💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-23
அவளின் வார்த்தைகள் எதுவும் காதில் கேட்காதது போல் மேலும் அவளை நெருங்க, பின்னே செல்ல வழியில்லாமல் அவன் மேனியின் உஷ்ணத்தில் தீயை சுட்டது போல் துடிக்க தொடங்கினாள் தாரணி.
"வருண் ப்ளீஸ். கொஞ்சம் பின்னாடி போ. என்னால மூச்சு விட முடியலை." என்றாள் விழிகளை அழுந்த மூடி.
அவளையே இமை மூடாமல் பார்த்து கொண்டிருந்தவன், "கண்ணை திறந்து என்னை பார்த்து சொல்லு தாரு. தள்ளி போறேன்." என்றான் மேலும் நெருங்கி.
ஜென்ம ஜென்மமாய் காத்திருந்த காதல் கைகூடினாலும் இணை சேரா துயரில், அவனின் சுவாசத்தீயில் மிதப்பது போல் இருந்தது தாரணிக்கு.
"இல்ல... வருண்... நான் உன்னை பார்க்க மாட்டேன். ப்ளீஸ்... தள்ளி போ." என்று இன்னும் சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள்.
அவள் முகத்தையே பார்த்திருந்துந்தவன் எதையோ உணர்ந்தவன் போல், விடாமல் நெருங்கி நின்று, "நீயும் எவ்ளோ நேரம் நிக்குறியோ நில்லு தாரு. ஆனா, என்னை பார்த்து போன்னு சொல்லிட்டா நான் உடனே போறேன்." என்றான் வருண் தீர்மானமாக.
ஆண்டாண்டு காலாமாய் காத்திருந்த காதெலுன்னும் ஆழி தீயில் இன்று அவள் கரைய போவது உறுதி என்று உணர்ந்தவள் ஓரு முடிவோடு விழி திறந்தாள்.
அவள் விழியை கண்டவன் மிரண்டு பின் நகர போக, அழுத்தமாய் அவன் கரம் பற்றினாள் தாரணி என்கிற அபிதாரஞ்சினி.
"தா....ரு...." என்றான் அதிர்ச்சியாக... மெல்ல சிரித்தவள்.
"ஆமா, உன்னோட தாரு தான். முதல்லயே போக சொன்னேன். நீ தான் போகலை. இனி நீயே நினைத்தாலும் என்கிட்ட இருந்து தள்ளி போக முடியாது." என்று அறையை நோக்க அறையெங்கும் மெல்லிய இருள் சூழ்ந்தது.
"தாரு என்னாச்சு உனக்கு? ஏன் உன் கண்ணு..?" என்றான் வருண் பதட்டமாக முடிக்கும் முன்.
"எனக்கு என்ன ஆச்சு வருண்? நான் நல்லா தானே இருக்கேன்." என்று முன்னே நடக்க வருண் பின்னே நகர்ந்தான்.
"தாரும்மா." என்று மிக மென்மையாய்.
"ஹு.. ஹு.. ம்... ப்ளீஸ் ஒரே ஒரு தடவை அபின்னு கூப்பிடு வருண்." என்றாள் தாரணி.
எதற்காக கூப்பிட சொல்கிறாள் குழப்பமிருந்தாலும், "அபி" என்றான் மிக மெதுவாய்.
விழி மூடி அவன் அழைப்பை ரசித்தவள்.
அவனை நெருங்கி கணவனின் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்.
என்னவென்று சொல்ல தெரியவில்லை.. ஆனால், மின்சாரம் ஏதோ அவனுள் பாய்ந்தது போல் ஓர் உணர்வு. என்னனென்று யோசிப்பதற்குள் அதற்கும் நேரம் தராமல் அவனிடம் படர்ந்து ஏழு ஜென்மத்து காதலையும் இன்றே தீர்த்துவிட முயன்று கொண்டிருந்தாள் அவனின் தாரகை. அவளுள் அவனும் கரைய தொடங்கிட நாம் வேறு இடத்திற்கு செல்வோம் வாருங்கள்😉😉...
*****
அந்த மாளிகையின் அருகில் இருந்த ஒரு பெரிய வீட்டில், தனது அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் தூக்கி வீசி கொண்டிருந்தான் ஜெகன்.
"என்னடா ஆச்சு? ஏன்டா எல்லாத்தையும் உடைக்கிற?" என்று ஜெகனை தடுக்க முடியாமல் கத்தி கொண்டிருந்தான் நண்பன் மூர்த்தி.
"போச்சு... எல்லாம் போச்சு... என்னோட இத்தனை வருஷ கனவு, திட்டம், உழைப்பு எல்லாமே வீணா போச்சு... இனி என்ன செய்தாலும் எதுவுமே நடக்காது. அய்யோ எல்லாம் போச்சே.." என்று தொண்டை தண்ணீர் வற்ற வெறி பிடித்தவன் போல் கத்தினான் ஜெகன்.
"என்னன்னு சொல்லுடா?" என்றான் நண்பன்.
தாரணி கூறியதை மூர்த்தியிடம் கூறியப்பின் இன்னும் கோபம் அதிகமாக, "இன்னைக்கு அந்தாள கொல்லாம விட்றதில்லடா... வாடா..." என்று அந்த வீட்டின் மூலையில் இருந்த குடோன் போன்ற ரூமிற்குள் நுழைந்தான் ஜெகன்.
வேகமாக அங்கும் இங்கும் ஓடினர்.
"எங்கடா ஆள் இல்ல?" என்றான் ஜெகன் அதிர்ச்சியாக.
"இப்போ தான்டா ஒரு மணி நேரத்துக்கு முன்ன மயக்கமருந்து கலந்த பாலை குடிக்க வச்சுட்டு வந்தேன்." என்றான் மூர்த்தி.
ரூமை சுற்றி சுற்றி பார்த்தவன் அங்கிருந்த தண்ணீர் பானையில் பால் கொட்ட பட்டிருப்பதை பார்த்து மூர்த்தியை முறைத்தான்.
"உன் மூஞ்சி... நீ பால்ல மயக்க மருந்து கொடுத்த லட்சணம் பாரு. அந்த கிழவன் இதுல கொட்டி வச்சுருக்கான். எவ்ளோ திமிர் இருக்கும் அவனுக்கு. ரொம்ப தூரம் போயிருக்க முடியாது... எங்க போயிருப்பான்... அவன் சாவு என் கையால தான். வாடா. அவன் தப்பி தவறிகூட வெளிய போக கூடாது." என்று கூறியபடி ரூமை விட்டு வெளியே வந்தவன் திடீரென்று அருகில் இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தான்.
"இப்போ எதுக்குடா அங்க போற?" என்று அவன் பின்னே ஓடினான் மூர்த்தி.
அந்த அறையும் காலியாக இருக்க, தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.
"டேய் எங்கடா?" என்று கேட்ட மூர்த்தியை ஓங்கி ஒரு அரை விட்டான் ஜெகன்.
"உன்னை எவ்ளோ பத்திரமா பார்த்துக்க சொன்னேன்? இவ்ளோ வருஷம் யாருக்கும் சந்தேகம் வராதபடி பார்த்துகிட்டு இருந்தேன். இருந்தும் எங்கேயோ மிஸ் ஆகிருக்கு... எங்க?" என்று தன் முகத்தை தேய்த்து யோசிக்க தொடங்கினான்.
அந்த வீட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தேடினர். எங்கும் அவர்கள் இல்லாமல் போகவே சோர்ந்து போயினர்.
"என்ன நடக்குது இங்க? ஒன்னும் புரியலையே?" என்றான் ஜெகன் குழப்பமாய்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top