💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-27

"நான் அன்னைக்கு உன்னை பார்க்க போறோம்... இந்த கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதும் அடுத்து அப்பாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கினவுடனே நம்ம கல்யாணம் தான்னு எவ்ளோ எதிர்பார்ப்போடவும் கனவோடவும் அங்க  வந்தேன்னு தெரியுமா?" என்றாள் எதிரே இருந்த தார் சாலையில் பார்வையை பதித்தபடி.

"எனக்கு தெரியும். ஏன்னா நானும் அதே கனவோட தான் உன்னை எப்போ பார்ப்போம்னு ரொம்ப ஆசையா எதிர் பார்த்துட்டு இருந்தேன்." என்றான் தன் மனையாள் புரிந்துகொள்வாள் என்று விழிகளில் அவனின் வருத்தத்தை சுமந்தபடி.

"நாம ரெண்டு பேருமே யாருக்கும் எந்த கெட்டதும் நினைச்சதில்லை.. பின்ன ஏன் நமக்கு மட்டும் இப்படி இவ்ளோ வலியும் இவ்ளோ வேதனையும் மித்து?" என்றாள் விழிகளில் கண்ணீரோடு.

அவளின் மித்து என்ற அழைப்பில் பலமாக தாக்கப்பட்டவன் சட்டென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது அவள் அவனை மித்து என்று அழைத்து.

இருவர் மட்டும் தனித்திருக்கும் போது அவன் மேல் காதல் அளவுக்கதிகமாய் பொங்கி வழியும் தருணத்தில் மட்டும் மிக பிரியமாய் அவள் இதழ் மலர்ந்து வரும் இந்த மித்து என்ற பெயர்.

விழிகளில் அருவிப்போல் கொட்டும் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை... "செல்வா... எவ்ளோ நாள் நீ இப்படி கூப்பிடனும்னு ஏங்கிருக்கேன் தெரியுமாடி..." என்று தாரணியை இழுத்து முகம் முழுவதும் இதழால் முத்தங்கள் தந்து இறுக்கி அணைத்து கொண்டான்.

பின் மெல்ல விடுவித்து, "சரி. இப்போ நீ சொல்லு?" என்று வண்டியை கிளப்பினான்.  

“ஓகே சொல்றேன். நீ.... அங்க... உங்க கல்யாணத்தை பார்த்துட்டு வந்த அதிர்ச்சில என்னால எதுவுமே யோசிக்க முடியலை. ஒரே நிமிஷத்துல என்னோட வாழ்க்கையே  மீட்க முடியாத அளவுக்கு அகல பாதாளத்துல விழுந்துட்டா மாதிரி என்னோட உலகம் நின்னுடுச்சு. கல்யாண மண்டபடத்துல இருந்து நேரா என்னோட ரூம்குள்ள போய் அடைஞ்சவ தான் ரெண்டு நாள் யார் என்ன கூப்பிட்டும் கெஞ்சியும் வெளிய வரலை.

சூன்யமான வாழ்க்கைல அடுத்து என்ன பண்றதுன்னு முடிவெடுக்க தெரியலை. ஒண்ணு மட்டும் தெளிவா தெரிஞ்சுது. அங்கயே இருந்தா நிச்சயமா ஏதாவது செஞ்சுக்குவேன் இல்ல பைத்தியமாகிடுவேன்னு பயம் வந்துடுச்சு.

உடனே சென்னைல இருக்க என் பிரெண்ட்கிட்ட பேசி இங்க ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்னேன். வீட்ல எல்லோரும் எவ்ளோ சொல்லியும் யாரு பேச்சையும் கேட்க முடியாத நிலமைல எல்லோர் பேச்சையும் மீறி சென்னைக்கு வந்தேன்.” என்று எங்கோ பார்த்து கொண்டு கூறியவள் ஆழ மூச்செடுத்து அவனை மிகுந்த வலி நிறைந்த கண்களுடன் பார்த்தாள்.

“அம்மு! சாரிடி.. என்னால எவ்ளோ மன கஷ்டம் உனக்கு? உன்னை எந்த கக்ஷ்டமும் நெருங்காம உள்ளங்கைல வச்சு தாங்கணும்னு நான் ரொம்ப ஆசை பட்டேன் ஆனா என்னாலேயே உனக்கு எவ்ளோ கஷ்டம்?” என்றான் அவளின் அழகிய முகத்தை கையில் ஏந்தி.

“ம்‌பிச்.. மித்து நான் பேசிட்றேன்.” என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“சென்னைக்கு வந்தா மட்டும் இதயத்துல ஏற்பட்ட காயம் மாயமா மறைஞ்சுடுமா என்ன?” என்று வேதனையாய் சிரித்தவள்.

“எங்க திரும்பினாலும் உன்னோட முகம். நாம சேர்ந்திருந்த தருணங்கள், நாம ஒண்ணா சுற்றின இடங்கள்... இப்படி எல்லாமே சேர்த்து என் உயிரை மட்டும் விட்டுட்டு என்னை முழுசா உருக்குலைச்சுடுச்சு. ஏதோ ஒரு உயிரில்லாத ஜடம் போல வேலைக்கு போக ஆரம்பிச்சேன். உன்னை தாண்டி என்னால எதுவும் யோசிக்க முடியலை. எல்லாதுக்கும் மேல நீ என் கழுத்தில தாலி கட்டின நிமிஷத்தை என்னால மறக்க முடியலை.

ஒவ்வொரு நாளும் தள்றது ஒரு யுகத்தை கடக்கிற மாதிரி நரகமா இருந்துச்சு. அப்படியே பழக்கிக்கிட்டேன். நாம மாறாம இருக்கிறதால காலாம் ஓடாம இருக்குமா? ஒரு வருஷம் ஒடிடுச்சு. இந்த ஒரு வருஷத்துல ரெண்டு மூணு தடவை மட்டும் போய் அப்பா அம்மாவை பார்த்துட்டு வந்தேன். அப்போ தான் அந்த செய்தி போன்ல இடியா வந்தது.” என்றவள் வருணை இறுக்கி அணைத்து கொண்டாள்.

ஆறுதலாய் அவளின் முதுகை லேசாக வருடியவன் மெல்ல அவளின் உச்சியில் இதழ் பதித்தான்.

“அடிச்சி பிடிச்சு ஊருக்கு ஓடினேன். அங்க என்னை விட என்னோட அம்மாவும் அப்பாவும் ரொம்ப நொடிஞ்சு போய்ருந்தாங்க. அண்ணன் லெட்டர் எழுதி வச்சுட்டு போய்ட்டான்னு ரெண்டு பேரும் கதறினதை இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியாது. ஏன் எதுக்கு எந்த கேள்விக்கும் பதில் இல்ல. வீடு முழுக்க தேடினேன். ஆனா எதுவுமே கிடைக்கலை. அவங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல அவன் போற இடம்னு எல்லா இடத்துலையும் தேடினோம். யாருக்குமே எதுவுமே தெரியலை. கண்ணை கட்டி காட்ல விட்டா மாதிரி இருந்துது. என்ன பண்றது எவ்ளோ யோசிச்கும் எதுவுமே தோனலை. பதினஞ்சு நாள் எல்லா இடத்துலையும் தேடினேன். போலீஸ் கம்ப்லைண்ட் கொடுக்கலாம்னு சொன்னப்ப... அப்பா வேண்டாம் இன்னும் ஒரு வாரம் பார்போம்னு சொல்லிட்டார். நானும் சென்னை வந்துட்டேன். ரெண்டு மாசம் கழிச்சு திரும்பி போனப்ப தான் அங்க வந்திருந்தான் மதன். அண்ணானோட ஃப்ரெண்ட்னு அப்பா சொன்னார். எனக்கு தெரிஞ்சு அண்ணானோட ப்ரெண்ட்ஸ் எல்லாருமே எனக்கு தெரியும். இவன் எப்படி அண்ணன் கூட ஃப்ரெண்ட் ஆனான்னு அப்போவே ஒரு சந்தேகம் வந்துச்சு. இருந்தாலும் அப்போ அப்பா அவனை பத்தி அண்ணாக்கு ரொம்ப பழக்கம்னு நல்ல விதமா சொன்னதால அப்டியே விட்டுட்டேன். அது தான் நான் பண்ண முதல் தப்பு.” என்றவள் சிறிது நேரம் அமைதியாய் வருணின் தோளில் சாய்ந்து கொள்ள அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை பருக வைத்தான்.

இதமாய் ஓய்வெடுக்க அவள் குடி கொண்டிருக்கும் அவனின் மார்பும்...  அவள் மனதின் ரணம் குறைக்க முயல முதுகில் அவனின் செல்ல வருடலும்... மெல்ல மெல்ல நீண்ட நாள் ஓய்வின்றி ஓடிய ஓட்டமும் குறைந்து அவனின் நெஞ்சிலே கண்ணயர்ந்தாள் தாரணி.

"நீ ரொம்ப கஷ்ட பட்டிருக்க தாரு குட்டி. இதுக்கு காரணமா யார் இருந்திருந்தாலும் சும்மா விடமாட்டேன்." என்றவன் அவளை அலுங்காமல் குழுங்காமல் மெல்ல இருக்கையில் சாய்த்து சீட் பெல்ட் போட்டுவிட்டு மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட தொடங்கினான்.

இன்னும் ஒரு மணி நேர பயண தூரம் இருக்க தாரணி கண் விழித்தாள்.

"அசோ சாரி மித்து... ரொம்ப நேரம் தூங்கிட்டேனா? உனக்கு டையர்ட்டா இருக்கா நான் வேணா கொஞ்ச நேரம் ஓட்டடுமா?" என்றாள் தாரணி சோம்பல் முறித்தபடி.

தூங்கி எழுந்ததால் லேசாக வீங்கியிருந்த  கண்ணங்களும்... லேசாக இடம் மாறியிருந்த நெற்றி பொட்டும்... ஆங்காங்கே சுருள் சுருளாய் காற்றில் அசைந்தாடி கொண்டிருந்த முடி கீற்றுகளும் அவளின் அழகுக்கு மேலும் அழகூட்ட அவளை திரும்பி திரும்பி பார்த்து வண்டி ஒட்டி கொண்டிருந்த வருணை பார்த்தவள்.

"என்னாச்சு வரு? ஏன் அப்படி பார்த்துட்டு வர?" என்றாள் லேசான குழப்பதோடு.

"இல்ல ஒன்னுமில்லை.." என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டு காதருகே மெல்லிய குரலில், "எப்பவும் இருக்கிறதை விட இப்போ ரொம்ப அழகா இருக்கியா? அதான் வண்டி ஓட்ட முடியாம திணறிட்டு இருக்கேன் தாரும்மா." என்று அவளின் இடையில் கரத்தின் அழுத்தத்தை கூட்ட, அதில் உடல் சிலிர்த்தாலும்... "வரு செல்லம்... நீ குட் பாய் தானே? இன்னும் கொஞ்ச நேரம் தான் ஊருக்கு போய்ட்டு இது பத்தி பேசுவோம். சரியா? இப்போ நல்ல பிள்ளையா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு பார்ப்போம்." என்றாள் விழிகளை அழகாய் சுழற்றி.

ஏற்கனவே அவளின் மேல் இருந்த கிறக்கம் மேலோங்க ஓரமாய் வண்டியை நிறுத்தி அவளின் முகத்தை நிமிர்த்தினான்.

"என்ன வரு...?" என்று முடிக்க முடியாமல் இதழ் பற்றி பல கவிதை பேச  விழி விரித்து அவனை உள்வாங்க தொடங்கினாள்.

அவளின் நெற்றியோடு நெற்றி மோதியவன்... "நீ ரொம்ப படுத்துற தாரு என்னை..." நெற்றி இதழ் பதித்து வண்டியை தொடங்கினான்.

அவனின் அதிரடியில் பெண்ணவளின் கன்னங்கள் செவ்வானத்தினின் நிறங்களை கடன் வாங்கி பூசி கொள்ள இன்னும் பேரழகாய் ஜொலிக்க தொடங்கினாள்.

'ஹ்ம்ம் ஹ்ம்ம் இது சரி வராது. இவ போட்டு என்னை டார்ச்சர் பண்றா... உஷாரா இருடா வருணு' என்று தலையை சிலிப்பி கொண்டு வேகமாக ஓட்ட தொடங்கினான்.

                                                             

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top