44 இல்லறம்

44 இல்லறம்

"என் கையில இருந்து நீ வெளியில வரவும் முடியாது. என்கிட்ட இருந்து ஓடவும் முடியாது" அவளது காது மடல்களை உரசியவாறு ரகசியம் உறைத்தான் விக்ரம்.

அவனது தோள்களை இறுக்கமாய் பற்றினாள் வைஷாலி. உணர்ச்சிப் பெருக்குடன் அவளை அணைத்துக் கொண்டான் விக்ரம். வைஷாலியின் கரங்களும் அனிச்சையாய் அவன் கழுத்தை சுற்றி வளைத்தன. அவ்வளவு தான், தன்னை மொத்தமாய் இழந்தான் விக்ரம். வைஷாலி தன்னை தடுத்து நிறுத்தவில்லை என்பது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இதற்கு முன் எப்போதும் காணாத ஒரு முக பாவத்தை அவன் வைஷாலியிடம் கண்டான். ஒரு ஆணின் முதல் ஸ்பரிசத்தால் ஏற்பட்ட,  எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்பது போல் இருந்த அவளது உடல் ஏற்படுத்திய முகமாற்றம் அது. அவள் தன்னை தடுக்கப் போவதில்லை என்று தெரிந்த பின், துவங்கியதை நிறுத்தி விட விக்ரம் என்ன  பைத்தியமா? துவங்கிய கதை, தொடர்கதையானது. அவர்களது வியர்வை துளிகள் ஒன்று கலந்தன. *தேவை* என்னும் உணர்வில் மிதந்து கொண்டிருந்த அவர்களது தாகம் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அவர்களது இல்லற வாழ்வும் அர்த்தம் பெற்றது.

அவளது கழுத்தின் இடுக்கில் அழுத்தமாய் இதழ் பதித்தான் விக்ரம். அது அவளை சிலிர்க்கச் செய்தது.

"ஏய் பொம்மி..."

"ம்ம்ம்?"

"தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"என்னை தடுக்காம இருந்ததுக்கு"

"நான் தடுப்பேன்னு நினைச்சீங்களா?"

"படுக்கையை ஒரு போர்க்களமாவே மாத்திடுவேன்னு நினைச்சேன்"

கலகலவென சிரித்தாள் வைஷாலி.

"நான் இன்னைக்கு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்"

"என்னது?"

"நீயும் என்னை ரொம்ப காதலிக்கிற"

"நமக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து..."

"நெஜமாவா? ஆனா ரொம்ப விரைப்பா இருந்தியே...!"

"எக்ஸ்க்யூஸ் மீ... நம்ம முதல் ராத்திரி அன்னைக்கு ரொம்ப நல்லவன் மாதிரி பேசினது நீங்க தான். 'உனக்கு டைம் வேணும்னு எனக்கு நல்லா தெரியும். நான் காத்திருக்கேன்' அப்படின்னு சொன்னது நீங்க தானே?"

"அடிப்பாவி... அப்படின்னா, இதுக்கு முன்னாடியே நான் ட்ரை பண்ணி இருந்தா நீ என்னை தடுத்திருக்க மாட்டியா?"

இல்லை என்று தலையசைத்த வைஷாலி,

"கல்யாணம் ஆன பிறகு, தடுக்கவோ எதிர்க்கவோ என்ன இருக்கு? எல்லாத்துக்கும் தயாராயிட்டு தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

"அடக்கடவுளே... நான் தான் நம்ம வாழ்க்கையோட உன்னதமான நாட்களை வீணாக்கிட்டேனா?"

ஆமாம் என்று தலையசைத்து சிரித்தாள் வைஷாலி.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. எல்லாத்தையும் சமன் செஞ்சிடலாம்"

"எப்படி?"

"ஒரு நாளைக்கு இரண்டு ரவுண்டு... விட்டதை பிடிச்சிடலாம்..."

"முழுகாம இருக்கிற ஒரு பொண்ணு கிட்ட நீங்க அப்படி எல்லாம் நடந்துக்க கூடாது" என்று வராத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டாள் வைஷாலி.

வாய்விட்டு சிரித்தான் விக்ரம்.

"ஜோக்ஸ் அப்பார்ட்... உங்க பாட்டி ரொம்ப டேஞ்சரான ஆளு. அவங்களை எப்படி தடுத்து நிறுத்துறதுன்னு நீங்க ஏதாவது யோசிச்சிங்களா?"

"நீ என்ன நினைக்கிற? அவங்க என்னோட பாட்டி அப்படிங்கிறதால அவங்களுடைய சுய ரூபத்தை வெளியில கொண்டுவர நான் தயங்குறேன்னு நினைக்கிறாயா?"

அமைதியாய் இருந்தாள் வைஷாலி. ஏனென்றால், அவள் நினைத்தது அதை தான்.

"உன்னோட கருப்பையை செயல் இழக்க  செய்யுற அளவுக்கு அவங்க போவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவங்க இன்னும் எந்த அளவுக்கு போறாங்கன்னு நான் பாக்கணும். அதுக்காக தான் இந்த பிரக்னன்சி ட்ராமா..."

"ஏதாவது நடக்கக் கூடாது நடந்துட்டா என்ன செய்றது?"

"நான் கேர்லெஸ்ஸா இல்லன்னு உனக்கு தெரியும்... "

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"அவங்க செயலுடைய விளைவு என்னென்ன என்னோட பேரன்ட்ஸ்க்கு தெரியணும். அந்த வலி எப்படி இருக்கும்னு அவங்களும் உணரணும். அதுக்காக தான் நான் காத்திருக்கேன். எந்த ஒரு சாக்குப் போக்கும் சொல்லி அவங்க தப்பிக்கவே கூடாது"

"என்ன செய்யப் போறீங்க?" என்றாள் திகிலுடன்.

"பொறுத்திருந்து பாரு. என்னுடைய கெஸ் கரெக்டா இருந்தா, சீக்கிரமே அவங்க மாட்டுவாங்க."

சரி என்பது போல் தலையசைத்தாள்.

"நீ என்னை நம்புற இல்ல?"

"உங்களை நான் எவ்வளவு காதலிக்கிறேனோ, அதைவிட அதிகமா உங்களை நம்புறேன்"

"அது..."

தங்களை ஒரு போர்வையால் போர்த்திக்கொண்டு உறங்க முற்பட்டான் விக்ரம்.

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண்விழித்த வைஷாலி, கட்டிலை விட்டு கீழே இறங்க முற்பட்டாள்.

"போகாத" என்றான் கண்களை திறக்காமல் விக்ரம்.

"மணி 6:30" என்றாள் வைஷாலி.

"அதனால என்ன? "

"இந்த நேரம் பாட்டி பூஜை பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க"

"உன்னை பத்தி கேட்க மாட்டாங்க. அப்படியே கேட்டாலும் அம்மா சமாளிச்சுக்குவாங்க"

"ஆன்ட்டியை நினைச்சா எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு"

 கண்களைத் திறந்த விக்ரம்,

"சில சமயம், கெட்டவங்களை தண்டிக்க, நல்லவங்களையும் காயப்படுத்த வேண்டியிருக்கும். அதை புரிஞ்சுக்கோ. வருத்தப்பட எதுவும் இல்ல. சீக்கிரமே ஒரு பேரனையோ பேத்தியோ பெத்துக் கொடுத்துட்டா, அவங்க சந்தோஷமா இருப்பாங்க"

"எவ்வளவு நாளைக்கு இந்த நாடகத்தை கண்டினியூ பண்ண போறோம்? இல்ல, உண்மையிலேயே, ஆன்ட்டிக்கு குழந்தை பெத்துக் கொடுக்கப் போறோமா?"

"வாய்ப்பில்ல ராஜா... பத்து வருஷம் காத்துக்கிட்டு இருந்திருக்கேன்... அவ்வளவு சீக்கிரம் கமிட்டாக மாட்டேன். கொஞ்ச நாளாவது என் வைஃபோட ஜாலியா இருந்துட்டு தான், குழந்தையை பத்தி யோசிப்பேன்"

"பெரிய திட்டம் தான்"

"நான் சொல்றதை கேட்டு நட. நம்ம இந்த நாடகத்தை நடத்தி தான் ஆகணும், முக்கியமா பாட்டி முன்னாடி"

"ஆன்ட்டி முன்னாடி? "

"தேவையில்ல... ஏற்கனவே அவங்க பறந்துகிட்டு தான் இருக்காங்க..."

"அது தான் எனக்கு குத்துது"

"வைஷு, நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. இந்த நிமிஷம் கூட பாட்டியோட முகத்திரையை என்னால கிழிக்க முடியும். ஆனா, நிச்சயம் கொஞ்ச நாள்ல அவங்களுக்கு மன்னிப்பு கிடைச்சிடும். அம்மா மன்னிக்கலைனா கூட, நிச்சயம் அப்பா மன்னிச்சிடுவாரு. ஏன்னா பாட்டியோட செயலாள, அவங்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படல. அப்படி நடக்கக் கூடாது. பாட்டி தண்டிக்கப்படனும்னா, ஏற்படப் போற இழப்பு, ஈடு செய்ய முடியாததா இருக்கணும். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்"

ஆம் என்று தலையசைத்தாள் வைஷாலி.

"இப்போ பேசாம தூங்கு"

"எனக்கு தூக்கம் வரல"

"எனக்கும் தான்"

"அப்போ என்ன செய்றது?"

"விட்டதை பிடிக்கலாமான்னு யோசிக்கிறேன்" என்றான் விசித்திர சிரிப்புடன்.

அவள் கட்டிலை விட்டு இறங்கி ஓட முயன்ற போது, அவளை இறுக்கமாய் பற்றி கொண்டு,

"எனக்கு ஏதாவது வேணும்னா, என்கிட்ட வம்பு பண்ணாத. ஏன்னா, என் பொண்டாட்டி தோக்குறதை பார்க்க நான் விரும்பல. என்னை உன்னால ஜெயிக்க முடியாது"

"பேசாம தூங்க சொன்னீங்க...?"

"நிஜமாவே தூங்க போறியா?"

"இல்ல, குளிச்சிட்டு கீழ போக போறேன் "

பெருமூச்சு விட்டான் விக்ரம். அவனை பிடித்து தள்ளிவிட்டு, குளியலறைக்கு சென்று, குளித்து முடித்துவிட்டு தரை தளம் வந்தாள் வைஷாலி.

"வைஷு, எதுக்காக இவ்வளவு சீக்கிரமா கண் விழிச்ச? கீழ வரணும்னு எந்த அவசரமும் இல்ல. நீ நிதானமா வரலாம்" என்றார் சாவித்திரி  அன்பாய்.

"பரவாயில்ல ஆன்ட்டி. எனக்கு டயர்டா இருந்தா நான் ரூமுக்கு போறேன்"

"சரி இரு. நான் உனக்கு பால் கொண்டு வரேன்" என்று சின்ன பெண்ணை போல் சமையல் அறையை நோக்கி ஓடினார் சாவித்திரி.

வைஷாலிக்கு ஐயோ என்று இருந்தது. ஒரு தம்ளர் பாலுடன் வந்தார் சாவித்திரி. அதை வைஷாலியிடம் கொடுத்தார். அதை வாங்கி பருகிய வைஷாலி, திகைத்து நின்றாள். அது பாலா இல்லை கூழா? அந்த பால், அவ்வளவு கெட்டியாய் இருந்தது.

"ஆன்ட்டி, இதுல நீங்க என்ன கலந்திருக்கீங்க?

"பாதாம், பிஸ்தா பவுடர், கொஞ்சம் குங்குமப்பூ"

அவர் பாலில் இதையெல்லாம் கலந்தாரா? அல்லது, சிறிதளவு பாலை அந்த பவுடரில் குழைத்தாரா? இப்படிப்பட்ட பாலை அவள் குடித்துக் கொண்டு வந்தால், ஒரே வாரத்தில் நிச்சயம் ஐந்து கிலோ எடை கூடிவிடும்.

"இப்படி குடிச்சா தான் குழந்தை அழகா கொழுக்கு மொழுக்குன்னு குண்டா இருக்கும்" என்றார் சாவித்திரி குதூகலமாக.

அதை மெல்ல பருக துவங்கினாள் வைஷாலி. அதன் ருசி மிக அருமையாக இருந்தது. ஆனால் ஒரு தம்ளர் குடித்த உடனேயே அவள் வயிறு நிரம்பி போனது. இன்னும் அரை மணி நேரத்தில், அவளை சிற்றுண்டி சாப்பிட அழைக்கப் போகிறார் சாவித்திரி என்பதை நினைத்த போது அவள் தலைசுற்றியது.

"கடவுளே, என்னை காப்பாத்து" என்று உள்ளூர வேண்டிக் கொண்டாள் வைஷாலி.

அப்பொழுது பூஜையை முடித்துக் கொண்டு, பூஜை தட்டுடன் வந்தார் நந்தினி. சாவித்திரியும், வைஷாலியும், ஆரத்தியை கண்களில் ஒற்றிக் கொண்டு, குங்குமம் இட்டுக் கொண்டார்கள். அவர் காலைத் தொட்டு வணங்கினார் சாவித்திரி. வைஷாலியும் அதை செய்ய முயன்ற போது,

"நில்லு" என்றான் விக்ரம்.

"வைஷு, பாட்டியோட ஆசிர்வாதம் நமக்கு எப்பவுமே இருக்கும். அதுக்காக நீ அவங்க காலை தொட வேண்டிய அவசியம் இல்ல. இப்படி எல்லாத்துக்கும் குனிஞ்சு நிமிந்துகிட்டு இருந்தா உனக்கு நல்லதில்ல. ஜாக்கிரதையா இருக்கணும்னு அம்மா சொன்னாங்க இல்ல? நான் சொல்றது சரிதானே பாட்டி?"

ஆமாம் என்று லேசாய் தலையசைத்து விட்டு, பூஜை தட்டை திரும்ப வைக்க, மீண்டும் பூஜை அறைக்கு சென்றார் நந்தினி.

வைஷாலிக்கு தன் கண்களால் ஏதோ உணர்த்தினான் விக்ரம். அதை புரிந்து கொண்ட வைஷாலி, தலை சுற்றுவது போல் பாவனை செய்தாள்.

"என்ன ஆச்சு வைஷு?" என்று பதறினார் சாவித்திரி.

"தலை சுத்துது ஆன்ட்டி"

"சின்னா, அவளை உங்க ரூமுக்கு கூட்டிக்கிட்டு  போய், ரெஸ்ட் எடுக்க வை" என்றார் சாவித்திரி.

"சீக்கிரம் எழுந்துக்காதேன்னு சொன்னா, அவ கேட்டா தானே?" என்றான் விக்ரம்.

"ஆமாம் வைஷூ. நீ சீக்கிரம் எழுந்துக்க வேண்டிய அவசியம் இல்ல. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு" என்றார் சாவித்திரி.

அப்பொழுது நந்தினி வருவதை கவனித்தான் விக்ரம். யாரும் எதிர்பாராத வண்ணம் சட்டென்று வைஷாலியை தன் கைகளில் அள்ளிக்கொண்டான். வைஷாலியே கூட திகைத்துப் போனாள். புன்னகைத்தபடி அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு, தங்கள் அறையை நோக்கி நடந்தான் விக்ரம். அவன் எதிர்பார்த்தபடியே, தாங்காத எரிச்சலுடன் நின்றார் நந்தினி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top