💗பகுதி 2💗
அப்பேருந்து இடது புறம் இருந்த சுவற்றில் மோதியது. நல்ல வேலையாக அந்த பேருந்தின் ஓட்டுனர் சரியான நேரத்தில் சடன் பிரேக் போட்டதால் இன்டிகேட்டர் லைட் உடைந்ததோடு போனது!
அனைவரும் தன் உடன் இருப்பவர்கள் குழந்தைகள் யாருக்காவது அடிபட்டிருக்கின்றதா என பதற்றத்துடன் பார்த்தனர். நிரோவும் நைநிதாவும் அதேபோல் ஒருவரை ஒருவர் ஆராய்ந்து விட்டு நலமாக உள்ளனர் என உறுதி செய்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஓரிரு நிமிடம் கழிந்திருக்கும் பேருந்தின் முன் பக்கம் இருந்தவர்களிடையே சிறு சலசலப்பு தோன்றியது.
திடீரென அனைவரும் கீழிறங்கி வேகமாக பேருந்தின் வலது புறம் ஓடினர். உள்ளே இருந்த மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும் தங்களுக்குள் இவ்வாறு நடந்திருக்குமோ இல்லை அப்படி நடந்திருக்குமோ என தங்கள் கற்பனை குதிரைகளை தட்டிவிட்டு கொண்டிருந்தனர்.
தனக்கு ஏதும் ஏற்படவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஏனோ நிரோஷிதாவின் மனம் அமைதி கொள்ளவில்லை. இதயத்தில் மெதுவாக குண்டூசியை இறக்குவது போல் மெல்லிய வலி இருந்து கொண்டே இருந்தது.
"என்னடீ நடக்குது இங்க? ஏதோ ஏழாம் அறிவு படத்துல வர மாதிரி எல்லோரும் திடுதிப்புனு குதிச்சு குதிச்சு ஓடுறாங்க!! " என்று கூறி பதற்றம் நிறைந்த சூழ்நிலையை மெலிதாக்க எண்ணினாள் நைநிதா.
ஆனால் நிரோவிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் என்னாயிற்று என திரும்பிய நைநிதா அப்போது தான் நிரோவின் நிலையை கவனித்தாள்.
கைகள் நடுங்க முகத்தில் அவளுள்ளே ஏற்படும் வலியின் வெளிபாடு தெரிந்தது.
"ஹய்! என்னாச்சு நிரோ? ஏன் இப்படி இருக்க? உடம்புக்கு ஏதாவது செய்யுதா? பேசுமா!" என அவள் தோல்களை பற்றி உலுக்கிய பின்னரே நினைவிற்கு வந்தாள் நிரோ.
"இல்ல உடம்புக்கு ஏதும் இல்லடி பட் மனசு தான் ஏதோ பாரமா இருக்குற மாதிரி இருக்கு" என தன் விழிகளை வேறு புறம் திருப்பிக் கொண்டாள் நிரோ.
பேருந்தில் இருந்த மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக கீழிறங்கி சென்றனர்.
"சரி வா நாம கீழயாவது போய் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்! ஒரு வேலை தல அஜீத் அவர் பிறந்த நாளுக்கு நடைபயனமா சென்னைய சுத்தி அவர் ரசிகர்களை எல்லாம் சந்திக்க வந்திருப்பாரோ!! ஐ!!! சீக்கிரம் வா நான் போய் ஆட்டோ கிராப் வாங்கனும்" என்றுவிட்டு தன் பேக்கில் இருந்து பேனாவையும் நோட்பேடையும் தேடிக் கொண்டிருந்தாள் நைநிதா.
நிரோவிற்கு அவள் சிறுபிள்ளைதனத்தை கண்டு சிரிப்பு தான் வந்தது, "எப்படீ உன்னால மட்டும் இப்படி யோசிக்க முடியது!".
"அதெல்லாம் உன் புத்திக்கு எட்டாது. ரொம்ப யோசிக்காம சீக்கிரம் கீழ போலாம் வா அஜீத் போயிடப் போறாரு" என நிரோவின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு கீழ் இறங்கினாள் நைநிதா.
அங்கே பேருந்தில் இருந்த அனைவரும் கூட்டமாக நின்று கொண்டு தங்களுக்குள்ளேயே முனுமுனுத்து கொண்டிருந்தனர். அதை பார்த்தவுடன் அவளே ஒரு கனம் நைநிதா கூறியது போல் இருக்குமோ என்றெண்ணினாள்.
"இன்னைக்கு அஜீத்கிட்ட ஆட்டோகிராப் வாங்குரது கன்பார்ம்" என நிரோவை விட்டுவிட்டு நடையில் துள்ளலுடன் முன் சென்றாள் நைநிதா. ஆனால் கூட்டத்தின் அருகே சென்றவள் அப்படியே தடுமாறி நின்றாள்.
நிரோஷிதா படபடக்கும் இதயத்துடனும் நடையில் தடுமாற்றத்துடனும் அக்கூட்டத்தை நெருங்கினாள். நைநிதாவிடம் "ஏன்டீ? ஏன் அப்படியே நின்னுட்ட?" என கேட்டுக் கொண்டே தன் முகத்தை நைநி இமையாமல் நோக்கிக் கொண்டிருக்கும் திசையில் தன் விழிகளை செலுத்தினால்.
அழகிய அவ்விழிகள் அவ்விடத்தை ஊற்று நோக்கி பின் உரைந்தன. அங்கு சுவற்றில் மோதி நசுங்கிய நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. ஏனோ அக்காரை விட்டு அவளால் அவள் விழிகளை அகற்ற முடியவில்லை. "இங்க என்ன ஆச்சு? இது எப்படி நடந்தது?" என அவள் பொதுவாக வினாவ அங்கிருந்த ஒரு நபர், "நாம வந்த பஸ்சும் இந்த காரும் மோதவிருந்தது அதை தடுக்க திருப்புனப்ப அது போய் சுவத்துல மோதிடுச்சு" என்று பதில் கூறினார்.
ஆனால் அவர் கூறியதேதும் அவள் காதில் விழவில்லை அந்த காரின் உள்ளே தெரிந்த கையையே அவள் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
இரு நொடி மட்டுமே அதை பார்த்துக்கொண்டு இருந்திருப்பாள் மூன்றாவது நொடி அவளறியாமல் அவள் கால்கள் அவளை முன்னிழுத்துக் செல்ல அங்கு நின்றிருந்தவர்களிடம் காரின் உள்ளே யாரோ இருக்கின்றார்கள் காப்பாற்றுங்கள் என கூறிக் கொண்டு முன் செல்ல அவளை தடுத்து நிறுத்தியது இரு கரங்கள். அது யாரென நிரோ நிமிர்ந்து பார்த்த போது அங்கு நின்றிருந்தான் நைநியின் குரங்கு.
"அங்க போகாதீங்க இது போலீஸ் கேஸ் தப்பு யார் மேலனு தெரியல! ஒரு வேல அந்த கார்காரர் இறந்திருந்தா நம்மல தான் போலீஸ் அது இதுனு டார்சர் பண்ணுவாங்க. அதனால தான் நாங்க யாரும் அதுகிட்ட போகல" என்று அவளுக்கு பெரிதாய் உதவி செய்யும் பாணியில் கூறினான் அவன்.
நிரோவுக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேலையிலும் சுயநலமாக யோசிக்கும் இவர்களை கண்டு அருவருப்பாக இருந்தது அவளுக்கு.
"ச்சீய்!! நீங்களாம் மனுஷங்களா அங்க ஒரு உயிர் துடிச்சிடிருக்க உங்களாள எப்படி இப்படி ஈவு இறக்கமில்லாம நடந்துக்க முடியுது!! ஒரு உயிரவிட உங்களுக்கு நேரம் முக்கியமா போயிடுச்சா! நாளைக்கு உங்க மகனுக்கோ தம்பிக்கோ இல்ல அண்ணனுக்கோ இப்படி நடந்தா இப்படி தான் போலீஸ் கேஸ் ஆகிடும்னு தள்ளி நின்னு வேடிக்கை பார்த்துட்டிருப்பீங்களா?" என ஆவேசித்தாள் நிரோ. அங்கிருந்த அனைவரும் அவள் கூறியதை கேட்டு அவமானத்தில் தலை குனிந்தனர்.
மனிதநேயமற்ற அவர்களிடம் பேசி நேரத்தை வீணாக்காமல் அவள் விரைந்து அக்காரின் அருகே சென்று கதவைத் திறந்தாள். அதனுள்ளே ஸ்டீரிங்கில் தலை சாய்த்தபடி ஓர் ஆடவன் படுத்திருந்தான் ஆதலால் அவனது முகத்தை அவளால் காண முடியவில்லை. அவனது நாடியை பிடித்து அவன் உயிரோடு தான் இருக்கின்றான் என உறுதி செய்தபி்ன் பின்னந்தலைக்கு கைபோட்டு அவனை நிமிர்த்தினாள்.
அவன் முகத்தை பார்த்த பின் அவளுள் ஏதோ ஓர் உணர்வு, மனதில் இனம்புரியா ஓர் ஈர்ப்போடு இதயத்தை பிழிவது போல் ஓர் வலி என இரண்டும் அவளை இருபுறமும் இறுக்கியது. அப்போது தான் அவள் தன் கைகளில் ஏதோ ஈரமான உணர்வு ஏற்பட கையை விழக்கி பார்த்தாள் அதில் முழுவதும் இரத்தமாக இருந்தது. சுவரில் கார் மோதியதில் அவன் தலையில் பலமாக அடிபட்டிருந்தது. அவளையுமறியாமல் அவள் கண்களில் நீர் பெருக தொடங்கியது, அவள் வாயிலிருந்து வலிபுதைந்த கதறல் ஒன்று வெளிபட அங்கு சிலையென நின்றிருந்தவர்கள் அவ்விடத்திற்கு விரைந்தனர்.
மெதுவாக அவனை காரிலிருந்து கீழிறக்கி தரையில் படுக்க வைத்தனர். நிரோ அவனது தலையில் இரத்தம் வெளிவருவதை கட்டுப்படுத்த தன் சுடியின் ஷாலை அவன் தலையில் இறுக்கமாக கட்டினாள். இருந்தும் அது நிர்க்காமல் அந்த வெண்நிற ஷாலையே சிவப்பாக மாற்றியது.
நிரோவின் விழிகளில் இருந்து நீர் அருவியாய் கொட்டியது. தான் ஏன் முன் பின் தெரியாத ஒருவருக்காக இவ்வாறு அழுகிறோம், ஏன் தனக்கே அடிபட்டது போல் இவ்வாறு வலிக்கின்றது என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க அவளின் விழிநீர் அவனின் முகத்தில் விழுந்தது. அதன் மறுநொடி அவன் கை விரல் அசைய லேசான முனங்களுடன் கண்விழித்தான்.
முதலில் நிலையற்று அவன் கண்கள் அங்குமிங்கும் அலைந்து இறுதியில் நிரோவின் நீர் வடியும் முகத்தில் பதிந்தது. இருவரது விழிகளும் இணைய வலிகள் மறைந்தன வருத்தங்கள் குறைந்தன.
அவனது கைகள் அவனறியாமல் தன் போக்கில் அவளது கன்னம் நாடிச் செல்ல சுற்றியிருந்தோர்க்கு உயிர்வரை சிலிர்த்தது.
மிளிர்ந்த அவன் விழிகள் மெதுவாக மங்க அவள் கன்னத்தில் கரைந்திருந்த கைகள் இரத்தத்தோடு காதல் ரேகையையும் பதித்து பிரிந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top