11
பார் வென்ற வரலாற்றில் கவுரி மான் வம்சமாம்.
மார்பிலே ஏகாந்தம் ஆங்காங்கே ரத்தின பதக்கமாம்,
விதம் விதமாய் பட்டு உடுத்தி உலா வந்த சக்ரவர்த்திகளாம்.
வீறு நடை போடும்பொழுது, ஏனோ சான்றோர்கள்
விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
கிழிந்த பட்டு உடுப்பில் அந்தரங்கமாய் தெரிந்ததாம்
சாதிகளும் ஏழ்மையும், இன்றும் திருத்திக்கொள்ளவில்லை
கறை வேட்டிகளிலும் பல்இழித்து தெரிகிறது கிழிசல்களில் சாதிப்பிரிவுகளும் ஏழ்மையும், வேடிக்கை தான் பார்க்கிறோமோ...!
அவ்வை சொல்லியும் திருந்தவில்லை,
பெரியார் சொல்லியும் திருந்தவில்லை
அம்மணமாய் நம் சமுதாயம்,
சந்தேகம் இல்லை
இன்று
வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.
இதில் மானங்கெட்டவர்கள் யாரோ.........!
அவ்வை சொல் :
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது.
விளக்கம்:
மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம். நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top