பாகம் 30

ம்ம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு டைம் இல்ல.. என சலித்துக் கொண்டே சொன்னாள்..

இப்ப உனக்கு என்ன தான் மகதி பிரச்சனை.. அப்டி உன்ன நான் என்ன பண்ணிட்டேன்.. என அவள் கையைப் பிடித்து உலுக்கினான் கோவமாக..

கைய எடுங்க.. வலிக்குது.. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க.. நீங்க நினைக்கிற மாறி தான் இப்ப நடக்குது.. அப்ரோம் என்னை ஏன் தொல்ல பண்றீங்க.

நான் உனக்கு தொந்தரவா

ஆமா.உங்க தம்பிக்கு பண்றதுக்கு பேரு தொந்திரவு இல்லையா.. ச்சே உங்கள நினைச்சாலே கடுப்பாகுது.. என முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னாள்..

சரி நீ சந்தோசமா இருக்க என்ன பண்ணனும் .. அத மொதல்ல சொல்லு..

அதான் என் வாழ்க்கையவே அழிச்சிட்டிங்களே.. இப்ப உங்களுக்கு நிம்மதியா..

நீயேன் ஃபீல் பண்ற.. இப்ப உங்க அத்தானோட உனக்கு கல்யாணம் ஆகனும் அப்டி தான.. நான் போயிட்டா நீ நினைச்சுது நடந்திரும்.. அதேமாறி கிருஷும் சுஜியும் சேர்ந்திடுவாங்க.. ஒரே கல்லுள்ள மூனு மாங்கா.. என்ஜாய் மகதி..என்றான்

அவன் இவ்வாறு கூறவும் பயந்து போய் " ஏன் நீங்க தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க..நம்ம நிச்சயம் நடந்தா கிருஷ் சுஜி கண்டிப்பா வருவாங்க.. அப்ப அர்ஜூன் அத்தான பார்த்து பிரச்சனையாகிடும்னு தான் இத நிறுத்த நினைச்சேன்.. ஆனா நீங்க அத்தானோட சுஜிய சேர்த்து வைக்கறீங்கனு சொல்றீங்க.. உங்க தம்பிய விட அத்தான் ரொம்ப முக்கியமானவங்களா.. அதே மாறி நீங்க ரொம்ப அறிவாளியா இருக்கலாம்.. நான் என்ன சுத்தி என்ன நடக்குதுனு புரிஞ்சிக்காம முட்டாளாவே இருக்கலாம்.. அதனால் தான் நீங்க என்ன காதலிக்கிறீங்களா இல்ல நடிக்கிறீங்களானு கூட இன்னும் தெரிஞ்சுக்க முடியாம பொய்யாக்கூட சந்தோசப்பட முடியாம ஒவ்வொரு நிமிசமும் செத்துட்டு இருக்கேன்..

உங்களுக்கு நான் எந்த வகையிலும் தகுதியானவ இல்லனு எனக்கே தெரியும் .. அதுனால என் மனச நானே தேத்திக்குவேன்..எங்க அப்பா மனச காயப்படுத்தாம எதா இருந்தாலும் பண்ணுங்க.. அவர் இப்ப உங்க மேல நிறைய நம்பிக்கை வெச்சிட்டாரு.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. ஒரு பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம அவளோட உணர்வுகளோட விளையாடாதிங்க..
இத நான் எனக்காக மட்டும் சொல்லல சுஜிக்காகவும் தான்.. நான் பேசறத பேசிட்டேன்.. இனி உங்க இஷ்டம்..என்றாள் கண்ணீரோடு..

அவள் முகத்தினை கைகளில் ஏந்தியவன் " என்னைப் பார்த்தா என்னோட சுயநலத்துக்காக உன்ன லவ் பண்ற மாறி நடிக்கிற மாறி தெரியுதா.. நான் உன்ன விரும்பலைனா இந்த ஊருக்கு வந்திருக்கவே மாட்ட..நீ் காதலிக்கிறீனு சொல்லாம கூட புரிஞ்சிகிட்டேன்.. ஆனா நீ என்ன புரிஞ்சுக்க டிரைப் பண்ணவே மாட்டிங்கற..

நான் பண்ணது தப்புதான் அன்னைக்கு உங்க அப்பாகிட்ட அர்ஜூன் கிட்ட கோவமா நடந்துகிட்டேன்.. ஆனா எதுக்காக தெரியுமா அர்ஜுன உனக்கு மேரேஜ் பண்ணித் தரனும்னு சொன்னாங்க அதுக்குதான்.. நீ என்ன எதுக்காக லவ் பண்ணன்னு தெரில.. ஆனா நான் உன்னோட குழந்தை மனசு உன்னோட சின்னச்சின்ன முட்டாள் தனம் உன்னோட நேர்மை..அத எல்லாத்த விட நீ என்னப் பார்க்கிறப்பலாம் கியூட்டா எக்பிரசன் தருவல்ல உனக்குள்ளயே எதோ ஒன்னு பேசிக்கிட்டு.. அது அப்ரோம் உன்னோட திருட்டு முழி..என்னப் பார்த்துட்டு தலைத் தெறிக்க ஓடுற உன்னோட தைரியம்னு உன்னோட ஒவ்வொரு அசைவையும் பார்த்துதான் உன்னை விரும்னேன்..என்னோட அந்தக் காதல்தான் உம்மேல எனக்கு அதிகமா உரிமை எடுத்துக்க சொல்லுச்சு. நீ எனக்கு மட்டும் தான் மகதி சொந்தம்..உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். உனக்கு இப்ப கூட என்மேல நம்பிக்கை வரலியா..

அவன் பேச்சில் மெய்மறந்து போய் அப்படியே நின்றாள்..

சரி மகதி உன்ன இதுக்கு மேல தொந்தரவு பண்ண மாட்டேன்.. அதே மாறி என்னைத் தவிர வேற யாரயும் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டேன்.. புரியுதா

கண்ணீரோடு சேர்த்து கண்களும் வெளிய வந்துவிடும் போல அவனை விழுங்கி விடுவது போல பார்த்தாள்..

அதே மாறி எனக்கு கிருஷ் சந்தோசம்தான் முக்கியம்.. ஆனா நான் கொடுக்கிற சந்தோசம் எப்பவும் நிலையா இருக்கனும்னு ஆசப்படறேன்.. அதுக்காக தான் நான் அர்ஜூனையும் தண்டிக்க மாட்டேன்.. என்னப் பொருத்த வரை எனக்கு எத சரினு படுதோ அதத்தான் செய்வேன்.. என்ன யாரும் புரிஞ்சிக்க வேணா... எல்லாத்துக்கும் சாரி..அப்டினு சொல்லிட்டு கதவ திறந்துவிட்டான்..
உங்கிட்ட நிறைய பேசனும்னு நினைச்சேன்.. இனி அதுக்கு வேலயே இல்ல.. சரி வெளிய போ.. என்றான்..

" என்னை மன்னிச்சிடுங்க.. அத்தை தான் சொன்னாங்க .. நீங்க அத்தான கொன்றுவேனு மிரட்னீங்கனு.. அதான் கொஞ்சம்ம்ம்.. இனி அப்டி நடந்துக்க மாட்டேன்..ப்ளீஸ்ங்க.. என அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்..

அவன் திரும்பிப் பார்க்கும் போது கீழே குனிந்து கொண்டாள்.. அவள் கையை எடுத்து விட்டவன் அவளது முகத்தை நிமர்த்தி அவள் கூந்தலை சரிசெய்து விட்டு "மஹி.. நீ என்ன இப்பவும் விரும்பறியா " என்றான் அமைதியாக

" ம்ம்ம் " என்றாள் வெக்கப்பட்டுக் கொண்டு..

சரி சரி ரொம்ப வெக்கப்படாத.. போய் சூடா காஃபி கொண்டுவா போ.. என்றான் சிரித்துக் கொண்டு..

அவனைப் பார்த்து " ரொம்பத்தான் " என்று இடித்துவிட்டு சென்றாள்..

" டாக்டர் சார் இனி எங்கிட்ட இருந்து உங்கள யாரும் காப்பாத்த முடியாது " எனக் குதித்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..

அவனும் சிரித்துக் கொண்டே மாணிக்கத்திற்கும் அர்ஜூனிற்கும் நடுவே அமர்ந்தான்..

" பாலாத்தம்பி உங்க பேமிலி பத்தி சொல்லுங்க.. அப்டியே உங்க பேமிலி போட்டாவையும் காமிங்க.. " என்றார் பரு..

Father of blood grouping :
Karl landsteiner

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top