பாகம் 20

இரவு 8 மணி....

" அம்மா போதுமா.. இதுக்குமேல சாப்பிட்டா அப்ரோம் வாசலதான் இடிச்சு பெரிசாக்கனும்.. " என்று சாப்பாட்டை தன் தட்டில் அள்ளி வைத்துக் கொண்டு இருந்த இந்திராவைப் பார்த்து சொன்னான் கிருஷ்..

" டேய் இத்தன நாளா தான் தேவதாஷ் மாறி சுத்திக்கிட்டு ஒழுங்கா சாப்பிடாம தூங்காம இருந்த.. இப்ப என்னடா நீ தான் குடும்ப இஸ்திரி பெட்டியாயிட்டல.. நல்லா சாப்பிட்டா தான குடும்ப பாரத்த தாங்க முடியும் என் தங்கமே "..

" போதும் போதும் ஓவரா வாராதீங்கமா..உங்க கிட்ட அண்ணா பத்தி பேசனும்மா... " என்றான் தயங்கிய படி.

" ஆமா நானே கேக்கனும்னு நினைச்சேன்.. பாலாவ ஆளயே காணோம்.. ரோகித்கிட்ட கூட சொல்லாம தனியா எங்க போனானே தெரியில.. போனும் நாட் ரீச்சபில்னு வருது.. உனக்கு எதாவது தெரியுமாடா.."

" அம்மா அண்ணா ஒன்னும் தனியா போகல.. நம்ப ஆபிஸ் ஸ்டாஃப் மகதிய எங்கயோ வழுக்கட்டாயமா இழுத்துட்டு போயிருக்காரு " என்றான் தன் தாய் இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ என்ற பயத்துடன்..

" ஹேய் செமடா.. இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனேனு தெரியல.. ஆனா இந்த ஒரே நாள ரெண்டு சூப்பர் விசயம் நடந்திருக்கு..ஆனா என்ன சுஜிக்கு பாலாவ கட்டி வைக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா நீ முந்திகிட்ட..
பரவாலடா.. மகதி கூட நல்ல பொண்ணுதான்.. என்ன வாய் தான் காது வரை நீளும் .. அந்த உம்முனா மூஞ்சிக்கு இவ தான் கரெக்டு.. " என்றார் உச்சகட்ட துள்ளலோடு..

" அம்மா அப்ப உங்களுக்கு ஓகேவா.. "
என்றான் புன்னகையோடு..

" போடா லூசு.. உங்க அண்ணாகிட்ட அவளப் பத்தி கொழுத்திப் போட்டதே நான் தான் டா .. ஆனா பக்கிப் பயபுள்ள எங்கிட்டயே இன்னும் சொல்லாம விளையாட்டு காமிக்கறானே.."..

" மாஆ என்னம்மா ஒரு பொறுப்பான தாய் மாறியா பேசற.. வரவர ரொம்ப லோக்கலா இறங்கிட்டமா.."

" போடா இன்னைக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கேனு தெரியுமா.. என் அண்ணா குடும்பத்தோட இத்தன நாள் சண்டை போட்டு பிரிஞ்சு இருக்கறது இந்த கல்யாணத்துனால ஒண்ணு சேர போகுதுடா "

" அம்மா சந்தோசத்துல உனக்கு தலைகால் புரியலங்கறது உண்மை தான் மா.. சுஜியோட அப்பா உங்கோட நல்லாதான பேசிறாரு.. எப்ப நீ சண்டை போட்ட.. "

கிருஷின் கேள்வியால் சுய நினைவிற்கு வந்தவர் சந்தோசத்தில் தான் இத்தனை நாள் மறைத்து வைத்த ரகசியத்தை உளறிக் கொட்டியதை எண்ணி வருத்தப்பட்டார்..

அவரது முகபாவமே அவரை கிருஷிடம் மாட்டிக் கொடுக்க.." அம்மா உண்மைய சொல்லுங்க .. சுஜி அப்பாவ நீங்க தம்பினு தான கூப்டுவீங்க.. அண்ணானு எதுக்கு சொன்னிங்க..என் கிட்ட எதயோ மறைக்கிறீங்க.
என் மேல உங்களுக்கு  நம்பிக்கையில்லைனா எதும் சொல்லாதிங்க " என்றான் குறும்பு கலந்த பார்வையுடன்..

" கிருஷ்ணா உன் வேலய என்டயே காமிக்கிறியே.. இப்படி சொன்னாதான் நா உண்மைய சொல்லுவனு பாக்கிறியா.."

" என் செல்லம்ல சொல்லுமா. உனக்கிருக்கிற அந்த குட்டி மூளையில அப்படி என்ன மறைச்சி வெச்சிருக்கிற பட்டு "

" ஐஸ் வெச்சது போதும்.. எப்படி இருந்தாலும் என்னைக்காவது சொல்லி தான ஆகனும்..மகதியோட அப்பா தான் என்னோட சொந்த அண்ணா.. நான் உங்கப்பாவ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. "

" உடனே உங்க அண்ணா அடிச்சு துறத்திட்டாரு அதானே "

" எங்கண்ணா ஒன்னும் அப்படி பட்டவர் இல்ல.. எங்கள முழு மனசோட ஏத்துக்கிட்டாரு.. "

" பாருய்யா.. அப்ரோம் எப்படி சண்டை வந்தது "..

" அதாண்டா நேரங்கிறது..எங்க அண்ணியோட தம்பிக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சாங்க.. ஆனா அது நடக்கதானால எல்லாருக்கும் என் மேல வருத்தம் .. உங்க அப்பா வேற பிசினஸ் பிசினஸ்னு சுத்திட்டு இருந்தாரு.. வீட்டுப் பக்கம் கூட வர மாட்டாரு.. எங்கண்ணாக்கு கோவம் வந்து அவர அடிக்க கைய ஓங்கிட்டாரு..
இவரும் அண்ணாவ திட்டிடாரு..
எங்க வீட்ல இருக்கிறவுங்க இதப் பெரிய பிரச்சனையாக்கி எங்கள நிரந்தரமா பிரிச்சிட்டாங்க.."

" ஹாஹாஹா.. ஏன்மா உங்க பாசக்கார அண்ணா இந்த குட்டி விசயத்துக்காகவா செல்ல தங்கச்சிய ஒதுக்கி வெச்சாரு.. "

" அதான்டா எனக்கும் தெரியில..சரி அதவிடு.. அதான் இப்ப ஒண்ணு சேரப் போறோம்ல.. அதுக்குதான் மகதியோட பயோடேட்டாவ பார்த்தவுடனே பிஏ வா செலக்ட் பண்ணிட்டேன்.. எப்படி என் சமார்த்தியம் "

" மா சரியான கேடிம்மா நீங்க.. அப்றோம் எப்பிடி அப்பாகிட்ட மாட்னிங்க "

" என்கிட்ட உதை வாங்க போறடா படவா.. உங்க அப்பாவ சரியா நீ புரிஞ்சிக்கல..போடா " என்றார் முகத்தை சுழித்துக் கொண்டு..

" ஓகே ரிலாக்ஸ் .. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நான் சுஜிகிட்ட இதப்பத்தி பேசறேன்.. குட் நைட் "

" ஆனா பாலா இன்னும் வரலியேடா.."

" அண்ணா கண்டிப்பா வந்திருவான்மா நீங்க போய் தூங்குங்க.."

" சரிடா வந்தவுடனே சாப்பிட சொல்லு "

கிருஷும் 11 மணிவரை வெயிட் செய்து விட்டு உறங்க சென்று விட்டான்..ஆனால் பாலா தான் இன்னும் வந்தபாடில்லை..

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் இராஜஸ்தான் 👦

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top