💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-08
இருந்தாலும் அவளை பற்றியும் அவள் காதலை பற்றியும் அறிந்தவனாயிற்றே...
அதனால் பொறுமையாக அவளுக்கு நிலைமையை எடுத்து கூறினால் புரிந்து கொள்வாள் என்று முடிவெடுத்து எப்படி தொடர்பு கொள்வது என யோசித்து கொண்டிருந்தான்.
அவனுக்கென்ன வழியா தெரியாது.
அவனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறான் என்று நண்பனின் மூலம் தூது சொல்ல, பதறியடித்து ஓடிவந்தாள்.
இவன் நன்றாக அமர்ந்திருப்பதை பார்த்து கோபம் வந்து இரண்டு அரை விட்டு அவன் சட்டை காலரை பற்றி "ஏன்டா உனக்கு அடிப்பட்டுடுச்சுன்னு கேள்வி பட்டு உயிரை கையில புடிச்சு வச்சுக்கிட்டி ஓடி வரேன். நீ என்னடான்னா இவ்ளோ சாதாரணமா உட்கார்ந்துருக்க?" என்று கோபமாய் கத்தினாள்.
"சாரி டி. உன்னை பயமுறுத்தணும்னு இப்படி சொல்லலை. எனக்கு உன்கிட்ட முக்கியமா பேசியே ஆகணும். நான் எவ்ளோ முயற்சி பண்ணியும் நீ என்கூட பேசவே இல்லை. அதான் இப்படி பண்ணிட்டேன். என்னால உன்னை பார்க்காம இருக்கமுடியாதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று பாவமாய் கேட்டான் வருண்.
அவனையே சில நொடிகள் முறைத்து பார்க்க, மேலும் அவன்மேல் கோபம் கொள்ள முதுயமல் போகவே, வேகமாய் அணைத்துக்கொண்டாள்.
"ஏன்டா இப்படி பண்ண? என்னால மட்டும் உன்னை பார்க்க முடியுமா?" என்று கேட்டுக்கொண்டே அவன் நெஞ்சினில் செல்லமாய் அடிகளை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"செல்லம்! உனக்கு என் மேளா நம்பிக்கை இருக்குல்ல? என்னைக்காவது உனக்கு பிடிகாததை நான் செஞ்சுருக்கேனா? அப்படி இருக்கும்போது இவ்ளோ பெரிய விஷயம் பண்ணியிருக்கேன்னும் பொழுது என்ன காரணும்னு யோசிக்க மாட்டியா?" என்று ஆழமாய் அவளை நோக்கினான்.
"அந்த ஒரே காரணத்துக்காக தான் அன்னைக்கு அவ்ளோ கோவம் இருந்தும் அமைதியா போய்ட்டேன். இல்லன்னா என் அனுமதியில்லாம் தாலி கட்டினதுக்கு உன்னை கொன்னுட்டு நான் செத்திருப்பேன்." என்றாள் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு.
"அடிப்பாவி என்னை கொன்னுருப்பியா?" என்று கேட்டான் அதிர்ச்சியாக.
"நிச்சயமா? ஏன் உனக்கு தெரியாதா என்ன? புதுசா கேட்கிற? சரி அதைவிடு எதுக்கு இப்படி பண்ண மொதல்ல தெளிவான காரணத்தை சொல்லு. இல்லை இந்த நிமிஷம் தான் நீ என்னை பார்க்கிற கடைசி நிமிஷமா இருக்கும்" என்றாள் உறுதியாக.
"சரி சொல்றேன்." என்று தன் மொபைலில் இருந்த விடியோவை எடுத்து, "அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாரு" என்று காட்டினான்.
'என்ன?' என்பது போல் விழிகளால் கேட்டுக்கொண்டே வாங்கி பார்த்தாள்.
அதில் இருந்த உரையாடல்களை கேட்டு அதிர்ந்து போனாள்.
"என்ன இது தமிழ்? இவ்ளோ நடந்துருக்கா?" என்று விழிகள் கலங்கியபடி கேட்க.
"பயப்படாதடி. என் உயிர் இருக்க வரைக்கும் உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்" என்று இறுக அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.
"ஐ ஆம் சாரி. நடந்தது எதுவுமே தெரியாம உன்னை அடிச்சிட்டேன்." என்றாள் வருத்தமாக.
"விடு டா. என் பொண்டாட்டி கையால அடி வாங்குறது எனக்கு சந்தோஷம் தான். " என்று சிரித்தான்.
"சரி முடிஞ்ச வரைக்கும் அப்பாகிட்ட பேசிடனும் சீக்கிரம். நீயும் வந்து பேசு" என்றாள்.
"ஆமாடா என்னாலையும் இனி உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது. கூடிய சீக்கிரத்துல எல்லா விதத்துலையும் உன்னை என் பொண்டாட்டியா மாத்திக்கணும்" என்று கண்ணடித்தான்.
"கொழுப்புடா உனக்கு" என்று ரெண்டு கொட்டு கொட்டினாள்.
"எப்போ வந்து அப்பாகிட்ட பேசுற?" என்றாள்.
"இன்னும் ரெண்டு நாள்ல என் அப்பாவோட தங்கைக்கு பொண்ணுக்கு கல்யாணம். முடிஞ்ச பிறகு வந்து பேசுறேன்." என்றான் வருண்.
"தமிழ்" என்றாள் மெதுவாக.
"என்னடா? என்றான் அவனும் மெதுவாக.
"ஒருவேளை உனக்கு மட்டும் அந்த கேனைமண்டையன் செய்யப்போற விஷயம் தெரியலைன்னா. என் நிலைமை என்ன ஆகியிருக்கும். அப்படி ஒருநிமை வந்து ஒரு நொடி கூட தாமதிக்காம என் உயிரை விட்ருவேன்." என்று கூறும்போதே முறைத்து, "ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? நான் இருக்கேன். உன் உயிர் எனக்குள்ள தான் இருக்கு மறந்திட்டே இல்ல" என்றான் பரிவாக.
"சரி நான் கிளம்பவா?" என்று நகர்ந்தவளை இழுக்க அவன் நெஞ்சோடு மோதி நின்றாள்.
"என்னடா?" என்று தடுமாற்றமாய் அவனை.
"ஏய் பொண்டாட்டி கல்யாணமாகி இன்னையோட ஏழு நாள் ஆச்சு நம்ம வாழ்க்கையை தான் ஆரம்பிக்கலை. அட்லீஸ்ட் ஒரே ஒரு முத்தம் கூடவா கொடுக்க கூடாது." என்றான் மிகவும் மிருதுவான குரலில்.
"டேய் புருஷா! தள்ளி நில்றா. இப்படி எல்லாம் பண்ணா அப்புறம் நான் என் வீட்டுக்கு போறதுக்கு பதில் உன் வீட்டுக்கு போனாலும் போயிடுவேன்" என்றாள் கிறக்கமாய்.
அவளின் குழைந்த குரலில் ஒரு நொடி தன்னையும் இழந்தவன் பின் சுதாரித்து, "உன்னை என்னையே வெறுப்பேத்துரியா?" என்று அவளின் இதழ்களை சிறைப்பிடித்து செல்ல தண்டனையை பரிசளிக்க சரியாக அறையின் கதவு தட்டப்பட்டது.
"ஹுக்கும். நமக்கு அதுவாவும் நடக்காது. நடந்தாலும் விடமாட்டானுங்க" என்று விலக மனமில்லாமல் முனுமுனுத்தபடி விலகினான்.
அவன் இதழொற்றலில் தன்னை தொலைத்தவளும் மெதுவாய் மீட்டெடுத்து அவனின் விழிகளை நோக்க அவளின் முகம் செவ்வானமாய் சிவந்திருந்ததை கண்டு அவனும் சொக்க தான் செய்தான்.
மீண்டும் கதவு தட்டுப்படும் ஓசை கேட்க கடுப்பாகி கதவை திறந்தான்.
"டேய்! இது நான் வர்க் பண்ற ஹாஸ்ப்பிட்டல் டா. உன் லவ் எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் கொட்டு" என்று சிரித்தான் நண்பன்.
"இவன் என் பிரண்ட் ஹரிஷ்" என்று சிரித்தான்.
" ஹாய்" என்று சிரித்தாள்.
"வணக்கம் சிஸ்டர்" என்றான் ஹரிஷும்.
"சரி டா. நாங்க கிளம்புறோம்" என்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
"நீ கண்டிப்பா அந்த கல்யாணத்துக்கு வரணும்" என்றான் வருண்.
"நானா? எனக்கு யாரையும் தெரியாது நான் எப்படி வராது தமிழ்" என்று கேட்டாள்.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ கண்டிப்பா வரணும். நான் உன்னை அன்னைக்கு புடவைல பார்க்கணும்" என்று அழுத்தமாய் கூறினான்.
"சரி" என்றாள் சிறிது நேரம் யோசித்தப்பின்.
"என்னம்மா எங்க இவ்ளோ காலைல கிளம்பிட்ட?" என்று தேவதையென புடவையில் இறங்கிய தன் மகளை கண்குளிர பார்த்தபடியே கேட்டார் அவளின் தந்தை.
"இல்லப்பா என் பிரெண்டுக்கு கல்யாணம். அதான் போய்ட்டு வந்துடறேன்" என்றாள்.
"நீ தனியாவா போறம்மா? நான் வரட்டுமா?" என்று கேட்ட தந்தையிடம்,
"வேணாம்பா. பக்கத்துல தான் நானே போய்ட்டு வந்துடறேன்." என்றாள் உடனே.
"என் கண்ணே பட்டுடும் போல" என்று திருஷ்டி சுழித்தவர்" பார்த்து பத்திரமா போட்ய்டு வாடா" என்று சிரித்தார்.
"சரிம்மா" என்று அன்னையை அனைத்து முத்தமிட்டு வெளியேறினாள்.
அவளின் போன் அடித்து கொண்டே இருந்ததால் 'இவன் எடுத்துக்கு இத்தனை தடவை போன் பண்றான்' என்று நினைத்துக்கொண்டே எடுத்து காதுக்கு வைத்தாள்.
"என்னடா கிளம்பி வரவேண்டாமா? எதுக்கு இத்தனை தடவ போன் பண்ற?" என்றாள் கோபமாய் உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டே.
"அடியேய் பொண்டாட்டி. உன்னை பார்க்காம மாமா இங்க தவிச்சு போய் கிடக்கேன். எப்போ தான் வருவ? உன் தரிசனத்துக்காக இங்க உன் புருஷன் தவம் கிடக்குறான்" என்றான் அதட்டலாய் ஆரம்பித்து கெஞ்சலாய் முடித்தபடி.
"சரி சரி மாமா. இதோ ரெடி ஆகிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருக்கேன். என் தரிசனமும் உங்களுக்கு கிடைச்சிடும் போதுமா?" என்றாள் மெல்ல புன்னகைத்து.
இன்றோடு அவளின் புன்னகை காற்றோடு கலக்க போகிறது என்றறியாமல்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top