💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-04
இரவு நடந்தவைகளும் அவ்வப்பொழுது அவளின் சிந்தையில் வந்து செல்ல, விவரிக்க முடியாத ஒரு பயம்... உடலில் தோன்ற சோர்ந்து போனாள்.
"ஏதோ ஒன்னு நம்ம வீட்ல இருக்கு. யார் அது? " என்று யோசித்தாள்.
'வெளிய சொல்லி ஹெல்ப் கேட்கலாம்னா அதுக்கு பலி எங்கம்மா அப்பாவா? ஏற்கனவே என்னை நினைச்சு அவங்க வருந்துறது போதாதா? நான் ஏதாவது செய்ய போய் அவங்களுக்கு ஏதாவது ஆகிட்டா என்ன செய்றது? அதனால அந்த யோசனை வேலைகாகாது. வேரா என்ன செய்றது?' என்று யோசித்தாள்.
'அது உன்னை எதுவும் தொந்தரவு செய்யலையே? பின்ன எதுக்கு இப்போ பயப்பட்ற?' என்று மனம் கேட்டது.
'என்னது தொந்தரவு செய்யலையா? என் போனை எப்படி தூக்கி போட்டு உடைச்சது பார்த்தல்ல?' என்றது மூளை.
'ஆனா மறுபடியும் அந்த போன் நல்லா தான இருக்கு. அதுவுமில்லாம உனக்கு சாப்பாடு செஞ்சு தந்தது பார்த்தியா? காலைல கூட காபியில்லா போட்டு தந்தது பார்த்தியா?' என்று மனம் வாதிட,
'அட சோத்துக்கு செத்த பக்கி. பேய் சமைச்சு கொடுத்துதுன்னு வெளிய போய் சொல்லி பாரு. ஒன்னு உன்னை பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேர்ப்பார்கள். இல்லன்னா நீ இருக்க பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாங்க.' என்றது மூளை கேலியாய்.
'அட எருமை நான் இப்போ சாப்பாட்டை பத்தி மட்டும் சொல்லலை. அது உன்கிட்ட ஏதோ சொல்ல வருது. உனக்கு நல்லது பண்ணனும்னு நினைக்குதுன்னு சொல்ல வரேன்' என்ற மனதிற்கும் மூளைக்குமான போராட்டதோடு வெளியே செல்ல தயாரானாள் தாரணி.
அடுத்த அரைமணி நேரத்தில் தாரணி வீட்டை பூட்டிக்கொண்டு வெளியேறவும் அவளின் மேலதிகாரி காரில் வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது.
"குட் மார்னிங் சார்!" என்றாள் லேசாய் புன்னகைத்து.
"குட் மார்னிங் மா" என்று பதிலுக்கு புன்னகைத்தார்.
"என்னாச்சும்மா உடம்பு சரியில்லன்னு சொன்னியே ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டு போவோமா?" என்றார்.
"இல்ல சார். இப்போ பரவால்லை போகலாம்" என்று பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.
ஐம்பது வயதை நெருங்கும் கேசவனிற்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. அதனாலோ என்னவோ தாரணி இங்கு வந்து தனியாக தங்கியிருப்பதால் அவளின் மேல் ஒரு பாசம் உண்டு. அவ்வப்பொழுது அவரின் வீட்டிற்கு சென்று அவர் மனைவியுடனும் நேரம் செலவழித்து விட்டு வருவாள்.
"அம்மா எப்படி இருக்காங்க சார்? அவங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு? மாத்திரையெல்லாம் ஒழுங்கா நேரா நேரத்துக்கு போட்றாங்களா?" என்றாள் தாரணி லேசாய் புன்னகைத்து.
"அவ்ளுகென்னா நல்லா இருக்கா? இப்போ கொஞ்சம் உடம்பு பரவாலாம்னா. உனக்கு உடம்பு தான் முடியலையே. அங்க வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கலாம்ல தாரணி? அம்மாவும் உன்னை பத்தி கேட்டுட்டே இருக்கா?" என்றார் கேசவன் உரிமையாய் கோபித்து கொண்டு.
'ஹுக்கும்... இப்போ நான் எங்க வரது? நான் வந்தாலும் அந்த பேய் விடாது பொல் இருக்கே? எதுக்கு மத்தவங்களையும் சேர்த்து என்னோட பாதிக்கனும்? பேசாம நம்ம வீடலையே இருக்கிறது தான் எல்லோருக்கும் நல்லது.' என்று யோசனையில் இருந்தாள்.
"தாரணி உன்கிட்ட தான கேட்கிறேன்" என்றார் கேசவன்.
சுயநினைவிற்கு திரும்பியவள்,"சாரி சார். கண்டிப்பா வரேன். அமனாவையும் நான் கெட்டதா சொல்லுங்க" என்றாள்.
வண்டி லேசாக நகர ஆரம்பித்ததும், "யாரை பார்க்க சார் போறோம்?" என்றாள் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே.
"நம்ம கம்பெனியோட நிலைமை ரொம்ப க்ரிடிக்கலா போய்ட்டு இருக்கு. கம்பெனியும் இப்போ லாஸ் ல போய்ட்டு இருக்கு அதை சரிகட்டி முன்னேற என்ன வழின்னு போன மாசம் நம்ம முதலாளி வந்து மீட்டிங் வச்சார் இல்லையாம்மா? " என்றார் அவளை திரும்பி பார்த்து.
"ஆமா சார். எனக்கு கூட எங்க நஷ்டத்தை காட்டி ஆட்குறைப்புன்னு வேலையை விட்டு தூக்கிருவாங்களோன்னு பயமா இருந்தது." லேசான படபடக்கும் விழிகளோடு.
"உனக்கு நம்ம முதலாளியை பத்தி தான் தெரியும்லம்மா. நீயும் எட்டு மாசமா இங்க தான் இருக்க. நாம யாரையாவது என்னைக்காவது ஒரு நாள் மனம் நோகும்படியா பேசிருப்பாரா?" என்றார்.
"எனக்கு தெரிஞ்சு இல்லை சார்." என்றாள்.
"அப்படி பட்டவர் எப்படி வேலையில் இருந்து நீக்குவார்." என்றார்.
"நீங்க சொல்றதும் சரி தான் சார். ரொம்ப நல்ல மனுஷன். ஹ்ம் நல்ல மனுஷங்களை தான் கடவுள் ரொம்ப சோதிப்பார் போல" என்றாள் லேசாக வருத்தமாய் புன்னகைத்து.
"ஆமாம்மா. நீ சொல்றதும் உண்மை தான். அதான் நம்ம கம்பனில இருக்க கொஞ்சம் ஷார்ர வெளிய தர முயற்சி பண்றார். அதுக்கு தான் இப்போ ஒரு இன்வெஸ்டர் ஓகே சொல்லிருக்கார். முதலாளியோட மனைவிக்கு கொஞ்சம் ஹெல்த் சரி இல்லை.. அதான் நம்ப ரெண்டு பேரையும் போக சொன்னார். அவரை பார்க்க தான் போறோம். நம்ம ஓனரோட குடும்ப நண்பர் தான் அவர். ஓனர் பிரென்ட் பையன் தான் இப்போ கம்பெனியை நடத்திட்டு இருக்கார். " என்றார்.
"சரி சார். அவர் வீட்டுக்கு தான் நாம போகனுமா?" என்றாள்.
"ஆமாம்மா. துரதிஷ்ட வசமா அவரோட மனைவி போன வருசம் பிரசவத்தில் இறந்துட்டாங்க. ஒரு வயசு குழந்தையை பார்த்துக்கணும். இருந்தாலும் ஆபிசுக்கு வந்துடுவார். இன்னைக்கு அவங்க மனைவிக்கு முதல் வருஷம். அதனால இன்னைக்கு மட்டும் வீட்லயே ஆபிஸ் வர்க்கை பார்த்துக்குறார்." என்றார் வருத்தமாக.
"ஒஹ் அட கடவுளே! ரெண்டு பேரையும் கடவுள் தான் காக்கணும். என்ன ஒரு கொடுமை. கேட்கும்போதே ரொம்ப வருத்தமா இருக்கு. அந்த பிஞ்சு குழந்தை என்ன பாவம் செஞ்சுதோ?" என்றாள் வருத்தமாக.
தன் வாழ்க்கையும் இந்த நிமிடத்தில் இருந்து தலைகீழ் ஆகப்போகிறது என்று அறியாமல்.
மேலும் பத்து நிமிட பயணத்திற்கு பின் மரங்களும் செடிகளும் நிறைய பூத்து குலுங்கும் ஒரு காம்பௌண்ட்டினுள் நுழைந்தது.
பங்களா போன்ற ஒரு வீட்டின் முன் அவர்களின் வாகனம் நின்றதும் இருவரும் நுழைந்தனர்.
இவர்களை கண்டதும் செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த வேலையாள் ஒருவர் ஓடி வந்தார்.
"யார் சார் வேணும்?" என்றார்.
"சாரை பார்க்க வந்துருக்கோம்." என்றார் பவ்யமாய்.
"சாரை இன்னைக்கு பார்க்க முடியாதுங்கய்யா." என்று தலையை சொறிந்தார்.
"அப்படியா? ஏம்பா?" என்றார்.
"இன்னைக்கு முதலாளியம்மாவுக்கு கும்புடுறோம்ங்க. அதான் அய்யா பூஜைல இருக்கார்" என்றான் வருத்தமாக.
"ஒஹ்... அப்டிங்களா? ரொம்ப வருத்தம் தெரிவிக்கிறோம். ஆனா அய்யா தான் இன்னைக்கு வர சொன்னார்." என்றார் குழப்பமாக.
"சரிங்கையா. நீங்க இங்கயே இருங்க. நான் எதுக்கும் கேட்டுட்டு வந்துடறேன்." என்று ஓடினான்.
"சாரி மா. உன்னை வேற உடம்பு முடியாம இழுத்துட்டு வந்து இங்க நிறுத்திட்டேன்." என்றார் வருத்தமாக.
"விடுங்க சார். நீங்க என்ன வேணும்னா செஞ்சிங்க? அதுவா நடக்குது. எல்லாத்துக்கும் மேல் இந்த குழந்தையை நினைச்சா துக்கத்தை அடக்கவே முடியலை." என்றாள் கண்கள் லேசாக பனிக்க.
"யாரும் எதுவும் செய்ய முடியாதும்மா. எல்லாத்துக்கும் மேல ஏதோ ஒரு சக்தி இருக்கு. நம்ம விதி என்னவோ அது படி தான் நடக்கும். என்ன தான் நாம பொக்கிஷமா பாதுகாத்தாலும் இந்த நொடி என் உயிர் போகணும்னு எழுதி இருந்தா யார் தடுத்தாலும் அது போய் தான் தீரும். எல்லாமே அவங்க அவங்க கர்மா." என்றார்.
அவர் கூறி கொண்டிருக்கும் போதே தன்னை சுற்றி ஒரு புது உணர்வு தோன்றுவதை கவனித்தாள்.
யாரோ தனக்கு மிக அருகில் நிற்பதை போன்று ஒரு எண்ணம் தோன்றியது. மிக குளிர்ந்த காற்று அவளை தீண்டி அவளோடு ஒட்டிக்கொண்டது போல் இருந்தது.
'என்ன இது? திடீர்னு ஒரு மாதிரி இருக்கே? எங்க ரெண்டு பேரை தவிரை யாரோ ஒருத்தங்க இங்க இருக்காங்க' என்று தன்னையே கேட்டு கொண்டு சுற்றி முற்றி பார்த்தாள்.
தன் கழுத்தை யாரோ நெருக்கி பிடிப்பது போல் இருக்க, சுவாசிக்க தடுமாறினாள்.
"தாரணி.. தாரணி.." என்று யாரோ தன்னை உலுக்குவது போல் இருக்க, விருட்டென்று தன் மேனியில் பரவிய குளிர்காற்று விலகியது.
மாயையிலிருந்து விடுபட்டது போல் இருந்தது அவளுக்கு.
"என்ன மா ஆச்சு உனக்கு. மயக்கம் வருதா? ஹாஸ்ப்பிட்டல் போலாமா?" என்று கேட்டு கொண்டிருக்கும் போதே, "அதெல்லாம்..." என்று கூறியபடியே விழிகள் சொருகி மயங்கினாள்.
அந்த மயக்கத்திலும் தன்னை தூக்கி செல்லும் கரத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டாள்.
'கடவுளே எனக்கு ஷக்தி கொடு.. நான் என்னைக்கும் பார்க்க கூடாது நினைச்சிட்டு இருக்கிற முகத்தை பார்க்க வச்சிடாத... நான் எழுந்து இப்படியே என் வீட்டுக்கு ஓடிடனும் போல இருக்கு. என்னை இறக்கி விடுங்க' என்று தனக்குள் கூறியபடியே ஆழ் நித்திரைக்கு சென்றிருந்தாள்.
†************
கதையை படிச்சு பாருங்க பிரெண்ட்ஸ்...☺️
ஒகேன்னா லைக் போடுங்க...😍
பிடிச்சிருந்தா கம்மென்ட்ஸ் போடுங்க...😍😍
ரொம்ப பிடிச்சிருந்தா ஷார் பண்ணுங்க...🤗🤗🤗
அப்போ தான் அடுத்தடுத்த யூ டி கரெக்ட்டா போடுவேன்...😏😏
பை...😁😁
-தர்ஷினிசிம்பா...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top