43
( இப்படி ஒரு நிலை இப்பொது இருக்கிறதா தெரியாது
இருந்தபோது)
எசமானர் மாளிகையில் ஏக சனக் கும்பல்
எளராசா கலியாண மின்னு வந்த சம்பல்
பண்ணாடி ஒறமறைக ஊர் பொறப்பட்டாச்சு
பின்னாடி வாசலிலே எழைக பந்தி
சாதியிலே தாழ்ந்தவங்க கூடிவிட்ட சத்தம்
வீதியெல்லாங் கூ வரிசை வெகுதூரந்த் தலைக
ஈருசிறுக் காரி நா நெற மாச மாச்சு
இடுப்புக்கு தாங்கி நிண்ணு கையலுத்துப் போச்சு
வாசலுக்கு வந்தாச்சு ஆத்தாடீ வாசம்
வாழயெலெ மேனியிலே வெள்ள வெள்ளச் சோறு
கை நெறைய அரசாணி கத்திரிக்காச் சாறு
காஞ்ச மக்க மூஞ்சியிலே சந்தோசம் பாரு
உண்டவுக எழுந்தாச்சு உக்காரச் சொல்றாக
மண்டியிட்டுப் பாக்கறேங் கால் மடிக்க மாட்டலையே
அம்மாடி உசிர்ப் பாரம் அடிவயித்தில் உந்தறது
சம்மணங்கால் போட இந்தச் சண்டாளிக் காகலியே
'இருக்க முடி யல சாமி ஏனத்திலே போடுங்கின்னு''
கணக்குப் பிள்ளை சாமிகிட்ட கண் கலங்க
கெஞ்சிக்கிறேன்
'ஊட்டுக்குச் சோறில்லை உக்காந்தாப் போடச்சொல்லி
உத்தரவு போட்டிருக்கார் எங்க மகராசர்
சட்டிக்குச் சோறு தர கட்டுபடி யாகாது
இஷ்டமின்னா உக்காரு இல்லாட்டி வெளியே தொலை
சும்மா அடுத்தவளைத் தொந்தரவு பண்ணாதே '
ஆரேஞ்சு பண்றவுக அதட்டி வெறட்டறாக
ஆசையிலே உண்ண வந்தா மண்ணு விளுந்துட்டுதே
பாயசம் ஊத்தறாக! பாயாசம் ஊத்தறாக !!
பாவிமகன் ஒரு சுமையை வயித்திலெ வெச்சல்லொ
பசியாற மாட்டமெ வெளியேறிப் போறேன் நான்
பசியாற மாட்டமெ வெளியேறிப் போறேன்........!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top