதிங்க கௌதம், நீங்க் டீஶ் பண்ணி சிரிக்கல'

ரிஷிக்கு யார் சொல்லுரதுல உண்மைனு தெரியாம, "மனோ, நீ இருந்தியா கூட, கௌதம் என்ன செய்ஞ்சான்?"

'நான் அங்க இல்ல, ஆனா கோகுல்..'

இப்போது ஏதோ புரிந்தது போல் இருந்தது ரிஷிக்கு, இந்த பொண்ணு சொல்லுரது உண்மையாக இருக்ககூடும், தனியே கௌதம் எந்த தவறும் செய்வதில்லை ஆனால், கோகுல் கூட இருந்தால் கொஞ்சம் இந்த மாதிரி கிறுக்குத்தனம் செய்பவன் தான்

" கௌதம், போ, போய் அவனயும் வரசொல்லு வந்து ரெண்டுபேரும் சாரி கேளூங்க, இதோட கடைசியாய் இருக்கணும்'

'ஸாரி கேக்குற அளவுக்கெல்லாம் நாங்க ஒன்னும் செய்யல, நேம் கேட்டா ஒழுங்கா பதில் சொன்னா நாங்க ஏன் சிரிக்க போறோம்..'

' ஹே பிளிஶ், நான் சரியா தான் பதில் சொன்னென்'

''நல்லா சொன்ன, சரி ரிஷி இப்போ உங்கிட்ட இல்ல எங்ககிட்ட பேரு கேட்டா என்ன சொல்லுவோம்... 'கௌதம்', 'மனோகர்', 'ஶ்வேதா' அப்பிடி தானே, அங்க கேளேன், மேடம் எப்படி சொல்லுறாங்கனு'

'எப்படி சொன்னா என்ன கௌதம், நீ எதுக்கு டீஸ் பண்ணுறமாதிரி சிரிச்ச..?

"..ஐய்யொ கொஞ்சம் பொறுமையா ஒரு தடவை கேளேன்"

.இது என்னடா வம்பா போச்சு, 'ம்ம்ம்ம...சரி நீங்க சொல்லுங்க மிஸ், உங்க நேம் என்ன?"

"ஐயம்...ரேகா சீனிவாசன்"

🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§§🍬

A/N : Kanmanies , Hope you like this chapter. it's getting little tough for me to type in tamil font, I think I picked a wrong choice of story for first try, but I managed somehow to put it in place and I choosed those English dialogues be in it..please do ignore any typo errors as longs you can understand them, if not pls mention. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top