💚இரண்டு💚
"எல்லா சர்டிஃபிகேட்டையும் எடுத்து வச்சுக்கிட்டியா.. அதான முக்கியம். .." என்று திகில் ஊட்டும் குரலில் மீண்டும் கேட்க, தீபிகா சட்டுனு கண் விழிக்க அந்த இருட்டில் இவளின் முகத்திற்கு அருகில் குரங்கு தலையை குதறி விட்டார் போல் ஒரு உருவம். மண்டையை தவிர மூஞ்சியில் வந்து எல்லா முடியும் கிடந்தது.
"அய்யோ அம்மா... பேய் பேய்.. யாரது வாங்க" என்று உண்மையான பேய்யையே பார்த்ததுப் போல அரண்டு போய் சட்டுனு கத்தினாள் தீபிகா.
"அடியே நான் தான் நான் தான்... நான் தான்டி... ப்ரீத்திடி.. கத்தி தொலையாத " என்று முடியை நீக்கி மூஞ்சியை காட்டினாள் பிரீத்தி.
"ஏண்டி... ஜலேபி மண்ட... பாதி தூக்கத்தில் வந்து பயமுறுத்திக்கொண்டு இருக்க... ச்சீ நெஞ்சு பதருது பாரு... ஆமா .. இவளோ நேரம் நீ தான் வாய்ஸ் மாத்தி பேசிக் கொண்டு இருந்தியா" என்று முறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் தீபிகா.
"ஹிஹி.. சும்மா..மணி ஆறு இது உனக்கு நடு ராத்திரியாடி ... இன்னும் பத்து நிமஷத்துல ஸ்டேஷன் வந்துரும்.. அதான் எழுப்பிவிட்டேன்... நீ எந்திருக்கல... சரி கொஞ்சம் பெர்பார்மன்ஸ் பண்ணலாம்னு.. " என்று கூறி போர்வையை மடித்தும் மடிக்காமல் பையின் உள்ளே வைத்தாள், பிரீத்தி.
"அட கிராதகி... அதுக்கு இப்படியா வந்து எழுப்பி விடுவ... எப்படி பயந்துடேன் தெரியுமா ... இதுக்கெல்லாம் சேர்த்து, உன்னை பழிவாங்குரேன் பாரு... இப்போதைக்கு உன்னை கூண்டுல அடச்சு ஜூல போடுறேன் குரங்கு" என்று அவள் தலை முடியை பிடித்து இழுத்தாள் தீபிகா.
இரயில்வே ஸ்டேஷன்யில் இவர்கள் டிரெயின் வரும் பத்து நிமிடங்களுக்கு முன்பே பிரீத்தியின் தந்தை பாலாஜியும் தாயார் பவித்ராவும், இவர்களை அழைத்துச் செல்ல காத்துக் கொண்டு இருந்தனர். பிரீத்தி அவர்களை கண்டதும், கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டு இருந்தாள்.
அவளின் பெற்றோர்கள் சென்னையில் இருந்தாலும் புறநகரில் இருப்பதால், தினமும் அலைசசலைத் தவிர்க்க, அவர்கள் இரண்டு பேருக்கும் காலேஜ் அருகிலியே ஹாஸ்டல் பார்த்து வைத்திருந்தனர்.
"வாமா தீபு, எப்படி இருக்க? , ஏம்மா ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? நல்லா இளச்சுடியேமா! " என்று அருகில் நின்று கொண்டிருந்த தீபிகாவை பார்த்துக் கேட்டார், பிரீத்தியின் தந்தை, பாலாஜி.
" அப்படிலாம் இல்லை அங்கில், ரொம்ப நாள் கழிச்சு இப்போதான என்னை பார்குறீங்க, அதான் அப்படி தெரிகிரேன். நான் நல்லா இருக்கேன், நீங்க இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க? " என்று முத்துப் பற்கள் தெரியாமல் மெல்லிய புன்னகையுடன் கூறினாள், தீபிகா.
"எங்களுக்கு என்னமா, நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம். அப்பா நல்லா இருக்காரா? " என்று பையை கையில் எடுத்துக்கொண்டு தீபிகாவை பார்த்துக் கேட்டார், பாலாஜி.
"அப்பா நல்லா இருக்காங்க, என்ன என்னைய கொஞ்சம் மிஸ் பண்ணுவாங்க "என்று அப்பெரிய வீட்டில் தற்பொழுது அவளின் தந்தை மட்டும் தனியாக என்ன செய்துக் கொண்டு இருப்பார் என்று எண்ணிக் கொண்டே நடந்தாள், தீபிகா.
"கொஞ்ச நாள் கழித்து பேசாம அப்பாவையும் இங்க வரச் சொல்லிருமா... உங்களுக்கு இங்கேயும் பிசினஸ் இருக்குள்ள? " என்று இவர்களின் டெக்ஸ்டைல்யைப் பற்றி வினாவினார், பாலாஜி.
"ஆமா அங்கில், இரண்டு கடை இங்கே இருக்கு. கொஞ்ச நாள் கழித்து வரேன்னு டாடி சொல்லிருக்காங்க, பார்க்கலாம்." என்று உணர்ச்சி இன்றி கூறி விட்டு, காரை நோக்கி நடந்தாள் தீபிகா. அவ்வளவு எளிதில் அவளின் தந்தை அவர்கள் இருந்த வீட்டையும் அதில் இருந்த நினைவுகளையும் விட்டு வர மாட்டார் என்று தீபிகாவிற்கு தெரியும்.
"சென்னையில இருந்தும் இவளை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டியாதாப் போச்சு, ஸ்கூல் படிக்குறப்ப தான் பிரீத்திய மிஸ் பண்ணோம், அவத்தான் அவுங்க பாட்டிய விட்டுட்டு வரமாட்டேன் சொல்லிட்டா, இப்போ காலேஜ் சேர்ந்தும் மிஸ் பண்றோம்" என்று கவலையுடன், பிரீத்தியை பார்த்துக் கூறினாள், பிரீத்தியின் தாயார் பவித்ரா.
"அட அம்மா, இப்போ எதுக்கு ஃபீலிங், அதான் சென்னை வந்துடேன்ல, பார்துகிடலாம்" என்று அவள் தாயின் தாடயைப் பிடித்து செல்லம் கொஞ்சினாள், பிரீத்தி.
அனைவருக்கும், பேசிக் கொண்டே காரில் சென்றதால் என்பதாலோ, ஹாஸ்டல் மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது.
பின் ஹாஸ்டல் வார்டன்னிடம் பேசிக் கொண்டே நடைமுறைகள் மற்றும் விதிகள் நிறைந்த தாளில் கையொப்பம் இட்டன்னர். ஐடி யைய் சரிப் பார்த்த பின்னர், ரூம் கீயைக் கொடுத்தார், வார்டன் தனம்.
Hi Guys,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Be happy and Safe!💖
How is the update?
Mokkaiya irukaa?😬
Innum two updates thaan mudunchirum!
Epdi irukunu solunga friends!😌
Thanks for reading!
With lots of Love,
Lolita!💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top